Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் ஸ்ரீகாந்த் – Touring Talkies https://touringtalkies.co Wed, 13 Oct 2021 11:09:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் ஸ்ரீகாந்த் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஸ்ரீகாந்த் ஒரு அற்புதக் கலைஞர்”-நடிகர் சிவக்குமாரின் அஞ்சலி பதிவு https://touringtalkies.co/actor-sivakumars-condolence-message-to-actor-srikanth/ Wed, 13 Oct 2021 11:08:19 +0000 https://touringtalkies.co/?p=18746 தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு குறித்து மூத்த நடிகரான சிவக்குமார் எழுதியிருக்கும் அஞ்சலி பதிவு இது : “மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், தனது 81 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். அவருக்கு அஞ்சலி. 1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த். ஈரோட்டிலே பிறந்த அவன் […]

The post “ஸ்ரீகாந்த் ஒரு அற்புதக் கலைஞர்”-நடிகர் சிவக்குமாரின் அஞ்சலி பதிவு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு குறித்து மூத்த நடிகரான சிவக்குமார் எழுதியிருக்கும் அஞ்சலி பதிவு இது :

மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், தனது 81 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். அவருக்கு அஞ்சலி.

1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.

ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் ‘வெங்கி’ என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற நாடகத்தில் ‘ஸ்ரீகாந்த்’ என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமானபோது தனக்குச் சூட்டிக்கொண்டான்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.

கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ஜெயகாந்தனின் கதை’, ‘ராஜநாகம்’ போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு ‘மதனம ாளிகை’, ‘சிட்டுக்குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ‘நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்‌ஸாண்டர், பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு Coffee Table புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தேன். இன்று அந்த அற்புத கலைஞர் அமரராகி விட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

– நடிகர் சிவகுமார்

The post “ஸ்ரீகாந்த் ஒரு அற்புதக் கலைஞர்”-நடிகர் சிவக்குமாரின் அஞ்சலி பதிவு appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் https://touringtalkies.co/tamil-cinema-senior-actor-srikanth-passed-away/ Tue, 12 Oct 2021 23:30:25 +0000 https://touringtalkies.co/?p=18732 தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. 1965-ம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில்தான் நடிகராக இவர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஜெயலலிதாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹீரோவாக நடித்து 1974-ல் வெளிவந்த ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக் […]

The post தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.

1965-ம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில்தான் நடிகராக இவர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஜெயலலிதாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹீரோவாக நடித்து 1974-ல் வெளிவந்த ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். ‘வெங்கட்ராமன்’ என்கிற இயற் பெயரைக் கொண்டவரான இவர், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘மேஜர் சந்திரகாந்த்’ என்னும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய பாத்திரத்தின் பெயர் ‘ஸ்ரீகாந்த்’. பிறகு இதுவே இவரின் சினிமா பெயராக மாறிவிவிட்டது.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல் கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ் உடன் நல்ல நட்பில் இருந்தார். இவரை அவர்கள் வெங்கி’ என்றும் “வெங்கு’ என்றும்தான் அழைப்பார்கள்.

ஸ்டைலான தோற்றம், அலட்டல் இல்லாத மிதமான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு போன்றவை ஸ்ரீகாந்தை தனித்து அடையாளம் காட்டின.

ஜெயகாந்தனின் எழுத்தில் உருவான இரண்டு முக்கிய திரைப்படங்களான சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய இரு படங்களிலும் இவர்தான் நாயகனாக நடித்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர்.

1972-ல் இயக்குநர் திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள்’ படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார்.

ஏறத்தாழ 50 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த், பின்பு முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற சக ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயங்கவில்லை.

வில்லன், குணச்சித்திரம் மட்டுமல்ல, நகைச்சுவை கதாபாத்திரத்திலும் ‘காசேதான் கடவுளடா’, ‘பாமா விஜயம்’, ‘காசி யாத்திரை’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் கவனத்திற்கு உரியதாக மாறின. குறிப்பாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில், கண்டிப்பான காவல் அதிகாரியான தன் தந்தையை எதிர்த்து நிற்கும் ‘ஜெகன்’ என்கிற பாத்திரம், ஸ்ரீகாந்த்துக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்தக் காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக ஸ்ரீகாந்த் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில்கூட இவர் நடித்ததில்லை என்பது ஆச்சரியமான செய்தி.

1975-களுக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு வில்லனாகவும் நடித்திருந்தார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘பைரவி’யில் வில்லன் இவர்தான்.

இதன் பின்பு கிடைத்த படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் கடைசியாக 2009-ம் ஆண்டில் வெளியான ‘குடியரசு’ என்ற படத்தில் நடித்திருந்தார். கூடவே சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.

இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி பாலசந்தர், பீம்சிங், திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், மாதவன், கிருஷ்ணன் பஞ்சு, திருமுகம் உட்பட முக்கிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீகாந்துக்கு தெய்வ பக்தி அதிகம். நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.

