Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijayakanth – Touring Talkies https://touringtalkies.co Wed, 24 Apr 2024 11:11:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijayakanth – Touring Talkies https://touringtalkies.co 32 32 கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Wed, 24 Apr 2024 11:11:32 +0000 https://touringtalkies.co/?p=41300 நடிகர் அரசியல்வாதி என்பதை விட நல்ல மனிதர் தான் கேப்டன் விஜயகாந்த்.கடந்த வருட இறுதியில் உடல்நல குறைவினால் இம்மண்ணில் இருந்து மறைந்தார்.‌அவருக்கு ஒட்டுமொத்த மக்களும் திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.அவர் நல்லடக்கம் செய்த இடத்தில் மக்கள் இன்றுவரை வந்தவண்ணம் தான் உள்ளார்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றார்கள். அவர் அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.இந்நிலையில் மத்திய அரசு சொன்னதை செய்யவில்லை எல்லாம் சும்மா பேச்சு தான் கொந்தளித்துள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள். அதாவது விஜயகாந்த் இறந்த சமயத்தில் […]

The post கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அரசியல்வாதி என்பதை விட நல்ல மனிதர் தான் கேப்டன் விஜயகாந்த்.கடந்த வருட இறுதியில் உடல்நல குறைவினால் இம்மண்ணில் இருந்து மறைந்தார்.‌அவருக்கு ஒட்டுமொத்த மக்களும் திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.அவர் நல்லடக்கம் செய்த இடத்தில் மக்கள் இன்றுவரை வந்தவண்ணம் தான் உள்ளார்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றார்கள்.

அவர் அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு சொன்னதை செய்யவில்லை எல்லாம் சும்மா பேச்சு தான் கொந்தளித்துள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள். அதாவது விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று டெல்லியில் விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படாதது பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருது ஏன் வழங்கவில்லை என இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட விழாவில் விருது வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.ஆனாலும் கேப்டன் விஜய்காந்த் ரசிகர்கள் கேப்டன் இறந்த சமயத்தில் அனுதாபத்தை பெறுவதற்கு தான் விருது அறிவித்தீர்களா? அல்லது தேமுதிக ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால் தாமதிக்கிறீர்களா? என சரமாரியாக விளாசி ‌வருகின்றனர்.

The post கேப்டனுக்கு விருது எங்க போச்சு? அனுதாபம் பெற தான் விருது அறிவிப்பா?கொந்தளிக்கும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
கேப்டன் மகனின் படை தலைவன்! நேசித்த ஒரு ஜீவனுக்காக போராடி தீர்த்த சண்முக பாண்டியன்… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9/ Tue, 26 Mar 2024 10:19:30 +0000 https://touringtalkies.co/?p=40204 ஒரு யானைக்கும் அதை நேசித்த ஒரு ஹீரோவுக்குமான அழகான காதல் கதை தான் இது.வால்டர் படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் அன்பு இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் படை தலைவன். நேசித்த ஒரு ஜீவனுக்காக எந்த அளவிற்கும் போகிற ஒரு ஹீரோ… பிரச்சனைகளுக்காக பல விதங்களில் இறங்கி போராடி, ஒரு சாமானியனால் அந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் போகும் போது, தானே ஒரு படை தலைவனாக இறங்கி போராடித் தீர்க்கின்ற ஹீரோதான் இந்த படை தலைவன். […]

The post கேப்டன் மகனின் படை தலைவன்! நேசித்த ஒரு ஜீவனுக்காக போராடி தீர்த்த சண்முக பாண்டியன்… appeared first on Touring Talkies.

]]>
ஒரு யானைக்கும் அதை நேசித்த ஒரு ஹீரோவுக்குமான அழகான காதல் கதை தான் இது.வால்டர் படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் அன்பு இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் படை தலைவன். நேசித்த ஒரு ஜீவனுக்காக எந்த அளவிற்கும் போகிற ஒரு ஹீரோ… பிரச்சனைகளுக்காக பல விதங்களில் இறங்கி போராடி, ஒரு சாமானியனால் அந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் போகும் போது, தானே ஒரு படை தலைவனாக இறங்கி போராடித் தீர்க்கின்ற ஹீரோதான் இந்த படை தலைவன்.

