Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
cinema history – Touring Talkies https://touringtalkies.co Sat, 24 Jun 2023 07:59:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png cinema history – Touring Talkies https://touringtalkies.co 32 32 நட்புக்காக தேங்காய் சீனிவாசன் செய்த காரியம்! https://touringtalkies.co/what-thengai-srinivasan-did-for-friendship/ Sat, 24 Jun 2023 07:59:57 +0000 https://touringtalkies.co/?p=33734 கைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் நட்பைப் போற்றுபவர். இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்த சம்பவம் இது.. “ஒரு முறை படப்பிடிப்புக்காக தேங்காய் சீனிவாசன் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது பத்திரிகையாளராகவும், பி.ஆர்.ஓ.ஆகவும் இருந்த என்னையும் அழைத்துச் சென்றார்.   ஒருமுறை அவர் சிங்கப்பூர் சென்று வந்த போது, எனக்காக வாட்ச் ஒன்றை வாங்கி வந்து […]

The post நட்புக்காக தேங்காய் சீனிவாசன் செய்த காரியம்! appeared first on Touring Talkies.

]]>
கைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன்.

இவர் நட்பைப் போற்றுபவர். இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்த சம்பவம் இது..

“ஒரு முறை படப்பிடிப்புக்காக தேங்காய் சீனிவாசன் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது பத்திரிகையாளராகவும், பி.ஆர்.ஓ.ஆகவும் இருந்த என்னையும் அழைத்துச் சென்றார்.

 

ஒருமுறை அவர் சிங்கப்பூர் சென்று வந்த போது, எனக்காக வாட்ச் ஒன்றை வாங்கி வந்து அன்பளித்தார். நான் வாழ்க்கையில் கட்டிய முதல் வாட்ச் அதுதான்” என்று நெகிழ்வுடன் சொன்னார் சித்ரா லட்சுமணன்.

தேங்காய் சீனிவாசனின் நட்பை உணர்த்தும் இன்னொரு சம்பவம்..

அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.   மிகவும் கவலையடைந்த தேங்காய் சீனிவாசன் வென்னிற ஆடை மூர்த்திக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு,  திருப்பதிக்கு நடந்தே சென்று வந்தார்.

இதை, டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சி ஒன்றில் வெண்ணிற ஆடை மூர்ததி சொல்லி, கண் கலங்கினார்.

நட்பில் ஹீரோதான் தேங்காய் சீனிவாசன்.

The post நட்புக்காக தேங்காய் சீனிவாசன் செய்த காரியம்! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் https://touringtalkies.co/cinema-history-81-rajinikanths-first-punch-dialogue/ Wed, 28 Sep 2022 05:51:17 +0000 https://touringtalkies.co/?p=24704 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர். ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு […]

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர்.

ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதை  வழக்கமாக்கிக் கொண்டார் ரஜினி. அவரோடு பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தைத் தொடப் போகும் நடிகர் என்று பஞ்சு அருணாசலத்துக்குப் புரிந்துவிட்டது.

தொடர்ந்து தனது படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அந்த முதல் சந்திப்பின்போதே  பஞ்சுஅருணாசலம் எடுத்துவிட்டார்.

கவிக் குயில்’ படத்தைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ பாஸ்கருடன் இணைந்து ‘விஜய மீனா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அந்த நிறுவனத்தின் சார்பில் காயத்ரி’ என்ற படத்தை தயாரித்தார்.

‘காயத்ரி’ சுஜாதா எழுதிய கதை. ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளி வந்திருந்தது. அந்தக் கதையைப் படித்த பஞ்சு அருணாசலத்துக்கு அதைப் படமாக எடுத்தால் நிச்சயம் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என்று தோன்றியதால் உடனடியாக எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

“சாவி சார் கேட்டார் என்பதற்காக நான் அவசரத்தில் எழுதிக் கொடுத்த கதை அது. “தினமணி கதிரில்” அந்தக் கதை வந்தபோதே ‘நீங்கள் இப்படி எழுதலாமா?’ என்று எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள் வந்தன. பத்திரிகையில் வெளியானதற்கே அவ்வளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட அந்தக் கதையை நீங்கள் எப்படிப் படமாக எடுப்பீர்கள்?’ என்று சுஜாதா கேட்டபோது, “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை மட்டும் கொடுங்கள்..” என்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தக் காலக்கட்டத்தில் பஞ்சு அருணாசலத்துடன் தொடர்ந்து பணியாற்றியது இரண்டு இயக்குநர்கள்தான். ஒருவர் எஸ்.பி.முத்துராமன், இன்னொருவர் தேவராஜ் மோகன்.

