Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
valimai movie – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 May 2022 07:03:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png valimai movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! https://touringtalkies.co/valimai-movie-poster-crate-in-10000-square-feet-for-ott-release-promotion/ Tue, 22 Mar 2022 12:07:49 +0000 https://touringtalkies.co/?p=21355 அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10,000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உச்சபட்ச சாதனையாகும். தமிழ் ஓடிடி இயங்கு தளங்களில் வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ-5 ஓடிடி நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் […]

The post 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10,000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உச்சபட்ச சாதனையாகும்.

தமிழ் ஓடிடி இயங்கு தளங்களில் வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ-5 ஓடிடி நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது.

இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக் பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது.

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஜீ-5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

‘வலிமை’ படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் வலிமை படத்திற்காக 10,000 சதுர அடியில் மிகப் பெரிய போஸ்டரை ஜீ-5 ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது.

இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம்.. இவையிரண்டும் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு வரவழைத்தது.

12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ-5 ஓடிடி தளத்தின் ஆண்டு சந்தா ரூ. 599  மட்டுமே!

The post 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
வலிமை – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/valimai-movie-review/ Fri, 25 Feb 2022 06:47:02 +0000 https://touringtalkies.co/?p=20939 இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, அச்யுன்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – நீரவ் ஷா, இசை – யுவன் சங்கர் ராஜா, கலை இயக்கம் – கே.கதிர், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு – அனுவர்த்தன், மக்கள் […]

The post வலிமை – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, அச்யுன்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நீரவ் ஷா, இசை – யுவன் சங்கர் ராஜா, கலை இயக்கம் – கே.கதிர், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு – அனுவர்த்தன், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா, ரேகா, விளம்பர வடிவமைப்பு – ராகுல் நந்தா, இணை தயாரிப்பு – பி.ஜெயராஜ், வி.எஃப்.எக்ஸ்-ஹரிஹரசுதன், எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத்.

சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர் கொண்ட பார்வை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் வெளிவரும் 4-வது படம் இதுவாகும். வினோத்தின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 2-வது படம் இதுவாகும்.

மதுரையில் உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார் ‘அர்ஜூன்’ என்ற அஜீத்.  அம்மா, தம்பி, அண்ணன், அண்ணன் மனைவி என்ற கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர். அஜீத் வேலையில்லா பட்டதாரியான பி.இ. படித்த தனது தம்பிக்கு சிபாரிசு கடிதம்கூட தர மறுக்கும் அளவுக்கு நேர்மையானவராக இருக்கிறார். ஆனால் வேலையில் சின்சியர் ஆபீஸர்.

கையில் சிக்கும் குற்றவாளிகளின் கையை உடைத்துவிட்டு அவர்களது குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் அளவுக்கு நல்லவர். இவருடைய அண்ணன் மெகா குடிகாரராக இருக்கிறார். இதனால், அந்தக் குடும்பமே இப்போது அஜீத்தை நம்பித்தான் இருக்கிறது.

இந்த நேரத்தில் சென்னையில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. செயின் திருடர்கள் ஒரு பக்கம்.. ஏன் எதற்கு என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான கொலைகள்.. போதை மருந்து கடத்தல், போதை மருந்து விற்பனை என்று சென்னையில் குற்றங்கள் பெருகியிருக்கிறது.

இதைத் தடுப்பதற்கு திறமையான ஒரு அதிகாரி வேண்டும் என்று நினைக்கிறார் கமிஷனர் செல்வா. இந்த வேலைக்கு இவருக்கு அஜீத் சரியான தேர்வாக இருக்க சென்னைக்கு அழைக்கப்படுகிறார் அஜீத்.

அவரிடத்தில் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. சோபியா’ என்ற ஹூமா குரேஷி சென்னையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஏற்கெனவே அஜீத்தை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருக்கிறார். இவரும் இப்போது அஜீத்தின் டீமில் ஒருவராக இருக்கிறார்.

குற்றவாளிகள் ஹைடெக் டெக்னாலஜியைப் பயன்படுத்தி சாத்தானின் அடிமைகள்’ என்ற குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழுமத்தை வில்லன் கார்த்திகேயா நடத்தி வருகிறார். ஈவிரக்கமில்லாமல் குழுவிற்குள் தவறு செய்பவர்களை எரித்துக் கொல்கிறார்.

செயின் திருட்டு, போதைப் பொருள் விற்பனை, கடத்தல் இந்த மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அறிந்த அஜீத் வில்லனை மிக எளிதாக கண்டறிகிறார். ஆனால், அதற்குள்ளாக வில்லன் அஜீத்தின் வீட்டுக்குள்ளேயே கை வைத்து அஜீத்தின் தம்பியை தன் பக்கம் இழுக்கிறான்.

