Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கே.பாலசந்தர் – Touring Talkies https://touringtalkies.co Mon, 28 Nov 2022 14:33:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கே.பாலசந்தர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் https://touringtalkies.co/producer-pl-thenappan-bought-1-lakh-rupees-from-k-balachandar-and-rajini/ Mon, 28 Nov 2022 14:32:19 +0000 https://touringtalkies.co/?p=27762 தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்‌ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன். நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் […]

The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்‌ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன்.

நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் பி.எல்.தேனப்பன். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்து படங்களுக்கும் நான்தான் தயாரிப்பு நிர்வாகி என்பதால் ‘முத்து’ படத்திலும் என்னையே தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்ற வைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள். அதனால் எனக்குக் கீழே உதவியாளர்களை வைத்துக் கொண்டுதான் அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

அதோடு சில காட்சிகளில் துணை நடிகர்களை நூற்றுக்கணக்கில் அழைத்து வர வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மிகச் சிரமப்பட்டுத்தான் அவர்களை வரவழைத்து வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பிரச்சினையில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு நான்கு நாட்கள் கழித்து ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் அவரைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது அவர் என்னிடம், “நான் இதுவரைக்கும் 40-க்கும் மேல படங்களை தயாரிச்சிருக்கேன். ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின்போதும் நடு ராத்திரி 12 மணிக்குக்கூட எனக்கு ஏதாவது ஒரு விஷயமா போன் வரும். ஆனால், இத்தனை வருஷ அனுபவத்துல.. இந்த ஒரு படத்தின் போதுதான் ஒரு போன்கூட எனக்கு வரலை. இத்தனை ஆர்ட்டிஸ்ட் படத்துல இருந்தும் ஒரு பிரச்சினையும் இல்லாம நீ பார்த்துக்கிட்ட.. உண்மையில் இது கிரேட் ஜாப். பாராட்டுக்கள்..” என்று சொல்லிவிட்டு எனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்.

இது நடந்த சில நாட்கள் கழித்து நான் ‘பரம்பரை’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொன்னார்கள். நானும் அவரைப் பார்க்கப் போனேன். அவரும் என்னை ‘முத்து’ படத்தில் பிரச்சினையில்லாமல் பார்த்துக் கொண்டதற்காக என்னைப் பெரிதும் பாராட்டிவிட்டு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கவுரவப்படுத்தினார்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.

]]>
செல்வராகவனுக்கு தடை போட்ட கஸ்தூரிராஜா! https://touringtalkies.co/kasthuri-raja-banned-selvaragavan/ Fri, 04 Nov 2022 15:50:25 +0000 https://touringtalkies.co/?p=26533 துள்ளுவதோ இளமை படத்தில் வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்த செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என்ற பெயர் பெற்றார்.  சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்றும் முத்திரை பதித்தார். ஆனால் இவர் திரையுலகத்துக்கு வருவதை அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா விரும்பவில்லையாம். இதை சமீபத்தில் வெளியான அவரது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “சிறு வயதில் இருந்தே செல்வராகவனுக்கு படிப்பது என்றால் மிகவும் […]

The post செல்வராகவனுக்கு தடை போட்ட கஸ்தூரிராஜா! appeared first on Touring Talkies.

]]>
துள்ளுவதோ இளமை படத்தில் வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்த செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என்ற பெயர் பெற்றார்.  சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்றும் முத்திரை பதித்தார்.

ஆனால் இவர் திரையுலகத்துக்கு வருவதை அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா விரும்பவில்லையாம். இதை சமீபத்தில் வெளியான அவரது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

“சிறு வயதில் இருந்தே செல்வராகவனுக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். குறிப்பாக சிறந்த ஆங்கில புத்தகங்களை எடுத்தால் வைக்காமல் படிப்பான். அதே போல உலக அளவில் புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களையும்  பார்ப்பான்.

 இப்படி பாடத்தைவிட்டு, விலகுகிறானே என வருத்தப்பட்டேன்.  அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைத்து, டெக்ஸ்டைல் பிஸினஸில் ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. தனுேஷ்தான் திரையுலகத்துக்கு வரவேண்டும் என நினைத்தேன்.

அதனால், இயக்குநர் கே.பாலசந்திரிடம், ‘திரைத்துறை வேண்டாம்  என செல்வராகவனுக்கு புத்திமதி சொல்லுங்கள்’ என்றேன். அவரும் செல்வராகவனை அழைத்து பேசினார்.