எஸ்.பி.முத்துராமன் அப்போது பஞ்சு அருணாசலம் எழுதிக் கொண்டிருந்த வேறு இரண்டு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவராஜ் மோகன் தனது சொந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆகவே இந்த ‘காயத்ரி’ படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பட்டு என்கிற பட்டாபிராமனுக்கு அளித்தார் பஞ்சு அருணாசலம். சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படம்  முதல் கிருஷ்ணன் பஞ்சுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பட்டு.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும்  நடிக்க 1977-ம் ஆண்டு வெளிவந்த காயத்ரி’ வெற்றிப் படமாகவும் அமைந்தது.

சுஜாதா எழுதியிருந்த அந்தக் கதையில் தான் செய்திருந்த மாறுதல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை சுஜாதாவிற்குக் காட்டி அவரைஅசத்துவதற்காக ‘காயத்ரி’ படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு. ஆனால் அன்று தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து சுஜாதா அசந்ததைவிட அதிகமாக அசந்து போனவர் பஞ்சு அருணாசலம்தான்.

‘காயத்ரி’ படத்தின் வில்லனான ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தபோது ரசிகர்கள் ஆவேசமாக ஜெய்சங்கரைத் திட்டினார்கள். அதே நேரத்தில் ஹீரோ ஜெய்சங்கரை வில்லன் ரஜினி அடித்தபோது, தியேட்டரில் விசில் பறந்தது.

இனி ரஜினிகாந்த் வில்லனல்ல என்பதையும், தொடர்ந்து அவரை வில்லனாக நடிக்க வைத்துப் படம் எடுத்தால் அது மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் பஞ்சு அருணாசலத்திற்கு இந்த ‘காயத்ரி’ படம் தெளிவாக உணர்த்தியது.

‘காயத்ரி’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் பெற்ற அந்த அனுபவம்தான் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் ஒரு முக்கியமான மாறுதலை அவர் செய்யக் காரணமாக அமைந்தது.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் தயாரிப்பாளரான  எம்.ஏ.எம்.மணியும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம்.ஸ்டுடியோவில் மணி புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றியபோது எஸ்.பி.முத்துராமன், அங்கே எடிட்டிங் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய இயக்குராக உயர்ந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் மணி.

அப்போது மகரிஷி எழுதிய ‘பத்ரகாளி’ கதை திருலோகசந்தர் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. ஆகவே அவர் எழுதி ‘குமுதம்’ இதழில் வெளியான ‘புவனா ஒரு கேள்விக் குறி’ கதையின் உரிமையை வாங்கிய மணி, அந்தக் கதையின் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கு சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் பஞ்சு அருணாசலத்தை சந்திக்க வந்தார்.

மகரிஷி எழுதிய நாவலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்ட பஞ்சு அருணாசலம் உடனே அதைப் படித்து முடித்தார். அந்த நாவல் அவருக்கும் பிடித்திருந்தது.

அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்தபோது வாழ்க்கையைப் பறி கொடுத்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகுமாரும், கதாநாயகியைக் கெடுத்துவிட்டு அவளைவிட்டு விலகும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் அந்தப் படம் வழக்கமான ஒரு படமாக ஆகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாக பஞ்சு அருணாசலத்துக்குத் தோன்றியது.

தன்னுடைய கருத்தை தயாரிப்பாளரான மணியிடமும், இயக்குநரான எஸ்.பி.முத்துராமனிடமும் சொன்னார் அவர். அவரது அந்தப் பயம் நியாயமானது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாலும்  அந்த நல்லவன் வேடம்தான் சிவகுமாருக்கு என்று ஒப்பந்தம் செய்யும்போதே, சிவகுமாரிடம் சொல்லிவிட்டதால் மீண்டும் அவரிடம் போய் எப்படி மாற்றி சொல்வது என்று அவர்கள் இருவரும் சங்கடப்பட்டார்கள்.

“நெகடிவ்வான பாத்திரத்தை ஏற்று நடித்தால் அவருக்கும் அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில் படம் வெற்றி பெறவும் அது உதவியாக இருக்கும் என்பதை சிவகுமாருக்கு சொல்வோம். அதற்குப் பிறகும் ‘எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. நான் அந்த நல்லவன் பாத்திரத்திலேயே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்கட்டும்” என்றார் பஞ்சு.

சிவகுமாரை சந்தித்து புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவருடைய பாத்திரத்தை   மாற்றியிருப்பது பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் சொன்னபோது “என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?” என்று முதலில் ஆதங்கப்பட்டாலும், பாத்திரங்களை மாற்றியதற்கான காரணங்களை பஞ்சு அருணாசலம் விளக்கிச் சொன்ன பிறகு பெருந்தன்மையோடு சிவகுமார் ஒப்புக் கொண்டார்.

