Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சித்ரா லட்சுமணன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 17 Jan 2022 13:58:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சித்ரா லட்சுமணன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் https://touringtalkies.co/cinema-varalaaru-78-msv-refuses-of-kannadasans-lyrics/ Mon, 17 Jan 2022 13:57:47 +0000 https://touringtalkies.co/?p=20275 தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம். கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன். அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் […]

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம்.

கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன்.

அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் பிறந்த தினம்.

1927-ம் ஆண்டு கண்ணதாசன் பிறக்க,  அதற்கு ஒரு வருடம் தள்ளி 1928-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தார்.

சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த பாலும் பழமும்’ படத்தில இடம் பெற்றிருந்த  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று தொடங்கும் பாடலை  எழுதிய கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவருமே அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். அப்படி அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த  அவர்களுடைய முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது.

அப்போது  ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில்  இசை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் . எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும்  அந்த மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி  அந்த மெட்டுக்குரிய பாடலை அவர்களிடம் எழுதி வாங்குகின்ற வேலை அவருடையதாக இருந்தது.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  கன்னியின் காதலி’ என்ற படத்திலதான்  கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய  முதல் இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடல்களை எழுதிய பிறகே  எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆகவே அவரைச்  சந்திக்கக் கூடிய வாய்ப்பு விஸ்வநாதனுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற  மூன்றாவது பாட்டுதான் அவர்களுடைய முதல் சந்திப்பிற்கு வழி வகுத்தது.

பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்துக் காண்பித்தவுடன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று அந்தப் பாடலுக்கான பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் கொடுத்தார் கண்ணதாசன்.  

எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டிய மெட்டுக்கு அந்தப்  பாடல் வரிகள் மிகச்   சரியாக பொருந்தி  இருந்தாலும் அந்தப் பல்லவியில் இடம் பெற்றிருந்த களி’, ‘கூத்து’ போன்ற வார்த்தைகள் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.

“அது என்ன ‘களி’, ‘கூத்து’? அதெல்லாம் சரியாக இல்லை. மாற்றி எழுதிக் கொடுங்கள்” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னபோது அவரைப் பார்த்து கண்ணதாசன் முறைத்த முறைப்பில் விஸ்வநாதன் எரிந்து போகாமல் இருந்தது அதிசயம்தான் . அந்த அளவு கோபத்தோடு அவரைப் பார்த்து முறைத்தார் அவர். “நீயெல்லாம்  எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்ற கேள்வியும்  அந்த முறைப்புக்குள்  இருந்தது.

அப்போது விஸ்வநாதன் இருபத்தியோரு வயது இளைஞர். ஆகவே கண்ணதாசனின் முறைப்புக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட  அசரவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார் ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி.

“என்னடா பல்லவியை எழுதிட்டானா?” என்று விஸ்வநாதனைப் பார்த்து கேட்ட அவர்  “எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்” என்றார். “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று கண்ணதாசன் எழுதியிருந்த பல்லவியை விஸ்வநாதன் படித்துக் காட்டிய உடன் “என்னடா இது களி’, ‘கூத்து’ன்னு? இந்த வார்த்தைகள் எல்லாம் இவனுக்கு ஒத்து வராதே” என்று கண்ணதாசனைப் பார்த்து சொன்ன அவர் “சரி சரி அதை மாத்தி எழுதிக் கொடுத்து விடு” என்று கண்ணதாசனிடம்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் மேல் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் கண்ணதாசனால் அதை வெளியே காட்ட முடியவில்லை. அதற்கிடையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம்  வந்த உடுமலை நாராயணகவி  “என்னடா மாத்தி எழுதி கொடுத்தானா இல்லையா?” என்று விஸ்வநாதனிடம்  கேட்டார்

“இன்னும் எழுதித் தரவில்லை” என்று அவர் பதில் சொன்னதும் “சரி இப்படி மாத்திக்கோ” என்று சொல்லி விட்டு “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்பதற்கு பதிலாக “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டுப் பார்” என்றார் அவர்.

அவர் சொன்ன வார்த்தைகளை அந்த மெட்டுக்குள் பொருத்திப் பார்த்த விஸ்வநாதன் “ரொம்ப சரியாக  இருக்கு” என்றார். உடுமலை நாராயண கவி எந்த அளவிற்கு பண்பாளர் என்பதற்கு அடையாளம்  அடுத்து  அவர் கண்ணதாசனைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தான். 

“காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்ற வார்த்தைகள்தான் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள் என்பதெல்லாம் இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் அவன்” என்று கண்ணதாசனிடம் கூறினார் அவர்.

அதற்குப் பிறகு பல படங்களில் இணைந்து கண்ணதாசனும், விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினாலும் அவர்களது நட்பிலே நெருக்கம் உண்டானது மகாதேவி’ படத்தில பணியாற்றியபோதுதான்.

