Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் சத்யராஜ் – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Sep 2022 07:37:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் சத்யராஜ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் https://touringtalkies.co/dont-celebrate-actors-by-holding-them-on-their-heads-actor-sathyarajs-request/ Mon, 12 Sep 2022 07:36:53 +0000 https://touringtalkies.co/?p=24469 “நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல” என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம். அதேபோல் […]

The post “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல” என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம்.

அதேபோல் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவையால் ஏற்படுகிற மன அழுத்தம். மேலும், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம், பெண் அடிமைத்தனத்தால் ஏற்படுகிற அழுத்தம் போன்றவை ஆகும். இதில், பொருளாதார சிக்கல் என்பது முக்கியமான இடத்தை வகிக்கிறது.

நீட் தேர்வு சம்பந்தமாக நடந்த தற்கொலை நிகழ்வு மிகவும் மனதைக் காயப்படுத்திய விஷயம். நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு நீட் தேர்வு என்பது கஷ்டம். முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவது ரொம்ப முக்கியம். டாக்டர், வழக்கறிஞர்களின் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்கத் தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம்.

உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. உலகில் யாரும் புத்திசாலி இல்லை. தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்ஜிஆரின் படப் பாடல்களைக் கேட்பேன். அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும்.

பெரியார், அம்பேத்கர் சமூக மருத்துவர்கள் மட்டுமல்ல; சிறந்த மன நல மருத்துவர்கள். நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல. படத்தைப் பாருங்கள். ஆனால் அதற்காக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்…” என்று பேசினார்.

The post “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“என்னுடைய பாவமான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்” – நடிகர் சத்யராஜின் கலகல பேச்சு! https://touringtalkies.co/sathyarj-comedy-speech-in-veetla-visheasham-movie-audio-function/ Sat, 11 Jun 2022 14:20:12 +0000 https://touringtalkies.co/?p=22625 Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் ‘வீட்ல விசேஷம்.’ பிளாக் பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று […]

The post “என்னுடைய பாவமான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்” – நடிகர் சத்யராஜின் கலகல பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் வீட்ல விசேஷம்.’

பிளாக் பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ‘ஆடியோ விஷேசம்’ என்ற பெயரில் நேற்று மாலை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி. நடிகை ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, தயாரிப்பாளர் போனி கபூர், கவிஞர் பா.விஜய் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நடிகை அபர்ணா பாலமுரளி பேசும்போது, “இதுதான் எனது முதல் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி. நான் நடித்த முந்தைய படங்களின் வெற்றியை கொண்டாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு பாலாஜிக்கு நன்றி. சத்யராஜ் மற்றும் ஊர்வசி போன்ற பெரிய நடிகர்களுக்கு மத்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.  படத்தின் பெரிய பலமே ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் என இருவரும்தான். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்…” என்றார்.

நடிகை ஊர்வசி பேசும்போது, “என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாகவே ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக நான் நடித்த சினிமாவின் நிகழ்ச்சிகளுக்கே போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இந்தப் படம் பல நாட்களாக தியேட்டர்களுக்கு வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரை புரிந்து கொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. பழைய சத்யராஜை இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளனர். இந்தப் படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார். ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி. அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை. நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குநர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.“ என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது, “நான் தயாரிப்பாளராக அறிமுகமானது ஒரு ரீமேக்காக உருவான படத்தில் இருந்துதான். தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை நான் இந்தியில் ரீமேக் செய்துள்ளேன்.

என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும்.

நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் திரைப்பட கலைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க, பழக்க வழக்கங்களை கேட்டு நான் முன்பே வியந்திருக்கிறேன். இப்போது தமிழ்ப் படங்களை தயாரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் நிறைய தமிழ்ப் படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன்.

ஶ்ரீதேவி, ஊர்வசியை பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார். நானும் அதை ஒத்துக் கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர்தான் இந்த படத்தின் முதுகெலும்பு.

பாலாஜி தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த படமாக வீட்ல விஷேசம்’ படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது…“ என்றார்.