அப்போது ரஜினிகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகராக இருந்த போதிலும் பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆகவே இந்த ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் தான் ஏற்கவிருந்த பாத்திரம் மாற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் பஞ்சு அருணாசலம் கொண்டு வந்த முதல் மாற்றம் அது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பஞ்சு அருணாசலம்தான் ரஜினியின் முதல் ‘பஞ்ச்’ டயலாக்கையும்  எழுதியவர்.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் கதைப்படி சிவகுமார் தவறு செய்துவிட்டு வர, அதனைத் தெரிந்து கொள்ளும் ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார் “பத்தோடு பதினொண்ணு விட்றா” என்று அலட்சியமாக பதில் சொல்ல   ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்”என்று அழுத்தம் திருத்தமாக ரஜினிகாந்த் சொல்வார். ரஜினிகாந்த் திரையில் பேசிய முதல்  ‘பஞ்ச்’ டயலாக் இதுதான்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-79-புகழ் பெற்ற பல பாடல்கள் பிறந்த கதை https://touringtalkies.co/history-of-cinema-79-the-birth-story-of-many-famous-songs/ Wed, 19 Jan 2022 14:06:02 +0000 https://touringtalkies.co/?p=20329 ‘பாவ மன்னிப்பு’ படத்துக்கு பாடலெழுத இயக்குநர் பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கூடியிருந்தனர். வழக்கம்போல எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனுக்கு ஒரு டெலிபோன் வந்தது. அந்த போனைப்  பேசிவிட்டு வந்தமர்ந்த கண்ணதாசனின் முகத்தில்  ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்  படர்ந்திருப்பதைப்  பார்த்த எம்.எஸ்.வி. அதைப்  பற்றி  கேட்டபோது எதுவும் சொல்லாமல்  பாட்டை  எழுதிக் கொடுத்து விட்டு அவர்  கிளம்பிவிட்டார்.  கண்ணதாசன் சொல்லாவிட்டாலும் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்து கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் […]

The post சினிமா வரலாறு-79-புகழ் பெற்ற பல பாடல்கள் பிறந்த கதை appeared first on Touring Talkies.

]]>
‘பாவ மன்னிப்பு’ படத்துக்கு பாடலெழுத இயக்குநர் பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கூடியிருந்தனர்.

வழக்கம்போல எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனுக்கு ஒரு டெலிபோன் வந்தது. அந்த போனைப்  பேசிவிட்டு வந்தமர்ந்த கண்ணதாசனின் முகத்தில்  ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்  படர்ந்திருப்பதைப்  பார்த்த எம்.எஸ்.வி. அதைப்  பற்றி  கேட்டபோது எதுவும் சொல்லாமல்  பாட்டை  எழுதிக் கொடுத்து விட்டு அவர்  கிளம்பிவிட்டார்.

 கண்ணதாசன் சொல்லாவிட்டாலும் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்து கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் ஒத்திகை முடிந்ததும் கண்ணதாசனின் வீட்டுக்குப்  போனார்.

அவரை சந்தித்து என்ன பிரச்னை  என்று கேட்ட போது, படத் தயாரிப்புக்காக வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்ததாகவும், கடனை செலுத்த முடியாததால் வீட்டை ஜப்தி செய்ய மதியம் ஆட்கள் வந்துவிட்ட தகவலைத்தான் வீட்டில் இருந்தவர்கள் தன்னிடம் போனில்  தெரிவித்ததாகவும்  அவரிடம் கூறினார்  கண்ணதாசன்.

“அதை ஏன் அப்போதே சொல்லவில்லை. நாங்க எல்லாம் எதுக்காக இருக்கிறோம்? உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நாங்க சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா?”  என்று விஸ்வநாதன் உரிமையோடு கேட்டபோது “டேய்.. அழும்போது தனிமையில் அழணும்… சிரிக்கும்போது நண்பர்களோடு சிரிக்கணும். கூட்டத்தில அழுதா நடிப்புன்னு சொல்லுவாங்க. தனிமையில சிரிச்சா பைத்தியம்னு சொல்லுவாங்க” என்றார் கவிஞர்.

அந்தச் சம்பவம் நடந்த  அன்று மதியம் அவர் எழுதிய பாடலின் பல்லவியாக  “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்; நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்” என்ற வரிகள்  அமைந்தன.

ஒரு நாள் காலையில் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்கான பாடல் கம்போசிங். சரியாக  ஒன்பது மணிக்கெல்லாம்  கண்ணதாசன் வந்து விட்டார் . ராமண்ணாவும் அவரும் உட்கார்ந்து பாடல் அமைய வேண்டிய காட்சி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  எப்போதும் குறித்த நேரத்திற்கு கம்போசிங்கிற்கு வந்துவிடும் விஸ்வநாதன் மணி பத்தாகியும் அன்று வரவில்லை.