அந்தப் படத்திற்குப் பிறகுதான்  கண்ணதாசனை கவிஞரே’ என்று விஸ்வநாதனும் ‘விசு’ என்று விஸ்வநாதனை கண்ணதாசனும் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனி புத்தகமாகவே எழுதலாம்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு ஒரு பாடலாசிரியர்-இசையமைப்பாளர் என்பதை தாண்டிய ஒரு உறவு. அப்படி கண்ணதாசன்  மீது நேசம் கொண்டிருந்த  விஸ்வநாதன்தான் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது நட்பு,தொழில் ஆகிய இரண்டையும் எவ்வளவு அழகாக அவர் கையாண்டிருக்கிறார் என்று  வியப்பு கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.

கண்ணதாசன்  அறிமுகமானதில் இருந்தே பல படங்களில் பாட்டு எழுத அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் எல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதும் சூழ்நிலையே இருந்தது.  தனது பாட்டுச் சுதந்திரத்தை அந்த மெட்டுகள் பறிப்பதாக  எண்ணினார் கவிஞர்.

ஒரு நாள் திடீரென்று விஸ்வநாதனை அழைத்த அவர் “டேய் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதில் மொத்தம் பத்துப் பாட்டுக்கள். அந்த பத்துப் பாடல்களையும் நான் முதலில் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்த வரிகளுக்குத்தான் நீ மெட்டுப் போட வேண்டும் என்ன சரியா? இடையில இந்த பாட்டுக்கு மட்டும்நான் முதல்ல மெட்டுப் போட்டு விடுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது…” என்றார் கண்ணதாசன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும்  அதற்கு ஒப்புக் கொண்டனர். அப்படி உருவாகிய படம்தான் மாலையிட்ட மங்கை’. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு மறு வாழ்வு தந்த அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே அவ்வளவு இனிமையாக அமைந்திருந்தன. “அந்தப் படம் வந்த பிறகுதான் என்னுடைய தொழிலில் இருந்த மந்த நிலைமை மாறி வெகு வேகமான முன்னேற்றம் பிறந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

‘மாலையிட்ட மங்கை’ படம் வெளியான அன்று  பயத்துடன்தான் நான் ‘பாரகன்’ தியேட்டருக்குப் போனேன். டைட்டில் காட்டும்போதே மகாலிங்கத்தின் கம்பீரமான குரல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்று முழங்கியது.படத்தைப் பார்க்க   பெருவாரியாக வந்திருந்த கழகத் தோழர்கள் அனைவரும் பலமாக கை தட்டினார்கள். மகாலிங்கத்திடம் அவர்களுக்குப் பிரியம் வந்துவிட்டது. படத்தையும் பிரமாதமாக அவர்கள் ரசித்தார்கள் படமும் நன்றாக ஓடியது…” என்று குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனும், விஸ்வநாதனும் பாடல் ஒத்திகைக்காக அமர்ந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். ஒருவரையொருவர் அந்த அளவிற்கு கிண்டல் செய்து கொள்வார்கள்.

கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக அமைந்ததை விஸ்வநாதன் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? எந்த பாடலாசிரியராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்பதானே எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூழ்நிலை என்றால் படத்தின் சூழ்நிலை அல்ல – பாடல் எழுதும்போது கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இருந்தாரோ அது அவரது பல பாடல்களில் எதிரொலித்திருக்கிறது.

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
‘நெஞ்சம் மறப்பதில்லை-I’ புத்தகத்தை வெளியிட்டார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! https://touringtalkies.co/actor-kamalhasan-release-chithra-lakshmanan-book-nenjam-marappathillai/ Tue, 15 Dec 2020 08:41:43 +0000 https://touringtalkies.co/?p=11071 தமிழ்த் திரையுலகத்தில் சினிமா பத்திரிகையாளர், சினிமா மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் சித்ரா லட்சுமணன். தமிழ்ச் சினிமாவின் மூத்தப் பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணன், தமிழ் சினிமாவுலகில் நடந்த சுவையான தகவல்களையும், திரைக் கலைஞர்கள் வாழ்க்கையில் நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து  ‘80 ஆண்டு கால தமிழ் சினிமா முதல் பாகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை ‘என்னவென்று […]

The post ‘நெஞ்சம் மறப்பதில்லை-I’ புத்தகத்தை வெளியிட்டார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் சினிமா பத்திரிகையாளர், சினிமா மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் சித்ரா லட்சுமணன்.

தமிழ்ச் சினிமாவின் மூத்தப் பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணன், தமிழ் சினிமாவுலகில் நடந்த சுவையான தகவல்களையும், திரைக் கலைஞர்கள் வாழ்க்கையில் நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து  80 ஆண்டு கால தமிழ் சினிமா முதல் பாகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை ‘என்னவென்று சொல்வேன் என்ற பெயரில் எழுதினார்.

இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை-முதல் பாகம்’ என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

சினிமா உலகில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றி மூன்றாண்டு காலம் தொடர்ந்து ‘ மாலை மலர்’ நாளிதழில் ஒவ்வொரு வாரமும் சித்ரா லட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் சார்பில் ராம்ஜி – காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

உலக  நாயகன்’ கமல்ஹாசன் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.

அப்போது “உங்களுடையஅனுபவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதுங்கள் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு நான் சொன்னேன். இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..” என்று  சித்ரா லட்சுமணனை சிரித்தபடியே வாழ்த்தினார் ‘உலக  நாயகன்’ கமல்ஹாசன்.

