Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பிறைசூடன் – Touring Talkies https://touringtalkies.co Thu, 31 Dec 2020 13:50:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பிறைசூடன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 திருத்தம் சொல்லப் போய் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஜேசுதாஸ்..! https://touringtalkies.co/k-j-yesudoss-walk-out-from-recording-studio-news/ Thu, 31 Dec 2020 13:50:20 +0000 https://touringtalkies.co/?p=11633 ஒரு பாடலின் ஒலிப்பதிவின்போது திருத்தம் செய்ய போனபோது திடீரென்று ஜேசுதாஸ் கோபமடைந்து ஸ்டூடியோவைவிட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவு கூர்கிறார் கவிஞர் பிறைசூடன். “1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. இந்தப் படத்தில் இடம் பெறும் ‘நாதம் எழுந்ததடி கண்ணம்மா’ என்ற பாடலை நான்தான் எழுதினேன். இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்து பாடல் ரிக்கார்டிங் நடைபெற்றபோது இதைப் பாடுவதற்காக கே.ஜே.ஜேசுதாஸ் ஸ்டூடியோவுக்கு வந்தார். அவர் வரும்போதே ஏதோ சரியில்லாத தோரணையில்தான் இருந்தார். ஏதோ மன வருத்தம் இருப்பதுபோல […]

The post திருத்தம் சொல்லப் போய் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஜேசுதாஸ்..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு பாடலின் ஒலிப்பதிவின்போது திருத்தம் செய்ய போனபோது திடீரென்று ஜேசுதாஸ் கோபமடைந்து ஸ்டூடியோவைவிட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவு கூர்கிறார் கவிஞர் பிறைசூடன்.

“1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. இந்தப் படத்தில் இடம் பெறும் ‘நாதம் எழுந்ததடி கண்ணம்மா’ என்ற பாடலை நான்தான் எழுதினேன்.

இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்து பாடல் ரிக்கார்டிங் நடைபெற்றபோது இதைப் பாடுவதற்காக கே.ஜே.ஜேசுதாஸ் ஸ்டூடியோவுக்கு வந்தார். அவர் வரும்போதே ஏதோ சரியில்லாத தோரணையில்தான் இருந்தார். ஏதோ மன வருத்தம் இருப்பதுபோல காணப்பட்டார்.

பாட வேண்டிய அறைக்குள் அவர் நுழைந்ததும் நான் பாடலை அவரிடத்தில் கொடுத்தேன். அதனை அவர் தன் டைரியில் எழுதிக் கொண்டார். பின்பு அவர் பாட தயாரானபோது இளையராஜா என்னை அழைப்பதாக ஒருவர் வந்து சொன்னார்.

நான் அந்த அறையில் இருந்து வெளியேறி இளையராஜாவை பார்க்க வந்தேன். ஜேசுதாஸ் பாடப் போகும் வரிகளில் அவர் ஒரு திருத்தம் சொன்னார். அதை ஜேசுதாஸிடம் சொல்லி பாட வைக்கும்படி என்னிடம் சொன்னார் இளையராஜா.

நான் மறுபடியும் ஜேசுதாஸ் இருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். நான் வந்ததைப் பார்த்ததும் ஜேசுதாஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீர் கோபத்துடன், “இப்போ இந்த ரூம்ல ஒண்ணு நான் இருக்கணும்.. இல்லை நீங்க இருக்கணும்.. யார் இருக்குறது..?” என்றார்.

எனக்கு ஒண்ணும் புரியலை. நான் ஒரு திருத்தம் சொல்லத்தான் வந்தேன். அதுலேயும் என்னை அனுப்பி வைச்சது இளையராஜாதான். இதில் என் தப்பு ஒண்ணும் இல்லையேன்னு எனக்கும் லைட்டா கோபம் வந்து.. “நான்தான் இந்த ரூம்ல இருக்கணும்”ன்னு சொல்லிட்டேன்.

இதைக் கேட்டவுடனேயே ஜேசுதாஸ் பட்டுன்னு டைரியை எடுத்திட்டு ரூமைவிட்டு வெளில போனவர் கார்ல ஏறி வீட்டுக்கே போயிட்டார். இதுல என் தவறு எதுவும் இல்லையேன்னுட்டு இளையராஜாகிட்ட நடந்ததை அப்படியே சொன்னேன். “சரி விடுங்க…” என்றார் இளையராஜா.

