Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கியூப் டிஜிட்டல் கம்பெனி – Touring Talkies https://touringtalkies.co Tue, 10 Nov 2020 06:43:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கியூப் டிஜிட்டல் கம்பெனி – Touring Talkies https://touringtalkies.co 32 32 VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? https://touringtalkies.co/vpf-charges-crisis-meeting-news/ Tue, 10 Nov 2020 06:38:05 +0000 https://touringtalkies.co/?p=9885 கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான். “சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” […]

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான்.

“சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள்.

ஆனால், “இது திரையீட்டுக்கான கட்டணம்தானே ஒழிய.. புரொஜெக்டருக்கான கட்டணம் இல்லை…” என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம்.

இந்த முடிவுறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது “வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கிடையாது. ஆனால், இங்கே மட்டும் கியூப்புக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதிலளித்த தியேட்டர்காரர்கள், “அப்போ ஹாலிவுட் படங்களுக்குத் தருவதுபோல நாம் பங்கு பிரித்துக் கொள்ளும் பெர்சேண்ட்டேஜை வைத்துக் கொள்வோமா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது தற்போதைய கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதாக இறங்கி வந்தது. இதையும் தியேட்டர்காரர்கள் 60 சதவிகிதமாக்கச் சொல்ல அதையும் கியூப் ஏற்றுக் கொண்டது. “இதுவும் டிசம்பர் 31-ம் தேதிவரையிலுமே…” என்று சொன்னார்கள் கியூப் நிறுவனத்தார்.

ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து “அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையிலும் வேண்டும்…” என்றார்கள். இதனை தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனத்தினரும் ஏற்றுக் கொண்டாலும் தயாரிப்பாளர்கள் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.

“அந்த மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் இந்தக் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம். இதை ஒரு நிபந்தனையாக வைக்கிறோம்…” என்றார்கள். ஆனால், இதனை கியூப் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பேச்சுவார்த்தையின் இன்னொரு கட்டத்தில், “தியேட்டர் உரிமையாளர்களே வி.பி.எஃப். கட்டணத்தை கட்டிக் கொள்ளட்டும். படத்தைத் திரையீட்டு முடிந்த பிறகு தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஷேர் தொகையில் அந்தப் பணத்தை அவர்கள் கழித்துக் கொள்ளட்டும்…” என்று தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

“அப்படியென்றால் எந்தவொரு பெரிய படத்திற்கும் தியேட்டர்காரர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் முன் பணம் பெறக் கூடாது.. இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டால் நாங்கள் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டத் தயார்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காததால் இந்த வாதமும் தோல்வியாகிவிட்டது.

கடைசியாக இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முறிந்து போனது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களது சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் நமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்க உறுப்பினர்களின் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது..!

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று காலை கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி.எஃப். கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் சலுகை இந்த நவம்பர் மாதம்வரையிலும்தான் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றே இந்த அரசு விரும்புகிறது. வி.பி.எஃப். பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் இருந்தால் நிச்சயமாக சமாதானப் பேச்சுவார்த்தையை அரசு முன்னின்று நடத்தும்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இனிமேல் கோட்டையில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில்தான் இந்த வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? https://touringtalkies.co/new-tamil-movies-will-release-on-coming-deepavali-day/ Wed, 04 Nov 2020 11:14:42 +0000 https://touringtalkies.co/?p=9690 ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். “தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட […]

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

“தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும்’ “வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்களும் கட்ட மாட்டார்கள்…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

கியூப் நிறுவனமோ தற்போது தாங்கள் வாங்கி வரும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும், இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதிவரைக்கும்தான் செல்லுமாம். இந்த அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் தியேட்டர்களை திறப்பது என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து, இன்று அல்லது நாளை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தாலும், பேசுவதற்குத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“திரையீட்டுக் கட்டணம் என்பது கியூப் நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. இதில் நாங்கள் பேசி என்ன ஆகப் போகுது.. எங்களிடம் எதற்காக வர வேண்டும்..?” என்று துவக்கத்திலேயே கதவைச் சாத்திவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போதைய நிலையில் இந்தத் தீபாவளிக்கு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற திரைப்படம், இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம், ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம், ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் ஆகிய 4 படங்கள் மட்டுமே இப்போதைக்கு கியூவில் நிற்கின்றன.

ஆனால், இவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் தங்களுடைய படத்தை வெளியிட மாட்டார்கள் என்பது உறுதி. இதனால் இந்தப் பிரச்சினையை எப்படி பேசித் தீர்ப்பது என்பது பற்றி தங்களுடைய உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்றால் அந்த நாளைக்கு 15 நாட்களுக்கு முன்பேயே அதன் விளம்பர வேலைகள் துவங்கிவிடும். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். தொடர்ந்து டிவி, ரேடியோ, பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் விளம்பரங்களும் வெளிவந்துவிடும்.

ஆனால், வரும் நவம்பர் 12-ம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இருக்கும் இந்த 4 படங்களுமே இப்போதுவரையிலும் எந்தவொரு ஸ்டெப்பையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தக் கடினமான சூழ்நிலையில் வரும் தீபாவளியன்று புதிய படங்களை ரசிகர்கள் பார்ப்பது.. தியேட்டர்காரர்கள் மற்றும் கியூப் நிறுவனத்தின் கைகளில்தான் உள்ளது.

