Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
AR Rahman – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 06:46:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png AR Rahman – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d/ Thu, 28 Mar 2024 06:46:42 +0000 https://touringtalkies.co/?p=40384 ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் […]

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது.

”இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் அர்பணிப்பும், ஈடுபாடும் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போனேன். அவருடன் பணிபுரிவது நல்ல அனுபவமாக இருக்கிறது. காட்சிகளுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வலிமையான பெண் கதாப்பாத்திரங்கள் உள்ளன. தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளைச் சுற்றி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது படத்தின் எழுபத்தி ஐந்து சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று பாடல்கள் படமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார், இயக்குனர் ஜே.ஆர்.அர்ஜுனன்.

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-rc16-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Thu, 21 Mar 2024 05:24:56 +0000 https://touringtalkies.co/?p=40024 தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான ராம்சரணின் 16வது படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இந்த படப்பிடிப்பு பூஜையின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய படமாக அமைந்தது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ஆஸ்கார் வரை சென்று அசத்தினார்‌ ராம் சரண்.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் தனது 16வது படத்தினை துவங்கியுள்ளார்.ராம் சரணின் ஒவ்வொரு […]

The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான ராம்சரணின் 16வது படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இந்த படப்பிடிப்பு பூஜையின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய படமாக அமைந்தது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ஆஸ்கார் வரை சென்று அசத்தினார்‌ ராம் சரண்.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் தனது 16வது படத்தினை துவங்கியுள்ளார்.ராம் சரணின் ஒவ்வொரு படமும் பிரமாண்டமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன்.துருவா முதல் மகதீரா, ஆர்ஆர்ஆர் என அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான்.

தெலுங்கு மொழியில் 2018-ல் ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா தான் இந்த RC16 படத்தினை இயக்கவுள்ளார். விஜய்சேதுபதி, க்ரித்தி ஷெட்டி நடித்த உப்பென்னா படத்தை இயக்கியவரும் இவர்தான்.இரண்டாவது முறையாக ராம் சரண் உடன் கைக்கோர்க உள்ளார் இயக்குனர் புச்சி பாபு சனா.இந்த படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொண்ட ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமையப்பாளராகவும் இந்த RC16 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க தேர்வு செய்திருக்கின்றனர். விரைவில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு பூஜையின் போது சிறு புன்னகையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு மார்க் போட்ட மிஷ்கின்! https://touringtalkies.co/mishkin-who-made-a-mark-on-ilayaraja-and-ar-rahmans-music/ Sat, 27 Jan 2024 02:13:38 +0000 https://touringtalkies.co/?p=39458 ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் தயாரிக்க,  சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா உருவாக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  படம், பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “இந்தப் படத்துக்கு நான் இசை அமைத்துள்ளேன். எனது இசைக்கு 36 மார்க் போடலாம். இசையில் நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்தான்” என்றார்.பின் செய்தியாளர்களிடம் […]

The post இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு மார்க் போட்ட மிஷ்கின்! appeared first on Touring Talkies.

]]>
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் தயாரிக்க,  சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா உருவாக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  படம், பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

“இந்தப் படத்துக்கு நான் இசை அமைத்துள்ளேன். எனது இசைக்கு 36 மார்க் போடலாம். இசையில் நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்தான்” என்றார்.பின் செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கினிடம் ‘ராமர் கோயில் திறப்பு’ குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “ராமர், அல்லா, ஏசு என் மனதில் இருக்கிறார்கள். ராமர் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். சினிமாக்காரனாக அரசியல் சார்ந்து எதையும் சொல்லக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

 

The post இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு மார்க் போட்ட மிஷ்கின்! appeared first on Touring Talkies.

