Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
week – Touring Talkies https://touringtalkies.co Wed, 16 Aug 2023 00:57:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png week – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் வெப் தொடர்கள்! https://touringtalkies.co/web-series-releasing-on-ott-this-week/ Wed, 16 Aug 2023 00:57:34 +0000 https://touringtalkies.co/?p=35348 இணையத்தில் வெளியாகும் ஓ.டி.டி. இணையத்தொடர்களை ரசித்துப் பார்ப்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த வாரம் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் ஏராளமான வெப்தொடர்கள் வெளியாக உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.. மத்தகம்:  ரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முதல் முறையாக […]

The post இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் வெப் தொடர்கள்! appeared first on Touring Talkies.

]]>
இணையத்தில் வெளியாகும் ஓ.டி.டி. இணையத்தொடர்களை ரசித்துப் பார்ப்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த வாரம் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் ஏராளமான வெப்தொடர்கள் வெளியாக உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

மத்தகம்:  ரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தாலி: இதில்,  சுஷ்மிதா சென் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடர் ஜியோ சினிமாவில் ஆகஸ்ட் 15 ந் தேதியான நாளை வெளியாக உள்ளது.

10 டேஸ் ஆஃப் எ பேட் மேன் :  இந்த வெப் சீரிஸை உலுஸ் இயக்கியுள்ளார். தனியார் புலனாய்வாளர் ஒருவர் ஒரு மாளிகையில் நடக்கும் கொலையின் பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை வெளியில் கொண்டு வருகிறார். இந்த ஆங்கில வெப் தொடரை ஆகஸ்ட் 18ந் தேதி நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

கன்ஸ் & குலாப்ஸ்: ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இரட்டையர்கள்  இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர். இதில் ராஜ்குமார் ராவ் , துல்கர் சல்மான் , ஆதர்ஷ் கவுரவ் , கௌதம் ஷர்மா, கௌரவ் சர்மா மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸில் வரும் 18ந் தேதி வெளியாக உள்ளது.

The post இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் வெப் தொடர்கள்! appeared first on Touring Talkies.

]]>
  168 மணி நேரம்தூங்காமல் நடித்த அஜித்! https://touringtalkies.co/ajith-acted-without-sleeping-for-a-week-do-you-know-which-movie/ Fri, 11 Aug 2023 01:38:52 +0000 https://touringtalkies.co/?p=35196 சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார்: “நான் இயக்கிய வரலாறு படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருந்தபோது, அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் போட்டுவிட்டார்கள். அதாவது, இந்த படத்தில் நடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அவருக்கு அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் இருந்தன. அவர், “இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு இருக்கிறது” என்று கேட்டார். நான், “15 நாள் இருக்கும்” என்றேன். அதற்கு அவர், […]

The post   168 மணி நேரம்தூங்காமல் நடித்த அஜித்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார்:

“நான் இயக்கிய வரலாறு படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருந்தபோது, அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் போட்டுவிட்டார்கள். அதாவது, இந்த படத்தில் நடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

அவருக்கு அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் இருந்தன. அவர், “இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு இருக்கிறது” என்று கேட்டார். நான், “15 நாள் இருக்கும்” என்றேன்.

அதற்கு அவர், “ஒரு வாரத்தில் முடித்துவிடுங்கள்.. நான் தினமும் நாள் முழுதும் நடித்துத் தருகிறேன்” என்றார்.

எனக்கு ஆச்சரியம்.. இது நடக்குமா.. அவரால் முடியுமா என்று ஒரு சந்தேகம். ஏனென்றால் பெரிய ஹீரோ.. அவர் எப்படி நாள் முழுதும் நடிப்பார்?

ஆனால், சொன்னபடி ஒரு வாரம் முழுதும் நடித்துக் கொடுத்தார். காலையில் படப்பிடிப்பு ஆரம்பித்தால் ராத்திரி முழுக்க நடக்கும். மறு நாள் காலையில் ஒரு மணி நேரம் வீட்டுக்குச் சென்று வருவார். மற்றபடி நடிப்பு, நடிப்பு.. நடிப்புதான்.

இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post   168 மணி நேரம்தூங்காமல் நடித்த அஜித்! appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? https://touringtalkies.co/maaveeran-and-thandatti-padmini-theatre-ott-movie-details-thease-week-release/ Fri, 14 Jul 2023 01:42:14 +0000 https://touringtalkies.co/?p=34348 இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள்… திரையரங்க வெளியீடு: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன், ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபா ப்ளாக் ஷீப்’ இதர மொழி படங்களைப் பொறுத்தவரை, ஆனந்த் தேவரகொண்டாவின் தெலுங்குபடமான ‘பேபி’ மற்றும் குஞ்சாக்கோ போபனின் ‘பத்மினி’ மலையாள படம் . ஓடிடி ரிலீஸ்: பசுபதியின் ‘தண்டட்டி’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், ஸ்ரீகாந்த் ஜி […]

The post இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள்…

திரையரங்க வெளியீடு: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன், ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபா ப்ளாக் ஷீப்’

இதர மொழி படங்களைப் பொறுத்தவரை, ஆனந்த் தேவரகொண்டாவின் தெலுங்குபடமான ‘பேபி’ மற்றும் குஞ்சாக்கோ போபனின் ‘பத்மினி’ மலையாள படம் .

ஓடிடி ரிலீஸ்: பசுபதியின் ‘தண்டட்டி’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், ஸ்ரீகாந்த் ஜி ரெட்டியின் ‘மென் டூ’ ஆஹா ஓடிடியிலும், அந்தோணி ராமோஸின் ‘ட்ரான்ஸ்ஃபார்மெர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்’ அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் இன்று வெளியாகின்றன.

இணையதள தொடர்: கஜோல் நடித்துள்ள ‘தி ட்ரையல்’  வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகிறது

The post இந்த வாரம்  தியேட்டர், ஓடிடியில் என்ன பார்க்கலாம்? appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும்  படங்கள்.. https://touringtalkies.co/3-films-to-be-releasedonott-this-week/ Sat, 08 Jul 2023 03:01:37 +0000 https://touringtalkies.co/?p=34166 திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இந்த வாரம் வெளிவர இருக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம். ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில்,மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இப்படம். பல எதிர்ப்புகளையும் தாண்டி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. இத்திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாக இருக்கிறது. காதர் பாட்ஷா என்ற […]

The post இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும்  படங்கள்.. appeared first on Touring Talkies.

]]>
திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இந்த வாரம் வெளிவர இருக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்.

ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில்,மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இப்படம். பல எதிர்ப்புகளையும் தாண்டி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. இத்திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்:   முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

டக்கர்: கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், விக்னேஷ், யோகி பாபு இவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. தற்போது இப்படம் நெட்ஃபிக்ஸ்-யில்  வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக திரையரங்குகளில் வெளிவரும் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல வெப் சீரிஸ்களிலும் நல்ல படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அமேசான் பிரைமின் ஒரிஜினல் சீரியஸான “ஸ்வீட் காரம் காபி” இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இதில் லட்சுமி,மதுபாலா, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள், இப்படம் பேமிலி செண்டிமெண்ட் படமாக வந்திருக்கிறது, இந்த வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி-யில் நாளை வெளிவர இருக்கிறது.

மேலும் ஆங்கிலத்தில் 65 மூவிஸ், தி அவுட் லாஸ், கோல்ட் பிரிக் ஆகிய திரைப்படங்கள் நெட்ஃபிக்ஸ்-யில் வெளியாக இருக்கிறது.

The post இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும்  படங்கள்.. appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! https://touringtalkies.co/list-of-theatre-and-ott-releases-this-week/ Wed, 17 May 2023 05:10:04 +0000 https://touringtalkies.co/?p=32542 பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் […]

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின.

தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.

இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2.

சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள ‘மாடர்ன் லவ் சென்னை’ நாளை முதல் (மே 18) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குநர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன், ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளனர்.

மேலும், மஹத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாள் பத்மநாபன்  இயக்கியுள்ளார்.

இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பூக்களம் படம் டிஸ்னி பிளஸ் தளத்திலும், அயல்வாசி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்துள்ள சென்டிமீட்டர் டென்ட்கொட்டா ஓடிடியிலும் வெளியாகிறது.

தெலுங்கில் விருபாக்ஷா திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஏஜெண்ட் படம் சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிஸ்ஸிங், தி சன், மியூட்டட் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர இன்னும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>