Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
maanaadu movie – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 May 2022 07:11:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png maanaadu movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மாநாடு’ படத்தின் வெற்றி தமிழ்ச் சினிமா துறையின் வெற்றி..!” – நடிகர் சிம்புவின் பெருமிதம் https://touringtalkies.co/the-success-of-the-film-conference-is-the-success-of-the-tamil-cinema-industry-proud-of-actor-simbu/ Sun, 06 Mar 2022 08:37:07 +0000 https://touringtalkies.co/?p=21090 “மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியை தமிழ்த் திரையுலகத்தின் வெற்றியாகப் பார்ப்பதாக…” நடிகர் சிம்பு கூறியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு ‘மாநாடு’ படம் மீண்டும் திரையிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மாநாடு’ திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் […]

The post “மாநாடு’ படத்தின் வெற்றி தமிழ்ச் சினிமா துறையின் வெற்றி..!” – நடிகர் சிம்புவின் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
“மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியை தமிழ்த் திரையுலகத்தின் வெற்றியாகப் பார்ப்பதாக…” நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாநாடு’ படம் மீண்டும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மாநாடு’ திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தை பார்த்தார்.

அப்போது பேசிய சிலம்பரசன், “இந்தப் படத்தின் வெற்றியை என்னுடைய திரைப்படத்தின் வெற்றியாகப் பார்க்கவில்லை, இன்றைய சூழலில் தமிழ்த் திரையுலகின் வெற்றியாகவே பார்க்கிறேன்..” என்றார். அத்துடன், “இந்த மாநாடு’ படம் எனக்கு மட்டுமில்லாமல் படக் குழுவினருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கிறது..” என்றும் கூறினார்.

மேலும் ரசிகர்களுடன் பேசிய சிலம்பரசன், “உங்களால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். விரைவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.

The post “மாநாடு’ படத்தின் வெற்றி தமிழ்ச் சினிமா துறையின் வெற்றி..!” – நடிகர் சிம்புவின் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் ஆத்மார்த்தமான நடிப்பில் ‘மாநாடு’ வெற்றி கண்டது-யுவன் சங்கர் ராஜா கணிப்பு..! https://touringtalkies.co/yuvan-shankar-raja-appreciate-simbu-and-s-j-suryas-acting-in-maanaadu-movie/ Wed, 01 Dec 2021 15:11:39 +0000 https://touringtalkies.co/?p=19681 வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தைவிடவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. பல சினிமா விமர்சகர்கள் தங்களுடைய ‘மாநாடு’ சினிமா விமர்சனத்தில் யுவன் சங்கர் ராஜாவைத் தனியே குறிப்பிட்டு பாராட்டித் தள்ளியுள்ளனர். இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் […]

The post சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் ஆத்மார்த்தமான நடிப்பில் ‘மாநாடு’ வெற்றி கண்டது-யுவன் சங்கர் ராஜா கணிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான மாநாடு’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தைவிடவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

பல சினிமா விமர்சகர்கள் தங்களுடைய ‘மாநாடு’ சினிமா விமர்சனத்தில் யுவன் சங்கர் ராஜாவைத் தனியே குறிப்பிட்டு பாராட்டித் தள்ளியுள்ளனர்.

இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

“எல்லாப் புகழும்,  எல்லாம் வல்ல இறைவனுக்கே..!

இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும் அதே நேரம், எனது கனிந்த இதயத்துடன்  ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும்  மிகவும் சிறப்பு மிகுந்ததுமான படைப்பாகும்.

வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே  இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற  வெற்றி பாடல்கள் இருந்தன. ஆனால், எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை.

ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள்  BGM இல் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை  தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி.

எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக  நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவரது உழைப்பிற்கும், முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு  வலுவானதொரு தூணாக மாறியுள்ளார்.