The post ‘நெஞ்சம் மறப்பதில்லை-I’ புத்தகத்தை வெளியிட்டார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
“அந்த நடிகர் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்…” – நடிகை லதாவின் பேட்டி..! https://touringtalkies.co/actress-latha-told-about-her-marriage-proposal-from-one-of-the-top-hero/ Tue, 08 Dec 2020 06:29:14 +0000 https://touringtalkies.co/?p=10816 நடிகை லதாவை மலையாள நடிகர் ஜெயன் திருமணம் செய்து கொள்ள விரும்பிக் கேட்ட செய்தி, தற்போது வெளியில் வந்துள்ளது. நடிகை லதா ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்கடுத்து எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானவுடன் அடுத்து சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று அனைத்துக் கதாநாயகர்களுடனும் நடித்தார். அதன் பின்பும் அடுத்தக் கட்ட நாயகர்களாக இருந்த விஜயகுமார், ஜெய்கணேஷ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடனும் நாயகியாக நடித்தார். […]

The post “அந்த நடிகர் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்…” – நடிகை லதாவின் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை லதாவை மலையாள நடிகர் ஜெயன் திருமணம் செய்து கொள்ள விரும்பிக் கேட்ட செய்தி, தற்போது வெளியில் வந்துள்ளது.

நடிகை லதா ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்கடுத்து எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சரானவுடன் அடுத்து சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று அனைத்துக் கதாநாயகர்களுடனும் நடித்தார். அதன் பின்பும் அடுத்தக் கட்ட நாயகர்களாக இருந்த விஜயகுமார், ஜெய்கணேஷ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடனும் நாயகியாக நடித்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டிலானார். பல ஆண்டுகளுக்குப் பின்புதான் சென்னைக்கு வந்து மீண்டும் சீரியல்கள், டிவிக்களில் நடிக்கத் தொடங்கினார்.

அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ஜெயன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி தன்னிடமே கேட்டதாக சொல்லியிருக்கிறார்.

இது பற்றி அவர் சொல்லும்போது, “நான் எம்.ஜி.ஆரின் அறிமுகம் என்பதால் தமிழ்த் திரையுலகத்தில் எனக்கு அப்பவே பெரிய மரியாதை இருந்தது. செட்ல நம்பியாரே என்கிட்ட வந்து, “அம்மா கொஞ்சம் தள்ளி உக்காரும்மா…” என்று வேணும்ன்னே கிண்டலா சொல்லுவார். மனோகர் ஸார் உள்ளிட்ட எல்லா பெரிய ஆர்ட்டிஸ்டுகளுமே என்கிட்ட பணிவாத்தான் பேசுவாங்க. நடந்துக்குவாங்க.

நான் தமிழ், தெலுங்கு, மலையாளம்ன்னு பிஸியா நடிச்சிட்டிருக்கும்போது ஒரு மலையாளப் படத்துல நடிகர் ஜெயனோட நடிச்சேன். அப்போ அவர் “என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன்”னு என்கிட்டயே சொன்னார். பிரபோஸ் பண்ற விஷயமெல்லாம் சகஜம்தானே.. நான் அதைக்  கேட்டுட்டு “அப்புறமா சொல்றேன்”னு சொல்லிட்டேன். ஆனால், அதுக்குள்ள அவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்திட்டாரு. அதைக் கேள்வி்ப்பட்டவுடனேயே எனக்குப் பெரிய அதிர்ச்சியாயிருச்சு. அவரோட மரணத்தை என்னால நம்பவே முடியலை.

அப்புறம் நான் மும்முரமா படங்கள்ல நடிச்சிட்டிருக்கும்போது எங்கம்மாதான் “நடிச்சது போதும்.. கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாகு…” என்று என்னை வற்புறுத்தினார். எல்லா அம்மாக்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல. அதன்படிதான் அவரும் கேட்டார். அவர் ஆசைக்காகவே நானும் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “அந்த நடிகர் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்…” – நடிகை லதாவின் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
இரட்டை இலைக்கு பின்னணி இசையை மாற்றச் சொன்ன ஜெயலலிதா..! https://touringtalkies.co/ka-bharath-describes-jayalalithas-creative-mind-in-media-programmes/ Sun, 06 Dec 2020 06:08:37 +0000 https://touringtalkies.co/?p=10744 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தை இயக்கவில்லையே தவிர.. திரைப்படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்தான் என்பதற்கு ஒரு உதாரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார வீடியோக்களை இயக்கிய இயக்குநர் கா.பரத் ஜெயலலிதா பற்றி அளித்துள்ள பேட்டியில் இது பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார். அவர் இது பற்றிப் பேசும்போது, “1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சார வீடியோக்களைத் தயார் செய்ய ஜெயலலிதா அம்மா என்னையும், தயாரிப்பாளர் […]

The post இரட்டை இலைக்கு பின்னணி இசையை மாற்றச் சொன்ன ஜெயலலிதா..! appeared first on Touring Talkies.