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
“VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! https://touringtalkies.co/tfapa-president-bharathiraja-release-statement-about-vpf-fees/ Mon, 02 Nov 2020 10:27:16 +0000 https://touringtalkies.co/?p=9601 வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் […]

The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

7 மாதங்களுக்குப் பின்னர் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதால் புத்தம், புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் என்று திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் அப்படியொன்று நடந்துவிடாது என்பதற்கான அறிகுறிகள்தான் தமிழ்ச் சினிமாவில் தென்படுகிறது.

தமிழ்ச் சினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்னர் தற்போது படமெடுத்து வரும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி உருவாக்கிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட ஒளிபரப்புக் கட்டணத்தில் முட்டுக்கட்டை போடுவதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வருமா என்பது தெரியாத குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வி.பி.எஃப். கட்டணம் குறித்து இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்ட வேண்டிய கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனத்திற்கு செலுத்த முடியும்.

வாராவாரம் கட்டும் திரையிட்டூக் கட்டணத்தை இனியும் நாங்கள் செலுத்த மாட்டோம்.

இதை பற்றி நாங்கள் ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கும், டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிக்கும் தெரிவித்தும் அவர்கள் இதற்கு இப்போதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளியிடப்பட மாட்டாது…” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தரும் வி.பி.எஃப். கட்டணத்தை விநியோகஸ்தர்களும் கட்ட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் அங்கே இது பற்றி இப்போதைக்கு முடிவெடு்க்க முடியாது.

ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் திரையிடப்பட மாட்டாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது தியேட்டர்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களது தரப்பில் விசாரித்தபோது அவர்கள் விரைவில் தங்களது சங்கத்தினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறியிருக்கின்றனர்.

The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“கியூப் கட்டணத்திற்கும், எங்களுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை…” – தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம்..! https://touringtalkies.co/producer-t-siva-explains-about-qube-companys-latest-reduced-fees-announcement/ Sat, 17 Oct 2020 14:03:05 +0000 https://touringtalkies.co/?p=8951 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது என்பது, வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைக்கு தமிழக முதல்வரை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்திக்க இருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியாகவே தெரிகிறது. இந்த நேரத்தில் தியேட்டர்களை உடனடியாகத் திறந்தாலும் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்னும் கொள்கை முடிவில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் […]

The post “கியூப் கட்டணத்திற்கும், எங்களுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை…” – தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம்..! appeared first on Touring Talkies.

]]>

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது என்பது, வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றைக்கு தமிழக முதல்வரை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்திக்க இருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியாகவே தெரிகிறது.

இந்த நேரத்தில் தியேட்டர்களை உடனடியாகத் திறந்தாலும் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்னும் கொள்கை முடிவில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாகவே இருக்கிறது.

“கியூப்பின் கட்டணத்தை நாங்கள் கட்ட மாட்டோம்..”, “தியேட்டரில் வெளியிடப்படும் டிரெயிலருக்கான அனுமதிக் கட்டணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்” போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது கட்டணத் தொகையை பாதியாக குறைத்திருக்கிறது. அதிலும் வரும் டிசம்பர்வரையிலும்தான் இந்தச் சலுகை கடைப்பிடிக்கப்படும் என்றும் சொல்லியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்களில் தற்போது திரையிடல் கட்டணமாக ஒரு காட்சிக்கு 250 ரூபாயை கியூப் நிறுவனம் வசூலித்து வருகிறது. இந்தத் தொகை இனிமேல் 125 ரூபாயாக இருக்கப் போகிறது. வாரத்திற்கு என்று பார்த்தால் ஒரு தியேட்டருக்கு 3,500 ரூபாயாக இருக்கும்.

இதன்படி ஒரு திரைப்படம் தமிழகம் முழுவதிலும் சுமாராக 100 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டால், அதன் ஒரு வாரத்திற்கான திரையிடல் கட்டணமே 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

“இந்தக் கட்டணக் குறைப்பு போதுமானதுதானா..?” என்பது குறித்து தமிழ்த் திரையுலக நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான அம்மா கிரியேஷன் டி.சிவாவிடம் கருத்து கேட்டபோது, “இதில் எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம். இனிமேல் நாங்கள் ஒரு பைசாகூட திரையிடல் கட்டணமாக கட்ட மாட்டோம். இந்தக் கட்டணக் குறைப்பு என்பது கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினை. இதில் நாங்கள் என்ன கருத்து சொல்ல முடியும்..?

தியேட்டர்களை தற்போதைக்கு திறக்க அரசு உத்தரவிட்டாலும் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்ததுபோல எங்களது கோரிக்கைகள் நிறைவேறினால்தான், எங்களது சங்க உறுப்பினர்கள் தங்களது படங்களை வெளியிடுவார்கள். இல்லையெனில் வெளியாகாது.

தமிழக அரசு இது குறித்து எங்களை அழைத்துப் பேசினாலோ அல்லது முத்தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தாலோ நிச்சயமாக நாங்கள் அதில் கலந்து கொள்வோம். ஆனால், கியூப் கட்டணம் என்பது இனிமேல் எங்களிடமிருந்து அந்த நிறுவனத்திற்குக் கிடைக்காது. இதுதான் எங்களது இறுதியான பதில்..” என்றார் உறுதியான குரலில்..!

The post “கியூப் கட்டணத்திற்கும், எங்களுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை…” – தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம்..! appeared first on Touring Talkies.

]]>