இந்த மாநாடு’ படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனது இசை  பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீங்கள் உண்மையாக தேடி அலைவது,  உங்களைத் தேடி வந்தடையும்” என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. இதை உண்மையாக்குமவிதமாக இந்த மாநாடு’ திரைப்படத்தின்,  ஒட்டு மொத்தக் குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும், பாராட்டுக்களும், கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

The post சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் ஆத்மார்த்தமான நடிப்பில் ‘மாநாடு’ வெற்றி கண்டது-யுவன் சங்கர் ராஜா கணிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
மாநாடு – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/maanaadu-movie-review/ Fri, 26 Nov 2021 04:29:15 +0000 https://touringtalkies.co/?p=19587 ‘டைம் லூப்’ எனப்படும் ஒரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு மனிதருக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. துபாயில் வேலை செய்து வரும் நாயகன் ‘அப்துல் காலிக்’ என்ற சிம்பு தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். இதே கல்யாணத்திற்காக அதே துபாயில் இருந்து நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில், சிம்புவுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறார். விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு […]

The post மாநாடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘டைம் லூப்’ எனப்படும் ஒரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு மனிதருக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

துபாயில் வேலை செய்து வரும் நாயகன் அப்துல் காலிக்’ என்ற சிம்பு தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். இதே கல்யாணத்திற்காக அதே துபாயில் இருந்து நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில், சிம்புவுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறார்.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு திடீரென்று சில சம்பவங்கள் நடப்பதாக அவரது மூளையில் பதிவாகிறது.

அதே நாளில் கோவையில் ஆளும் கட்சியின் 12-வது மாநில மாநாடு அந்தக் கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின்போது முதல்வரை கொலை செய்துவிட்டு, கோவையில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு.. சத்தமில்லாமல் அடுத்த முதல்வராக முயல்கிறார் அந்தக் கட்சியில் 30 ஆண்டுகளாக நம்பர் டூ’-வாக இருந்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன்.

இதற்காக ரபீக் என்ற இஸ்லாமிய அப்பாவி இளைஞனை பகடைக் காயாக பயன்படுத்துகிறது போலீஸ். ரபீக்கின் குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு தாங்கள் சொல்வதை செய்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்று மிரட்டுகிறது போலீஸ்.

அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வரும் ரபீக்கைக் காப்பாற்றப் போய் போலீஸிடம் சிக்குகிறார்கள் சிம்பு அண்ட் டீம். இப்போது மொத்த சிம்பு டீமையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போலீஸ் அதிகாரி சூர்யா, தங்களுடைய கொலை அஸைன்மெண்ட்டை செய்து கொடுத்தால்தான் சிம்புவின் நண்பர்கள் உயிர் பிழைப்பார்கள். இல்லையேல் அவர்களை கொலை செய்வோம் என்று மிரட்டுகிறார்.

போலீஸின் மிரட்டலால் சிம்பு முதல்வரை படுகொலை செய்ய.. அடுத்த நொடியே போலீஸ் சிம்புவைச் சுட்டுக் கொல்கிறது. உடனேயே மதக் கலவரம் வெடிக்கிறது. முஸ்லீம்கள் போர்வையில் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இதுவரையிலான சம்பவங்கள் சிம்புவின் மூளையில் பதிவாகி சொல்லப்படுகிறது.

ஆனால், அவர் கண் விழித்தவுடன் இதெல்லாம் நடக்குமா என்று பயப்படுகிறார். அடுத்த முறை தூங்கும்போது இதிலேயே மேலும் சில விஷயங்கள் நடக்கிறது. முதலில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வழிகளை இரண்டாம் முறை கனவு காணும்போது அவர் நினைக்கிறார். அதையும் தாண்டி மீண்டும், மீண்டும் இந்தக் கொலை பிரச்சினையில் சிம்பு சிக்கிக் கொள்கிறார்.

தான் கனவில் காண்பது நிஜமாகவே கோவையில் அன்றைக்கு நடக்கவிருப்பதை உணர்கிறார் சிம்பு. இதைத் தடுப்பதற்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் துடிக்கிறார் சிம்பு.

ஆனால், அதே சமயம் சிம்புவின் முயற்சிகளை தடுக்க நினைக்கிறார் இந்தச் சதி வேலையின் சூத்திரதாரியான போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி’ என்ற எஸ்.ஜே.சூர்யா. இதில் யார் வெற்றி பெற்றார்கள்.. எப்படி வென்றார்கள் என்பதுதான் இந்த சுவாரஸ்யமான படத்தின் மீதமான கதை.

சிம்புவுக்கு நிச்சயமாக இதுவொரு கம் பேக் படம்தான். இத்தனை நடிப்பையும் வைத்துக் கொண்டு வெளிப்படுத்த ஒரு நல்ல பிளாட்பார்ம் கிடைக்காமல் மனிதர் தவித்துக் கொண்டிருக்கிறார் போலும்.. வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் கைகளில் கிடைத்ததால்தான் இந்த நடிப்பெல்லாம் வெளியில் வருகிறது.