இயக்குநர் N.J.சரவணன் பேசும்போது, “எங்களுக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்த போனி கபூர், மற்றும் ராகுலுக்கு நன்றி. இந்தி படத்தை பார்த்த பிறகு இதை தமிழில் எப்படி உருவாக்க போகிறோம் என்ற எண்ணத்தை போக்க எங்களுக்கு இருந்தவர் உறுதுணையாக இருந்தவர் ஊர்வசிதான். நான் பார்த்து வியந்த சத்யராஜ் அவர்களை இயக்கியதில் எனக்கு மகிழ்ச்சி. எங்கள் படக் குழுவினர் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.“ என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நான் ‘கட்டப்பா’ போன்ற சீரியஸ் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை இப்போது இந்தப் படத்தின் மூலமாக மீட்டு கொண்டு வந்தவர் பாலாஜிதான். இந்தப் படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என்று நான் பாலாஜியிடம் கேட்டபோது, “உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை” என்றார்.

ஊர்வசி மேடம் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வரம். ஊர்வசியை தவிர வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட முடியாது. அவருடைய நடிப்பு அவ்வளவு அபாரமானது.

அபர்ணா பாலமுரளியின் நடிப்பு சூரரை போற்று’ படத்தில் இருந்ததுபோல் சிறப்பாக இருந்தது. கே.பி.ஏ.சி.லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்கு சவாலாய் இருந்தது.

ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இருவரின் கூட்டணி சிறந்த காம்போ. இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். இந்த படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன்.“ என்றார்.

படம் குறித்து RJ.பாலாஜி பேசும்போது, “நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில் நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணி புரிந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக் குழுவினர் சார்பாக நன்றிகள். தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் தல அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, இப்போது என்னையும் வைத்து படம் தயாரிப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

அவருடன் தயாரிப்பாளர் ராகுலின் உழைப்பும் அளப்பறியது. இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல்தான் எங்களை தொடர்ந்து வெற்றிகரமான இரண்டு படங்களை உருவாக்க வைத்துள்ளது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிப் பிடித்துள்ளார்.

நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகரான சத்யராஜ் சாரை இயக்கியதிலும் எனக்கு சந்தோசம்தான். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார்.

தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்தப் படத்தில் தங்களது பெரிய உழைப்பினை கொடுத்துள்ளனர். பா.விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். அவர் இப்போதுவரையிலும் என்னுடைய படங்களில் தொடர்ந்து பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட இசையை கொடுத்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’ போன்ற படங்களின் படத் தொகுப்பாளரான செல்வா, என் படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்தப் படம் இப்படிப்பட்ட சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இந்த வீட்ல விசேஷம்’ படம் குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்…“ என்றார்.

The post “என்னுடைய பாவமான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்” – நடிகர் சத்யராஜின் கலகல பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது https://touringtalkies.co/valli-mayil-movie-starring-sathyaraj-vijay-antony-and-bharathiraja-has-started/ Mon, 16 May 2022 08:28:11 +0000 https://touringtalkies.co/?p=22085 நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் புதிய படம் ‘வள்ளி மயில்’. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு படமான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நாயகியாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலரும் நடிக்கவுள்ளனர். எழுத்து, இயக்கம் : சுசீந்திரன், இசை […]

The post சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் புதிய படம் வள்ளி மயில்’.

இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு படமான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நாயகியாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலரும் நடிக்கவுள்ளனர்.

எழுத்து, இயக்கம் : சுசீந்திரன், இசை : D.இமான், ஒளிப்பதிவு : விஜய் k.சக்கரவர்த்தி, படத் தொகுப்பு : ஆண்டனி, கலை இயக்கம் : K.உதய குமார், பாடல்கள் : யுகபாரதி, நடன இயக்கம் : ஷோபி, சண்டை பயிற்சி இயக்கம் : ஸ்டன் சிவா, உடைகள் வடிவமைப்பு : ராதிகா சிவா, பத்திரிகை தொடர்பு : ஜான்சன், விளம்பர வடிவமைப்பு : ட்யூனி ஜான், இணை தயாரிப்பு : கார்த்திக், தயாரிப்பு நிறுவனம்: நல்லுசாமி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் : தாய் சரவணன்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.

இந்த ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் பூஜையுடன் துவங்கியது. தமிழக உணவு துறை அமைச்சர் சக்ரபாணி கிளாப் அடித்து இந்தப் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இந்தப் படப்பிடிப்பு, திண்டுக்கல்லைச் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.

இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் நடிகர் ஆண்டனி, நாயகியான ஃபரியா அப்துல்லா இருவரும் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார்கள்.