சண்முக பாண்டியன் பற்றி இயக்குனர் அன்பு, கேப்டன் மகன் சண்முக பாண்டியன் மீது எனக்கு ஒரு தனி கவனிப்பும் அக்கறையும் உண்டு. இந்த கதை சொல்லும் போது மிகவும் ஆத்மார்த்தமாக கேட்டு அவர் ஒப்புக்கொண்டார் எனவும், கதை கேட்டு பிரேமலதா அவர்கள் மிகவும் சந்தோசம் அடைந்ததாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த படத்திற்காக உடம்பை ஏற்றி முடியை வளர்த்து உழைத்திருக்கிறார் சண்முக பாண்டியன்.

யானையும் சண்முக பாண்டியனும் கதையோடு ஐக்கியம் ஆகிவிட்டார்கள். பழகிய சில நாட்களிலேயே யானையிடம் அவர் மிகவும் நெருக்கமாகிவிட்டார். யானையும் அவரிடம் பிரியமாகிவிட்டது, இந்த படத்தோட கதை 70% காட்டுக்குள்ள நடக்குது பொள்ளாச்சியில் ஆரம்பித்து ஒடிசா வரைக்கும் பயணித்திருக்கும். யானை சண்முக பாண்டியனை அழகாக தும்பிக்கையில் தூக்கிட்டு போகும். சூட்டிங் முடிந்து லாரியில் யானையை கொஞ்சி ஏத்தி அனுப்புகிற வரைக்கும் முழுக்கவே சண்முக பாண்டியன் தான் யானையை பார்த்துக் கொள்வார்.

இவரோட ஆக்ஷன் அச்சு அசலா அப்படியே கேப்டன் மாதிரியே இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இது ஒரு உண்மை சம்பவம் தான்.இந்த படத்தை பிரேமலதா அவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய போது அவர்கள் மிகவும் சந்தோஷத்தில் கண்கலங்கினார். இந்த படத்தில் ஏ.சி.திரு.லோகச்சந்திராவோட பேத்தி யாமினி சந்திரன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரோடு டைரக்டர் கஸ்தூரிராஜா, முனீஸ்க்காந்த், அருள்தாஸ், ரிஷி என எல்லாரும் அருமையான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு திரைக்கதை வசனத்தில் நட்பே துணை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு வலிமை சேர்த்துள்ளார்.

இப்படத்துக்கு இசையால் உயிரூட்டும் விதமாக இளையராஜா அவர்கள் கைகோர்த்தார்.கேப்டன் மகன் படம் என்றதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அவர் மீதான அன்பில், இப்படத்திற்காக மேலும் மெனக்கெட்டு உழைத்துள்ளார்.மக்கள் கொண்டாடும் விதமாக படைத்தலைவன் இருக்கும் என்றுள்ளார்.

The post கேப்டன் மகனின் படை தலைவன்! நேசித்த ஒரு ஜீவனுக்காக போராடி தீர்த்த சண்முக பாண்டியன்… appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் – தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்? https://touringtalkies.co/padma-bhushan-for-vijayakanth-who-won-padma-awards-in-tamil-nadu/ Sat, 27 Jan 2024 02:28:54 +0000 https://touringtalkies.co/?p=39476 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 132 பத்ம விருதுகளில் மிழகத்தை சேர்ந்த 8 பேர் அடங்குவர். விஜயகாந்த்: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்திமாலா: இந்திய சினிமா பிரபலம் மற்றும் […]

The post விஜயகாந்துக்கு பத்ம பூஷண் – தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்? appeared first on Touring Talkies.

]]>
2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 132 பத்ம விருதுகளில் மிழகத்தை சேர்ந்த 8 பேர் அடங்குவர்.