பேசிவிட்டு, ‘இவனிடம் ஏதோ விசயம்  இருக்கிறது. சினிமாவில் பெரிய ஆளாக வருவான். என்னிடமே இருக்கட்டும்’  என்றார்.  சரி, என அவரிடமே உதவியாளராக சேர்த்துவிட்டேன்.

பத்து நாள்தான் போனான்.  ஏன் என்று கேட்டதற்கு, ‘அவர் டிவி சீரியல் இயக்குகிறார்.. நமக்கு தேவையான மைலேஜ்  இல்லை’ என்றான்.

நான் அதிர்ந்துவிட்டேன். பாலசந்தர் எப்படிப்பட்ட இயக்குநர்! அவரையே இப்படிச் சொல்கிறானே என நினைத்தேன்!

 ஆனால் தான் நினைத்த இடத்தை செல்வராகவன் அடைந்துவிட்டான்  என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார் கஸ்தூரி ராஜா.

நினைத்ததை சாதித்துவிட்டார் செல்வராகவன்!

The post செல்வராகவனுக்கு தடை போட்ட கஸ்தூரிராஜா! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமா வரலாறு-65-சோ-வை இயக்குநராக்கிய கே.பாலசந்தர் https://touringtalkies.co/tamil-cinema-history-65-k-balachander-makes-cho-to-director/ Fri, 13 Aug 2021 14:09:28 +0000 https://touringtalkies.co/?p=17005 நாடக நடிகராக இருந்த சோ நாடக ஆசிரியராக மாறுவதற்கு முன்னால் அவரது குழுவிற்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் கூத்தபிரான் என்ற நாடக ஆசிரியர். ராமசாமி என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவருக்கு  ‘சோ’ என்ற   பெயரை சம்பாதித்துத் தந்த ‘தேன்மொழியாள்’ நாடகத்திற்குக்கூட வசனம் எழுதியவர் அவர்தான். சோவின் தம்பியான அம்பி என்ற ராஜகோபாலும் மற்ற நண்பர்களும் நடத்திக் கொண்டிருந்த ஒரு அமைப்பிற்கு தன்னுடைய தனி நாடகக் குழுவை வைத்து ஒரு நாடகம் நடத்தினார் கூத்தபிரான். கையில் […]

The post தமிழ்ச் சினிமா வரலாறு-65-சோ-வை இயக்குநராக்கிய கே.பாலசந்தர் appeared first on Touring Talkies.

]]>
நாடக நடிகராக இருந்த சோ நாடக ஆசிரியராக மாறுவதற்கு முன்னால் அவரது குழுவிற்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் கூத்தபிரான் என்ற நாடக ஆசிரியர். ராமசாமி என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவருக்கு  ‘சோ’ என்ற   பெயரை சம்பாதித்துத் தந்த ‘தேன்மொழியாள்’ நாடகத்திற்குக்கூட வசனம் எழுதியவர் அவர்தான்.

சோவின் தம்பியான அம்பி என்ற ராஜகோபாலும் மற்ற நண்பர்களும் நடத்திக் கொண்டிருந்த ஒரு அமைப்பிற்கு தன்னுடைய தனி நாடகக் குழுவை வைத்து ஒரு நாடகம் நடத்தினார் கூத்தபிரான். கையில் காசில்லாததால் அதற்கு பணம் தராமல் நாட்களைக் கடத்திக் கொண்டே இருந்தார் அம்பி. அந்தப் பணத்தை வசூலிக்க கூத்தபிரான் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அம்பி வீட்டில் இருக்க மாட்டார். சோதான் இருப்பார்.அதனால் அவரிடம் சத்தம் போட்டுவிட்டுப் போவார் கூத்தபிரான். இது பல நாட்கள் தொடர்ந்தது.

அதற்குப் பிறகும் அவருக்கு பணம் வராததால் “பிராடு பசங்களா! இனிமேல் எக்காலத்திலும்  உங்களுக்கு நாடகம் எழுதித் தர மாட்டேன்” என்று ஆத்திரம் தீர கத்திவிட்டு அவர்களிடமிருந்து பிரிந்து விட்டார் கூத்தபிரான்.