]]>
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தை இயக்கவில்லையே தவிர.. திரைப்படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்தான் என்பதற்கு ஒரு உதாரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார வீடியோக்களை இயக்கிய இயக்குநர் கா.பரத் ஜெயலலிதா பற்றி அளித்துள்ள பேட்டியில் இது பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சார வீடியோக்களைத் தயார் செய்ய ஜெயலலிதா அம்மா என்னையும், தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியையும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

நாங்கள் போனவுடன் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த 3 பாடல்கள் அடங்கிய கேஸட்டை எங்களிடத்தில் கொடுத்து “இதுக்கேற்றாற்போல நடனக் காட்சிகளை அமைத்து ஷூட் செய்து கொண்டு வாருங்கள்…” என்றார். கூடவே, “இந்த டான்ஸ் சீன்ஸ்ல நடிக்கிறதுக்கு பிரபலமானவர்களை போடாதீங்க. அப்படி போட்டீங்கன்னா எல்லாரும் அவங்க டான்ஸைத்தான் பார்ப்பாங்களே தவிர, பாடல் வரிகளைக் கவனிக்க மாட்டாங்க. அதனால பிரபலமில்லாதவங்க.. ஆனால் அழகா இருக்கணும். அவங்களை வைச்சு ரெடி பண்ணுங்க…” என்று சொன்னார்.

அந்தப் பாடல்களைக் கேட்டு அதற்கேற்றாற் போன்று காட்சிகளையும் வடிவமைத்து படமாக்கி திருச்சியில் தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருந்த அம்மாவிடம் அதைப் போட்டுக் காட்டினோம். முதல் வீடியோ.. மூன்றாவது வீடியோக்களைப் பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு. குட்…” என்று பாராட்டினார்.

ஆனால், இரண்டாவதாக இருந்த பாடல் காட்சி ஒரு இளவரசி அம்மாவின் ஆட்சியை நினைத்து ஏக்கத்துடன் பாடுவதாக அமைந்திருந்தது. அதை மட்டும் குறிப்பிட்ட அம்மா, “இந்த மாதிரி இளவரசி கதையெல்லாம் நமக்கு வேண்டாம். ஏன்னா நம்முடைய தொண்டர்கள் எல்லாரும் பி அண்ட் சி-ல இருக்குறவங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரி சித்தாள் இல்லைன்னா… ஏழ்மைல இருக்குற பெண்கள் பாடுற மாதிரி மாத்தி இன்னொரு தடவை ஷூட் செய்யுங்க…” என்றார்.

எனக்குத் திக்கென்றானது. தயாரிப்பாளரும் வாய் திறக்கவில்லை. எங்களின் மெளனத்தைப் புரிந்து கொண்ட அம்மா, “என்ன செலவாகுமேன்னு யோசிக்கிறீங்களா..? அப்போ ஒண்ணு பண்ணுங்க.. ஒரு சித்தாள் பொண்ணு வேலை செஞ்சு களைச்சுப் போய் ஒரு மரத்தடில உக்கார்றா. அப்போ எதிரில் இருக்கும் சுவற்றில் அதிமுக விளம்பரத்தைப் பார்க்கிறாள். அதைப் பார்த்தவுடன் அவள் கனவு கண்டு அந்த இளவரசியாக மாறி பாடலைப் பாடுகிறாள் என்பது மாதிரி சீனை கட் செஞ்சு போடுங்க…” என்றார். இதைக் கேட்டு நாங்கள் அசந்துவிட்டோம்.. எவ்வளவு கிரியேட்டிவ் மைண்ட் அம்மாவுக்குன்னு..!?

நாங்கள் இதைக் கேட்டுவிட்டு சென்னைக்கு வந்த அடுத்த நாளே மறுபடியும் எங்களை புதுக்கோட்டைக்கு வரச் சொல்லி அம்மா உத்தரவு போட்டிருந்தாங்க. உடனேயே அன்னிக்கே கிளம்பி, மறுநாள் காலைல புதுக்கோட்டைக்கு போயிருந்தோம்.

புதுக்கோட்டை அரண்மனைல தங்கியிருந்த அம்மாவை சந்தித்தோம். “அந்த இரண்டாவது பாட்டுல கடைசில இரட்டை இலை சிம்பல் வரும்போது ஒரு பின்னணி இசை போட்டிருந்தீங்களே.. அது என்ன இசை..?” என்று கேட்டார். “தாயில்லாமல் நானில்லை பாட்டில் இடையில் வரும் ஒரு இசைக் கோர்வையைத்தான் இதில் பயன்படுத்தியிருக்கேன்ம்மா…” என்றேன்.

“அதுக்குப் பதிலா இன்னொன்னு சொல்றேன். என் வீட்டுக்குப் போனீங்கன்னா மியூஸிக் ரிக்கார்டர்ஸ் எல்லாத்தையும் ஒரு ஷெல்ப்ல வைச்சிருக்கேன். அதுல night of bobylon அப்படின்னு ஒரு ரிக்கார்ட் இருக்கும். அதுல 2 அல்லது 3-வதா ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டோட இசையை எடுத்து இந்த இரட்டை இலை காட்சி வரும்போது பி.ஜி.எம்மா போடுங்க. பிரமாதமா இருக்கும்”ன்னு சொன்னாங்க. என்றவர் கூடவே, “இதுக்காக உங்களை இங்க கூப்பிட்டு கஷ்டப்பட்டுத்திட்டேன்னு நினைக்கிறேன்” என்றார். எங்களுக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது. எவ்வளவு பெரியவங்க. நம்மகிட்ட போய் இப்படி பேசுறாங்களேன்னு..!?