]]>
“பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த்” – ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி https://touringtalkies.co/ar-rahman-and-prakash-raj-condolence-to-vijayakanth-demise/ Thu, 28 Dec 2023 03:22:36 +0000 https://touringtalkies.co/?p=39253 நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.#RIPCaptainVijayakanth” என பதிவிட்டுள்ளார். அதேபோல பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், “மிஸ் யூ கேப்டன். அற்புதமான மனிதருடன் பணிபுரியும் வாய்ப்பு […]

The post “பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த்” – ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.#RIPCaptainVijayakanth” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், “மிஸ் யூ கேப்டன். அற்புதமான மனிதருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தைரியமான மற்றும் அக்கறையுள்ள மனிதர். மிஸ் யூ” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post “பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த்” – ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி appeared first on Touring Talkies.

]]>
மவுனம் ஏன்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விளக்கம் https://touringtalkies.co/no-time-to-read-newspapers-ar-rahman/ Sat, 14 Oct 2023 06:15:32 +0000 https://touringtalkies.co/?p=37139 ஒருவர் பிரபலமாகி விட்டாலே அவரை பாராட்டியும்,விமர்சித்தும் ஊடகங்களில் செய்து வருவது வழக்கம்தான். விமர்சனம் வந்தால், சம்பந்தப்பட்ட பிரபலம் விளக்கம் தருவார். ஆனால் தன்னைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தபோது, ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்த தில்லை. ஏன் தெரியுமா.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post மவுனம் ஏன்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
ஒருவர் பிரபலமாகி விட்டாலே அவரை பாராட்டியும்,விமர்சித்தும் ஊடகங்களில் செய்து வருவது வழக்கம்தான். விமர்சனம் வந்தால், சம்பந்தப்பட்ட பிரபலம் விளக்கம் தருவார்.

ஆனால் தன்னைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தபோது, ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்த தில்லை.

ஏன் தெரியுமா..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post மவுனம் ஏன்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்:  மாநகராட்சி நடவடிக்கை https://touringtalkies.co/ar-rahman-concert-issue-municipality-corporation-notice/ Fri, 15 Sep 2023 01:52:14 +0000 https://touringtalkies.co/?p=36245 இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை […]

The post ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்:  மாநகராட்சி நடவடிக்கை appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு “நானே பலி ஆடாக மாறுகிறேன்” எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான், சீமான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர்.

இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், “ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த குளறுபடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறோம்” என ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் பேசியிருந்தார்.

இதையடுத்து டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும், காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சிக்கான கேளிக்கை வரியை அந்நிறுவனம் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்:  மாநகராட்சி நடவடிக்கை appeared first on Touring Talkies.

]]>
ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பார்த்திபன் https://touringtalkies.co/parthiban-apologies-for-his-statement-about-ar-rahman-concert-issue/ Thu, 14 Sep 2023 03:02:08 +0000 https://touringtalkies.co/?p=36221 இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. டிக்கெட்டுகளை வாங்கிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் திண்டாடினர். பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றனர். கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள், சமூகவலைதளத்தில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் […]

The post ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது.

டிக்கெட்டுகளை வாங்கிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் திண்டாடினர். பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றனர்.

கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்டவர்கள், சமூகவலைதளத்தில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர்.

டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி நடந்து வருவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நடிகர் பார்த்திபன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “மறக்குமா நெஞ்சம், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர். ரஹ்மான், தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்.

என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து ‘பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்து கொள்ளுங்கள்’ எனக் கூறியதாக ராஜ உபசாரம் எனக்கு. தான் சம்பந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையைத் தொடர்ந்து கொண்டாடுவோம். பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு சிலர், “ஏ.ஆர்.ரஹ்மான் புகார்களை எதிர்கொண்டு சிக்கலில் இருக்கும்போது, தனது படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை என்கிற விசயத்தை குத்திக்காண்பிப்பது நியாயமா” என பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து பார்த்திபன், “குறிப்பிட்ட வரி தவறென சிலருக்குப் படுவதால் அதை நீக்கிவிட்டேன். வருந்துகிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

 

.

The post ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.