அந்த பாடல் கம்போசிங்கிற்கு முதல் நாள் மூன்று ஷிப்டுகள் வேலை பார்த்துவிட்டு இரவு மூன்று  மணிக்குத்தான் விஸ்வநாதன் தூங்கச் சென்றிருந்தார். ஆகவே மறுநாள் காலையில் அவரை யாரும் எழுப்பவில்லை.

விஸ்வநாதன் வராததைக் கண்ட கண்ணதாசன் “போன் போட்டு அவன் கிளம்பிட்டானா  என்று கேளுங்கள்” என்றார். விஸ்வநாதன்  தூங்கிக் கொண்டிருப்பதாக விஸ்வனாதனின் உதவியாளர் போனில் பதில் சொன்னார். பதினோரு மணி ஆகியும் விஸ்வநாதன் வராததால் கண்ணதாசனே போன் செய்தார். அவருக்கும் அதே பதிலே  கிடைத்தது.

பகல் பன்னிரண்டு மணிக்கு விஸ்வநாதன் எழுந்தபோது  கண்ணதாசன் இரண்டு மூன்று முறை அவருக்கு போன் செய்ததாக உதவியாளர் அவரிடம் சொல்ல அப்போதுதான் மின்னல் வெட்டியது போல ‘பெரிய இடத்து பெண்’ படத்தின்  கம்போசிங்கிற்கு காலியில் வருவதாக தான் ஒப்புக்கொண்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. “போன் வந்தால் என்னை  எழுப்ப வேண்டியதுதானே” என்று தன்  உதவியாளரிடம் சத்தம் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பி ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு வந்தார் விஸ்வநாதன்.

அவர் அங்கே வந்து சேர்ந்த போது “விஸ்வநாதன் வந்தால் இந்தப் பல்லவிக்கு டியூன் போடச் சொல்லுங்கள்” என்று சொல்லி கண்ணதாசன் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டதாகக்  கூறிய ராமண்ணா அந்த பல்லவி எழுதப்பட்டிருந்த காகிதத்தை விஸ்வநாதனிடம் நீட்டினார். பல்லவியைப் படித்துப் பார்த்த விஸ்வனாதனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான்; அகப்பட்டவன் நானல்லவோ” என்று விஸ்வநாதன் கம்போசிங்கிற்கு வராமல் தூங்கிக் கொண்டிருந்ததையே பல்லவியாக  எழுதியிருந்தார் கண்ணதாசன்.

கவிஞர் தன்னைக்  கேலி செய்துதான் அந்தப் பல்லவியை எழுதியிருக்கிறார்  என்பது விஸ்வநாதனுக்கு புரிந்த போதிலும் அந்த பாடல் காட்சிக்கு  அந்த வார்த்தைகள் மிகச்  சரியாக பொருந்தி இருந்ததால் அந்தப் பல்லவியை அப்படியே பயன்படுத்திக் கொண்டார் அவர்.

சிவாஜி கணேசன் நடிக்க பீம்சிங் இயக்கத்தில் உருவான எல்லா ‘பா’ வரிசைப்  படங்களிலும் சிவாஜி பாடுகின்ற தத்துவப் பாடல் ஒன்று தவறாமல் இடம் பெறும். ‘பழனி’ படத்தின் பாடல் கம்போசிங்கின்போது அந்தப் படத்தில் இடம் பெற வேண்டிய தத்துவப் பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர்  பீம்சிங் விளக்க அதற்கான டியூனை எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டினார்.

எப்போதும் டியூனை வாசித்து முடித்தவுடன் கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் அருவிபோல கொட்டத் தொடங்கிவிடும். ஆனால் அன்று என்ன காரணத்தாலோ  விஸ்வநாதன் டியூனை வாசித்தபடி இருந்தாரே தவிர கண்ணதாசனிடமிருந்து பாடலுக்கான பல்லவி பிறக்கவில்லை.

ஏதோ பண முடையில் இருந்த கவிஞர் விஸ்வநாதனைப் பார்த்து “எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்க “நான் எப்போ கவிஞரே கையில் பணம் வைச்சிருந்தேன்? சம்பாதிக்கிற பணத்தை அப்படியே அம்மாகிட்ட கொடுத்திட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?” என்றார் விஸ்வநாதன்.

