Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
film – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Dec 2023 11:44:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png film – Touring Talkies https://touringtalkies.co 32 32 சீனு ராமசாமி படத்தில்   இரவின் நிழல் நாயகி பிரிகிடா! https://touringtalkies.co/iravin-nizhal-fame-brigida-commits-her-next-film-with-seenu-ramasamy/ Sat, 23 Dec 2023 01:42:44 +0000 https://touringtalkies.co/?p=39111 பிளாக் ஷீப் தயாரிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் வெப் தொடரின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரிகிடா. அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். பிக் பாஸ் புகழ் முகேன் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா நடித்திருந்தார். அதன்பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலதரப்பட்ட சினிமா, ஊடகம் மற்றும் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இரவின் நிழல் […]

The post சீனு ராமசாமி படத்தில்   இரவின் நிழல் நாயகி பிரிகிடா! appeared first on Touring Talkies.

]]>
பிளாக் ஷீப் தயாரிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் வெப் தொடரின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரிகிடா.

அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். பிக் பாஸ் புகழ் முகேன் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா நடித்திருந்தார்.

அதன்பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலதரப்பட்ட சினிமா, ஊடகம் மற்றும் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

இரவின் நிழல் படம் வெளியாகி பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் நீர்ப்பறவை , தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

The post சீனு ராமசாமி படத்தில்   இரவின் நிழல் நாயகி பிரிகிடா! appeared first on Touring Talkies.

]]>
’மார்கழி திங்கள்’படத்திற்கு இளையராஜா தான் முதுகெலும்பு.! https://touringtalkies.co/ilayaraja-is-the-backbone-of-the-film-margazhi-tingal/ Wed, 22 Nov 2023 23:56:50 +0000 https://touringtalkies.co/?p=38200 மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் அக்.27 ஆம் தேதி மார்கழி திங்கள் வெளியானது. இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜா, சுசீந்திரன், சியாம் செல்வன், ரக்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தனக்கு இந்த படம் இயக்கும் வாய்ப்பு எப்படி வந்தது மற்றும் தனது தந்தை இயக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட மனோஜ். படத்துக்கு இளையராஜா  இசை பக்கபலமாகவும் படத்தை தாங்கி பிடிக்கும் முதுகெலும்பாக அவரது இசை அமைந்தது என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் […]

The post ’மார்கழி திங்கள்’படத்திற்கு இளையராஜா தான் முதுகெலும்பு.! appeared first on Touring Talkies.

]]>
மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் அக்.27 ஆம் தேதி மார்கழி திங்கள் வெளியானது. இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜா, சுசீந்திரன், சியாம் செல்வன், ரக்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தனக்கு இந்த படம் இயக்கும் வாய்ப்பு எப்படி வந்தது மற்றும் தனது தந்தை இயக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட மனோஜ். படத்துக்கு இளையராஜா  இசை பக்கபலமாகவும் படத்தை தாங்கி பிடிக்கும் முதுகெலும்பாக அவரது இசை அமைந்தது என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

The post ’மார்கழி திங்கள்’படத்திற்கு இளையராஜா தான் முதுகெலும்பு.! appeared first on Touring Talkies.

]]>
அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’! https://touringtalkies.co/aran-directed-produced-and-starred-in-the-film-zigiri-dosth/ Sun, 12 Nov 2023 00:46:48 +0000 https://touringtalkies.co/?p=37801 நண்பர்கள் கதை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அப்படி ஒரு ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’. ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி […]

The post அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’! appeared first on Touring Talkies.

]]>
நண்பர்கள் கதை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அப்படி ஒரு ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’.

ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்துக்கு ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பந்தன்’, ’சத்திய சோதனை’, ’விழித்திரு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.

விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது. விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள். லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குநர். படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.

காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி. படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

The post அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’! appeared first on Touring Talkies.

]]>
நயனுக்கு 75 கட் அவுட்! பட், படம் அவுட்! எது தெரியுமா? https://touringtalkies.co/cut-out-for-nayanthara-in-75-seats-the-film-failed/ Wed, 11 Oct 2023 05:02:47 +0000 https://touringtalkies.co/?p=37053 நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு இருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. ஆனால் அவருக்கு 75 கட்அவுட்கள் வைத்து விளம்பரப்படுத்தியும் ஒரு படம் ஓடவில்லை.. அது எந்த படம் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை […]

The post நயனுக்கு 75 கட் அவுட்! பட், படம் அவுட்! எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு இருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன.

