Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
marimuthu – Touring Talkies https://touringtalkies.co Wed, 13 Sep 2023 03:32:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png marimuthu – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஜித் – விஜய் கோவம் வந்தா என்ன செய்வாங்க?: நெருங்கிப் பழகிய மாரிமுத்து சொல்கிறார்! https://touringtalkies.co/how-is-ajith-vijays-character-marimuthu-who-is-close-says/ Wed, 13 Sep 2023 03:32:56 +0000 https://touringtalkies.co/?p=36204 சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் மாரிமுத்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். அஜித், விஜய் ஆகியோர் நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இருவரிடமும் நெருங்கிப் பழகியவர். இவர் ஏற்கெனவே டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் குண நலன்கள் பற்றியும் கூறியிருக்கிறார். குறிப்பாக இவர்கள் கோபம் வந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதையும் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ…

The post அஜித் – விஜய் கோவம் வந்தா என்ன செய்வாங்க?: நெருங்கிப் பழகிய மாரிமுத்து சொல்கிறார்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் மாரிமுத்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். அஜித், விஜய் ஆகியோர் நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இருவரிடமும் நெருங்கிப் பழகியவர்.

இவர் ஏற்கெனவே டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் குண நலன்கள் பற்றியும் கூறியிருக்கிறார். குறிப்பாக இவர்கள் கோபம் வந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதையும் தெரிவித்து உள்ளார்.

அந்த வீடியோ…

The post அஜித் – விஜய் கோவம் வந்தா என்ன செய்வாங்க?: நெருங்கிப் பழகிய மாரிமுத்து சொல்கிறார்! appeared first on Touring Talkies.

]]>
மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை!   https://touringtalkies.co/marimuthus-unfulfilled-wish/ Mon, 11 Sep 2023 01:39:04 +0000 https://touringtalkies.co/?p=36145 marநடிகர் மாரிமுத்துவின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்த இவர், ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.   2008-ல் ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்பிரசன்னா, உதயதாரா ஜோடியாக நடித்தனர். இதில் வடிவேலுவின் ‘கெணத்த காணோம்’ காமெடி புகழ்பெற்றது. தொடர்ந்து  ‘புலிவால்’,  ‘யுத்தம் செய்’ படங்களை இயக்கினார். இவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தினார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில்கூட, […]

The post மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை!   appeared first on Touring Talkies.

]]>
marநடிகர் மாரிமுத்துவின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்த இவர், ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.   2008-ல் ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்பிரசன்னா, உதயதாரா ஜோடியாக நடித்தனர். இதில் வடிவேலுவின் ‘கெணத்த காணோம்’ காமெடி புகழ்பெற்றது.

தொடர்ந்து  ‘புலிவால்’,  ‘யுத்தம் செய்’ படங்களை இயக்கினார். இவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தினார்.

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில்கூட,  வில்லன் விநாயகனுடன் இணைந்து நடித்திருந்தார்.

தவிர,  திருச்செல்வம் இயக்கும் ‘எதிர்நீச்சல்’ என்ற டி.வி. தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது. அவர் மதுரை வழக்கில் பேசும் பேசும் ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் எங்கும் பிரபலமானது.

இந்தத் தொடருக்கான டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனது.

இந்நிலையில், ஏற்கெனவே அவர் அளித்த பேட்டி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், தான் திரைத்துறைக்கு வந்தது குறித்து பேசியிருக்கிறார். குறிப்பிட்ட ஒரு இயக்குநரிடம் உதவியாளராக சேர எடுத்த பெரும் முயற்சி… அது கடைசி வரை நிறைவேறாமலேயே போனது குறித்தும் பேசி இருக்கிறார்..

இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை!   appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த்திரை உலகுக்கு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் https://touringtalkies.co/actor-marimuthu-demise-tn-cm-mk-stalin-condolence/ Sat, 09 Sep 2023 01:32:12 +0000 https://touringtalkies.co/?p=36085 நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், […]

The post தமிழ்த்திரை உலகுக்கு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார்.

மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார்

The post தமிழ்த்திரை உலகுக்கு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
“நல்ல நிலைக்கு வரும்போது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் https://touringtalkies.co/actor-sj-surya-condolence-to-actor-marimuthu-sudden-demise-says-good-human/ Fri, 08 Sep 2023 05:36:45 +0000 https://touringtalkies.co/?p=36055 வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மாரிமுத்துவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இயக்குநர் வசந்திடம் நான் உதவி இயக்குநராக இருக்கும்போது அவர் என்னுடைய சீனியர். நல்ல மனிதர். பலரையும் சிரிக்க வைக்கும் திறமை படைத்தவர். வாழ்வில் அவர் […]