2 நாட்கள் கழித்து ஜேசுதாஸ் அதே பாடலைப் பாடுவதற்காக மீண்டும் ஸ்டூடியோவுக்கு வந்தார். இந்த முறை நல்ல மூடில் வந்தவர் என்னிடம், “ஸாரிங்க.. அன்னிக்கு என் வீட்ல ஒரு பிரச்சினை. அந்தப் பிரச்சினையைப் பத்தியே யோசிச்சிட்டிருந்தேன். அதான் கொஞ்சம் மூட் அவுட்ல அப்படி பேசிட்டேன்..” என்றார்.

சிறந்த கலைஞர்களும் இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வது உண்டு..” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

The post திருத்தம் சொல்லப் போய் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஜேசுதாஸ்..! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜாவிடமிருந்த பிரிய காரணமான படம் – பிறைசூடனின் அனுபவம்..! https://touringtalkies.co/kavingar-piraisoodan-ilayaraja-spilit-story/ Wed, 30 Dec 2020 05:59:43 +0000 https://touringtalkies.co/?p=11576 இயக்குநர் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்தப் படம் பற்றி இளையராஜாவிடம் எடுத்துச் சொல்லி அவரைப் படம் பார்க்க வைத்து இசையமைக்க ஒத்துக் கொள்ள வைத்தவர் கவிஞர் […]

The post இளையராஜாவிடமிருந்த பிரிய காரணமான படம் – பிறைசூடனின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருந்தது.

அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்தப் படம் பற்றி இளையராஜாவிடம் எடுத்துச் சொல்லி அவரைப் படம் பார்க்க வைத்து இசையமைக்க ஒத்துக் கொள்ள வைத்தவர் கவிஞர் பிறைசூடன். ஆனாலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து முடியும் தருவாயில் அவரிடம் இருந்து தான் விலக நேரிட்டது என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

அது என்ன கதை என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.

“ராஜ்கிரண் எனது ஆரம்பக் கால நண்பர். அவர் நடிப்பில் உருவான ‘என் ராசாவின் மனசிலே’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காக என்னை அழைத்து டபுள் பாஸிட்டிவ்வாக படத்தைப் போட்டுக் காட்டினார். நன்றாக இருந்தது. “நான் இளையராஜாவிடம் இது பற்றிப் பேசுகிறேன்” என்று ராஜ்கிரணிடம் கூறினேன்.

அடுத்த நாள் இளையராஜாவுடன் அமர்ந்து மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மெதுவாக, “ராஜ்கிரண் ஒரு படத்துல நடிச்சிருக்கார். படம் நல்லாயிருக்கு…” என்றேன். நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக “எந்திரிங்க” என்றார் கோபத்துடன் இளையராஜா. “ஒரு படம் நல்லாயிருக்குன்னு ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு.. இயக்குநரா.. தயாரிப்பாளரா..?” என்றார் இளையராஜா.

நான் கையில் இருந்த கவளம் சோற்றை சாப்பிடலாமா.. வேண்டாமா.. என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டேன். மானம் போனாலும் போகிறது.. இப்போது நமக்கு சாப்பாடுதான் முக்கியம் என்று நினைத்து அப்படியே தொடர்ந்து சாப்பிட்டேன். ஆனாலும் கொஞ்சம் கோபம் இருந்ததால் உடனேயே வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

நான் வந்த பிறகு என்னைத் தேடியிருக்கிறார் இளையராஜா. நான் இல்லாததால் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நானும் திரும்பவும் சென்றேன். “என்ன கோச்சுக்கிட்டீங்களா..?” என்றார். “இல்ல.. படம் நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன்…” என்றேன். “சரி. எனக்குப் படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லுங்க…” என்றார்.