ஆனால் அவருக்கு 75 கட்அவுட்கள் வைத்து விளம்பரப்படுத்தியும் ஒரு படம் ஓடவில்லை..

அது எந்த படம் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..

The post நயனுக்கு 75 கட் அவுட்! பட், படம் அவுட்! எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
அள்ளிக் கொடுத்த அஜீத் படம்… அது எந்த படம்? https://touringtalkies.co/the-ajith-film-that-was-given-which-film-is-it/ Wed, 04 Oct 2023 23:53:31 +0000 https://touringtalkies.co/?p=36878 தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான டிரைடண்ட் ரவிச்சந்திரன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர், “நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித் நடித்த பெரும்பாலான படங்களின் என்.எஸ்.சி. விநியோக உரிமையை நான்தான் வாங்குவேன். ஆனால் ஒரு படம் தயாராகும் போது என்னிம் பணம் இல்லை. ஆகவே, நண்பர் காஜாமொய்தினிடம்  வாங்க சொன்னேன். அவரிடமும் பணம் இல்லை. நான் தொல்லை செய்ததால், ஐந்து லட்சம் முன்பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார்..  அந்த படம் வெளியாகி […]

The post அள்ளிக் கொடுத்த அஜீத் படம்… அது எந்த படம்? appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான டிரைடண்ட் ரவிச்சந்திரன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர், “நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித் நடித்த பெரும்பாலான படங்களின் என்.எஸ்.சி. விநியோக உரிமையை நான்தான் வாங்குவேன். ஆனால் ஒரு படம் தயாராகும் போது என்னிம் பணம் இல்லை. ஆகவே, நண்பர் காஜாமொய்தினிடம்  வாங்க சொன்னேன். அவரிடமும் பணம் இல்லை. நான் தொல்லை செய்ததால், ஐந்து லட்சம் முன்பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார்..  அந்த படம் வெளியாகி பல மடங்கு லாபத்தை அளித்தது” என்றார்.

வசூலில் வாரிக் கொடுத்த அஜித்தின் அந்த படம் எது.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post அள்ளிக் கொடுத்த அஜீத் படம்… அது எந்த படம்? appeared first on Touring Talkies.

]]>
என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் https://touringtalkies.co/the-film-that-made-me-look-back-on-my-life-was-luckyman-yogibabu/ Thu, 31 Aug 2023 01:51:51 +0000 https://touringtalkies.co/?p=35815   பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் லக்கிமேன். நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது […]

The post என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் appeared first on Touring Talkies.

]]>
 

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் லக்கிமேன்.

நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை.

நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

 

 

The post என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ’லக்கிமேன்’ யோகிபாபு உருக்கம் appeared first on Touring Talkies.

]]>
மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-much-salary-revathy-and-pandian-received-for-the-film-manvasanai-what-is-the-salary-for-hero-heroine-this-much/ Tue, 29 Aug 2023 01:07:00 +0000 https://touringtalkies.co/?p=35736 பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம். இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார். அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது. அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள […]

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம்.

இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார்.

அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது.

அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்.. 

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மாளவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு! https://touringtalkies.co/malavika-mohanan-has-said-that-she-will-act-only-in-films-that-give-importance-to-her-character/ Tue, 01 Aug 2023 05:25:53 +0000 https://touringtalkies.co/?p=34920 தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தைத் , தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், சபேட்டி ஒன்றில், “நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி […]

The post மாளவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தைத் , தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், சபேட்டி ஒன்றில், “நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை. அந்தப் படம் பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவித்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.  ஆகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்”என தெரிவித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், “இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுப்பது நியாயமா” என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

The post மாளவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு! appeared first on Touring Talkies.