மறுபடியும் சென்னைக்கு ஓடி வந்து அந்த ரிக்கார்டரை தேடிப் பிடிச்சு அந்தப் பாடலைக் கண்டுபிடிச்சு அந்த இசையை பி.ஜி.எம்.மா சேர்த்து மறுபடியும் அதை ரிக்கார்ட் செஞ்சு மதுரைல இருந்த அம்மாகிட்ட வந்து காட்டினோம்.

பார்த்தவுடன் சந்தோஷப்பட்டாங்க. “குட்.. பரவாயில்லையே.. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க.. இப்போ ரொம்ப நல்லாயிருக்கு..” என்று பாராட்டினார்கள்.

இந்த அளவுக்கு கதை, திரைக்கதை, இசை, காட்சியமைப்பு என்று எல்லாவற்றிலும் அம்மா தேர்ந்தவராக இருந்தார்..” என்று நினைவு கூர்ந்தார் இயக்குநர் கா.பரத்.

The post இரட்டை இலைக்கு பின்னணி இசையை மாற்றச் சொன்ன ஜெயலலிதா..! appeared first on Touring Talkies.

]]>
“காதல் தோல்வியால் துவண்டிருந்த ராதிகாவுக்கு தைரியம் சொன்னேன்” https://touringtalkies.co/radhika-vijayakanth-love-breakup-story/ Wed, 02 Dec 2020 04:50:59 +0000 https://touringtalkies.co/?p=10595 ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை காதலித்து தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நடிகை ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றியதாகச் சொல்கிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ். ஒரு வீடியோ பேட்டியில் அவர் இது பற்றிப் பேசும்போது, “1989-ம் வருடம் ‘நினைவுச் சின்னம்’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் பிரபு, ராதிகா, விஜயகுமார், சித்ரா இவங்க எல்லாம் நடித்தார்கள். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ராதிகா மிகுந்த மனத் துயரத்தில் இருந்தார். அப்போதுதான் அவருக்கும், விஜயகாந்துக்குமான காதல் முறிந்து போயிருந்தது. அந்தச் […]

The post “காதல் தோல்வியால் துவண்டிருந்த ராதிகாவுக்கு தைரியம் சொன்னேன்” appeared first on Touring Talkies.

]]>
‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை காதலித்து தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நடிகை ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றியதாகச் சொல்கிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.

ஒரு வீடியோ பேட்டியில் அவர் இது பற்றிப் பேசும்போது, “1989-ம் வருடம் ‘நினைவுச் சின்னம்’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் பிரபு, ராதிகா, விஜயகுமார், சித்ரா இவங்க எல்லாம் நடித்தார்கள்.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ராதிகா மிகுந்த மனத் துயரத்தில் இருந்தார். அப்போதுதான் அவருக்கும், விஜயகாந்துக்குமான காதல் முறிந்து போயிருந்தது. அந்தச் சோகத்தைத் தாங்க முடியாமல் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்குக்கூட ராதிகா முயற்சி செய்திருந்தார்.

ஏனெனில் விஜயகாந்ததை அந்த அளவுக்கு அவர் காதலித்திருந்தார். விஜயகாந்தை ஒரு ஸ்டைலிஷான கேரக்டராக மாற்றியது ராதிகாதான். அவருக்கு சினிமாவுலகின் ஹீரோக்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி அவரையும் ஒரு ஸ்டைல் ஹீரோவாக நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்ட வைத்தவர் ராதிகாதான். இதனாலேயே அந்தக் காதல் தோல்வியை அவரால் சட்டென தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அந்தப் படத்தின்போது ராதிகா, பிரபு இருவரும் நிறைய காமெடிகள் செய்வார்கள். சேட்டைகள் செய்வார்கள். எல்லாரும் விழுந்து, விழுந்து சிரிப்போம். ஆனாலும் திடீர், திடீரென்று ராதிகா மட்டும் மூட் அவுட் ஆகிவிடுவார்.

படத்திலேயே ஒரு காட்சியில் ‘ஒழுக்கம் கெட்டவர்’ என்ற பொய்ப் பழியைச் சுமத்தி ராதிகாவை வீட்டைவிட்டு வெளியேற்றுவதாக ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் அவர் நடித்தவிதத்தை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்ப்பா இருக்கு. அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருந்தார் ராதிகா. தன் மனதில் இருந்த பாரத்தையெல்லாம் அவர் வெளியில் கொட்டியது போலிருந்தது.

அந்த ஷாட் முடிஞ்சதும் ராதிகா, நான், விஜயகுமார் மூவரும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் ராதிகாவிடம், “நீ நடிக்குறதுக்காகவே பொறந்த பொண்ணும்மா.. உன் ரத்தத்துலேயே நடிப்பு ஊறிப் போயிருக்கு. நீ பொறந்து வளர்ந்து வந்த கல்ச்சர் வேற.. ஆனால், விஜியோட கல்ச்சர் வேற. அவரோட பழக்க, வழக்கமெல்லாம் வேற. அவரோட சொந்தக்காரங்கள் எல்லாம் நிச்சயமா உன் சொந்தங்கள் மாதிரியிருக்க மாட்டாங்க. உனக்கும், அவருக்கும் நிச்சயமா செட்டாகாது.