சாந்த சொரூபியாக அறிமுகமாகி.. பின்பு எப்படியாவது இந்தப் படுகொலையைத் தடுத்தாக வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கும் சிம்புவுக்கு பெரிதும் துணை நின்றிருப்பது இயக்குநரும், திரைக்கதையும்தான்.

டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தனது பரிதவிப்பை அழகாகக் காட்டியிருக்கிறார் சிம்பு. அவ்வப்போது அவர் டெலிவரி செய்யும் ஒற்றை வரி வசனம்கூட சிரிப்பலையை உண்டு செய்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம் மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிப்பதற்காக எஸ்.ஜே.சூர்யாவை மாட்டிவிடும் அந்தக் காட்சியில் அவரது தத்ரூபமாக நடிப்பு வெளிப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் ஒரு பிரேமைகூட நாம் மிஸ் செய்துவிடக் கூடாது. அப்படியொரு சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் சிம்பு.

அவர் ஓடுகின்ற ஓட்டம்.. வேகமாக செயல்பட்டு முடிவெடுக்கும் தருணங்கள், சூர்யாவை ஏமாற்றும் வேலைகள்.. தன் பேச்சை யாருமே நம்ப மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர் கொட்டித் தீர்ப்பவைகளில் சிம்புவின் சிறந்த நடிப்பும் ஒன்றாகிவிட்டது.

நாயகனுக்கேற்ற வில்லனாக நடிப்பில் ஒன்றியிருக்கிறார் எஸ்.ஜே..சூர்யா. அவருடைய முகம், குரலும் அவருடைய வில்லத்தனத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. கோபத்தில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் நடிப்பு தெறிக்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம், போனில் அவர் பேசுகின்ற காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒய்.ஜி.மகேந்திரன் தான் சொல்வது புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்ற நினைப்பில் சூர்யா காட்டும் முகபாவனைகளும் அபாரம்.

டைம் லூப் தற்போது தன்னையும் தொற்றிக் கொண்டதை தாமதமாகப் புரிந்து கொண்ட சூர்யா.. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்கும்போதும், ஒவ்வொரு பிரச்சினையையும் தாண்டித் தாண்டி சிம்பு போவதை உணரும்போதும் நடிப்பில் சிம்புவை வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

ஒய்.ஜி.மகேந்திரன் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த நடிப்பினை இந்தப் படத்தில்தான் வழங்கியிருக்கிறார். நாடக மேடையில் அவர் சிவாஜி கணேசன் என்று போற்றப்படுபவர்என்பதால் வசனங்களை ஏற்ற, இறங்கத்துடன் கச்சிதமான மாடுலேஷனில் உச்சரிக்கும்போது ரசிகர்களுக்கு மிக இயல்பாகவே சிரிப்பு வருகிறது.

காரில் வந்து கொண்டிருக்கும் சூர்யாவிடம் அவர் பேசும்போது நம்மால் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்கு வெங்கட் பிரபு எழுதியிருக்கும் அசத்தலான வசனங்களும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.

நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பெரிதாக வேடம் இல்லையென்றாலும் பிரேமில் அவர் இருப்பதே அழகாக இருக்கிறது.

மேலும் முதலமைச்சர் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பஞ்சு சுப்பு, கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இதில் பிரேம்ஜிக்கும், கருணாகரனுக்கும் சிறந்த காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மற்றவர்களுக்கு ஓரிரு காட்சிகள்தான்..!

இருந்தாலும் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் இயக்கத்தை செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும், கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அத்தனை பெரிய கூட்டத்தை எப்படி கச்சிதமாகக் கையாண்டு படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அதோடு கார் சேஸிங் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் கேமிராமேன் பெரிய சாகஸமே செய்திருக்கிறார்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை கச்சிதமாக நறுக்கித் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். உடைகள் வடிவமைப்பையும், கலை அரங்கத்தை நிர்மாணித்தவரையும் பாராட்ட வேண்டும். இரண்டு பணிகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஸ்டண்ட் சில்வாவின் சண்டை காட்சிகள் இன்னொரு பக்கம் சிம்புவை ஆக்சன் ஹீரோவாக்குகின்றன.

பின்னணி இசையில் ஒரு பெரும் கலவரத்தையே உண்டு செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. சிம்புவுக்கு அவர் போட்டிருக்கும் தீம் மியூஸிக் சிம்புவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையை நிச்சயமாக அதிகரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே இசை இருந்து வருகிறது.  