அதற்குப் பிறகு பல இடங்களுக்கு பணம் கேட்டு அவர் போன் போட்டார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உட்பட எவரும் அன்று அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. போனில் எல்லோரிடமும் பேசி முடித்த பின்னர் விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்த கவிஞர் “இன்னொரு முறை அந்த டியூனை வாசி” என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்து சொன்னார். அவர் வாசித்த அடுத்த நிமிடமே  கவிஞரிடமிருந்து “அண்ணன் என்னடா.. தம்பி என்னடா… அவசரமான உலகத்திலே” என்ற பாடல் பிறந்தது.

சிவாஜி கதாநாயகனாக நடிக்க, பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கே.என்.சுப்பு தயாரித்த ‘அவன்தான் மனிதன்’  படத்தின்  ஒரு பாடல் காட்சியை  சிங்கப்பூர்  மலர் கண்காட்சியில் படமாக்க அந்த படத்தின் இயக்குநரான  ஏ.சி.திருலோக்சந்தர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அந்த குறிப்பிட்ட பாடலை எழுதித்  தராமல் கண்ணதாசன் இழுத்துக் கொண்டே இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் கவிஞரை சந்திக்கும் போதெல்லாம் “மே  மாதம் சூட்டிங் தலைவரே” என்று அவருக்கு நினைவூட்டியபடியே  இருந்தார்.

ஒரு நாள் தடாலென்று அந்தப்  படத்தின் கம்போசிங்கிற்கு தேதி கொடுத்த கண்ணதாசன் “என்னடா எப்போ பார்த்தாலும் ‘மே…மே’ ன்னு கத்திக்கிட்டேயிருக்கே. இந்தா பல்லவி” என்று அந்தப் பாட்டிற்கான பல்லவியை விஸ்வநாதனிடம் நீட்டினார்.

“அன்பு நடமாடும் கலைக் கூட மே; ஆசை மழை மேக மே” என்று தொடங்கிய அந்தப் பாடலின் எல்லா வரிகளும் “மே”  என்றே முடிகின்ற மாதிரி அந்தப் பாடலை எழுதியிருந்தார் கவிஞர்.

“மே” என்று முடிகின்ற மாதிரி பாடலின் எல்லா வரிகளையும் எழுதிய கவிஞர் “லா”  என்று எல்லா  வரிகளும் முடிகின்ற மாதிரி ஒரு பாடலை பாலச்சந்தரின் ‘பட்டினப் பிரவேசம்’ படத்திற்காக எழுதினார்.

அந்தப் பாடல் பிறந்ததும் ஒரு சுவையான சம்பவம். ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக  கே.பாலச்சந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய எல்லோரும் அன்று கூடியிருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்து “டியூனை வாசிடா” என்று கண்ணதாசன் சொன்னவுடன், “நா நனா நனா நனா நனா நான் ந நானான நா…”என்று எம்.எஸ்.விஸ்வநாதன் வாசிக்கத் தொடங்க “நிறுத்துடா மடையா” என்ற கவிஞர் “என்னடா டியூன் இது? நீ பாட்டுக்கு உன் வாயிலே வந்ததையெல்லாம் ‘நா நனா நனா நனா’னு பாடிக்கிட்டே போனா எனக்கு வார்த்தைகள் வர  வேணாமா? வேற மெட்டு போடு” என்றார்.

அந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கே.பாலச்சந்தருக்கு இந்த மனுஷன் அழகான டியூனை காலி பண்ணி விடுவார் போலிருக்கிறதே என்று பயம் வந்து விட்டது.

உடனே விஸ்வநாதனை தனியாக அழைத்த பாலச்சந்தர் “இந்த டியூன் அற்புதமான டியூன். எனக்கு ரொம்ப பிடிச்ச டியூன். அதனாலே நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இதுக்கு கவிஞர்கிட்ட பாட்டு எழுதி வாங்கறது உங்க பொறுப்பு. நான் இங்கே  இருந்தா வேலை நடக்காது. அதனாலே  நான் கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டுக்  கிளம்பிவிட்டார்.

பாலச்சந்தர் போனவுடன் கவிஞரிடம் எப்படி அந்த மெட்டுக்கு பாட்டெழுதி வாங்குவது என்பதற்கு ஒரு உத்தியைத்   தயார் செய்து கொண்டு வந்த விஸ்வநாதன் “இந்த சந்தத்துக்கு உம்மால பாட்டு எழுத முடியாதுன்னா  நீயெல்லாம் என்னய்யா பெரிய கவிஞர்..?” என்று கண்ணதாசனைப் பார்த்து கேட்டு முதலில் அவர் ஈகோவைத் தூண்டிவிட்டார்.

பின்னர்   அடுத்த நிமிடமே “நீர் நினைச்சா உம்மால முடியாததுகூட உண்டா?”என்று அவரைத் தூக்கி வைத்துப்  பேசினார். அவரது தந்திரம் நல்ல பலனை அளித்தது.