இதையடுத்து, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

The post சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
“நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு https://touringtalkies.co/actor-sathyaraj-speech-in-theerppugal-virkkappadum-movie-function/ Thu, 16 Dec 2021 17:12:05 +0000 https://touringtalkies.co/?p=19871 சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்.’ ‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத் தொகுப்பை சரத் கவனிக்கிறார். ‘குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிய, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்திருக்கிறார். […]

The post “நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்.’

‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத் தொகுப்பை சரத் கவனிக்கிறார்.

குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிய, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி நேற்று இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சத்யராஜ், சிபிராஜ், மயில்சாமி, சந்துரு, எஸ்.ஏ. சந்திரசேகர், திலகவதி ஐ.பி.எஸ்., நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அது சார்ந்த விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் சத்யராஜ் பேசுகையில், “நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க. கை தட்டுங்க. ஆனால், நிஜ ஹீரோக்களைத்தான் போற்ற வேண்டும். வேதம் புதிது’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை எம்.ஜி.ஆர்.தான் தீர்த்து வைத்தார். அதேபோன்று பெரியார்’ படத்திற்கும் பிரச்சினை வந்தது. ‘பெரியார்’ படம் வெளியானதற்கு காரணம் இங்கே வந்துள்ள நீதியரசர் சந்துருதான்.

தணிக்கைச் (சென்சார்) சான்றிதழ்கள் தற்போது பல வடிவங்களில் உள்ளன. அதனால் மேடையில் பேசும்போது பார்த்து பேச வேண்டியுள்ளது. பெரியார், அம்பேத்கர் படங்கள் உள்ள திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுகின்றன. ஆங்கிலம் பேசுவது என்பது அறிவுக்காகத்தான். நீதியரசர் சந்துரு அவர்களே சர்டிபிகெட் குடுத்திட்டார்.. தீர்ப்புகள் விற்கப்படலாம்’ டைட்டில் ஓகே என்று.. பிறகென்ன.. நிச்சயமாக இத்திரைப்படம் தடைகளை உடைத்து திரைக்கு வரும்…” என்றார்.

The post “நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“என்னை சிறந்த நடிகையாகப் பார்த்தவர் சத்யராஜ் ஸார்தான்..” – சொல்கிறார் நடிகை விசித்ரா..! https://touringtalkies.co/sathyaraj-is-the-one-who-saw-me-as-the-best-actress-says-actress-visitra/ Tue, 15 Jun 2021 06:48:04 +0000 https://touringtalkies.co/?p=15550 தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சி ப்ளஸ் வில்லி நடிகையென்றால் அது விசித்ராதான். ‘சின்னத்தாயி’ படத்தில் முகம் தெரிய ஆரம்பித்த அவர், அதற்கடுத்த படமான ‘தலைவாசல்’ படத்தில் ‘மடிப்பு அம்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். அதற்குப் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் காமெடி, கவர்ச்சி, வில்லியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஒரு சில படங்களில் மட்டுமே அவரது கதாபாத்திரம் சிறப்பாக, நேர்மையானதாக இருந்தது. அப்படியொரு கதாபாத்திரம் […]

The post “என்னை சிறந்த நடிகையாகப் பார்த்தவர் சத்யராஜ் ஸார்தான்..” – சொல்கிறார் நடிகை விசித்ரா..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சி ப்ளஸ் வில்லி நடிகையென்றால் அது விசித்ராதான்.

‘சின்னத்தாயி’ படத்தில் முகம் தெரிய ஆரம்பித்த அவர், அதற்கடுத்த படமான ‘தலைவாசல்’ படத்தில் ‘மடிப்பு அம்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒரே நாளில் மிகவும் பிரபலமானார்.

அதற்குப் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் காமெடி, கவர்ச்சி, வில்லியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

ஒரு சில படங்களில் மட்டுமே அவரது கதாபாத்திரம் சிறப்பாக, நேர்மையானதாக இருந்தது. அப்படியொரு கதாபாத்திரம் அவருக்கு நடிகர் சத்யராஜ் இயக்கிய ‘வில்லாதி வில்லன்’ படத்தின் மூலமாகக் கிடைத்தது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லையென்றாலும் படம் பரவலாகப் பேசப்பட்டது. படத்தில் ‘ஹிட்லர்’ வேட சத்யராஜூக்குப் பிறகு ‘அம்சவல்லி’ என்ற அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விசித்ராவும் அனைவரையும் கவர்ந்தார்.

இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக விசித்ரா தனது பழைய இடத்தை இழந்துவிட்டார். அதனால்தான் அவருக்கு மார்க்கெட் குறையத் துவங்கியது என்ற பேச்சு அன்றைய திரையுலகத்தில் பரவியிருந்தது.

இது குறித்து விசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், “சத்யராஜ் ஸார், என்னை நம்பி இப்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். பலரும் என்னை ஒரு கவர்ச்சிப் பொருளாகப் பார்த்த நிலையில் இப்படி என்னை ஒரு சிறந்த நடிகையாக நினைத்தவர் அவர் ஒருவர்தான்…” என்று சொல்லியிருக்கிறார்.

The post “என்னை சிறந்த நடிகையாகப் பார்த்தவர் சத்யராஜ் ஸார்தான்..” – சொல்கிறார் நடிகை விசித்ரா..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! https://touringtalkies.co/actor-sathyaraj-director-anu-mohan-story/ Fri, 15 Jan 2021 08:05:57 +0000 https://touringtalkies.co/?p=12162 இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும் அனு மோகனின் இயக்கத்தில் நடிக்க சத்யராஜ் பெரிதும் தயங்கியிருக்கிறார். அனு மோகனுக்கு முதன்முதலில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் அணுகியது சத்யராஜைத்தான். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை தேடிப் போய்ப் பார்த்து கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனு […]

The post இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும் அனு மோகனின் இயக்கத்தில் நடிக்க சத்யராஜ் பெரிதும் தயங்கியிருக்கிறார்.

அனு மோகனுக்கு முதன்முதலில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் அணுகியது சத்யராஜைத்தான். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை தேடிப் போய்ப் பார்த்து கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனு மோகன்.

கதையைக் கேட்ட சத்யராஜ், “கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போ நான் ஓல்டு கெட்டப் போட வேண்டாம்ன்னு நினைச்சிருக்கேன். அதுனால வேண்டாம். நீங்க பிரபுவை அப்ரோச் பண்ணுங்க. அவருக்குப் பொருத்தமா இருக்கும்..” என்று பிரபுவிடம் டைவர்ட் செய்துவிட்டாராம்.

பிரபுவிடம் அனு மோகன் சென்று இந்தக் கதையைச் சொன்னவுடன் பிரபு “கதை நல்லாயிருக்கே.. நான் நடிக்கிறேன்…” என்று சொல்லி நடிக்க ஒத்துக் கொண்டார். அந்தப் படம்தான் 1989-ல் வெளியான ‘நினைவுச் சின்னம்’ திரைப்படம்.

2 வருடங்கள் கழித்து மீண்டும் சத்யராஜிடம் போய் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அனு மோகன். இந்த முறை கதையைக் கேட்டுவிட்டு “இப்போ இந்த மாதிரி கதைல நான் நடிக்கிறதில்லையே..” என்று இழுத்த சத்யராஜ் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஆனால், இதற்குப் பின்பு சில நாட்கள் கழித்து இயக்குநர் கே.சுபாஷ் அனு மோகனை சந்தித்து, சத்யராஜிடம் ஏதோ கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை வைச்சு நான் படமாக்கலாம்ன்னு நினைக்கிறேன். கதையைத் தர்றீங்களான்னு கேட்டிருக்கிறார். எப்படியோ தன் கதை படமானால் போதும் என்று சொல்லி அந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார் அனு மோகன்.

இந்தக் கதையில் உருவான திரைப்படம்தான் 1992-ம் ஆண்டு சத்யராஜ்-பானுப்பிரியா நடிப்பில் கே.சபாஷ் இயக்கத்தில் வெளியான ‘பங்காளி’ திரைப்படம்.

இதன் பின்பும் முயற்சியைக் கைவிடாமல் சத்யராஜிற்கு மீண்டும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை முழுவதையும் கேட்டுவிட்டு “நல்லாத்தான் இருக்கு. யோசித்து சொல்றனே…” என்று சொல்லியனுப்பியிருக்கிறார் சத்யராஜ்.

