Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
எஸ்.ஏ.சந்திரசேகர் – Touring Talkies https://touringtalkies.co Wed, 16 Nov 2022 17:52:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png எஸ்.ஏ.சந்திரசேகர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் https://touringtalkies.co/now-its-only-vijay-who-asks-the-story-father-s-a-c-s-regret/ Wed, 16 Nov 2022 17:51:30 +0000 https://touringtalkies.co/?p=27165 “இப்போதெல்லாம் விஜய் தான் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வதால் வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.” என்று நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நானும் விஜய்யும் ஒண்ணா உக்காந்து கதை கேட்ட காலமெல்லாம் மாறிருச்சு. இப்போவெல்லாம் அவரே கதை கேட்கிறார். அவரே தீர்மானிக்கிறார். அவரே முடிவெடுக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் தொடங்கி எல்லாத்தையும் […]

The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“இப்போதெல்லாம் விஜய் தான் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வதால் வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.” என்று நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நானும் விஜய்யும் ஒண்ணா உக்காந்து கதை கேட்ட காலமெல்லாம் மாறிருச்சு. இப்போவெல்லாம் அவரே கதை கேட்கிறார். அவரே தீர்மானிக்கிறார். அவரே முடிவெடுக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் தொடங்கி எல்லாத்தையும் அவரே முடிவு செய்றார். அதுல நான் தலையிடப் போறதில்லை.

அதனால இப்போவரைக்கும் எனக்கு வாரிசு படத்தோட கதை என்னன்னு தெரியாது. என்னதான் நம்ம குழந்தைகளா இருந்தாலும் அந்தந்த வயசு வரும்போது அவங்களுக்கான சுதந்திரத்தை நாம கொடுத்திரணும். இல்லைன்னா அதுவே வம்பாகியிரும்..” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் https://touringtalkies.co/those-scared-minutes-s-a-chandrasekhar/ Thu, 10 Nov 2022 04:29:54 +0000 https://touringtalkies.co/?p=26894 ஒரு காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் ரீதியான படங்களை இயக்கி வந்தார். அவை வசூலில் வெற்றி பெற்றதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர்,  அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி. எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு. குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார்.  […]

The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் ரீதியான படங்களை இயக்கி வந்தார். அவை வசூலில் வெற்றி பெற்றதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தின.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர்,  அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு.

குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார்.  ஆனால் எம்.ஜி.ஆர். காக்கவைத்துவிட்டார்.

நேரம் ஆக நேரம் ஆக சந்திரசேகருக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அழைக்க.. அறையினுள் எஸ்.ஏ.சி. சென்றார்.

நீதிக்கு தண்டனை படம் குறித்து எதுவுமே கேட்காத எம்.ஜி.ஆர், “என்னுடைய எம்ஜிஆர் பிக்சர்ஸ் மூலம் நிறைய படங்களை தயாரித்து இருக்கிறேன்.  ஆனால் இப்பொழுது எந்த படமும் எடுக்கவில்லை. நீங்கள் வருடத்திற்கு இரண்டு  படங்கள் இயக்க முடியுமா” என்று கேட்டிருக்கிறார். எஸ்.ஏ.சி.க்கு. ஆச்சரியம்.

இது குறித்து பழைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சி.

அப்போது, “எம்.ஜி.ஆரை நினைத்து வியந்தேன். அவரை விமர்சித்து படம் எடுத்திருக்கோம். ஏதோ மிரட்டுவார் என எண்ணி வந்த எனககு ஆச்சரியம். எம்ஜிஆர் எப்பொழுது திறமையானவர்களை மிகவும் மதிக்க கூடியவர்” என்று பிரமிப்பாக தெரிவித்தார் எஸ்.ஏ.சி.

The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! https://touringtalkies.co/k-bhagyaraju-and-s-a-chandrasekhar-are-contesting-for-the-post-of-president-of-the-writers-association/ Fri, 26 Aug 2022 15:25:12 +0000 https://touringtalkies.co/?p=24019 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். சங்கத்தின் தேர்தலை நடத்தித் […]

The post எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

சங்கத்தின் தேர்தலை நடத்தித் தருவதற்காக ச.செந்தில்நாதன் என்னும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள்(2 நபர்கள்), இணைச் செயலாளர்கள்(4 நபர்கள்), செயற்குழு உறுப்பினர்கள் 12 நபர்கள் என்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரையிலும் வழங்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது.