“டியூனை திரும்ப ஒரு தரம் வாசி” என்றார் கவிஞர். இந்த முறை “நா”வுக்கு பதில் “லாலாலா லாலா லாலா லாலா லாலா” விஸ்வநாதன் மெட்டிசைக்க “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்ற பாடல் பிறந்தது. பாடலின் எல்லா அடிகளும் “லா” என்றே முடியும்படி அந்தப் பாடலை  பாடலை எழுதினர் கவிஞர்.

ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திலே ‘சொன்னது நீதானா’ என்று ஒரு அற்புதமான பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்குப் பின்னேயும்  இப்படி  ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது.

அந்தப் படத்தின் பாடல்களுக்கு  இசையமைப்பதற்காக இயக்குநர் ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் ஆகிய மூவரும் அந்த ஹோட்டலில்  அறை எடுத்துத் தங்கியிருந்தனர். 

“நாளைக்கு நாம் கம்போஸ் பண்ண வேண்டியது  ஒரு முக்கியமான  பாடல் காட்சி. படத்தின் உயிர் நாடியான கட்டத்தில் அந்தப் பாடல் இடம் பெறுகிறது. ஆகவே  தயவு செய்து நீங்கள் இருவரும் இன்று இரவு சீக்கிரமே படுக்கைக்கு போய் நல்ல ஓய்வு எடுத்து விட்டு காலை 7 மணிக்கு வந்து விடுங்கள்.  நாம் காலையில் கம்போசிங்கை ஆரம்பித்து முடித்துவிடலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீதர் கிளம்பினார் .அவர் அப்படிச்  சொல்லிவிட்டு சென்றவுடன்  விஸ்வநாதன்  இரவ உணவை  முடித்து விட்டு படுக்கச்  சென்றார். 

இரவு பத்து மணியளவில்  பக்கத்து  அறையில் இருந்து பாட்டும், சிரிப்பு சத்தமும் கேட்கவே,  அங்கே என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்காக  அந்த அறைக்குச் சென்றார்  விஸ்வநாதன்.  அங்கே கண்ணதாசன்  தனது  தோழர்கள், தோழிகள் சகிதமாக உற்சாகமாக  அரட்டை அடித்துக்  கொண்டு இருந்தார்.  மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்தபடி இருந்தன  

“என்ன கவிஞரே? ஸ்ரீதர்  காலையில் சீக்கிரமாக  கம்போசிங் வச்சிக்கலாம்னு இல்லே சொல்லி இருக்காரு. அப்படியிருக்கும்போது  இன்னிக்கு இதெல்லாம் அவசியமா? இது எல்லாத்தையும் பாட்டை  எல்லாம் எழுதி முடிச்சதுக்கு அப்புறம்  வைச்சிக்கக் கூடாதா?” என்று  கண்ணதாசனைப் பார்த்து விஸ்வநாதன் கேட்க   “நீ போய் நிம்மதியா தூங்கு.  காலையிலே உனக்கு முன்னாலே நான் வரலேன்னா கேளு” என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய கொண்டாட்டத்தைத் தொடர்ந்தார்  கவிஞர்.

இரவு   ரெண்டு  மணிக்கு   விருந்தினர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு  வந்த கண்ணதாசன்  அதற்குப் பிறகும்  படுக்கவில்லை. கையில் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார்.

கண்ணைத் திறந்து அதைப் பார்த்த விஸ்வநாதனுக்கு உச்ச கோபம் வந்தது.  “இப்பவாவது போய் கொஞ்சம் தூங்குங்க கவிஞரே. அவ்வளவு சொல்லியும் இரண்டு மணி வரை எல்லோரும் தூங்கவில்லை என்று ஸ்ரீதருக்குத் தெரிந்தால் நாளைக்கு எல்லாருக்கும் பிரச்சனையாகிவிடும்” என்று அவர் சொல்ல “ஸ்ரீக்கு  இங்கே  நடக்கிறது எதுவும் தெரிய வாய்ப்பே இல்லை. நீ சொன்னால்தான் தெரிய வரும். இங்கே நடந்தது எதையும்  நீ சொல்லி விடாதே..” என்று சொல்லி விட்டு கோப்பையில் மதுவை ஊற்றத் தொடங்கினார் கண்ணதாசன்.

மறுநாள் காலை 7 மணிக்கு  ஸ்ரீதர், விஸ்வநாதன் உட்பட எல்லோரும் பாடல் கம்போசிங்கிற்காக  தயாராக இருந்தனர். ஆனால் கண்ணதாசன் வரவில்லை. ஒன்பது மணி ஆன பின்னரும் கவிஞர் வராததால் பொறுமையை இழந்த ஸ்ரீதர் சிறிது கோபமாக பேச  முதல் நாள் இரவு நடந்த கூத்துக்கள்  அத்தனையையும் அப்படியே அவரிடம் கொட்டத் தொடங்கினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் சொல்லி முடிக்க சிரித்துக்  கொண்டே அந்த அறைக்கு உள்ளே வந்த கண்ணதாசன் “கம்போசிங்கிற்கு நான் தயார். நீங்கள் இருவரும் தயாரா?” என்றார்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-79-புகழ் பெற்ற பல பாடல்கள் பிறந்த கதை appeared first on Touring Talkies.