அவர்களது நாடகக் குழுவிற்கு கதை எழுதிக் கொண்டிருந்த அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டதால் அடுத்து நாடகம் போட கதை இல்லாமல் சோவும் மற்றவர்களும்  தவித்தனர். பெரிய நாடக ஆசிரியர்கள் யாரிடமும் போய் நாடகம் எழுதித் தர கேட்கின்ற அளவிற்கு அவர்கள் நிதி நிலைமை அப்போது இல்லை.

அந்த சந்தர்ப்பத்தில் தான் ஏற்கனவே எழுதியுள்ள  ஒரு நாடகத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னார் சோ.

“ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் சேர்ந்த அன்று அவர்களது நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு நாடகம் எழுதி ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் நீட்டினேன். ஒரு ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாடகத்தை அவர் சரியாகப் படித்துக் கூட  பார்க்கவில்லை. எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டார். அந்த நாடகத்தின் கதை இன்னும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் சரி என்று சொன்னால் நான் வேண்டுமானால் அந்தக் கதையை நாடகமாக எழுதித் தருகிறேன்” என்றார் சோ.

அப்போது வேறு வழி இல்லாத காரணத்தால் எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து “ஈப் ஐ கெட்  இட் “ என்ற ஆங்கிலப் பெயரில் அந்த நாடகத்தை அவர்களுக்காக எழுதினார் சோ. அதுதான் அவர் எழுதிய முதல் மேடை நாடகம்.

அந்த நாடகத்தில் சோவுடன் ஜெய்சங்கர் முக்கிய வேடத்தில் நடித்தார். ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்று பின்னாளில்  புகழப்பட்ட ஜெய்சங்கர் அப்போது திரைப்படங்களில் நடிக்க  ஆரம்பிக்கவில்லை. அவர்களுடன் சோவின் தம்பி அம்பி, நீலு, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோரும் அந்த நாடகத்தில் நடித்தனர். அந்த நாடகத்தில் நடித்ததற்குப் பிறகுதான் ‘காத்தாடி’ என்ற பெயர் ராமமூர்த்தியுடன் இணைந்து கொண்டது.

தான் எழுதிய முதல் நாடகம் அந்த அளவு வரவேற்பைப் பெரும் என்று சோ கனவிலும்  எதிர்பார்க்கவில்லை. ஒரு வருடத்தில் இருபத்தி ஐந்து முறைக்கும் மேலாக அந்த நாடகம் நடத்தப்பட்டது. அதெல்லாம் அப்போது மிகப் பெரிய சாதனை.

“தமிழ் நாடக உலகில் நகைச்சுவையில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்திய நாடகம்” என்று அந்த நாடகத்தைப் புகழ்ந்தார் நாடக உலக ஜாம்பவானான எஸ்.வி.சஹஸ்ரநாமம்.

“யார் வேஷதாரி?” என்ற பெயரில் சோ எழுதியிருந்த மற்றொரு நாடகத்தை கொஞ்சம் மாற்றி  எழுதி தனது ஏ.ஜி.எஸ். அலுவலகத்தின் விழா ஒன்றில் நடத்தினார் கே.பாலசந்தர். அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நாம் எழுதிய நாடகத்தை இப்படி எல்லாம்கூட மாற்ற முடியுமா என்று அசந்து போன சோ அடுத்துத் தான் எழுதிய “ஒய் நாட்?” என்ற நாடகத்தை இயக்கித் தரும்படி கே.பாலசந்தரை அழைத்தார்.  அன்று பாலசந்தருக்கு அவர் அளித்த அழைப்புதான் பின்னர் சோவையே இயக்குநராக்கியது.

சோ  எழுதிய ‘ஒய் நாட்’ என்ற நாடகம் உட்பட மூன்று நாடகங்களை அவர்களது குழுவிற்காக இயக்கிய பாலசந்தர் அந்த நாடகங்களை இயக்கியபோது பெற்ற அனுபவங்கள் அவரால் மறக்க முடியாதவைகளாக அமைந்தன.

அபிராமபுரம் மேல்நிலைப் பள்ளியில்தான் அந்த நாடகங்களின் ஒத்திகைகள் எப்போதும் நடைபெறும். ஐந்து மணிக்கு ஒத்திகை என்றால் நாலரை மணிக்கே அங்கே  போய்விடுவார் பாலசந்தர். ஆனால், அந்த நாடகத்தில் நடித்த சோவின் நண்பர்கள் எல்லோருமே ஆறு மணிக்கு மேல்தான் ஒருவர் பின்  ஒருவராக வருவார்கள். அவர்களில் பாதி பேர் வந்த பிறகு ஆறரை மணிக்கு மெல்ல வருவார் சோ.