இதன் முடிவில் தற்போது தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார், யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு பால சேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிடுகின்றனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிடுகின்றனர்.

12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், பாபு கணேஷ், ஏகாம்பவாணன், ஹேமமாலினி, வீ.ஜெயப்பிரகாஷ், யுரேகா, பொன்ராமன், பேரரசு, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், ஏ.எல்.ராஜா, கே.ராஜேஸ்வர், ராதாரவி, சாய்ரமணி, சினேகன், ஷரவணன் சுப்பையா, சரண், எம்.சி.சேகர், பி.சாந்தகுமார், த.சிங்கபுலி அண்ணாவி, ஏ.வெங்கடேஷ், பா.விஜய், ந.வேல்முருகன், விவேகா ஆகிய 25 பேர் போட்டியிடுகின்றனர்.

சங்கத் தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

வாக்குப் பதிவுகள் முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>
எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு..! https://touringtalkies.co/order-to-confiscate-sa-chandrasekhars-house/ Mon, 01 Aug 2022 18:02:05 +0000 https://touringtalkies.co/?p=23548 தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். .அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், ஒரு வழக்கில் அவருடைய வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் […]

The post எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். .அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், ஒரு வழக்கில் அவருடைய வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் சட்டப்படி குற்றம்’. இந்தப் படத்திற்கு செய்த விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் S.A.சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்படி குற்றம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் தான் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தப்படி செய்த வேலைக்கான கட்டணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கவில்லை. அந்தப் பணத்தை வசூலித்து தர வேண்டும்…” என அந்த மனுவில் சரவணன் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டது. ஆனாலும் அந்தப் பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருக்கும் ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்யவிடவில்லையாம். “இதனால் ஜப்தி நடவடிக்கையின்போது தங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்..” என்று கோரி மீண்டும் சரவணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு..! appeared first on Touring Talkies.

]]>
‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் உருவான கதை https://touringtalkies.co/sacs-sattam-oru-iruttarai-movie-creation-story/ Thu, 16 Dec 2021 17:25:42 +0000 https://touringtalkies.co/?p=19874 இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ம் ஆண்டில் இயக்கிய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்தப் படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி நடித்திருந்தனர். இந்தப் படமே விஜயகாந்துக்கு ஒரு மிகப் பெரிய ஓப்பனிங்கை தமிழ்த் திரையுலகத்தில் பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தின் கதை உருவானவிதம் பற்றி இந்தப் படத்தின் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்றைக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி., பேசுகையில், “1980களிலேயே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றொரு படம் எடுத்தேன். […]

The post ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் உருவான கதை appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ம் ஆண்டில் இயக்கிய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்தப் படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி நடித்திருந்தனர். இந்தப் படமே விஜயகாந்துக்கு ஒரு மிகப் பெரிய ஓப்பனிங்கை தமிழ்த் திரையுலகத்தில் பெற்றுக் கொடுத்தது.

இந்தப் படத்தின் கதை உருவானவிதம் பற்றி இந்தப் படத்தின் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்றைக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி., பேசுகையில், “1980களிலேயே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றொரு படம் எடுத்தேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான்.

உதவி இயக்குநராக இருந்தபோது என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளில் வள்ளுவர் கோட்டம் வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது சிக்னல் கிடையாது. போக்குவரத்துக் காவலர் ஒருவர் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். நான் வரும்போது ஸ்டாப் என்று எழுதப்பட்டிருந்த போர்டைக் காட்டி வாகனங்களை நிறுத்தத் சொன்னார். நான் அதைக் கவனிக்காமல் சென்று அந்த போர்டை இடித்து வண்டியை நிறுத்தினேன்.

