Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
New Update – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Dec 2023 00:33:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png New Update – Touring Talkies https://touringtalkies.co 32 32 விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் https://touringtalkies.co/when-is-vikram-62-shooting-new-update/ Wed, 20 Dec 2023 00:33:08 +0000 https://touringtalkies.co/?p=39014 பா.ரஞ்ஜித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஜன.26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.   ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு […]

The post விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
பா.ரஞ்ஜித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஜன.26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் இன்னும் வெளியாக வில்லை.

The post விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் https://touringtalkies.co/arun-vijays-vanangan-is-a-new-update/ Tue, 19 Dec 2023 23:38:46 +0000 https://touringtalkies.co/?p=39005 பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்போது, இந்த படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடந்துவருவதாக  படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பூஜையில் இயக்குநர் பாலா, மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் விஜய், நடிகர் சண்முகராஜன் […]

The post அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

தற்போது, இந்த படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடந்துவருவதாக  படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பூஜையில் இயக்குநர் பாலா, மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் விஜய், நடிகர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
’சலார்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் https://touringtalkies.co/salaar-movie-new-update/ Wed, 13 Dec 2023 00:18:54 +0000 https://touringtalkies.co/?p=38784 இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படத்திற்கு […]

The post ’சலார்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் காட்சி நேரம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.

The post ’சலார்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
இவானா நடித்த ’மதிமாறன்’ புதிய அப்டேட் https://touringtalkies.co/mathimaaran-starring-ivana-is-a-new-update/ Tue, 12 Dec 2023 01:10:58 +0000 https://touringtalkies.co/?p=38749 மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள”மதிமாறன்”.இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மாறுபட்ட […]

The post இவானா நடித்த ’மதிமாறன்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள”மதிமாறன்”.இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மாறுபட்ட திரில்லர் படமாக  உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கான  இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் “மதிமாறன்” படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

The post இவானா நடித்த ’மதிமாறன்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ புதிய அப்டேட்.! https://touringtalkies.co/director-shankars-game-changer-new-update/ Thu, 30 Nov 2023 01:16:45 +0000 https://touringtalkies.co/?p=38411 பிரம்மாண்ட  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  உருவாகிவரும் திரைப்படம் ’கேம் சேஞ்சர்’ இந்த படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.மேலும் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி,அஞ்சலி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப  கோளாறு காரணமாக வெளியீட்டு […]

The post இயக்குனர் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ புதிய அப்டேட்.! appeared first on Touring Talkies.

]]>
பிரம்மாண்ட  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  உருவாகிவரும் திரைப்படம் ’கேம் சேஞ்சர்’ இந்த படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.மேலும் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி,அஞ்சலி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப  கோளாறு காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்த படம் பற்றி புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.இதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராம் சரண் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post இயக்குனர் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ புதிய அப்டேட்.! appeared first on Touring Talkies.

]]>
’துருவ நட்சத்திரம்’புதிய அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்.! https://touringtalkies.co/dhruva-natchathiram-new-update/ Wed, 29 Nov 2023 01:51:31 +0000 https://touringtalkies.co/?p=38366   விக்ரம் நடிப்பில் உயுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: “ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை இன்று திரைப்படமாக கொண்டு வந்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தபோதும் கூட, எங்களது கனவும், அர்ப்பணிப்பும்தான் இந்த திரைப்படத்தை விரைவில் […]

The post ’துருவ நட்சத்திரம்’புதிய அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்.! appeared first on Touring Talkies.

]]>
 

விக்ரம் நடிப்பில் உயுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: “ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை இன்று திரைப்படமாக கொண்டு வந்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தபோதும் கூட, எங்களது கனவும், அர்ப்பணிப்பும்தான் இந்த திரைப்படத்தை விரைவில் உங்களுக்காக திரையரங்குகளில் கொண்டு வர உதவப் போகிறது.