]]>
“நானே பொறுப்பு… இது எனக்கு ஒரு பாடம்”:  இசை நிகழ்ச்சி  குளறுபடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் https://touringtalkies.co/ar-rahman-interview-on-marakkuma-nenjam/ Tue, 12 Sep 2023 04:29:06 +0000 https://touringtalkies.co/?p=36156 சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக […]

The post “நானே பொறுப்பு… இது எனக்கு ஒரு பாடம்”:  இசை நிகழ்ச்சி  குளறுபடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியிருந்தது.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில செய்தித் தளத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த சிறப்புப் பேட்டியில், “மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு சுனாமி போல் வந்த மக்களின் அன்பு வெள்ளத்தை எங்களால் கையாள முடியவில்லை. ஓர் இசையமைப்பாளராக என்னுடைய பணி, ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை நிகழ்ச்சியை கொடுக்க வேண்டியதுதான். எனவே, அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடக்கும் என்றுதான் நம்பியிருந்தேன். மழை வரவில்லை, அதனால் சந்தோஷத்துடன் இசை நிகழ்ச்சியை நான் நடத்திக் கொண்டிருந்தேன். வெளியே என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உற்சாகமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில், ரசிகர்களை நாங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துவோம்.

நடந்த சம்பவத்துக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். இந்தக் குளறுபடிகளுக்காக நான் வேறு யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதேநேரம், நகரம் விரிவடையும்போது இசை மற்றும் கலையை நேசிக்கும் ரசனையும் விரிவடைந்துள்ளதை உணர்கிறோம். ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்திடும் வகையில்தான், இந்த இசை நிகழ்ச்சி மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி அமைப்பினர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 46,000 இருக்கைகளை போட்டிருந்தனர். நிகழ்ச்சியைக் காண வந்த பலரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு, மற்ற இடங்களில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்குச் செல்லவில்லை. இதனைப் பார்த்த பணியில் இருந்த காவலர்கள், அரங்கம் நிரம்பிவிட்டதாக கருதி வாயில் கதவுகளை அடைத்துவிட்டனர். இந்த நேரத்தில், இசை நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.

புயல் போன்றதொரு அந்தத் தருணத்தை சமாளிக்க நாங்கள் சரியாக திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவில் 20 இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அதில் எந்த பிரச்சினையும் குழப்பமும் இல்லை. காரணம், அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை நாங்கள் வெகுவாக நம்பினோம். இதுநாள் வரையில், இந்தியாவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், அதிகளவு டிக்கெட் விற்பனையான நிகழ்ச்சி ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிதான் என்பது மிகப் பெரிய சாதனை. ஆனால், அதைவிட முக்கியம் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ரசிகர்களை எவ்வாறு நடத்தினோம் என்பதுதான். நானும் எந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள், அதில் வரும் எந்த இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்ற மனநிலையில், இசை சார்ந்த பணிகளை மேற்கொண்டிருந்தேன்.

உலக அளவிலான இசை அனுபவத்தைப் பெற உலகத்தரமான அனுபவங்கள் தேவை. இது எனக்கு ஒரு பாடம். ஒரு இசை கலைஞனாக மட்டுமின்றி, நிகழ்ச்சி நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். நான் உலகின் பல்வேறு வகையான இசை வடிவங்களைப் பார்க்கும்போது, இந்த அனுபவங்களை நம் மக்களுக்கும், குறிப்பாக சென்னையிலும் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது உண்டு. அதற்கு அவர்கள் தகுதியானவர்களும்கூட. ஆனால், என்ன கொடுக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டோம்.

கடந்த 30 ஆண்டுகாலமாக ரசிகர்கள் கொண்டாடிய ஹிட்டான பாடல்கள் இடம்பெற்றிருந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, 90 சதவீதம் வெற்றி 10 சதவீதம் தோல்வி. ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கினுள் இசை நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். சென்னை ரசிகர்கள் காட்டிய அன்பு அளப்பறியது.