நாடக ஒத்திகையில் இப்படி என்றால் நாடக மேடையிலும் பாலசந்தர் சொல்கின்ற இடங்களில் அவர்கள் யாருமே நிற்க மாட்டார்கள். பாலச்சந்தருக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்பதோ அவர் சொல்வதைக் கேட்கக் கூடாது என்பதோ அவர்கள் எண்ணமல்ல. இயல்பாக அந்தக் குழு அப்படியே இயங்கிக் கொண்டிருந்ததால் தங்கள் போக்கை உடனடியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை  என்பதுதான் உண்மை.

நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் யாரும் தான் எழுதிய வசனங்களைத் தாண்டி  ஒரு வார்த்தைகூட  பேசக் கூடாது என்று பாலசந்தர் நினைப்பார். ஆனால் சோவைப் பொறுத்தவரையில்  குறிப்பிட்ட  ஒரு காட்சியில் ஒரு ஜோக் அடிக்க வேண்டும் என்று அவருக்குத்  தோன்றிவிட்டால் அந்த ஜோக்கை சொல்லாமல் இருக்கவே மாட்டார் அவர்.

நாடக ஒத்திகையின்போது அது போன்ற ஜோக்குகள் எதுவும் வேண்டாம் என்று பாலசந்தர் கண்டிப்போடு சொல்லும்போது அவரிடம் சரியென்று ஒப்புக் கொண்டு விட்டு  பின்னர் நாடகம் நடக்கும்போது அந்த ஜோக்கை சொல்லி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சோ.

அப்படி அவர் அடிக்கின்ற ஜோக்குகளுக்கு  பலத்த கை தட்டல்கள் கிடைக்கும் என்றாலும் அந்தக் காட்சி எப்படிப்பட்ட  தாக்கத்தை ரசிகர்களிடம் உண்டு பண்ண வேண்டும் என்று பாலசந்தர் திட்டமிட்டிருந்தாரோ அதை அந்த ஜோக்குகள் பெரிதாக பாதித்துவிடும். ஆனால், சோவோ அவர்களது நண்பர்களோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள்.

நாடகம் நடக்கும்போது இப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் நடக்கக் கூடாது என்று அவர்களுக்கு பல முறை சொல்லிப் பார்த்த பாலசந்தர் ஒரு கட்டத்தில் கடும் கோபத்தோடு அவர்களை எச்சரித்தார். ஆனால் அதற்குப் பிறகும்  சோவிடமும்  அவரது  குழுவினரிடமும் எந்தவிதமான மாறுதலும்  இல்லை.

இனி அவர்களைத் திருத்தவே  முடியாது என்று  ஒரு கால கட்டத்தில் முடிவுக்கு வந்த பாலசந்தர் “இதற்கு மேலும் உங்கள் நாடகத்தை என்னால் இயக்க முடியாது” என்று அவர்களிடம் சொல்வதற்கு பதிலாக “என்னுடைய நாடக வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. அதனால் நீங்கள் வேறு இயக்குநரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம்  சொல்லிவிட்டு அவர்களைக்  காயப்படுத்தாமல்  அவர்களது நாடகங்களை இயக்கும் பணியிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

விவேகா பைன் ஆர்ட்சை பொறுத்தவரையில் யார் விலகினாலும் அவர்களது பொறுப்பையும் சேர்த்து கவனிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த சோ, பாலசந்தர் விலகியவுடன் நாடகங்களை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

பாலசந்தரைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு பர்பெக்க்ஷனிஸ்ட். காட்சிக்கான அரங்க அமைப்பு, ஒலி, ஒளி, பின்னணி இசை தவிர  நடிகர்கள் எங்கு நின்று வசனம் பேச வேண்டும். எந்த வசனத்தில் திரும்ப வேண்டும் என்பதில்கூட கவனம் செலுத்துவார் அவர். ஆனால் சோவைப் பொறுத்தவரையில் இவைகள் எதிலுமே அவர் கவனம் செலுத்த மாட்டார். அவரைப் பொறுத்தவரையில் ஏற்று நடிக்கின்ற  பாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிகர்கள் வசனம் பேசி விட்டால் போதும்.

பாலசந்தர் விவேகா பைன் ஆர்ட்சை விட்டு விலகிய பிறகு அவர்களது நாடகங்கள் அப்படித்தான் நடந்தன. ஆனாலும் அந்த நாடகங்களுக்கு அசாத்திய வரவேற்பு கிடைத்தன.