உடனே அவர் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டி, ‘நான் நிறுத்த சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பாட்டுக்குப் போய்கிட்டே இருக்க…’ என்றார். ‘தெரியாமல் வந்துவிட்டேன் சார்’ என்று நான் கூறியும் தொடர்ந்து என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் என்னை திட்டிக் கொண்டிருக்கையில், ஒரு கார் எங்களை வேகமாக கடந்து சென்றது. நான் உடனே, ‘என்னைப் பிடிச்சீங்களே… அந்தக் கார்காரனை ஏன் பிடிக்கவில்லை..?’ என்றேன். அதற்கு அவர், ‘அவன் பின்னால் என்ன ஓடச் சொல்றியாடா..?’ என்றார். ‘கார் வைத்திருந்தால் அவனுக்கு சட்டம் வளையும். என்ன மாதிரி ஏழை பசங்க சைக்கிள்ல வந்தா பிடிச்சுக்குவிங்க… அப்படித்தான’ என்று நான் சொல்ல உடனேயே என்னை ஓங்கி அடித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார்.

The post ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் உருவான கதை appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் https://touringtalkies.co/actor-vijay-files-case-against-his-mother-and-father-in-city-civil-court/ Sun, 19 Sep 2021 06:36:22 +0000 https://touringtalkies.co/?p=18106 நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதே தனது பெயரை எந்தக் காலத்திலும் புதிதாகத் தொடங்கியிருக்கும் கட்சி மற்றும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது […]

The post நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போதே தனது பெயரை எந்தக் காலத்திலும் புதிதாகத் தொடங்கியிருக்கும் கட்சி மற்றும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தன்னுடைய ஒப்புதலின்றி,  ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கு தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, அந்தக் கட்சியில் பணியாற்றவோ வேண்டாம் என்று தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்தக் கட்சியை வாபஸ் பெறும் முயற்சியில் எஸ்.ஏ.சி. இறங்கவில்லை. மாறாக புதிதாக உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் ரகசியமாக நியமித்து வந்து கொண்டிருந்தார். இதையறிந்த நடிகர் விஜய் தனது தந்தை மீதும், அந்தக் கட்சியில் செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் கொடுத்த விண்ணப்பத்தில் சொல்லப்பட்டிருந்த தனது தாயார் ஷோபா மீதும் 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில் தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும், அமைப்பிலும் தன் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சிவில் வழக்கில் தனது தந்தை, தாயார் மற்றும்அவரது அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்.

இந்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

The post நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் appeared first on Touring Talkies.

]]>
“என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி https://touringtalkies.co/why-should-write-about-my-own-problems-director-sa-chandrasekhar-asked-the-media/ Thu, 16 Sep 2021 17:29:45 +0000 https://touringtalkies.co/?p=18036 “எல்லார் வீட்டிலும் இருப்பது போல தன் வீட்டிலும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையெல்லாம் ஏன் மீடியாக்கள் எழுதுகின்றன..?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது. “ஒவ்வொரு இயக்குநரும் சமூக நோக்கத்தோடு இருக்க வேண்டும். உண்மையை பயப்படமால் உரக்கச் சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி எப்போதும் ஆந்திராவில் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். […]

The post “என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
“எல்லார் வீட்டிலும் இருப்பது போல தன் வீட்டிலும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையெல்லாம் ஏன் மீடியாக்கள் எழுதுகின்றன..?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது. “ஒவ்வொரு இயக்குநரும் சமூக நோக்கத்தோடு இருக்க வேண்டும். உண்மையை பயப்படமால் உரக்கச் சொல்ல வேண்டும்.

சமுத்திரக்கனி எப்போதும் ஆந்திராவில் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு படத்தில் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக சமுத்திரக்கனி தமிழ் படங்களை மறந்துவிடக் கூடாது.

நடிகை இனியாவிற்கு ஒரு படி மேலே ஷாக்சி அகர்வால். துப்பாக்கி’ நான் ஆரம்பித்த படம். தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் அதை தொடர முடியவில்லை. தாணு தயாரித்தார். விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே.