வில்லனை கோர்ட்டில் ஆஜர்படு்தத அழைத்துச் செல்லும்போது ஏற்படும் களேபரத்தில் பலர் இறந்துபோக அஜாக்கிரதையாக இருந்தக் குற்றத்திற்காக அஜீத் பதவியிறக்கம் செய்யப்படுகிறார்.

வில்லன் கோஷ்டியுடன் சேர்ந்துவிட்ட தனது தம்பியை மீட்டுத் தருவதாக தனது தாயாரிடம் சத்தியம் செய்கிறார் அஜீத். “இந்தச் சத்தியத்தை அவர் செய்து முடித்தாரா..? இல்லையா..?” என்பது இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

அஜீத் வழக்கம்போல கனமான உடலுடன், தீர்க்கமான பார்வையுடன், ஒரு மசாலா பட ஹீரோவுக்கேற்ற கெத்தான தோற்றத்தில் படம் முழுவதும் வலம் வந்து தனது ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறார்.

அவர் வரும் காட்சிகளில் மொத்தக் கண்களும் அவரைச் சுற்றியே இருக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதுதான் ஸ்பெஷல். கோபம், பாசம், கண்டிப்பு, கிண்டல் என்று அனைத்திற்கும் ஒரே மாதிரியான மாடுலேஷனில் பேசுவதுதான் நமக்குப் போரடிக்கிறது. கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டுங்க சாமியோவ்..!

சண்டை காட்சிகளில் ரீல் இல்லாமல் நிஜமாக அவரே பைக்கை ஓட்டி, சாகசங்கள் செய்திருப்பது தெரிகிறது. இத்தனை ரிஸ்க் எடுத்து நடிப்பது என்பது வேறு நடிகர்களால் முடியாதுதான். இதற்காகவே இவருக்கு நமது பாராட்டுக்கள்.

வழக்கம்போல கொஞ்சம் சென்டிமெண்ட் காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். அதிலும் அம்மா பாசம். தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பிக் காண்பித்திருக்கிறார் அஜீத். அஜீத்தின் படத்தில் இதுதான் இருக்கும் என்பதால் நாம் இதற்கு மேல் எதிர்பாப்பதே தவறு..!

படத்தில் காதல் காட்சிகள் இல்லை. டூயட்டுகளும் இல்லை. ஆனால் நாயகியின் ஒரு தலைக் காதலை சில வசனங்கள் மூலமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர். புல் அண்ட் புல் ஆக்ஷன் மூவி என்று சொல்லிவிட்டதால் இதற்கெல்லாம் நேரமேயில்லாமல் போய்விட்டது போலும்.

நாயகி ஹூமா குரேஷியை அந்த கூலிங் கிளாஸோடு தோன்றும்போதெல்லாம் “ஒரு டூயட்டை வைச்சுத் தொலைஞ்சிருந்தா என்னங்கப்பா…?” என்று நமக்குத் தோன்றுகிறது. இயக்குநருக்கு ஏன் தோணவில்லை என்று தெரியவில்லை. அஜீத்துக்கு இப்போதைய நாயகிகளில் மிகப் பொருத்தமான நாயகி ஹூமாதான் என்பது சில சில ஷாட்களிலேயே தெரிகிறது.

அஜீத்தின் அம்மாவாக சுமித்ரா. பெரிய பையன் பொறுப்பாய் கவனித்துக் கொள்கிறான் என்றாலும் சின்னப் பையன் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டுமே என்று பரிதவிக்கும் தாய். மகனைக் காணாத துக்கத்தில் துவண்டுபோய் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சுமித்ரா.

பிளாஷ்பேக் கதையில் இவரது இள வயது கதாபாத்திரத்திற்கு இவருடைய மகள் உமாவையே பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

அஜீத்தின் அண்ணனாக நடித்திருக்கும் அச்யுத் குமார் ஒரு பக்கா குடிகாரராக கண்ணுக்குத் தெரிகிறார். ஒவ்வொரு முறையும் தனது குடிகார நண்பனை அழைத்துக் கொண்டு தம்பியிடம் வந்து அறிமுகப்படு்த்தும் காட்சி கலகலப்பு..

இவருடைய மனைவி பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா’ ஸ்டைலில் “எனக்கு உள் பாவாடை வாங்கணும்ன்னா நான் யார்கிட்டடா காசு கேட்பேன்..?” என்று கேட்கும் ஆவேசக் கேள்வியை பட்டித் தொட்டியெங்கும் பரப்புரை செய்ய வேண்டும். வெல்டன் வினோத்.

