Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
daughter – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Jan 2024 03:28:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png daughter – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அன்பு மகளே”: இளையராஜா வேதனை பதிவு! https://touringtalkies.co/ilayaraja-sad-post-for-daughter-death/ Sat, 27 Jan 2024 02:26:55 +0000 https://touringtalkies.co/?p=39472 பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் உடல் இலங்கையில் இருந்து இன்று கொண்டு வரப்பட்டு சென்னை தி.நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளின் பிரிவை தாங்க முடியாத தந்தை இளையராஜா, அன்பு மகளே என பவதாரிணி சிறுவயது குழந்தையாக தன்னோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

The post “அன்பு மகளே”: இளையராஜா வேதனை பதிவு! appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் உடல் இலங்கையில் இருந்து இன்று கொண்டு வரப்பட்டு சென்னை தி.நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மகளின் பிரிவை தாங்க முடியாத தந்தை இளையராஜா, அன்பு மகளே என பவதாரிணி சிறுவயது குழந்தையாக தன்னோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

The post “அன்பு மகளே”: இளையராஜா வேதனை பதிவு! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீ தேவி உடையை அணிந்த மகள் குஷி கபூர்! https://touringtalkies.co/daughter-khushi-kapoor-dressed-as-sri-devi/ Wed, 06 Dec 2023 03:15:23 +0000 https://touringtalkies.co/?p=38559 த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர். இவர்கள் இருவரும் தற்போது படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளைய மகள் குஷி கபூரும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். […]

The post ஸ்ரீ தேவி உடையை அணிந்த மகள் குஷி கபூர்! appeared first on Touring Talkies.

]]>
த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர். இவர்கள் இருவரும் தற்போது படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளைய மகள் குஷி கபூரும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இறப்பதற்கு முன்னதாக நடிகர் விஜய்யின் புலி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஸ்ரீதேவி மகள்கள்: இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அவர் துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தற்போது பாலிவுட்டில் நடிகைகளாக இருந்து வருகின்றனர். ஜான்வி கபூர் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே ஜான்வி கபூர் நடிகையாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட கோலமாவு கோகிலா படத்திலும் இவர் நடித்திருந்தார்

நடிகை ஜான்வி கபூர்: படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி – அம்மா அணிந்த உடையை போனிகபூரின் இளையமகள் குஷி கபூர் போட்டுக்கொண்டு போட்டோ ஹூட் நடத்தியுள்ளார்.

 

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

The post ஸ்ரீ தேவி உடையை அணிந்த மகள் குஷி கபூர்! appeared first on Touring Talkies.

]]>
சோகத்திலிருந்து மீள   விஜய் ஆண்டணி எடுத்த முடிவு! https://touringtalkies.co/vijay-antony-rmeera-tragedy-daughter-suicide/ Sun, 24 Sep 2023 03:46:24 +0000 https://touringtalkies.co/?p=36550 தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர்,  விஜய் ஆண்டனி. சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒட்டுமொத்த ரசிகர்கள், பிரபலங்கள், குடும்பத்தினர் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தனது மகள் இறப்பு குறித்து மு விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை […]

The post சோகத்திலிருந்து மீள   விஜய் ஆண்டணி எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர்,  விஜய் ஆண்டனி. சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஒட்டுமொத்த ரசிகர்கள், பிரபலங்கள், குடும்பத்தினர் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தனது மகள் இறப்பு குறித்து மு விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை உருக்கமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் விவரித்து உள்ளார்.

இதை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post சோகத்திலிருந்து மீள   விஜய் ஆண்டணி எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? https://touringtalkies.co/will-senior-actors-think-of-vijay-sethu-krithi-shetty/ Sun, 24 Sep 2023 03:39:34 +0000 https://touringtalkies.co/?p=36539 ‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார். ‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் […]

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.

‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.

மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில், பத்திரிகையாளர் செல்வம், “விஜய் சேதுபதியை பார்த்தாவது, சீனியர் நடிகர்கள் திருந்துவார்களா” என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  மகள் தற்கொலை!  https://touringtalkies.co/vijay-antonys-daughter-lara-commits-suicide/ Tue, 19 Sep 2023 02:34:50 +0000 https://touringtalkies.co/?p=36404 இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன் ஆவார். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். மேலும் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் […]

The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  மகள் தற்கொலை!  appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன் ஆவார். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

மேலும் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் லாரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

லாராவின் அறைக் கதவு இன்று காலை வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை  மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லாரா  அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து லாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  மகள் தற்கொலை!  appeared first on Touring Talkies.

]]>
“பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் https://touringtalkies.co/think-before-you-speak-rahmans-daughter-khadija/ Wed, 13 Sep 2023 03:21:45 +0000 https://touringtalkies.co/?p=36181 சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிந்த கருத்து: “நேற்று இரவு முதல் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போன்று […]

The post “பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிந்த கருத்து: “நேற்று இரவு முதல் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போன்று சித்தரித்து வருகின்றனர். சிலர் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே 100 சதவீத காரணம். ஆனாலும் தானே பொறுப்பு என ரஹ்மான்  பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார்.