இளையராஜாவுக்காக அந்தப் படத்தை தேவி ஸ்ரீதேவி தியேட்டர்ல போட்டாங்க. அவர்கூட நான் இளையராஜா, ராஜ்கிரண், இயக்குநர் கஸ்தூரி ராஜா எல்லாரும்தான் பார்த்தோம். படம் பார்த்திட்டு இளையராஜாவும், ராஜ்கிரணும் ஒரே கார்ல போயிட்டாங்க. இயக்குநர் கஸ்தூரி ராஜா வேற ஒரு கார்ல போயிட்டாரு. என்னை மட்டும் ‘அம்போ’ன்னு விட்டுட்டாங்க. நான் அங்கேயிருந்து நடந்தே வீட்டுக்குப் போனேன்.

இந்த நன்றிக் கடனுக்காக எனக்கு இந்தப் படத்துல ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் இளையராஜா. அந்தப் பாட்டுதான் ‘சோலை பசுங்கிளியே’ பாடல். மீனா இறந்தவுடன் ராஜ்கிரண் பாடும் பாடல் அது.

நான் இந்தப் பாடலுக்காக ஒன்றரை கிலோ வரும் அளவுக்கான பேப்பர்களில் பல்லவிகளையும், சரணங்களையும் எழுதிக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் ராஜ்கிரண் “எதுவுமே பிடிக்கலை”ன்னுட்டாரு. அவருக்கு என்ன விருப்பம்ன்னா இந்தப் பாடலை ராஜாவே எழுதி, அவரே பாடணும்ன்றதுதான்.

இது தொடர்பாக எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை போயிட்டிருக்கிறதை ராஜா கண்ணாடி வழியா பார்த்திட்டாரு. உடனே என்னை உள்ள கூப்பிட்டாரு. “என்ன செலக்ட் பண்ணிட்டீங்களா..?” என்றார். “இல்லங்க.. அவருக்கு நீங்க பாட்டெழுதி நீங்களே பாடணும்ன்னு நினைக்கிறாரு. அதான் எதுவுமே நல்லாயில்லைன்றாரு…” என்றேன்.

“அதைக் கொடுங்க”ன்னு என் கைல இருந்த பேப்பர்களை கேட்டு வாங்கிப் படிச்சாரு ராஜா. அதுல ‘சோலைப் பசுங்கிளியே’ என்பதை படிச்சவுடனேயே.. “இந்த சரணம் நல்லாயிருக்கே”ன்னாரு. உடனேயே ராஜ்கிரணையும் உள்ள கூப்பிட்டுச் சொன்னாரு. அவரும் அதைப் பார்த்திட்டு “ஆமா.. நல்லாயிருக்கு”ன்னாரு. அடுத்தடுத்து சட்டு, சட்டுன்னு நான் எழுதின சரணங்களையும் ராஜாவே செலக்ட் செய்து “இதெல்லாம் நல்லாயிருக்கே”ன்னு சொன்னார். இதையெல்லாம் ராஜ்கிரணும் “ஆமாங்க.. நல்லாயிருக்குங்கய்யா…” என்றார்.

அவ்ளோதான்.. பாட்டு செலக்ஷனாகி இளையராஜாவே அதைப் பாடிட்டார். அவர் பாடிட்டு வெளில வரும்போது அவர் கண்ல கண்ணீர் சிந்தியிருந்துச்சு. அப்படியொரு சோகத்தைக் கொடுத்தது அந்தப் பாடல் வரிகள்..” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

The post இளையராஜாவிடமிருந்த பிரிய காரணமான படம் – பிறைசூடனின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
“ஏ.ஆர்.ரஹ்மான் 2 பாடல்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்தார்” – பாடலாசிரியர் பிறைசூடனின் வருத்தம்..! https://touringtalkies.co/rahman-gives-only-2-song-for-me-kavingar-piraisoodan-interview/ Tue, 29 Dec 2020 08:25:58 +0000 https://touringtalkies.co/?p=11561 ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கும் பணியைச் செய்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி சுமார் 200 ஜிங்கிள்ஸ் பாடல்களுக்கு வரிகள் எழுதிய பாடலாசிரியர் பிறைசூடன், ரஹ்மான் இசையமைப்பாளரான பின்பு தங்களுக்கிடையிலான உறவு என்ன ஆனது என்பது பற்றி இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “நானும் ரஹ்மானும் இணைந்து பல வருடங்கள் பணியாற்றினோம். அவர் விளம்பரப் பாடல்களுக்கு இசையமைக்கும்போது நான்தான் அதற்குப் பாடல்களை எழுதுவேன். அப்போதே அதற்கு […]