விஜயகாந்த்: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்திமாலா: இந்திய சினிமா பிரபலம் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். 91 வயதான அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் . அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சுப்ரமண்யம்: நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம், மாநில அளவிலும், தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளை தனது கலை பயணத்துக்க வென்றுள்ளார். 80 வயதான அவர் கடந்த 1981-ல் பத்மஸ்ரீ விருதையும், 2003-ல் பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த சூழலில் தற்போது அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பன்: 87 வயதான கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார். புராணம் மற்றும் இந்திய வரலாற்றை தனது கலை மூலம் பரப்பி வருகிறார். தனது கலையில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்து பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா: 37 வயதான சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ்: எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சாகித்ய அகாடமி விருதை இவரது படைப்பு வென்றுள்ளது. இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி. நாச்சியாருக்கு மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விஜயகாந்துக்கு பத்ம பூஷண் – தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்? appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! https://touringtalkies.co/vijayakanths-stopped-movie-cinematographer-mv-panneer-selvam/ Sun, 31 Dec 2023 01:36:29 +0000 https://touringtalkies.co/?p=39353 பிரபல ஒளிப்பதிவாளர், எம்.வி.பன்னீர் செல்வம், முப்பதாண்டுகளுக்கு மேலாக முத்திரை பதித்து வருபவர்.. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் அறிமுகமான இவர்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயகாந்த், பிரபு, மம்முட்டி, முரளி, தனுஸ்.. என பல முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர். இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று… விஜயகாந்த் நடித்த படம் ஒன்று நின்றுபோன விசயத்தையும் தெரிவித்து உள்ளார். அது குறித்து அறிய, […]

The post விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல ஒளிப்பதிவாளர், எம்.வி.பன்னீர் செல்வம், முப்பதாண்டுகளுக்கு மேலாக முத்திரை பதித்து வருபவர்..

ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் அறிமுகமான இவர்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயகாந்த், பிரபு, மம்முட்டி, முரளி, தனுஸ்.. என பல முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர்.

இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ஒன்று… விஜயகாந்த் நடித்த படம் ஒன்று நின்றுபோன விசயத்தையும் தெரிவித்து உள்ளார். அது குறித்து அறிய,  டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்…

The post விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்த்துக்கு சிலை: பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை https://touringtalkies.co/statue-vijayakanth-journalists-association-demands-chief-minister/ Sun, 31 Dec 2023 01:23:59 +0000 https://touringtalkies.co/?p=39345 தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்து தமிழக அரசியலில்  18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர்க் கட்சித் தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் (28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி  காலமானார். அவர் மறைவுக்குத் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம்  சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அச்சங்கம் […]

The post விஜயகாந்த்துக்கு சிலை: பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்து தமிழக அரசியலில்  18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர்க் கட்சித் தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் (28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி  காலமானார்.

அவர் மறைவுக்குத் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம்  சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அச்சங்கம் சார்பில் 3 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு… மறைந்த விஜயகாந்த் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் பிரதான சாலைக்கு ‘கேப்டன்’ விஜயகாந்த் சாலை அல்லது ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி ‘கேப்டன்’ விஜயகாந்த் விருது அல்லது ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் . மறைந்த விஜயகாந்த், பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் ‘கேப்டன்’ விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்பதாகும்.

இந்த கோரிக்கையை, திரைத் துறையிலும் அரசியலிலும் விஜயகாந்த் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக, தமிழக முதல்வர். ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோருக்கு வேண்டு கோளாக முன் வைப்பதாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விஜயகாந்த்துக்கு சிலை: பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்த் மறைவிற்கு அஜித் இரங்கல் https://touringtalkies.co/ajith-condolence-vijayakanth/ Sat, 30 Dec 2023 01:50:37 +0000 https://touringtalkies.co/?p=39314 நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை […]

The post விஜயகாந்த் மறைவிற்கு அஜித் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இப்போது தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விஜயகாந்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய் என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக விஜயகாந்த் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் விடாமுயற்ச்சி படத்திற்காக அஜர்பைஜானில் படப்பிடிப்பில் இருப்பதால், தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

The post விஜயகாந்த் மறைவிற்கு அஜித் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
Goodbye Captain!:  கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி! https://touringtalkies.co/amul-firm-tripute-to-demise-actor-vijayakanth/ Sat, 30 Dec 2023 01:44:17 +0000 https://touringtalkies.co/?p=39299 நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.  72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில்  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதனிடையே, அமுல் நிறுவனம் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமுல் சிறுமி ‘குட்பை கேப்டன்’ எனச் சொல்லும் அந்தக் கார்ட்டூனை […]

The post Goodbye Captain!:  கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி! appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.  72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில்  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதனிடையே, அமுல் நிறுவனம் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமுல் சிறுமி ‘குட்பை கேப்டன்’ எனச் சொல்லும் அந்தக் கார்ட்டூனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்நிறுவனம் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மிகவும் நேசித்த தமிழ் நடிகர் – அரசியல் தலைவருக்கு அஞ்சலி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post Goodbye Captain!:  கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி! appeared first on Touring Talkies.