இதுவும் நல்லதுக்குத்தான்னு நினைச்சுக்க. அதை மறந்திட்டு நடிப்புல கவனம் செலுத்து. கொஞ்சம், கொஞ்சமா எல்லாம் மறந்திரும்..” என்று நானும், விஜயகுமாரும் ராதிகாவுக்கு ஆறுதல் கூறினோம்..” என்றார்.

The post “காதல் தோல்வியால் துவண்டிருந்த ராதிகாவுக்கு தைரியம் சொன்னேன்” appeared first on Touring Talkies.

]]>
“விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! https://touringtalkies.co/producer-dhananjayan-comments-about-vishal-contest-tfpc-election/ Sun, 22 Nov 2020 07:26:31 +0000 https://touringtalkies.co/?p=10286 நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே […]

The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே சிக்கலில் மாட்டிக் கொள்வார். இப்படித்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வந்தபோது விஷால் அதில் நிற்பதாகவே இல்லை. அவர் ஒரு அணி அமைத்து அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகத்தான் முதலில் அவருடைய திட்டம் இருந்தது.

இது குறித்து பல முறை அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வேனில் அமர்ந்து மணிக்கணக்காக நான் பேசியிருக்கிறேன். பின்பு அவரது அலுவலகம், என் அலுவலகம் என்று பல இடங்களிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

என்னை பொருளாளர் பதவிக்கு நிற்கச் சொன்னார். நானும் “ஓகே” என்று சொல்லிவிட்டேன். டி.சிவாவை தலைவர் பதவிக்கு முதலிலேயே நிறுத்தலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

திடீரென்று விஷால் தனது நண்பர்கள் பேச்சைக் கேட்டு “தலைவர் பதவியில் நான் நிற்கிறேன்…” என்றார். இதில் எனக்கு உடன்பாடில்லை. “இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது சரியல்ல…” என்று விஷாலிடம் சொன்னேன். விஷால் கேட்கவில்லை. அப்போ.. நானும் போட்டியிடவில்லை என்று சொல்லி விலகிக் கொண்டேன்.

பிறகு சுயேச்சையாக தனித்து நிற்கலாம் என்று கூட நினைத்து, பின்பு அதுவும் வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொண்டேன். விஷால் அந்தத் தேர்தலில் நின்றிருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து..” என்றார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..! https://touringtalkies.co/anandhraj-interview-about-director-manirathnam/ Wed, 18 Nov 2020 04:49:57 +0000 https://touringtalkies.co/?p=10147 இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார் என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார். அவர் இது பற்றிப் பேசும்போது, “நான் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தபோது, என்னுடைய நடிப்பு கோர்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன்.. இதற்காக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இருந்து […]

The post மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார் என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “நான் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தபோது, என்னுடைய நடிப்பு கோர்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன்.. இதற்காக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இருந்து தங்கப் பதக்கத்தினையும் பரிசாகப் பெற்றேன்.

ஆனால், அப்போதே பலரும் “இங்கே தங்கப் பதக்கம் வாங்கியவர்கள் சினிமாவில் முன்னுக்கு வந்ததே இல்லை…” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அப்போதே எனக்கு திக்கென்றாகிவிட்டது. சரி.. எப்படியாவது நாம் முன்னேறி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஆர்.எம்.வீரப்பன் ஸாரின் மகன் தமிழழகன் எனக்கு நண்பர். அவர் சொல்லி மணிரத்னத்தைப் பார்க்கப் போனேன். அப்போ அவர் பகல் நிலவு படத்தை இயக்குறதா இருந்தார்.

அதைக் கேள்விப்பட்டு பயங்கர சந்தோஷத்துடன் இயக்குநர் மணிரத்னத்தைப் பார்க்க ராயப்பேட்டேயில் இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். நான் சென்ற பின்புதான் மணிரத்னம் தன்னுடைய ஜாவா பைக்கில் ஆபீஸுக்கு வந்தார்.

வந்த வேகத்தில் ஆபீஸில் இருந்த டேப்ரிக்கார்டரில் அந்தப் படத்தின் பாடல்களைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அதை முடித்துவிட்டு ப்ரீயானவுடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

தமிழழகன் மணிரத்னத்துகிட்ட “என்னைக் காட்டி முரளிக்கு பிரெண்ட் கேரக்டரு்ககு நடிக்க வைக்கலாமே..” என்றார். என்னைப் பார்த்ததும் மணிரத்னம், “முரளிக்கு பிரெண்ட் கேரக்டராச்சே.. இவரை எப்படி..?” என்று யோசித்தார். பின்பு, “கேமிராமேனை கூப்பிடுங்க…” என்றார். அவர் வந்து என்னைப் பார்த்துவிட்டு.. “முரளி கருப்பு.. இவர் இவ்ளோ சிகப்பா இருக்காரு. எப்படி லைட்டிங் செய்யறது..” என்று கேட்டார். அன்றைக்குத்தான் எனக்கு என் மேலயே கோபம் வந்தது. ‘ஏண்டா இப்படி சிகப்பா பொறந்தோம்’ன்னு..!!!