வில்லன் கார்த்திகேயன் மிகச் சிறப்பான முறையில் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். ஆஜானுபாகுவான தோற்றத்தில், வில்லத்தனத்தை தனது உடல் மொழியால்கூட உணர்த்தியிருக்கிறார். படித்த, வேலையில்லாத இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களைத் தவறான பாதைக்குத் திருப்பி விடும் வித்தையை அழகாக நடித்துக் காண்பித்திருக்கிறார் கார்த்திகேயா. இறுதியில் சண்டைக் காட்சியில்கூட அஜீத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

அஜீத்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பாவுக்கு பரிதாபமான ஒரு வேடம். தான் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்று தவம் கிடப்பவர். யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ளாமல் கெட்ட வழியைத் தேர்வு செய்து தனது வாழ்க்கையை வீணடிக்கும் அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சரியாகவே செய்திருக்கிறார்.

தவறான வழிக்குள் அவர் போகும்போது அவர் பேசும் வசனங்கள் இன்றைய இளைய சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை அப்படியே நம் கண் முன்னை நிறுத்துகிறது.

இணை கமிஷனர் சத்யா சுந்தர் மற்றும் தினேஷ் பிரபாகர் இருவரும் வில்லன்கள்தான் என்பது துவக்கத்திலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இவர்களின் அதீத ஆர்வத்தைப் பார்த்து கடைசியாகத்தான் அஜீத்தே இவர்கள்தான் கருப்பு ஆடுகள் என்று தெரிந்து கொள்கிறாராம். திரைக்கதை இங்கேதான் இடிக்கிறது.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் சண்டை காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் பெரும் பாராட்டுக்குரியவர். ஆனால் பல காட்சிகள் இருட்டின் பின்னணியில் படமாக்கப்பட்டிருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.

யுவன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன. நாங்க வேற மாரி’ பாடலின் இசையும், நடனமும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு வரும் அம்மா சென்டிமெண்ட் பாடலும் ஓகேதான். பின்னணி இசையும் காட்சிகளின் வலிமையைக் கூட்டுவதைப் போலவே அமைந்திருக்கிறது.

பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களாக செயினை அறுப்பது போன்ற காட்சிகளை மிகவும் பரபரப்பாக படமாக்கி படத்தின் துவக்கத்திலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டார் இயக்குநர். முதல் பாதி முடியும்வரையிலும் அதே கோணத்திலேயே நம்மை பரபரக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்கு அவருக்கு உறுதுணையாய் இருந்திருப்பது சண்டை இயக்குநர்தான்.  

அஜீத் சென்னையில் கால் வைத்த பிறகு படம் மேலும் சூடு பிடிக்கிறது. குற்றவாளிகளைப் பிடிக்க அஜீத் போடும் திட்டமும், அதற்கான காட்சியமைப்புகளும் ஒரு நிமிடம்கூட படத்தின் மையக் கருவைவிட்டு வெளியில் போகவில்லை. மேலும் ஒரு பைக் ரேஸ் காட்சியில் இருக்கும் 2 டிவிஸ்ட்டுகளும் திரையைவிட்டு நம் கண்களை அகலவிடவில்லை.

இடைவேளைக்கு முன்பு வரும் டிவிஸ்ட்டும் அதன் பிறகு ஏற்படும் திடீர் திருப்பங்களும்தான் படத்தின் போக்கை மாற்றுகின்றன. இடைவேளைக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் வந்தாலும், படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது நமக்குத் தெரிந்துவிட்டது என்பதால் தன் விறுவிறுப்பை இழந்துவிட்டது.

கிளைமாக்ஸ் காட்சியில் அஜீத்தின் குடும்பத்தினரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு கொலை செய்யப் போவதாக வில்லன் மிரட்டுவதெல்லாம் ரொம்பவும் பழைய திரைக்கதை. அஜீத்தும் சரியான நேரத்தில் வந்து அவர்களைக் காப்பாற்றுவதெல்லாம் 1980-களில் வந்த படங்களில் இருந்த கதை. இப்போதும் இப்படியேவா எடுப்பது..?

படத்தில் வில்லன் கார்த்திகேயனின் ‘சாத்தானின் அடிமைகள்’ குழுமத்தை ஒரு வித்தியாசமானதாகவும், புதுமையாகவும் செயல்படுவதைப் போல் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதே பாணியில் காவல்துறையும் செயல்படுவதாகக் காட்டியிருக்க வேண்டும். அது அப்படியே வழக்கம்போல இருந்ததுதான் கொஞ்சம் நெருடல்.

காவல் துறைக்குள் நடக்கும் ஈகோ மோதல்.. போட்டுக் கொடுக்கும்விதம், பழி வாங்குதல் என்று சில விஷயங்களையும் இயக்குநர் முன் வைத்திருக்கிறார். ஆனால் இவைகள் ஏதோ போகிறபோக்கில் செய்வதுபோல மிக அலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டியே படத்தில் அதிக நேரம் வரும் பைக் ரேஸ் காட்சிகளும், போலீஸ் வேன் துரத்தல்களும், சண்டைக் காட்சிகளும்தான். இது மூன்றையும் இணைப்பதற்கு ஏற்றவகையில் கதையைத் தயார் செய்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் என்று புரிகிறது.