]]>
பார்த்திபனால் நின்ற,  ரஜினி பட ஷூட்டிங்! https://touringtalkies.co/rajini-film-shooting-stopped-by-parthipan/ Wed, 12 Jul 2023 04:04:46 +0000 https://touringtalkies.co/?p=34292 பார்த்திபனால், ரஜினி பட படப்பிடிப்பு நின்றதை பத்திரிகையாளர் பாலு கூறினார். அவர், “பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே  படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருந்தார் அதே நேரத்தில், ரஜினி நடித்த எஜமான் படத்திலும் நடித்து வந்தார். உள்ளே வெளியே படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, எஜமான் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை 2 நாட்கள் அனுப்புமாறு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தரப்பில் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது. ஆனால், மிகுந்த பண நெருக்கடிக்கு இடையே பார்த்திபன் அப்படத்தை எடுத்து வந்தார். ஐஸ்வர்யாவை அனுப்பினால் ஒருநாள் […]

The post பார்த்திபனால் நின்ற,  ரஜினி பட ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>
பார்த்திபனால், ரஜினி பட படப்பிடிப்பு நின்றதை பத்திரிகையாளர் பாலு கூறினார்.

அவர், “பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே  படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருந்தார் அதே நேரத்தில், ரஜினி நடித்த எஜமான் படத்திலும் நடித்து வந்தார்.

உள்ளே வெளியே படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, எஜமான் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை 2 நாட்கள் அனுப்புமாறு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தரப்பில் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது.

ஆனால், மிகுந்த பண நெருக்கடிக்கு இடையே பார்த்திபன் அப்படத்தை எடுத்து வந்தார். ஐஸ்வர்யாவை அனுப்பினால் ஒருநாள் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என நினைத்து அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் எஜமான் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. யார் யாரோ கேட்டும் பார்த்திபன் மறுத்துவிட்டார். அதன்பின் ஏவிஎம் சரவணனே பார்த்திபனை தொடர்பு கொண்டு பேச அதற்கு சம்மதித்த பார்த்திபன் ஒருநாள் மட்டும் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார்.

இப்படி பார்த்திபனின் சூழ்நிலையால், ரஜினி பட படப்பிடிப்பே சில நாட்கள் தடைபட்ட சம்பவம் நடந்தது” என்றார் பத்திரிகையாளர் பாலு.

The post பார்த்திபனால் நின்ற,  ரஜினி பட ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>
பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது! https://touringtalkies.co/pan-indian-film-double-eyesmart-has-a-grand-start/ Tue, 11 Jul 2023 07:07:42 +0000 https://touringtalkies.co/?p=34261 உஸ்தாத் ராம் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள. அவர்களது முந்தைய கல்ட் பிளாக்பஸ்டர் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலுக்காக இம்முறை இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இம்முறை இரட்டிப்பு மாஸாகவும், இரட்டிப்பு பொழுதுபோக்காகவும் இந்தப் படம் இருக்கும். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸில் தயாரிக்கவுள்ளனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் பிரமாண்டமான தொடக்க […]

The post பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது! appeared first on Touring Talkies.

]]>
உஸ்தாத் ராம் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள. அவர்களது முந்தைய கல்ட் பிளாக்பஸ்டர் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலுக்காக இம்முறை இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இம்முறை இரட்டிப்பு மாஸாகவும், இரட்டிப்பு பொழுதுபோக்காகவும் இந்தப் படம் இருக்கும். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸில் தயாரிக்கவுள்ளனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் பிரமாண்டமான தொடக்க விழா இன்று படக்குழு மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சார்மி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஹீரோ ராம் பொதினேனியின் முதல் காட்சியை இயக்கினார். இதில், ‘ஐஸ்மார்ட் ஷங்கர் அலைஸ் டபுள் ஐஸ்மார்ட்’ என்று ஸ்டைலாக படமாக்கப்பட்ட முதல் காட்சியில் ராம் படத்தின் பெயரைச் சொன்னார். ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இம்மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ராமுக்கும், பூரி ஜெகந்த்துக்கும் ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ மிகவும் சிறப்பான படமாகவும், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால், இந்தப் படத்தைச் சுற்றியுள்ள உற்சாகமும் எதிர்பார்ப்பும் மிகப்பெரியதாக உள்ளது. பூரி ஜெகன்நாத்தின் இந்தக் கதை மிகப் பெரிய பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாராக இருக்கிறது. ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட இயக்குநர் பூரி, கதாநாயகன் ராமை ஒரு மாஸ் கேரக்டரில் காட்டவுள்ளார்.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியாக இருக்கிறது.

 

The post பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது! appeared first on Touring Talkies.

]]>