இடைவேளைக்குப் பின்னான கதை, திரைக்கதையில் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் இருந்ததால் பரபரவென ஓடுகிறது படம். கூடவே சூர்யாவின் நடிப்பும், நகைச்சுவையும் சேர்ந்து கொள்ள.. ஒவ்வொரு டாஸ்க்கையும் சிம்பு முறியடிக்க.. அந்தத் திட்டத்தை சூர்யா மாற்றியமைக்க.. இப்படியே போகும் இந்த திருடன்-போலீஸ் விளையாட்டு செம ஜோர்..!

இது போன்ற ‘டைம் லூப்’ கதைகள் தமிழுக்கு அன்னியமானவை. பி அண்ட் சி ரசிகர்களுக்கு இது மிகவும் புதியது. போன வாரம் வெளியான ‘ஜாங்கோ’ திரைப்படம் இதனால்தான் பெரிதாகப் பேசப்படாமல் போனது. இந்தப் படத்தில் முதல் பாதியிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது.

குறிப்பால் உணர்த்துவதெல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு ஓகே. தமிழ்ப் படங்களுக்கு செட் ஆகாது. ‘டைம் லூப்’ பற்றிய பல வசனங்களை முன் வைத்திருக்க வேண்டிய சூழலில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டதால்தான் முதல் பாதி கொஞ்சம் அயர்ச்சியை தந்துவிட்டது.

வசனங்களுடன் இந்த ‘டைம் லூப் தியரி’யை சொல்லிவிட்டு படத்தைத் துவக்கியிருந்தால்கூட அதில் நிச்சயமாக தப்பில்லை. சிம்புவைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த ‘டைம் லூப்’ தொற்றிக் கொண்டுள்ளது என்பதை முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சிறிது நேரம் கழித்து சொன்னதால் இடைவேளைக்கு பின்பு கதையுடன் ஒன்றிணைய சிறிது கால தாமதம் ஆகிறது.

அதே சமயம் தமிழகத்தின் இன்றைய அரசியல், அரசியல் கட்சிகளின் நிலைமையை அப்படியே பிரதிபலிக்கும்வகையில் கதையை எழுதியிருப்பதற்கும், அதற்கேற்ற வசனங்களை தைரியமாக எழுதியிருப்பதற்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு நமது பாராட்டுக்கள்.

அதிலும் குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அவருடைய குடும்ப அரசியலைப் பற்றிப் பேசும்போது தியேட்டரே கரவொலியில் அதிர்கிறது. இன்றைய அரசியல் என்றால் என்ன என்பது பற்றி சில வசனங்கள் மூலமாக இன்றைய இளைய சமுதாயத்திற்கும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதே சமயம் இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டு அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மதக் கலவரத்தை உண்டு செய்ய நினைக்கும் அரசியல்வியாதிகளின் போலித்தனமான அரசியலையும் சிம்பு மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவும் இயக்குநருக்கு இன்னுமொரு பாராட்டுக்கள்.

எப்படியிருந்தாலும் இந்த ‘மாநாடு’ படம் ஒரு மாநாடு போலவே பிரம்மாண்டத்தையும், ஆச்சரியத்தையும், பரவசத்தையும் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!

RATINGS : 4 / 5

The post மாநாடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“மாநாடு’ படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள்” – நாயகன் சிம்புவின் நம்பிக்கை..! https://touringtalkies.co/people-will-definitely-support-maanaadu-movie-hero-simbus-hope/ Tue, 22 Jun 2021 12:32:09 +0000 https://touringtalkies.co/?p=15681 தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீண், […]

The post “மாநாடு’ படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள்” – நாயகன் சிம்புவின் நம்பிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீண், சண்டை இயக்கம் – சில்வா, கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், உடையலங்காரம் – வாசுகி பாஸ்கர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக்’ என்ற முஸ்லிம் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தில் இடம் பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் நேற்று மாலை ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நாயகன் சிம்பு பேசுகையில், “வெங்கட் பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு. இந்த ‘மாநாடு’ படத்தைப் பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு. அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு. வெங்கட் பிரபு விளையாட்டான ஆளு. ஆனா இந்தப் படம் பார்த்ததும் இவர்தான் இந்தப் படத்தை எடுத்தாரான்னு அவர் மேல ஒரு ஆச்சர்யமே வரும்.

கல்யாணி சூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க. அவங்க சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க. சினிமா பத்தி தெரியும்னாலும் இன்னும் நிறைய கத்துக்க விரும்புறாங்க.

எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா கிழிச்சிருக்காங்க. அவங்க நடிச்சதைப் பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன். நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல இரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன். இந்தப் படத்தை தியேட்டர்ல பாக்குற இரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்.ஜே.சூர்யாவை தூக்கிட்டுப் போயிருவாங்க.

இந்தப் படம் ஏன் தள்ளிப் போச்சுன்னு தெரியல. ஆனால் அந்த நேரத்துல பண்ணியிருந்தால்கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னுதான் சொல்வேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப் படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.

இந்தப் படத்துல சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி ‘மன்மதன்’ படத்துல ‘மொட்டை மதன்’ கேரக்டர் அழுதுகிட்டே பேசுற மாதிரி காட்சிலதான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.

சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனால் இப்ப அந்த மாதிரி காட்சிகளுக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது. காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சுகூட என்னால அழுகைய நிப்பாட்ட முடியலை.

இப்போதெல்லாம் நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க. மோசமான படம் கொடுத்தால் கழுவி ஊத்துறாங்க. இந்த ‘மாநாடு’ படத்தைப் பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விசயத்தைச் சொல்லிருக்காங்களேன்னு அந்த வேலைக்கு கண்டிப்பா மரியாதை கொடுப்பாங்க…” என்றார்.

The post “மாநாடு’ படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள்” – நாயகன் சிம்புவின் நம்பிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு https://touringtalkies.co/actor-simbu-acting-6-minutes-long-scene-in-one-take-in-the-maanaadu-movie/ Sun, 25 Apr 2021 09:11:52 +0000 https://touringtalkies.co/?p=14671 சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே […]

The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கையாள, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை  வடிவமைப்பினை கவனித்துக் கொள்கிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பின்போது, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் நீளமாகக் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிம்பு.

சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக் குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும்… உடனே கை தட்டல் மூலமாக நடிகர் சிம்புவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு https://touringtalkies.co/maanaadu-movie-shooting-spot-covered-by-siddha-doctor-veera-babu/ Tue, 10 Nov 2020 04:42:14 +0000 https://touringtalkies.co/?p=9878 ‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிலம்பரசன் T.R. நாயகனாக நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சி., ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி,  உதயா, அரவிந்த் ஆகாஷ், ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் […]

The post சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு appeared first on Touring Talkies.

]]>
‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிலம்பரசன் T.R. நாயகனாக நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சி., ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி,  உதயா, அரவிந்த் ஆகாஷ், ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பை கே.எல்.பிரவீண் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக உமேஷ் பணியாற்றுகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.. இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கொரோனா தொற்று காரணமாக படக் குழுவினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக் குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் படக் குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படக் குழுவினருக்கு  தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக் குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவு முறையும் வழங்கப்படுகிறது.

சொல்லப் போனால், கொரோனா தொற்றில் இருந்து படக் குழுவினரை பாதுகாப்பதற்காக, படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவ குழுவினர் கூடவே இருந்து, கவனித்து கொள்வது என்பது இதான் முதன்முறை. அந்த வகையில் படக் குழுவினர் அனைவரும், கொரோனா தாக்கம் குறித்த எந்த அச்சமும் இன்றி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு appeared first on Touring Talkies.

]]>
மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! https://touringtalkies.co/actor-simbu-completed-suseenthiran-movie/ Sun, 08 Nov 2020 10:42:24 +0000 https://touringtalkies.co/?p=9832 இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன. ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன […]

The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர்.

இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன.

ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன சுசீந்திரன் சொன்னதுபோலவே… எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்துவிட்டாராம்.

இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசுகிசு மன்னர்கள்.

இதற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த ‘மாநாடு’ ஷூட்டிங் ஒரு நாள் தள்ளிப் போய் 10-ம் தேதி துவங்குகிறதாம். இதுகூட சுசீந்திரன் படத்திற்காக சிம்பு, டப்பிங் பேசி முடிக்கத்தானாம்.

பாண்டிச்சேரியில் வரும் 10-ம் தேதி துவங்கும் ‘மாநாடு’ ஷூட்டிங் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் முதல் 15 நாட்கள் சிம்பு தொடர்ச்சியாக நடிப்பாராம். அடுத்து ஒரு 15 நாட்கள் இடைவெளிவிட்டு சிம்புவுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளதாம்.

இந்த விடுமுறைக்குக்கூட இன்னொரு காரணம் சொல்கிறார்கள். ’மாநாடு’ படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு, நடிகர் அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.