படம் நவ.24 அன்று திரைக்கு வரும் என்று நாங்கள் அறிவித்தபோது, அதனை சாத்தியமாக்க நாங்கள் மலைகளை நகர்த்த முயற்சித்தோம். எங்களால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் கூறுவது பொய் ஆகிவிடும். நாங்கள் படத்தை கைவிடவில்லை என்று பார்வையாளர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை. எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும், இந்த தடைகளை கடந்து, படத்தை திரைக்குக் கொண்டு அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

பார்வையாளராகிய நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கான ‘சியர்லீடர்ஸ்’. உங்களிடமிருந்து கிடைக்கும் முடிவில்லா அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியாகவும் உறுதுணையாகவும் இருக்கிறது. எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன, எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்க இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

இந்த இறுதி கட்டத்தை நோக்கி நாங்கள் செல்லும்வேளையில், எங்களது படைப்பை உங்களிடம் பகிரும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் இப்படம் வெளிச்சத்தை காணும். ஜான் மற்றும் பேஸ்மெண்ட் டீமின் சினிமா பயணத்தை உங்களுடன் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம்” இவ்வாறு கவுதம் மேனன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நடிகர் சிம்புவின் படத்துக்கு ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை நவ.24 காலை 10.30 மணிக்குள் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, திட்டமிட்டபடி ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த நவ. 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ’துருவ நட்சத்திரம்’புதிய அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்.! appeared first on Touring Talkies.

]]>
பிரபாஸின் ’ஸ்பிரிட்’ புதிய அப்டேட்.! https://touringtalkies.co/prabhas-spirit-new-update/ Sun, 26 Nov 2023 01:56:51 +0000 https://touringtalkies.co/?p=38275 அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழுவினர்  எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகின்றனர். நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது. அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக […]

The post பிரபாஸின் ’ஸ்பிரிட்’ புதிய அப்டேட்.! appeared first on Touring Talkies.

]]>
அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழுவினர்  எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகின்றனர். நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது.

அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது ?” எனக்கேட்டார். அதற்கு பதில் அளித்த இயக்குநர், “ ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார்.

பத்திரிக்கையிடம் பேசிய தயாரிப்பாளர் பூஷன் குமார், “தற்போது, ரசிகர்களுக்கு  அனிமல் படத்தை நல்ல முறையில் தர வேண்டும். அதன் பிறகே, நாங்கள் ஸ்பிரிட் படத்தை தொடங்குவோம் என்றார். மேலும் அவர்  ரன்பீர் கபூர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் பங்குபெற வேண்டும் என்ற தனது விருப்பர்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர்கபூர் பிரபாஸுடன், அப்படத்தில் அவர் எனக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாகினால், நான் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன்  என்றார்.

பிரபாஸின் புதிய பட அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

The post பிரபாஸின் ’ஸ்பிரிட்’ புதிய அப்டேட்.! appeared first on Touring Talkies.

]]>
’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! https://touringtalkies.co/vijay-68-producer-archana-gave-a-new-update/ Tue, 07 Nov 2023 04:08:31 +0000 https://touringtalkies.co/?p=37642 இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் அவர். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய […]

The post ’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் அவர். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.

  “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். தளபதி 68ல் இன்னும் நிறைய ஷூட் மற்றும் பல்வேறு கட்ட ஷெட்யூல் உள்ளது. தாய்லாந்தில் பிரதான சண்டைக் காட்சியை இரவு நேரத்தில் ஷூட் செய்தோம். அதனால் உங்கள் பிறந்தநாள் அன்று உங்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது என அர்ச்சனா எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நேற்று நவ.7 வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! appeared first on Touring Talkies.

]]>
படப்பிடிப்பு எப்போது? ’வாடிவாசல்’ புதிய அப்டேட் https://touringtalkies.co/when-is-the-shooting-wadivasal-new-update/ Mon, 06 Nov 2023 01:03:23 +0000 https://touringtalkies.co/?p=37598 வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டான திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல். இப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளதாக தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் […]

The post படப்பிடிப்பு எப்போது? ’வாடிவாசல்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டான திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்குப் பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல். இப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளதாக தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா, பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து உருவாகவிருக்கிறது வாடிவாசல்.

கங்குவா படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இருப்பதால் சூர்யா வாடிவாசல் படம் தொடங்காமல் இருக்கின்றனர். அதே வெற்றிமாறனும் விடுதலை 2ம் பாகத்தில் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒரு கட்டத்தில் வாடிவாசல் டிராப் ஆக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என சொல்லும் விதமாக தற்போது தரமான  வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இந்த  படத்தில் இயக்குனர் அமீர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

The post படப்பிடிப்பு எப்போது? ’வாடிவாசல்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் https://touringtalkies.co/new-update-on-the-shooting-of-suriyas-ganguwa/ Thu, 15 Jun 2023 01:55:27 +0000 https://touringtalkies.co/?p=33496 சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு […]

The post சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் சூர்யா, திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை படப்பிடிப்பு முடிந்தது மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

The post சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>