]]>
“நெகிழ வைத்த விஜயகாந்த்!”: நடிகர் ஜெயபிரகாஷ் கூறும் பழைய சம்பவம் https://touringtalkies.co/vijayakanth-who-was-flexible-actor-jayaprakash-recounts-an-old-incident/ Fri, 29 Dec 2023 05:46:42 +0000 https://touringtalkies.co/?p=39284 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு நடிகர்  ஜெயபிரகாஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய சுவாரஸ்ய விசயங்களில் ஒன்று: “விஜயகாந்த் எனக்கு நல்ல பழக்கம். அப்போது தேர்தல் முடிந்து 24 சீட் அவரது கட்சி பெற்று இருந்தது. அவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க இருந்தார். அப்போது அவரை சந்தித்து வாழ்த்த சொல்ல விரும்பினேன். ஆனால் அவரைப் பார்க்க கூட்டம் அதிகம் இருக்குமே என யோசித்தேன். தவிர அந்த நேரம் நான் திரையுலகில் இருந்து ஒதுங்க ஆரம்பித்த […]

The post “நெகிழ வைத்த விஜயகாந்த்!”: நடிகர் ஜெயபிரகாஷ் கூறும் பழைய சம்பவம் appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு நடிகர்  ஜெயபிரகாஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய சுவாரஸ்ய விசயங்களில் ஒன்று:

“விஜயகாந்த் எனக்கு நல்ல பழக்கம். அப்போது தேர்தல் முடிந்து 24 சீட் அவரது கட்சி பெற்று இருந்தது. அவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க இருந்தார்.

அப்போது அவரை சந்தித்து வாழ்த்த சொல்ல விரும்பினேன். ஆனால் அவரைப் பார்க்க கூட்டம் அதிகம் இருக்குமே என யோசித்தேன். தவிர அந்த நேரம் நான் திரையுலகில் இருந்து ஒதுங்க ஆரம்பித்த நேரம்.

ஆனாலும், விஜயகாந்த் அலுவலகம் சென்று, அவரது உதவியாளரிடம் எனது வாழ்த்துகளை சொல்லும்படி கூறிவிட்டு, வாய்ப்பு இருந்தால் அப்பாயிண்மென்ட் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன்.

அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்..

# அப்படி ஆச்சரியப்படும்படி விஜயகாந்த் என்ன செய்தார்.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “நெகிழ வைத்த விஜயகாந்த்!”: நடிகர் ஜெயபிரகாஷ் கூறும் பழைய சம்பவம் appeared first on Touring Talkies.

]]>
“கடையேழு வள்ளல், மாமனிதன், கர்ணன்” : விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி  https://touringtalkies.co/soori-tribute-vijayakanth/ Fri, 29 Dec 2023 05:45:16 +0000 https://touringtalkies.co/?p=39281 நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு தமிழகம் முழுவதும் […]

The post “கடையேழு வள்ளல், மாமனிதன், கர்ணன்” : விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி  appeared first on Touring Talkies.

]]>
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சூரி, “கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்திருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரி வழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்ன சத்திரமா இருந்துச்சு. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும். கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகுமார், “மாமனிதரை இழந்துவிட்டோம் கேப்டன் மக்கள் மனதில் என்றும் நிற்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

The post “கடையேழு வள்ளல், மாமனிதன், கர்ணன்” : விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி  appeared first on Touring Talkies.

]]>
“சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” – விஜயகாந்த் குறித்து அமீர்   https://touringtalkies.co/ameer-condolence-vijayakanth/ Fri, 29 Dec 2023 05:44:09 +0000 https://touringtalkies.co/?p=39278 நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு தமிழகம் முழுவதும் […]

The post “சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” – விஜயகாந்த் குறித்து அமீர்   appeared first on Touring Talkies.

]]>
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அமீர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும். இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர். எங்களது ‘மண்ணின் மைந்தன்’ கேப்டன் விஜயகாந்த் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post “சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” – விஜயகாந்த் குறித்து அமீர்   appeared first on Touring Talkies.

]]>