அந்தப் படத்தின் பாதி நாட்கள் ஷூட்டிங் இப்போதே முடிந்துவிட்டதாம். இன்னும் ஒரு 15 நாட்கள் கிடைத்தால் இந்தப் படம் முடிந்துவிடுமாம். இதனால் ‘மாநாடு’ படத்தின் இடையில் கிடைக்கும் அந்த 15 நாள் இடைவெளியில் அசோக் செல்வனின் படத்தை இயக்கி முடிப்பார் வெங்கட் பிரபு என்கிறது ‘மாநாடு’ வட்டாராம்.

The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! https://touringtalkies.co/simbus-next-movie-director-changed/ Thu, 22 Oct 2020 05:50:23 +0000 https://touringtalkies.co/?p=9104 நடிகர் சிம்பு இன்று முதல் சமூக வலைத்தளத்தில் தனித்து வலம் வரப் போவதாக அறிவித்து தனது முதல் வீடியோவையும் வெளியிட்டுவிட்டார். இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத் துவக்கத்தில் பாண்டிச்சேரியில் துவங்கவுள்ளது. இந்த இடைவெளியில் மிக சீக்கிரமாக முடிவு செய்யப்பட்ட இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ஒரு […]

The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு இன்று முதல் சமூக வலைத்தளத்தில் தனித்து வலம் வரப் போவதாக அறிவித்து தனது முதல் வீடியோவையும் வெளியிட்டுவிட்டார்.

இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத் துவக்கத்தில் பாண்டிச்சேரியில் துவங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் மிக சீக்கிரமாக முடிவு செய்யப்பட்ட இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

‘மாநாடு’ படத்திற்குப் பின்பு சிம்பு நடிக்கவிருப்பது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில்.. இந்தப் படம் கன்னடத்தில் சென்ற ஆண்டு வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கவிருந்த இயக்குநர் நார்தன்தான் தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். சிம்புவின் படம் துவங்க காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இயக்குநர் நார்தனே படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இயக்குநர் நார்தன், கன்னடத்தின் ஸ்டார் நடிகரான யாஷ் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் கன்னடத்தில் எடுக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இயக்குநருக்குப் பதிலாக இப்போது சிம்புவின் இந்தப் புதிய படத்தை இயக்கவிருப்பது கிருஷ்ணாவாம். இவர், ஞானவேல்ராஜா தயாரித்த முதல் படமான ‘சில்லுன்னு ஒரு காதல்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஆரியை வைத்து ‘மானே, தேனே, பேயே’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! https://touringtalkies.co/simbus-new-movie-stats-today-at-dindigul/ Sat, 10 Oct 2020 05:16:39 +0000 https://touringtalkies.co/?p=8539 நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன. முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு […]

The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன.

முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு முறை சென்று ஆயுர்வேத சிகிச்சையெல்லாம் பெற்று 100 கிலோவில் இருந்து தற்சமயம் 70 கிலோவாக உருமாறியுள்ளார்.

அதோடு, ‘மாநாடு’ படத்திற்கிடையே சுசீந்திரனின் படத்திலும் நடிக்க திடீரென்று ஒத்துக் கொண்டார். அதுலேயும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் ஒரே கட்டமாக நடித்துக் கொடு்க்கப் போவதாக வாக்குறுதியளித்தவர்.. இன்றைக்கு திண்டுக்கல்லில் அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாண்டிச்சேரியில் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் சிம்பு.

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி கோவிலுக்கும் ஆன்மீகப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.

சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்… அவரது ரசிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

சுசீந்திரனின் திரைப்படம், ‘மாநாடு’ திரைப்படம் இரண்டும் சிம்புவால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியானால்.. தயாரிப்பாளர்கள் கூட்டம் சிம்புவை மொய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

“இனி எல்லாமே அவருடைய கைகளில்தான் உள்ளது…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
பாண்டிச்சேரியில் சிம்பு https://touringtalkies.co/maanaadu-movie-shooting-news/ Sun, 04 Oct 2020 15:18:40 +0000 https://touringtalkies.co/?p=8358 சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்துடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. “வெங்கட் பிரபு எழுதி இயக்குகின்ற இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

The post பாண்டிச்சேரியில் சிம்பு appeared first on Touring Talkies.

]]>

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்துடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது.

நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.

“வெங்கட் பிரபு எழுதி இயக்குகின்ற இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

The post பாண்டிச்சேரியில் சிம்பு appeared first on Touring Talkies.

]]>