The post “நல்ல நிலைக்கு வரும்போது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மாரிமுத்துவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இயக்குநர் வசந்திடம் நான் உதவி இயக்குநராக இருக்கும்போது அவர் என்னுடைய சீனியர். நல்ல மனிதர். பலரையும் சிரிக்க வைக்கும் திறமை படைத்தவர். வாழ்வில் அவர் நன்றாக வந்துகொண்டிருந்தபோது இந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்துவிட்டது என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. இறைவன் இந்த நேரத்தில் அவரதுகுடும்பத்துக்கு ஏன் இப்படியொரு சூழலை கொடுத்தார் என தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின. இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post “நல்ல நிலைக்கு வரும்போது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்! https://touringtalkies.co/legal-notice-to-actor-marimuthu-about-his-speech-on-astrology/ Mon, 31 Jul 2023 01:34:28 +0000 https://touringtalkies.co/?p=34877 பிரபல நடிகர்மாரிமுத்து, சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்வு ஒன்றில் ஜோதிடம் என்பது பொய் என பேசினார். அதற்கான வாதங்களையும் வைத்தார். “நடப்பதை முன்பே சொல்வதானால், கொரோனா வந்ததை ஏன் சொல்லவில்லை.. தவிர மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகமாட்டார் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்.. ஆனால் அவர் ஆகிவிட்டாரே”என்றும் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஒருகிணைப்பாளர் பழ. ஆறுமுகம் […]

The post பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகர்மாரிமுத்து, சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்வு ஒன்றில் ஜோதிடம் என்பது பொய் என பேசினார். அதற்கான வாதங்களையும் வைத்தார்.

“நடப்பதை முன்பே சொல்வதானால், கொரோனா வந்ததை ஏன் சொல்லவில்லை.. தவிர மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகமாட்டார் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்.. ஆனால் அவர் ஆகிவிட்டாரே”என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஒருகிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பி உள்ளார்.

“ஜி தமிழ் தொலைகாட்சியில் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து ஜோதிடம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. ஜோதிட தொழிலை குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பேசியுள்ளார். கருத்து உரிமை என்ற பெயரில் சபை நாகரீகம் மீறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

மாரி முத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்துபோகும் அளவிற்கு அவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பேசியது குறித்து தகுந்த விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

The post பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்! appeared first on Touring Talkies.

]]>
பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி https://touringtalkies.co/actor-marimuthu-shares-his-experience-with-rajinikanth-and-jailor-movie/ Mon, 10 Jul 2023 05:35:37 +0000 https://touringtalkies.co/?p=34214 ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய மலரும் நினைவுகளை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார். அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க யாருமே வராததால், அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக […]

The post பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய மலரும் நினைவுகளை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க யாருமே வராததால், அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக அமர்ந்து தனது பிராண்டட் ஸ்டைல் சிரிப்பை சிரித்திருக்கிறார். ரஜினியின் நடிப்பைப் பார்த்து உற்சாகம் அடைந்த அனைவரையும் கைத்தட்டி ரசித்தாக ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

The post பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி appeared first on Touring Talkies.

]]>
மனைவி அருமையை உணர்ந்த தருணம்!: நடிகர் மாரிமுத்து https://touringtalkies.co/the-moment-when-the-wife-realized-the-beauty-actor-marimuthu/ Thu, 17 Nov 2022 02:18:00 +0000 https://touringtalkies.co/?p=27255 நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மனைவி மீது பாசமாக இருப்பேன்.. குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வேன். இது எல்லோரும் செய்வதுதான். ஆனால் மனைவி மீது பெரிய அக்கறை செலுத்தினேன் என சொல்ல முடியாது. வெளியூர் படப்பிடிப்புகள்  நிறைய சென்றபோதுதான் மனைவியின் அருமை புரிந்தது. ஓட்டல்களில், அனைவருக்குமான உணவைத்தான் தருவார்கள். நாம் விரும்பியது கிடைத்தாலும் விரும்பிய ருசியில் இருக்காது. ஆனால் வீட்டில் நமக்கேற்ற பக்குவத்தில் மனைவி அக்கறையுடன் சமைத்துத் தருவார். இப்படி அக்கறையாக இருக்கிறாரே என மனைவியின் […]

The post மனைவி அருமையை உணர்ந்த தருணம்!: நடிகர் மாரிமுத்து appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மனைவி மீது பாசமாக இருப்பேன்.. குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வேன். இது எல்லோரும் செய்வதுதான். ஆனால் மனைவி மீது பெரிய அக்கறை செலுத்தினேன் என சொல்ல முடியாது.

வெளியூர் படப்பிடிப்புகள்  நிறைய சென்றபோதுதான் மனைவியின் அருமை புரிந்தது. ஓட்டல்களில், அனைவருக்குமான உணவைத்தான் தருவார்கள். நாம் விரும்பியது கிடைத்தாலும் விரும்பிய ருசியில் இருக்காது.

ஆனால் வீட்டில் நமக்கேற்ற பக்குவத்தில் மனைவி அக்கறையுடன் சமைத்துத் தருவார். இப்படி அக்கறையாக இருக்கிறாரே என மனைவியின் அருமையை பிறகுதான் உணர்ந்தேன்” என்கிறார் மாரிமுத்து.

The post மனைவி அருமையை உணர்ந்த தருணம்!: நடிகர் மாரிமுத்து appeared first on Touring Talkies.

]]>