Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
cinema – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Dec 2023 12:41:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png cinema – Touring Talkies https://touringtalkies.co 32 32 சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! https://touringtalkies.co/award-sasikumar-controversial-ciff-award-best-tamil-cinema-ayothi/ Thu, 21 Dec 2023 02:29:41 +0000 https://touringtalkies.co/?p=39028 சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்`அயோத்தி’. “தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா” என்று வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில்,  படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழுந்தது. பட டைட்டிலில், கதை –  எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது.  ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை  என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார். இந்த நிலையில், 21-வது […]

The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்`அயோத்தி’. “தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா” என்று வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில்,  படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழுந்தது.

பட டைட்டிலில், கதை –  எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது.  ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை  என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார்.

இந்த நிலையில், 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்பட போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதில் சிறந்த படமாக   அயோத்தி படம் தேர்ந்தெடுக்ககப்பட்டது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.

]]>
  2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! https://touringtalkies.co/rewind-2023-box-office-collection-list-in-tamil-cinema/ Thu, 21 Dec 2023 01:39:33 +0000 https://touringtalkies.co/?p=39042 t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம். லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் […]

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம்.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. இதனால் படம் உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.

வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.

துணிவு: அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசிய இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ அதன் ஜாலியான திரைக்கதையால் வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.

மாமன்னன்: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. மாரிசெல்வராஜ் ஹீரோயிசத்துக்குள் சிக்கிவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.

போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் https://touringtalkies.co/the-first-movie-i-saw-was-kalaignanam/ Mon, 27 Nov 2023 00:58:15 +0000 https://touringtalkies.co/?p=38322   கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட  எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.   கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.

]]>
 

கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட  எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.

 

கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.

]]>
சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா https://touringtalkies.co/one-should-respect-fellow-artists-in-cinema-bharathiraja/ Mon, 20 Nov 2023 21:04:31 +0000 https://touringtalkies.co/?p=38101   பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.   இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த […]

The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
 

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது.

அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.

நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை  பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.

 

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ,  வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில் அந்த அறிக்கையில் பாரதிராஜா கூ றியுள்ளார்,

The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! https://touringtalkies.co/sembuli-jagan-regrets-that-there-is-no-respect-for-supporting-actors-in-cinema/ Sat, 11 Nov 2023 02:47:36 +0000 https://touringtalkies.co/?p=37793 தமிழ் சினிமாவில் இயக்குனர் கே. பாக்கியராஜ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் செம்புலி ஜெகன்.பல திரைபப்டங்களில் நடித்த இவர்  தமிழ் சினிமாவில் துணை நடிகர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பது கிடையாது. மொழி தெரியாத நடிகர்களுக்கு  பணத்தை வாரி கொடுக்கின்றனர்.  திறைமையான நடிகர்கள்  அவர் நடித்த காட்சிக்கு பணம் வாங்க உதாசினப்படுத்தப்படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் நேர்காணலில்  செம்புலி ஜெகன் பகிர்ந்து கொண்ட வீடியோ….

The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே. பாக்கியராஜ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் செம்புலி ஜெகன்.பல திரைபப்டங்களில் நடித்த இவர்  தமிழ் சினிமாவில் துணை நடிகர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பது கிடையாது.

மொழி தெரியாத நடிகர்களுக்கு  பணத்தை வாரி கொடுக்கின்றனர்.  திறைமையான நடிகர்கள்  அவர் நடித்த காட்சிக்கு பணம் வாங்க உதாசினப்படுத்தப்படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் நேர்காணலில்  செம்புலி ஜெகன் பகிர்ந்து கொண்ட வீடியோ….

The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.

]]>
“தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”:   செம்புலி ஜெகன் ஆதங்கம் https://touringtalkies.co/those-who-dont-know-tamil-get-paid-more-in-cinema-sembuli-jagan/ Wed, 08 Nov 2023 04:05:50 +0000 https://touringtalkies.co/?p=37677 ‘ஆராரோ ஆரிராரோ’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக, திரையுலகில் கால் பதித்தவர் செம்புலி ஜெகன். அடுத்தடுத்து பாக்யராஜ் படங்களில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து பல நாயகர்களுடன் நடித்தார். இவர் தற்போது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, “என்னைப்போன்ற காமெடி நடிகர்களுக்கு உரிய ஊதியம் தருவது இல்லை.  வாங்கும் சம்பளம் வீட்டு வாடகை, மளிகை செலவுக்கே சரியாகிவிடுகிறது. அதே நேரம் தமிழே தெரியாத நடிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்”  என்று ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார். […]

The post “தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”:   செம்புலி ஜெகன் ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
‘ஆராரோ ஆரிராரோ’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக, திரையுலகில் கால் பதித்தவர் செம்புலி ஜெகன். அடுத்தடுத்து பாக்யராஜ் படங்களில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து பல நாயகர்களுடன் நடித்தார்.