சென்னை மக்கள் காட்டும் அன்பும் கொண்டாட்டமும் அளப்பரியது. சில நேரம் நான் அதிகம் நேசிக்கும் விஷயம்தான் நம்மை விட்டுச் சென்றுவிடும். இங்கும் அதுதான் நடந்துள்ளது என்றே தோன்றுகிறது. சென்னையை கலைகளின் தலைநகரமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். ஆனால் நடந்த நிகழ்வுக்கு, நான் யாரையும் நோக்கி கைகாட்ட விரும்பவில்லை. ஏனெனில், மக்கள் எனக்காக மட்டுமே இசை நிகழ்ச்சிக்கு வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல.

நாங்கள் இதை எதிர்கொண்டு சரி செய்வோம். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவும் எனக்கு முக்கியம். நான் என் மகன் அமீனிடம் சொல்வது இதைத்தான்: பார்ட்னர்ஷிப் முறையில் நாம் எதுவும் செய்யலாம். ஆனால், மக்கள் பார்ட்னர் யாரென்று பார்க்கமாட்டார்கள். அவர்களை நம்மைத்தான் பார்ப்பார்கள். பார்ட்னர்ஷிப்கள் மறைந்து விடும். ஆனால் நாம் அப்படியேதான் இருப்போம். இனி நான் ஓர் இசை நிகழ்ச்சியின் அம்சங்களை தாண்டியும் சிந்திக்க வேண்டும். இனி இதுபோன்று எப்போதும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று நம்புகிறேன்” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். – ஸ்ரீநிவாச ராமனுஜம் | ‘தி இந்து’ ஆங்கிலம்

“நானே பலி ஆடு ஆகிறேன்” – இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “என்னை சிலர் G.O.A.T (எக்காலத்திலும் சிறந்தவர்) என்று அழைக்கின்றனர். எனவே இந்த முறை நமது விழிப்புணர்வுக்காக நானே பலி ஆடு ஆகிறேன். சென்னையின் கலை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, திறன்மிகு கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பார்வையாளர்களை விதிகளைப் பின்பற்றச் செம்மைப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல் ஆகியவற்றுடன் செழிக்கட்டும். சென்னையில் ஒரு கலாசார மறுமலர்ச்சியைத் தூண்டி, நமக்கு மிக அவசியமான, உள்ளூர் மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்டாடுவோம். இறைவன் நாடினால் நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

The post “நானே பொறுப்பு… இது எனக்கு ஒரு பாடம்”:  இசை நிகழ்ச்சி  குளறுபடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  https://touringtalkies.co/ilayaraga-angry-with-singer-minmini/ Sun, 16 Jul 2023 00:03:18 +0000 https://touringtalkies.co/?p=34404 இளையராஜா குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, பத்திரிகையாளர் செல்வம் பகிர்ந்துகொண்டார். “1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர். அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜா, அடுத்த இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார். இளையராஜா இசையில்  பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் […]

The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, பத்திரிகையாளர் செல்வம் பகிர்ந்துகொண்டார்.

“1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர்.

அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜா, அடுத்த இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார்.

இளையராஜா இசையில்  பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் அவர் மினிமினிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் பாடி கொண்டிருந்த போது ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோருக்கும் முன்பும்  ‘நீ அங்கயே போய் பாடு. இனிமே என்கிட்ட வாராத’ என இளையராஜா கத்தினார்” என்றார் பத்திரிகையாளர் செல்வம்.

 

The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா மீது இன்னொரு புகார்! https://touringtalkies.co/another-complaint-against-ilayaraja-music-director-ar-rahman-minmini-singer-roja-chinna-chinna-aasai/ Mon, 26 Jun 2023 01:44:15 +0000 https://touringtalkies.co/?p=33788 இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை […]

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம்.

இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்மினி,  “ஏற்கெனவே இளையராஜா இசையில் நான் பாடி வந்தேன். ஆனாலும்  சின்ன சின்ன ஆசை பாடல் தான் எனக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில்  அந்த பாடலை பாடிய பிறகு இளையராஜா எனக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை” என்றார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>