சில நாட்கள் கழித்து சத்யராஜ் அனுப்பி வைத்ததாகச் சொல்லி இயக்குநர் குரு தனபால் அனு மோகனை நேரில் வந்து சந்தித்திருக்கிறார். “சத்யராஜ்கிட்ட ஒரு கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை எனக்குக் கொடுக்குறீங்களா..? நான் அவரை வைச்சு படம் பண்ணப் போறேன்..” என்று கேட்டிருக்கிறார்.

இந்த முறையும் ஏமாற்றத்துடன் அனு மோகன் தன் கதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்தக் கதையில் உருவான படம்தான் சத்யராஜின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய 1994-ல் வெளியான ‘தாய் மாமன்’ திரைப்படம்.

இதன் பின்பு அனு மோகனுக்கே படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போக.. சத்யராஜவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு என்னும் அவரது நீண்ட நாள் ஆசை நிராசையாகவே போய்விட்டது..!

The post இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
“அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! https://touringtalkies.co/rajinikanth-is-universal-super-star-sathyaraj-interview/ Thu, 17 Dec 2020 06:35:46 +0000 https://touringtalkies.co/?p=11158 சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர். இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் […]

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர்.

இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் ஒருத்தர்தான்.

இன்றைய உலகத்துல எந்த நாட்டுல, எந்த மொழில.. எந்த நடிகன் 45 வருஷமா ஹீரோவாகவே நடிச்சிட்டு வர்றாரு..? சொல்லுங்க.. அதுலேயும் இன்னிக்கு தமிழ்ச் சினிமால 100 கோடி ரூபாய் சம்பளத்தையும் அவரால வாங்க முடியுதுன்னா அதுதானே அவரோட திறமை.. பெருமை..! அவருக்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் தீவிர பக்திமான். நான் தீவிர நாத்திகன். இதுதான் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடே தவிர.. வேறில்லை..” என்றார்.

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா..? https://touringtalkies.co/soothu-kavvum-movie-second-part-will-ready/ Thu, 17 Dec 2020 06:15:53 +0000 https://touringtalkies.co/?p=11152 2013-ம் ஆண்டில் வெளிவந்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான திரைப்படம் ‘சூது கவ்வும்’. தயாரிப்பாளர் சி.வி.குமாரின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா.. வராதா என்று கடந்த சில ஆண்டுகளாகவே நலன் குமாரசாமியிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. ‘கதை ரெடி.. நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களை தேடி வருகிறோம்’ என்று கடைசியான ஒரு பேட்டியில் நலன் குமாரசாமி கூறியிருந்தார். இப்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது உறுதியாகிவிட்டது. […]

The post ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா..? appeared first on Touring Talkies.

]]>
2013-ம் ஆண்டில் வெளிவந்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான திரைப்படம் ‘சூது கவ்வும்’. தயாரிப்பாளர் சி.வி.குமாரின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா.. வராதா என்று கடந்த சில ஆண்டுகளாகவே நலன் குமாரசாமியிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. ‘கதை ரெடி.. நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களை தேடி வருகிறோம்’ என்று கடைசியான ஒரு பேட்டியில் நலன் குமாரசாமி கூறியிருந்தார்.

இப்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது உறுதியாகிவிட்டது. இந்த இரண்டாம் பாகத்தில் நாயகனாக விஜய் சேதுபதியே நடிக்கிறார். அவருடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகியிருக்கிறாராம். படத்தின் கதையைக் கேட்ட சத்யராஜ் அசந்துவிட்டாராம். “அற்புதமான கதை…” என்று புகழ்கிறார் சத்யராஜ்.

படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

The post ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா..? appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக்கு வரத் தயாராக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம்..! https://touringtalkies.co/mgr-magan-movie-will-release-coming-deepavali/ Wed, 14 Oct 2020 07:21:27 +0000 https://touringtalkies.co/?p=8748 ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘எம்.ஜி.ஆர். மகன்.’ இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகிக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி, நிவேதிதா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத் தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். சரவணன் தயாரிப்பு […]

The post தீபாவளிக்கு வரத் தயாராக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘எம்.ஜி.ஆர். மகன்.’

இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகிக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி, நிவேதிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத் தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’. ‘சீமராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் 4-வது திரைப்படம் இது.

சென்சாரில் இத்திரைப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இந்த மாதத்திற்குள்ளாக தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்துவிட்டால், அடுத்த மாதம் தீபாவளி தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தீபாவளிக்கு வரத் தயாராக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>