விஜய்யை முதலில் சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனால் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்கும்விதத்தில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களிலேயே விஜய்யை நடிக்க வைத்தேன்.

ஊடகங்களும் உண்மையை சொல்ல வேண்டும். நடக்குற தவறுகளை உரக்க சொல்ல வேண்டும். விஜய் என்ற பெயர் என் மகனுக்கு எப்படி வந்தது என்று நான் சொன்னதை இப்போது திரித்து சொல்லியிருக்கிறார்கள். விஜய்க்கு நாகி ரெட்டி பெயர் வைத்தார் என்று ஒரு வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய். விஜய்க்கு வெற்றி என்ற பெயர் இருப்பதால் நான்தான் அந்தப் பெயரை வைத்தேன். இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை மீடியாக்கள் எழுதுவது ஏன்..?

எழுதுவதற்கு இங்கே நிறையவே இருக்கிறது. தேதிகளைக் கொடுத்துவிட்டு நடிக்க வராத நடிகர்களைப் பற்றி எழுதுங்கள்.. சம்பளம் கொடுக்காத தயாரிப்பாளர்களைப் பற்றி எழுதுங்கள். இதைப் பத்தி ஏன் எழுதணும்.. அடுத்தவர்களின் சொந்த விவகாரங்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்..?

எனக்கும் என் மகன் விஜய்க்கும் இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அது எங்களின் குடும்ப கதை. குடும்பம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அப்பா மகன் இடையே பிரச்சினை இருக்கும். இன்று சண்டையிட்டுக் கொள்வார்கள். அடுத்து கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதேதான் எல்லார் வீட்டிலேயும்.. இதை ஏன் மற்றவர்கள் பேச வேண்டும்?…” என்று கேள்வியெழுப்பினார்.

The post “என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு..! https://touringtalkies.co/vijay-meets-his-fans-association-office-bearers/ Sat, 24 Oct 2020 05:48:25 +0000 https://touringtalkies.co/?p=9182 நடிகர் விஜய் திடீரென்று நேற்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருப்பது திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தளபதி என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்.. வருகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நேரடி அரசியல் வருகை பற்றி விஜய் இதுவரையிலும் எதுவும் பேசியதில்லை. அதோடு தனது ரசிகர் மன்றத்தின் பெயரையும் விஜய் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றி, மக்களுக்கான உதவிகளை பல நேரங்களில் செய்ய வைத்திருக்கிறார் விஜய். தன்னுடைய திரைப்படங்களின் […]

The post தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் திடீரென்று நேற்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருப்பது திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தளபதி என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்.. வருகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நேரடி அரசியல் வருகை பற்றி விஜய் இதுவரையிலும் எதுவும் பேசியதில்லை.

அதோடு தனது ரசிகர் மன்றத்தின் பெயரையும் விஜய் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றி, மக்களுக்கான உதவிகளை பல நேரங்களில் செய்ய வைத்திருக்கிறார் விஜய்.

தன்னுடைய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டுமே அரசியல் தொடர்பான கருத்துக்களை பட்டும், படாமல் சொல்லிவிட்டு தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுப் போவது அவரது வழக்கம்.

ஆனால், அவரது தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் “விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான சூழல் அமையும்போது அவர் நிச்சயமாக வருவார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட இதைத்தான் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையில் நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

மதுரை, திருச்சி, குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பற்றிய புகைப்படங்களை அந்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டபோதுதான் இந்தச் சந்திப்பு பற்றிய விவரமே தெரிய வந்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் 2 நாட்களுக்கு முன்பாகத்தான் “விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புண்டு…” என்று சொல்லியிருந்த சூழலில் இந்தச் சந்திப்பு நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பக்கம் ரஜினி அரசியல் கட்சியைத் துவக்குகிறார்.. வரும் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் வரும்வேளையில் விஜய் முந்திக் கொண்டு வந்துவிடுவாரா.. அல்லது ரஜினி பாணியில் ‘நானும் வருவேன்’ என்று சொல்லியே நாட்களைக் கடத்துவாரா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

The post தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு..! appeared first on Touring Talkies.

]]>