‘சம்பவாமி யுகே யுகே’ என்ற பெயரிலே அவர் எழுதி இயக்கிய நாடகம் சோவிற்கு  மிகப் பெரிய ஒரு பெயரைப் பெற்றுத் தந்த நாடகமாக அமைந்தது. ஆனால், அந்த நாடகத்தில் அவர் சந்தித்த பிரச்னைகள் கணக்கிலடங்காது.

(தொடரும்)

The post தமிழ்ச் சினிமா வரலாறு-65-சோ-வை இயக்குநராக்கிய கே.பாலசந்தர் appeared first on Touring Talkies.

]]>
“யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..?”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..! https://touringtalkies.co/who-is-the-vaathsyayanar-mouli-asked-to-kb/ Tue, 08 Dec 2020 04:33:56 +0000 https://touringtalkies.co/?p=10798 உலகத்துக்கே காமத்தின் கலையைக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் புத்தகம் ‘காமசூத்திரம்’. அந்தப் புத்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவர். “இவர் யார்..?” என்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர்தான் நாடக கதாசிரியரும், இயக்குநருமான மெளலி. ஆச்சரியம்தான்..! இது பற்றி மெளலி பேசும்போது, “கே.பாலசந்தர் ஸார் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தை உருவாக்கும்போது என்னை அழைத்து அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். அதுவொரு மலையாளத் திரைப்படம். அதை அடிப்படையாக வைத்து தான் புதிய படத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னார். […]

The post “யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..?”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..! appeared first on Touring Talkies.

]]>
உலகத்துக்கே காமத்தின் கலையைக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் புத்தகம் ‘காமசூத்திரம்’. அந்தப் புத்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவர். “இவர் யார்..?” என்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர்தான் நாடக கதாசிரியரும், இயக்குநருமான மெளலி. ஆச்சரியம்தான்..!

இது பற்றி மெளலி பேசும்போது, “கே.பாலசந்தர் ஸார் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தை உருவாக்கும்போது என்னை அழைத்து அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். அதுவொரு மலையாளத் திரைப்படம். அதை அடிப்படையாக வைத்து தான் புதிய படத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னார்.

“படம் முழுவதும் டிரையாக உள்ளது. அதனால் கொஞ்சம் காமெடி சேர்க்கணும். நீதான் அதை எழுதி நடிக்கணும்…” என்று என்னிடம் சொன்னார் கே.பி. நானும் இந்த சீரியஸ் கதையில் எப்படி காமெடியை சேர்ப்பது என்பது புரியாமல் தவித்தேன். இருந்தும் கே.பி. ஸாருக்காக தனியான காமெடி டிராக்கை உருவாக்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.

“அந்தக் குடியிருப்பில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர். இன்னும் கல்யாணமாகாத கட்டைப் பிரம்மச்சாரி. கொஞ்சம் சபல புத்தியுள்ளவர். ஆனால் யாரிடமும் அத்து மீற மாட்டார். பேசுவார். பார்ப்பார்.. அதிலும் ஏதாவது அழகான பெண்களின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டால் மெய் மறந்து நின்றுவிடுவார். அதற்குப் பின் அந்தப் பெண்களின் அழகை வர்ணிப்பார்..” இப்படி எனது கேரக்டரை நான் வடிமைத்திருந்தேன்.

இதை கே.பி. ஸாரிடம் சொன்னேன். சொன்னவுடன் “நல்லாயிருக்குய்யா..” என்றவர் “சரி. உன் பேரை வாத்யாயனார்ன்னு வைச்சுக்க…” என்றார். ‘வாய்லயே நுழைய முடியாத பெயரா இருக்கே,,?’ என்று சந்தேகத்துடன் “யார் ஸார் அந்த வாத்யாயனார்..?”ன்னு கே.பி.கிட்டேயே திருப்பிக் கேட்டேன். “யோவ்.. அவர்தான் ‘காமசூத்திரம்’ புத்தகம் எழுதினவர்”ன்னு சொல்லி சிரித்தார் கே.பி.

நான் சத்தியமாக அதுவரையிலும் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை.. கே.பி. சொல்லித்தான் அதைத் தெரிந்து கொண்டேன்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மெளலி.

The post “யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..?”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..! appeared first on Touring Talkies.

]]>