The post “ஏ.ஆர்.ரஹ்மான் 2 பாடல்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்தார்” – பாடலாசிரியர் பிறைசூடனின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கும் பணியைச் செய்து வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி சுமார் 200 ஜிங்கிள்ஸ் பாடல்களுக்கு வரிகள் எழுதிய பாடலாசிரியர் பிறைசூடன், ரஹ்மான் இசையமைப்பாளரான பின்பு தங்களுக்கிடையிலான உறவு என்ன ஆனது என்பது பற்றி இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பல வருடங்கள் பணியாற்றினோம். அவர் விளம்பரப் பாடல்களுக்கு இசையமைக்கும்போது நான்தான் அதற்குப் பாடல்களை எழுதுவேன். அப்போதே அதற்கு சம்பளமாக ரஹ்மான் 5 லட்சம் ரூபாய் வாங்கினார்.

அவருடைய அம்மா ரஹ்மானை சினிமாவுக்கு இசையமைக்கும்படி சொல்லிக் கொண்டேயிருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு ஏனோ சினிமாவுக்கு இசையமைக்க விருப்பமே இல்லை.

அவருடைய முதல் பட வாய்ப்பு சங்கீத் சிவன் இயக்கிய ‘புத்தா’ என்ற டாக்குமெண்ட்ரி படம் வெளியான பின்பு கிடைத்தது. அவருடைய முதல் படமான ‘ரோஜா’வில் எனக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், “நான் இசையமைக்கும் அடுத்தப் படத்தில் முழு பாடல்களும் நீங்கள்தான் எழுத வேண்டும்…” என்று என்னிடம் ரஹ்மான் சொல்லியிருந்தார்.

ஒரு நாள் இரவில் எனக்கு ரஹ்மானிடம் இருந்து போன் வந்தது. போனில் பேசிய ரஹ்மான், “இந்தக் கூட்டணியே நல்லாயிருக்கு. இதே கூட்டணில அடுத்தப் படமும் இணைந்தால் நல்லாயிருக்கும். அதுனால இந்தப் படத்துக்கும் வைரமுத்துவே எழுதட்டு்ம்’ன்னு எல்லாரும் சொல்றாங்க..” என்றார். “அடுத்தவங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறீங்க..?”ன்னு கேட்டேன். “எனக்கும் வைரமுத்துவை வைச்சே எழுதலாம்ன்னுதான் தோணுது..” என்றார். “சரி. இனிமேல் நீங்க அழைக்காமல் என் கால் உங்க வீட்டில் படாது..” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

அதற்குப் பிறகு தினமும் போய், வந்து கொண்டிருந்த ரஹ்மான் வீட்டிற்கு பல வருடங்களாக நான் போகவேயில்லை. ஒரு  முறை ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்தார் ரஹ்மான். என்னிடம் நலம் விசாரித்தார். என் மனைவி, பிள்ளைகளையும் விசாரித்தார்.

இது நடந்த 2-து நாள் இரவு ரஹ்மானின் மேனேஜர் என்னை உடனடியாக ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். நானும் சென்றேன். அங்கே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உடன் இருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிக் கொண்டிருந்த ஒரு படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார் ரஹ்மான். எழுதினேன். அதன் பின்பு இன்னொரு படத்திற்கும் அழைத்து ஒரு பாடலைக் கொடுத்தார். அதையும் எழுதினேன். இப்படி அவருடைய இசையில் இரண்டே இரண்டு பாடல்களைத்தான் என்னால் எழுத முடிந்தது..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “ஏ.ஆர்.ரஹ்மான் 2 பாடல்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்தார்” – பாடலாசிரியர் பிறைசூடனின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
“25 வருடங்களாக எனக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கவில்லை..?” – கே.பாலசந்தரிடம் சண்டையிட்ட பிறைசூடன் https://touringtalkies.co/why-havent-you-given-me-a-chance-for-25-years-k-balachander-fought-with-prasoodan/ Sun, 27 Dec 2020 07:20:37 +0000 https://touringtalkies.co/?p=11490 பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சொந்த ஊரான நன்னிலத்தைச் சேர்ந்தவர். இவர் பள்ளி மாணவராக இருந்தபோது கே.பாலசந்தரும், ரஜினிகாந்தும் ஒரு படத்தின் விழாவுக்கு அந்த ஊருக்கு வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்த்துப் பா பாடிய அனுபவம் கொண்டவர். பின்னாளில் சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னை கிளம்பி வந்திருக்கிறார். கே.பாலசந்தரை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது, “செய்யலாம்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணு..” என்று சொல்லியிருக்கிறார் கே.பி. ஆனால் அவர் இறக்கின்றவரையிலும் ஏனோ பிறைசூடனுக்கு அவர் […]