]]>
தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் https://touringtalkies.co/kunnakudi-vaidhyanathan-life-story-1/ Sun, 11 Apr 2021 11:38:53 +0000 https://touringtalkies.co/?p=14304 வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது. காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முருகன் தலமான குன்னக்குடியைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று பிறந்தவர் வைத்தியநாதன். ராமசாமி சாஸ்திரிகளின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். […]

The post தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் appeared first on Touring Talkies.

]]>
வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது.

காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முருகன் தலமான குன்னக்குடியைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று பிறந்தவர் வைத்தியநாதன்.

ராமசாமி சாஸ்திரிகளின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். வைத்தியநாதனின் மூத்த சகோதரர் கணபதி சுப்ரமணியம் மிருதங்க வித்வானாக இருந்தார் என்றால் அவரது சகோதரிகளான சுப்புலட்சுமியும், சுந்தர லட்சுமியும் ‘குன்னக்குடி சகோதரிகள்’ என்ற பெயரிலே கர்நாடக இசைக் கச்சேரியை செய்து கொண்டிருந்தனர்.

அந்த குடும்பத்தில் சங்கீதத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வளர்ந்தவர் என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதன் மட்டும்தான்.

படிப்பிலோ, இசையிலோ கொஞ்சமும் அக்கறை இல்லாமல் தனது மகன் வளர்ந்து வருவதைப் பார்த்து சங்கடப்பட்ட வைத்தியநாதனின் தாயார் “இவன் மேல் மட்டும் நீங்கள் என் அக்கறையே காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?” என்று தனது கணவரிடம் கேட்காத நாளில்லை. “எல்லாவற்றிற்கும் நேரம் வர வேண்டும்” என்பார் அவர்.

அந்த நேரம் ஒரு வயலின் வித்வான்  மூலம் ஒரு நாள் வந்தது. குன்னக்குடி சகோதரிகளுக்கு எல்லா கச்சேரிகளிலும் வயலின் வாசிக்கக் கூடிய வயலின் வித்வான் அன்றைய கச்சேரிக்கு வரவில்லை. அவர் இல்லாமலே கச்சேரி நடந்து முடிந்தது.

மறுநாள் அந்த வயலின் வித்வான் வந்தபோது முதல் நாள் கச்சேரிக்கு வராத அந்த வயலின் வித்வானை கடுமையாக திட்டித் தீர்த்தார் வைத்தியநாதனின் தந்தை.

“உங்களுடைய பெண்கள் பாடுகிறார்கள்.. பையன் மிருதங்கம் வாசிக்கிறான்.. ஆனா வயலினுக்கு மொத்த குடும்பமும் என்னைத்தான் நம்பிக்கிட்டு இருக்கீங்க..? அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்” என்று அந்த வயலின் வித்வான் பேசியது ராமசாமி சாஸ்திரிகளின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அப்போது அந்தப் பக்கமாக வைத்தியநாதன் வர “இன்னும் ஒரே வருடத்தில் இவனைப் பெரிய வயலின் வித்வான் ஆக்கவில்லை என்றால் என் பெயர் ராமசாமி இல்லை” என்று அந்த வயலின் வித்வானிடம் சபதம் போட்டார் அவர்.

அவர் அப்படி சபதம் போட்டதும் அந்த வயலின் வித்வான்கூட சும்மா இருந்தார். ஆனால், வைத்தியநாதனின் சகோதரிகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதுவரை வயலினைக் கையில்கூட எடுத்துப் பார்த்திருக்காத வைத்தியநாதன் எங்கே வயலின் கற்றுக் கொள்ளப் போகிறார் என்பதுதான் அவர்களது சிரிப்புக்குக் காரணம்.

ஆனால், தந்தையின் சொல்லுக்காக வயலினைக் கையில் எடுத்த வைத்தியநாதன் அவரது சகோதரிகளின் கணிப்பை எல்லாம் மீறி அசுர சாதகம் செய்யத் தொடங்கினார்.

சரியாக ஒரு வருடத்தில் தனது சகோதரிகளான குன்னக்குடி சகோதரிகள் பாட அண்ணன் கணபதி சுப்ரமணியம் மிருதங்கம் வாசித்த கச்சேரியில் அற்புதமாக வயலின் வாசித்து, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு வலுவினைச் சேர்த்தார் வைத்தியநாதன்.