இதுனாலேயே எனக்கு அந்த வாய்ப்பு பறி போனது. இருந்தாலும் அதே படத்துல ‘ஒரு போலீஸ் கேரக்டர் இருக்கு பண்றீங்களா..?’ன்னு கேட்டாங்க. ஏற்கெனவே பல பேர் சொல்லியிருந்தாங்க.. ‘முதல் படத்துலேயே போலீஸ் வேஷம் போட்ட.. அப்புறம் கடைசிவரைக்கும் போலீஸ் டிரெஸ்ஸுதான்’னு சொல்லியிருந்ததால.. ‘அது வேண்டாம்’ன்னு சொல்லிட்டேன்.

இப்படி நானே அந்தப் படத்துல மறுத்ததாலயோ என்னவோ… இப்போவரைக்கும் மணிரத்னம் ஸார் படத்துல நான் நடிக்கவே முடியலை..” என்றார் ஆனந்த்ராஜ்.

The post மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..! appeared first on Touring Talkies.

]]>
“மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..! https://touringtalkies.co/cinema-theatres-owners-union-leaders-told-master-movie-will-release-on-2021-pongal-day/ Thu, 05 Nov 2020 10:42:14 +0000 https://touringtalkies.co/?p=9711 “இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் நிச்சயமாக 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும்” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யுடியூப் நிகழ்ச்சிக்கு திரைப்பட ஆர்வலரும், ஆய்வாளருமான வெங்கட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் சங்கத்தின் நிர்வாகிகளான திருச்சி ஸ்ரீதரும், வெங்கடேஷும் இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் பேசும்போது, “தமிழகத்தின் தியேட்டர்களில் தற்போது இருக்கும் டிஜிட்டல் முறையை எங்களிடத்தில் சொல்லி ஏற்கச் சொன்னதே […]

The post “மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..! appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் நிச்சயமாக 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும்” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யுடியூப் நிகழ்ச்சிக்கு திரைப்பட ஆர்வலரும், ஆய்வாளருமான வெங்கட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் சங்கத்தின் நிர்வாகிகளான திருச்சி ஸ்ரீதரும், வெங்கடேஷும் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் பேசும்போது, “தமிழகத்தின் தியேட்டர்களில் தற்போது இருக்கும் டிஜிட்டல் முறையை எங்களிடத்தில் சொல்லி ஏற்கச் சொன்னதே இதே தயாரிப்பாளர்கள். 2008-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர்களுடைய அறிமுகத்தினால்தான் நாங்கள் இதனை ஏற்றுக் கொண்டோம்.

அப்போதும் அவர்கள்தான் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டினார்கள். நாங்களாக கேட்கவில்லை. அவர்களே கொண்டு வந்த புதிய தொழில் நுட்பத்திற்கு அவர்கள்தான் பணம் கட்ட வேண்டும். அதுதான் நியாயமானது.

ஒரு சில தியேட்டர்களில் சாதாரண டிஜிட்டல் முறையும், 2-கே புரொஜெக்சன் முறையும் இருக்கிறது. சில தயாரிப்பாளர்களே “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அதிகமான செலவுகளை செய்து தரமான படமாக அதனை உருவாக்கியிருக்கிறோம். அதனால் இதனை 2-கே-வில் புரொஜெக்ஸன் செய்யுங்கள்…” என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்லித்தான் நாங்கள் அதனை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் அதற்குரிய பணத்தை அவர்கள்தானே கட்ட வேண்டும்..?

புரொஜெக்டர்களை சொந்தமாக வைத்துக் கொள்வதா, வேண்டாமா என்பது எங்களுடைய பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் படம் கொடுக்கும்போது, ‘அந்தப் படம் தயாரிக்க எத்தனை கோடி செலவானது..?’, ‘இந்தப் படத்திற்காக யாரிடம் பைனான்ஸ் வாங்கினீர்கள்..?’, ‘இந்தப் படத்தின் மீது எத்தனை கோடிகள் கடன் இருக்கிறது..?’ என்றெல்லாம் நாங்கள் என்றைக்காவது யாரிடமாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே.. அதேபோலத்தான் தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தில் எங்களை கேள்வி கேட்க முடியாது.

ஏற்கெனவே தொடர்ந்து திரைப்படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் வந்து போனார்கள். அவர்களுக்கு பார்க்கிங் செலவோ, கேண்டீன் செலவோ பெரிய விஷயமே இல்லை. இனிமேலும் முன்பு போலவேதான் பார்க்கிங் கட்டணமும், கேண்டீனில் விற்கும் திண்பன்டங்களின் விலையும் இருக்கு. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு அரசு என்ன விதிமுறைகளை சொல்லியிருக்கிறதோ அதைப் பின்பற்றும்படி சொல்லுவோம். நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.

‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக அடுத்த பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில்தான் வெளியாகும். இதனை நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்..” என்றனர்.

The post “மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! https://touringtalkies.co/cinema-history-31-alaigal-oyivathillai-hero-selection-story/ Tue, 03 Nov 2020 12:49:45 +0000 https://touringtalkies.co/?p=9660 ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா. அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர […]

The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.