82 வயதான ஸ்ரீகாந்த் சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு திடீரென்று வீட்டிலேயே காலமானார். இன்று மாலை 5.30 மணிக்கு அவரது உடல் பெசண்ட் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

The post தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம் https://touringtalkies.co/amala-movie-preview-news/ Mon, 01 Mar 2021 10:57:12 +0000 https://touringtalkies.co/?p=13430 18-வது  சென்னை  சர்வதேச  திரைப்பட  விழா  சென்னையில்  கடந்த  18.02.2021 அன்று சென்னை PVR  சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது. உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட  போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17  படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு  மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ‘அமலா’ திரைப்படமும்  தேர்வாகி இருந்தது. இயக்குநர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான  ஸ்ரீகாந்த், ‘ஆட்டோ சங்கர்’  வெப் சீரிஸ் புகழ் அப்பாணி  சரத், அனார்கலி மரிக்கர்,  இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பல  நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம்  தயாரித்துள்ளார். வசனம் – ராம் பிரகாஷ், ஒளிப்பதிவு – அபிலாஷ் சங்கர், பாடல்கள்  மோகன்ராஜன், சண்டை இயக்கம் – ‘பயர்’ கார்த்திக், கலை – சிஜி பட்டணம், மக்கள் தொடர்பு  மணவை புவன், தயாரிப்பு  –  மஸ்காட்  புரொடக்ஷன்ஸ்  முஷினா  நிஷாத்  இப்ராஹிம். இளம் பெண் ஒருவர் மர்மமான  முறையில் ஒரு பூங்காவில் இறந்து  கிடக்க, அது  கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்புகிறார்கள். அந்த  சமயத்தில் உயர் அதிகாரியான  நடிகர் ஸ்ரீகாந்த் இது கொலைதான்  என்று  அடித்துச் சொல்லி, துப்பு துலங்கும் நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம்  பெண் இறக்கும் தருவாயில் கண்டுபிடிக்கப்படுகிறாள்.  அவளைக்  காப்பாற்றிய ஸ்ரீகாந்த், அவளிடம்  விசாரிக்க, அவளோ  ‘அமலா’  என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள்.  புரியாத மர்மமாக  இருக்கும் அந்த  நேரத்தில், சீர்த்திருத்த பள்ளியிலிருந்து  ஒருவன் தப்பித்து விட்டதாகத்  தகவல்  கிடைக்க, தப்பித்தவன்  யார்..?  அவனுக்கும், இந்தக்  கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன்   பிடிபட்டானா.?  என்று துப்பு துலங்குவதே இந்தப்  படத்தின் கதை. இந்த ‘அமலா’ திரைப்படம்  பிப்ரவரி 24-ம் தேதி  […]

The post சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
18-வது  சென்னை  சர்வதேச  திரைப்பட  விழா  சென்னையில்  கடந்த  18.02.2021 அன்று சென்னை PVR  சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.

உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட  போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17  படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு  மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ‘அமலா’ திரைப்படமும்  தேர்வாகி இருந்தது.

இயக்குநர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான  ஸ்ரீகாந்த், ‘ஆட்டோ சங்கர்’  வெப் சீரிஸ் புகழ் அப்பாணி  சரத், அனார்கலி மரிக்கர்,  இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பல  நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம்  தயாரித்துள்ளார்.

வசனம் – ராம் பிரகாஷ், ஒளிப்பதிவு – அபிலாஷ் சங்கர், பாடல்கள்  மோகன்ராஜன், சண்டை இயக்கம் – ‘பயர்’ கார்த்திக், கலை – சிஜி பட்டணம், மக்கள் தொடர்பு  மணவை புவன், தயாரிப்பு  –  மஸ்காட்  புரொடக்ஷன்ஸ்  முஷினா  நிஷாத்  இப்ராஹிம்.

இளம் பெண் ஒருவர் மர்மமான  முறையில் ஒரு பூங்காவில் இறந்து  கிடக்க, அது  கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்புகிறார்கள்.

அந்த  சமயத்தில் உயர் அதிகாரியான  நடிகர் ஸ்ரீகாந்த் இது கொலைதான்  என்று  அடித்துச் சொல்லி, துப்பு துலங்கும் நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம்  பெண் இறக்கும் தருவாயில் கண்டுபிடிக்கப்படுகிறாள். 

அவளைக்  காப்பாற்றிய ஸ்ரீகாந்த், அவளிடம்  விசாரிக்க, அவளோ  ‘அமலா’  என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள். 

புரியாத மர்மமாக  இருக்கும் அந்த  நேரத்தில், சீர்த்திருத்த பள்ளியிலிருந்து  ஒருவன் தப்பித்து விட்டதாகத்  தகவல்  கிடைக்க, தப்பித்தவன்  யார்..?  அவனுக்கும், இந்தக்  கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன்   பிடிபட்டானா.?  என்று துப்பு துலங்குவதே இந்தப்  படத்தின் கதை.

இந்த ‘அமலா’ திரைப்படம்  பிப்ரவரி 24-ம் தேதி  சென்னை  சர்வதேச  திரைப்பட  விழாவில் திரையிடப்பட்டது.

படம் தொடங்கிய சில நொடிகளிலேயே படம் தங்களின்  ஆர்வத்தைப் பெரிதும்  தூண்டியதாகவும், படம் முடியும் வரையிலும் நாற்காலி  முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். 

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி  மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை  வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள்  இயக்குநரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில்  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் ‘அமலா’ படக் குழுவினர்  மிகுந்த  மகிழ்ச்சியில்  உள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

The post சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘உன் காதல் இருந்தால்’ படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/un-kaathal-irunthaal-movie-trailer/ Mon, 26 Oct 2020 06:26:15 +0000 https://touringtalkies.co/?p=9291 The post ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
The post ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
‘எக்கோ’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது..! https://touringtalkies.co/echo-movie-poojai-news/ Tue, 06 Oct 2020 05:49:11 +0000 https://touringtalkies.co/?p=8381 ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். […]

The post ‘எக்கோ’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது..! appeared first on Touring Talkies.

]]>

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன.

காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மானிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.

The post ‘எக்கோ’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது..! appeared first on Touring Talkies.

]]>