அவர், 2016ல்,  மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை, கோவை, மதுரையில் ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி நடத்தி நிதி அளித்தார்.

2018ல், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உதவினார்.

2020ல், கரோனா காலகட்டத்தின்போது பல குடும்பங்களுக்கு அந்த மாதத்துக்கு தேவையான உதவிகளை செய்தார்.

2022ல்,  லைட்மேன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு இலவச இசை நிகழ்ச்சி நடத்தினார்” என்று பதவிட்டுள்ள கதீஜா, இறுதியாக, “பேசும்முன் யோசிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post “பேசும்முன் யோசிக்கவும்”: ரஹ்மானின் மகள் கதீஜா ஆவேசம் appeared first on Touring Talkies.

]]>
ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! https://touringtalkies.co/shocking-news-about-gemini-ganesans-daughter/ Sat, 22 Jul 2023 23:34:59 +0000 https://touringtalkies.co/?p=34605 மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்: “அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள். என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி […]

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்:

“அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள்.

என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டுபோய் விடுவார். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடக்கும். அப்படி வரும் பெண்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். வேறு ஒரு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என என் அப்பாவும் பல பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்’ என கமலா செல்வராஜ் தனது அப்பா ஜெமினி கணேசன் பற்றி பேசியுள்ளார்.

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினிக்கு இன்னொரு மகள்.. தெரியுமா உங்களுக்கு? https://touringtalkies.co/rajini-has-another-daughter/ Sat, 22 Jul 2023 06:11:23 +0000 https://touringtalkies.co/?p=34570 நடிகர் ரஜினிக்கு ஐஸ்வர்யா,  சௌந்தர்யா என இரு மகள்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ரெட்டி, “ரஜினி எனக்கு இன்னொரு அப்பா போன்றவர்” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ரஜினியின் தீவிர ரசிகை. அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். அப்படி சின்ன வயதில் பார்த்த படம்தான் படையப்பா. அதில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் போல ஒரு படத்திலாவது  நடிக்க வேண்டும் […]

The post ரஜினிக்கு இன்னொரு மகள்.. தெரியுமா உங்களுக்கு? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிக்கு ஐஸ்வர்யா,  சௌந்தர்யா என இரு மகள்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ரெட்டி, “ரஜினி எனக்கு இன்னொரு அப்பா போன்றவர்” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ரஜினியின் தீவிர ரசிகை. அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். அப்படி சின்ன வயதில் பார்த்த படம்தான் படையப்பா. அதில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் போல ஒரு படத்திலாவது  நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதற்கேற்ற மாதிரி அமைந்ததுதான்,  திமிரு படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம்.ரஜினியை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள் நான்.  போயஸ் கார்டனில் சின்ன வயதில் இருந்தே அனைவருடன் சேர்ந்து விளையாடி இருக்கிறேன். அவர் என்னைப் பார்த்து ‘நடிகை தபு மாதிரியே இருக்கிறாய்’ என்று சொல்லுவார். அவர் எனக்கு இன்னொரு அப்பா “ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்ரேயா ரெட்டி.

The post ரஜினிக்கு இன்னொரு மகள்.. தெரியுமா உங்களுக்கு? appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி உடையில் குஷ்பு மகள் ! https://touringtalkies.co/actress-kushpoos-daughter-avanthika-photo-trending-on-social-media/ Fri, 28 Apr 2023 02:39:47 +0000 https://touringtalkies.co/?p=31963 நடிகை குஷ்பு – சுந்தர் சி தம்பதியருக்கு அனந்திகா  அவந்திகா என இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில், அவந்திகா வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார். இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.  அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை  வெளியிட்டு வருவார். பருமனாக இருந்த அவர் தற்போது உடற்பயிற்சி செய்து, ஸ்லிம்-ஆக மாறியுள்ளார். இதை  எடுத்துக்காட்டும் வகையில் அவர் ஒரு போட்டோ  வெளியிட்டு உள்ளார். சிக்கென்ற  உடையில் தன் உடலில் இருக்கும் டாட்டூ தெரியும் படியான போட்டோ அது. […]

The post கவர்ச்சி உடையில் குஷ்பு மகள் ! appeared first on Touring Talkies.

]]>
நடிகை குஷ்பு – சுந்தர் சி தம்பதியருக்கு அனந்திகா  அவந்திகா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

இவர்களில், அவந்திகா வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார். இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.  அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை  வெளியிட்டு வருவார்.

பருமனாக இருந்த அவர் தற்போது உடற்பயிற்சி செய்து, ஸ்லிம்-ஆக மாறியுள்ளார். இதை  எடுத்துக்காட்டும் வகையில் அவர் ஒரு போட்டோ  வெளியிட்டு உள்ளார்.

சிக்கென்ற  உடையில் தன் உடலில் இருக்கும் டாட்டூ தெரியும் படியான போட்டோ அது.

இப்போது பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post கவர்ச்சி உடையில் குஷ்பு மகள் ! appeared first on Touring Talkies.

]]>