]]>
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.

அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.

அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத்  தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக்  காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.

‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.

நான் உதவி இயக்குநராகப்  பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.

இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு  நெருக்கமான நட்பு இருந்தது.   

ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால்  எப்படியிருக்கும்…?” என்றார்  பாரதிராஜா.  அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.

அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.

படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.

அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு என்னை அழைத்துக் கொண்டு போய்  அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின்  பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத்  தோன்றவில்லை.

அதை நான் இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.

“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்றேன் நான்.

ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு  நான் சொன்னதை  ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.

மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின்  வாசலுக்கு சென்ற நாங்கள்  மூவரும்  வகுப்புகள் விட்டு  வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் யாரும்  தேறவில்லை.

பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.

போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு  முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றோம்.

அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக நாங்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.

கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று என்னிடம் கேட்டார்.

முத்துராமன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் முரளியை ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆகவே, “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னேன். பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். நான் முரளியை அழைத்துப்  பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான்  என்று எனக்குப் புரிந்துவிட்டது.

அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன்  வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.

இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே எங்களை வரச் சொன்னார். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றவுடன் வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று  அவரிடம்  பாரதிராஜா  சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.

படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார்  முத்துராமன்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன்  நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார். 

கதாநாயகனாக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு ஏற்பாடுகளுக்காக பாரதிராஜா  புறப்பட்டுவிட அதற்கு அடுத்த நாள் காலையில் நானும், முரளியும் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.

நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும்  கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.

]]>
‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிக்கத் தயங்கிய பூர்ணிமா பாக்யராஜ்..! https://touringtalkies.co/purnima-bhagyaraj-reluctant-to-act-in-payanangal-mudivathillai-movie/ Tue, 03 Nov 2020 07:14:23 +0000 https://touringtalkies.co/?p=9634 1982-ம் ஆண்டு வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தின் போக்கையே மாற்றியமைத்த படமாக இன்றைக்கும் பேசப்படும் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பெரிதும் தயங்கியதாக… அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு பூர்ணிமா பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் இது குறித்துப் பேசியுள்ளார். “நெஞ்சில் ஒரு முள்’, ‘கிளிஞ்சல்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களில் நடித்திருக்கும்போதுதான் இந்தப் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. […]

The post ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிக்கத் தயங்கிய பூர்ணிமா பாக்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
1982-ம் ஆண்டு வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தின் போக்கையே மாற்றியமைத்த படமாக இன்றைக்கும் பேசப்படும் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பெரிதும் தயங்கியதாக… அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு பூர்ணிமா பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் இது குறித்துப் பேசியுள்ளார்.

“நெஞ்சில் ஒரு முள்’, ‘கிளிஞ்சல்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களில் நடித்திருக்கும்போதுதான் இந்தப் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போ ‘கிளிஞ்சல்கள்’ படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன்.

இந்த வாய்ப்பைக் கேட்டுட்டு முதல்ல எனக்குள்ள ஒரு தயக்கம். ஏன்னா.. முதல் பட இயக்குநர்கள் நிறைய படத்துல ‘சொதப்பிட்டாங்க’. ‘சரியா செய்யலை’.. ‘படம் பெயிலயிராயிச்சு’ என்றெல்லாம் நிறைய பேச்சுக்கள் திரையுலகத்தில் இருந்தது. இதையெல்லாம் கேட்டுத்தான் நானும் அந்தப் பட வாய்ப்பை தவிர்த்துக் கொண்டேயிருந்தேன்.

ஒரு நாள் அவர் நான்கைந்து முறை போன் செய்தார். நான் போனை அட்டெண்ட் செய்யவே இல்லை. அப்புறம் மேல் அமைச்சர்கள் சிபாரிசு.. அப்படி, இப்படின்னு நிறைய பேர் பேசினாங்க. சரின்னு கதையாவது கேக்கலாம்ன்னு நினைச்சு இயக்குநரைக் கூப்பிட்டு பேசினேன்.

அப்போ நான் பாம்குரோவ் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஆர்.சுந்தர்ராஜன் ஸார் வந்து கதை சொன்னார். மொத்தக் கதையையும் இடைல இடைல பாட்டு வர்ற சீன்ஸ்ல எல்லாம் அந்தப் பாடல்களையே பாடிக் காட்டினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அவர் கதை சொன்னவிதம் எனக்குப் பிடிச்சதால சரி.. இதுல நடிப்போம்ன்னு நினைச்சுத்தான் அந்தப் படத்துக்கு ஓகே சொன்னேன்.

ஆனால் பாருங்க.. படம் அப்படியொரு ஓட்டம் ஓடிருச்சு.. சில்வர் ஜூப்ளி கொண்டாடுச்சு. சென்னைல 275 நாள் ஓடுச்சு..  சிவாஜி ஸார்தான் எங்களுக்கு விருது கொடுத்தார்..” என்று பூரிப்போடு சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

The post ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிக்கத் தயங்கிய பூர்ணிமா பாக்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>