இவர் தற்போது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “என்னைப்போன்ற காமெடி நடிகர்களுக்கு உரிய ஊதியம் தருவது இல்லை.  வாங்கும் சம்பளம் வீட்டு வாடகை, மளிகை செலவுக்கே சரியாகிவிடுகிறது.

அதே நேரம் தமிழே தெரியாத நடிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்”  என்று ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.

அவரது முழு பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

 

The post “தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”:   செம்புலி ஜெகன் ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
’கண்ணே கலைமானே’: மேலும் மூன்று சிறப்பு அங்கீகாரம்! https://touringtalkies.co/cinema-kannekalaimane/ Wed, 08 Nov 2023 03:40:22 +0000 https://touringtalkies.co/?p=37659 சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ’கண்ணே கலைமானே’. இந்தப் படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரிசங்களைப் பெற்றது. சில மாதங்களுக்கு முன்னர், இந்திய – பிரெஞ்சு திரைப்பட விழாவில் ’கண்ணே கலைமானே’ படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும் பெற்றனர். இந்நிலையில் படத்துக்கு தொடர்ந்து பல அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. அக்கோலேட் […]

The post ’கண்ணே கலைமானே’: மேலும் மூன்று சிறப்பு அங்கீகாரம்! appeared first on Touring Talkies.

]]>
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ’கண்ணே கலைமானே’. இந்தப் படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரிசங்களைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்னர், இந்திய – பிரெஞ்சு திரைப்பட விழாவில் ’கண்ணே கலைமானே’ படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும் பெற்றனர்.

இந்நிலையில் படத்துக்கு தொடர்ந்து பல அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. அக்கோலேட் சர்வதேசத் திரைப்படப் போட்டி, ஜெய்ப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா,  தொழிலாளர் ஒற்றுமை திரைப்பட விழா  ஆகிய திரைப்பட விழாக்களில், ’கண்ணே கலைமானே’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிப் பிரிவில் பங்கு பெற்றுள்ளது.

The post ’கண்ணே கலைமானே’: மேலும் மூன்று சிறப்பு அங்கீகாரம்! appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜாவை  நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! https://touringtalkies.co/actress-nithya-i-misunderstood-bharathiraja/ Thu, 26 Oct 2023 01:48:50 +0000 https://touringtalkies.co/?p=37226 சினிமா உலகில்  தமிழ்,தெலுங்கு,இந்தியிலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து கொண்டிருப்பவர் நடிகை நித்யா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பல பிரபலங்களுடன் பணியாற்றியவர்.சின்னத்திரை,வெள்ளித்திரை,பின்னணி குரல் என பல துறையில் சாதனை படைத்து வருபவர். பாரதிராஜா  உதவி இயக்குனராக இருந்த போதிலிருந்து   எனக்கு தெரியும். பிறகு அவர் பெரிய இயக்குனராக  வளர்ந்த பின். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்தேன்  அவர் பார்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமா? என்ற  தயக்கத்தில் […]

The post பாரதிராஜாவை  நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.

]]>
சினிமா உலகில்  தமிழ்,தெலுங்கு,இந்தியிலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து கொண்டிருப்பவர் நடிகை நித்யா.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பல பிரபலங்களுடன் பணியாற்றியவர்.சின்னத்திரை,வெள்ளித்திரை,பின்னணி குரல் என பல துறையில் சாதனை படைத்து வருபவர்.

பாரதிராஜா  உதவி இயக்குனராக இருந்த போதிலிருந்து   எனக்கு தெரியும். பிறகு அவர் பெரிய இயக்குனராக  வளர்ந்த பின். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்தேன்  அவர் பார்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமா? என்ற  தயக்கத்தில்  அவரிடம் நான் பேச வில்லை.

பிறகு அவரே வந்து என்னிடம் பேசினார் அதை பார்த்து குற்ற உணர்வில் வருத்தப்பட்டேன் என சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகை நித்யா பகிர்ந்து கொண்ட வீடியோ..

The post பாரதிராஜாவை  நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.

]]>
“தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? https://touringtalkies.co/seenuramasamy-birthday-wishes-post-about-parthiban/ Sun, 15 Oct 2023 07:13:43 +0000 https://touringtalkies.co/?p=37155 நடிகர் – இயக்குநர் பார்த்திபன், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்க உள்ளதாக  தெரிவித்து இருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், “சினிமா தீவிரவாதி” என்று பார்த்திபனை குறிப்பிட்டு […]

The post “தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் – இயக்குநர் பார்த்திபன், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்க உள்ளதாக  தெரிவித்து இருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், “சினிமா தீவிரவாதி” என்று பார்த்திபனை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார்.

The post “தீவிரவாதி!”:  இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.

]]>
“இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? https://touringtalkies.co/a-different-movie-in-the-history-of-indian-cinema/ Wed, 20 Sep 2023 01:46:28 +0000 https://touringtalkies.co/?p=36424 ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தியாகு. சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம். ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது. அது என்ன வித்தியாசம்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8    

The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தியாகு.

சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம்.

ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது.

அது என்ன வித்தியாசம்…

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8

 

 

The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>