The post “25 வருடங்களாக எனக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கவில்லை..?” – கே.பாலசந்தரிடம் சண்டையிட்ட பிறைசூடன் appeared first on Touring Talkies.

]]>
பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சொந்த ஊரான நன்னிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் பள்ளி மாணவராக இருந்தபோது கே.பாலசந்தரும், ரஜினிகாந்தும் ஒரு படத்தின் விழாவுக்கு அந்த ஊருக்கு வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்த்துப் பா பாடிய அனுபவம் கொண்டவர்.

பின்னாளில் சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னை கிளம்பி வந்திருக்கிறார். கே.பாலசந்தரை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது, “செய்யலாம்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணு..” என்று சொல்லியிருக்கிறார் கே.பி. ஆனால் அவர் இறக்கின்றவரையிலும் ஏனோ பிறைசூடனுக்கு அவர் வாய்ப்பே தரவில்லை. இது பிறைசூடனுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தைத் தந்திருக்கிறதாம்.

இது பற்றி இயக்குநர் சிகரத்திடம் தான் ஒரு முறை கேள்வி கேட்டதாகச் சொல்கிறார் பிறைசூடன்.

“நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராக இருந்தேன். அப்போது விசு தலைவராக இருந்தார். அந்தச் சமயத்தில் மூத்த எழுத்தாளர்களைக் கெளரவித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, 5000 ரூபாய் சன்மானமாகச் சங்கத்தின் சார்பாகக் கொடுக்கலாம் என்று சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் பேசி முடிவெடுத்திருந்தோம்.

அப்போது அந்த லிஸ்ட்டில் கே.பி.யின் பெயரும் இருந்தது. ஆனால், அவர் ரொம்பப் பெரியவர். அவருக்கு ஐந்து லட்சம்ன்னா கொடுக்கலாம்.. இந்த 5000 ரூபாய் கொடுத்தால் நல்லாயிருக்காதே.. என்றெண்ணி அவரைத் தவிர மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.

இது தெரிந்த கே.பி. இயக்குநர் விசுவுக்கு போன் செய்து “என் தாய் வீட்டுச் சீதனத்தை எனக்கு மட்டும் கொடுக்கலியே..” என்று கேட்டிருக்கிறார். உடனேயே விசுவும் என்னிடம் இதைச் சொல்ல.. எழுத்தாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சூழ நாங்கள் கே.பி.யின் வீட்டுக்கே போய் அவருக்குரிய மரியாதையைச் செய்தோம்.

அப்போது அத்தனை நாட்களாக எனக்குள் இருந்த அந்தக் கேள்வியை அவரிடத்தில் அன்றைக்கு கேட்டேன். “இந்த 25 வருஷத்துல ஒரு படத்துக்குக்கூட நீங்க என்னைக் கூப்பிடலையே.. ஏன் ஸார். என் புலமை மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா..?” என்று கேட்டேன். அவரும் தர்மசங்கடத்துடன்.. “ஸாரி பிறை.. கொடுக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். ஏதோ தள்ளித் தள்ளிப் போய் முடியாமல் போயிருச்சு..” என்றார்.

நான் அந்த நேரத்துல கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் 25 வருடங்களாக நான் என் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த கேள்வி என்பதால் தவிர்க்க முடியாமல் கேட்டுவிட்டேன்..” என்கிறார் பிறைசூடன்.

The post “25 வருடங்களாக எனக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கவில்லை..?” – கே.பாலசந்தரிடம் சண்டையிட்ட பிறைசூடன் appeared first on Touring Talkies.

]]>