‘குன்னக்குடி வைத்தியநாதன்’ என்ற பெயரில் பிரபலமாகத் தொடங்கிய வைத்தியநாதனைத் தேடி பல பெரிய வித்வான்களின் பாட்டு கச்சேரிகளில் வயலின் வாசிக்கக் கூடிய வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இசைக்கு அடுத்தபடியாக சினிமா வைத்தியநாதனை ஈர்த்தது. எந்த புது படம் வந்தாலும் முதல் காட்சியில் தவறாமல் வைத்தியநாதனைப் பார்க்கலாம்.

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

வைத்தியநாதனின் திறமை என்ன என்பதை சோதித்துப் பார்த்த பிறகே அவரை சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொன்ன மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகிகள் அவரது திறமையை சோதித்துப் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் முன்னாலே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினர்.

“எங்கே வாசி பார்க்கலாம்” என்றார் ஜி.ராமனாதன். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம் சாருகேசி ராகம். அந்த விஷயம் வைத்தியநாதனுக்குத் தெரியாது என்ற போதிலும் அதிர்ஷ்டமும், நேரமும் அவருக்குத் துணை நின்ற காரணத்தாலோ என்னவோ சாருகேசி ராகத்தில் அமைந்த ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் அவர்.

அதைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராக தனது தகுதியை ன் வளர்த்துக் கொள்ளவும் குன்னக்குடி வைத்தியனாதனுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது.

அந்த அனுபவங்களின் துணையுடன் தனது 17-வது வயதில் சென்னையில் காலடி எடுத்து வைத்த வைத்தியநாதனுக்கு அப்போது பிரபலமாக இருந்த சூலமங்கலம் சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது கச்சேரிகளுக்கு வாசிக்கத் தொடங்கிய வைத்தியநாதனுக்கு தமிழகத்தின் மிகப் பெரிய இசைக் கலைஞர்களாக விளங்கிய செம்மங்குடி, மகாராஜபுரம் சந்தானம், சீர்காழி கோவிந்தராஜன், டிஎன்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை உட்பட பல கலைஞர்களோடு இணைந்து கச்சேரி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.

1970-ம் ஆண்டு தனியாக வயலின் கச்சேரி செய்யத் தொடங்கியதுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுக்களை வெளியிடும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை தினத்தன்று அவரது அலுவலகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பூஜையை நடத்துவது வழக்கம்.

அந்த பூஜையில் பிரபலமான பல பாடகர்கள் பாடுவார்கள். அப்படி பாடிக் கொண்டிருந்த சிதம்பரம் ஜெயராமனுக்கு வயலின் வாசித்துக் கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடுத்த பாடலைப பாட சி.எஸ்.ஜெயராமன் இடைவெளி எடுத்துக் கொண்ட சமயத்தில் ‘திருநீலகண்டர்’ படத்திலே தியாகராஜ பாகவதர் பாடிய ‘தீன கருணாகரனே’என்ற பாடலை வயலினில் வாசித்தார்.

அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் பக்கம் திரும்பிய மெய்யப்ப செட்டியார் அவர் வாசித்து முடிக்கின்றவரையில் அடுத்த பக்கம் திரும்பவில்லை.

கச்சேரி முடிந்ததும் குன்னக்குடி வைத்தியநாதனைத் தனியாக அழைத்த அவர் ‘உனக்கு பாகவதர் பாட்டு எல்லவற்றையும் வாசிக்கத் தெரியுமா,,?” என்று கேட்டார். “தெரியும்” என்று வைத்தியநாதன் தலையை ஆட்டியவுடன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகியான கண்ணனை அழைத்த செட்டியார் வைத்தியநாதனின் வயலின் வாசிப்பை இசைத் தட்டாக கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கூறினார்.

வைத்தியநாதன் வயலினில் வாசித்த திரைப்படப் பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து எச்.எம்.வி. நிறுவனத்துக்காக பக்திப் பாடல்களுக்கு இசையமைக்கக் கூடிய வாய்ப்பு குன்னக்குடி வைத்தியநாதனுக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பல இசைத்தட்டு நிறுவனங்களுக்காக எண்ணற்ற பாடல்களைத் தனது இசையமைப்பில் உருவாக்கினார் வைத்தியநாதன்.

அப்படி அவர் உருவாக்கிய ஒரு பாடல்தான் தமிழ் சினிமா உலகில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாக பாதை போட்டுத் தந்தது.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராகக் காரணமாக அமைந்த அந்தப் பாடலைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

(தொடரும்) 

The post தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் appeared first on Touring Talkies.

]]>