இந்தப் படம் அஜீத்தின் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். மசாலா பட பிரியர்களுக்கும் பிடித்தமானதுதான். பைக் ரேஸ், சேஸிங் காட்சிகள், சண்டை காட்சிகளுக்காகவே இந்தப் படம் வரும் காலங்களில் நிச்சயமாகப் பேசப்படும்.

RATING : 3.5 / 5

The post வலிமை – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை https://touringtalkies.co/huma-qureshis-interview-about-valimai-movie/ Wed, 23 Feb 2022 13:29:11 +0000 https://touringtalkies.co/?p=20932 நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது  அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி. இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “இந்த ‘வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘பில்லா-2’ […]

The post “வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது  அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி.

இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “இந்த வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘பில்லா-2’ படத்திலேயே அஜீத்தும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இந்த ‘வலிமை’ படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்தது.

இந்த ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

இயக்குர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும. ஆனால், வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்…” என்றார்.

இந்ச வலிமை’ படத்தினை இயக்குநர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார், Bayview Project LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

மேலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் விஷுவல் ப்ரோமோக்களில் மனதைக் கவரும் அதிரடி காட்சிகள் வலிமை’ மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

இந்த வருடத்திற்கான தமிழ் திரைப்பட பட்டியலில் ரசிகர்களின் பேராதரவை பெற்று, எதிர்பார்ப்பில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

The post “வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தில் ‘தல’ அஜீத்தின் கலர்புல் புகைப்படங்கள் https://touringtalkies.co/thala-ajith-colorfull-stills-in-valimai-movie/ Sat, 12 Feb 2022 06:59:36 +0000 https://touringtalkies.co/?p=20668 The post ‘வலிமை’ படத்தில் ‘தல’ அஜீத்தின் கலர்புல் புகைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>

The post ‘வலிமை’ படத்தில் ‘தல’ அஜீத்தின் கலர்புல் புகைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ முடிந்தது-அஜீத்தின் பைக் ரேஸ் ஆசை தொடர்கிறது https://touringtalkies.co/ajith-in-russia-news/ Fri, 03 Sep 2021 06:22:22 +0000 https://touringtalkies.co/?p=17598 அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. கடைசிக்கட்ட படப்படிப்பு சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்ட பைக் ரேஸ்.. மற்றும் சில சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ‘வலிமை’ படக் குழுவினர் தாயகம் திரும்பிவிட்டார்கள். ஆனால், அஜீத் மட்டும் இன்னும் ரஷ்யாவில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ரஷ்யாவில் அஜீத் தனது பைக் டிராவலிங்கை தொடர இருப்பதாகவும் அதனால்தான் அவர் மட்டும் வரவில்லை என்றும் படக் குழுவில் இருந்து கிடைத்த […]

The post ‘வலிமை’ முடிந்தது-அஜீத்தின் பைக் ரேஸ் ஆசை தொடர்கிறது appeared first on Touring Talkies.

]]>
அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

கடைசிக்கட்ட படப்படிப்பு சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்ட பைக் ரேஸ்.. மற்றும் சில சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ‘வலிமை’ படக் குழுவினர் தாயகம் திரும்பிவிட்டார்கள். ஆனால், அஜீத் மட்டும் இன்னும் ரஷ்யாவில்தான் இருப்பதாகத் தெரிகிறது.

ரஷ்யாவில் அஜீத் தனது பைக் டிராவலிங்கை தொடர இருப்பதாகவும் அதனால்தான் அவர் மட்டும் வரவில்லை என்றும் படக் குழுவில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் அஜீத் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் ஏற்கனவே சென்னையில் இருந்து சிக்கிம் மாநிலம்வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ படத்தின் ரஷ்ய காட்சிகள் மட்டுமே தற்போது எடிட் செய்யப்பட்டு பின்னணி வேலைகள் தொடரப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் அனைத்தையும் ஏற்கெனவே முழுமையாகத் தயார் செய்துவிட்டார்களாம்.

எனவே வலிமை’ திரைப்படம் அடுத்த மாதம் நவராத்திரி பண்டிகை தினத்தில் வெளியாவது உறுதி என்கிறது திரையுலக வட்டாரம்.

The post ‘வலிமை’ முடிந்தது-அஜீத்தின் பைக் ரேஸ் ஆசை தொடர்கிறது appeared first on Touring Talkies.

]]>
“சம்பவம் தரமா இருக்கும்” – ‘வலிமை’ படம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் ட்வீட் https://touringtalkies.co/will-the-incident-be-quality-director-h-vinod-tweets-about-the-film-valimai/ Thu, 24 Jun 2021 14:03:28 +0000 https://touringtalkies.co/?p=15748 “வலிமை’ அப்டேட் பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறீர்களே..?” என்று தயாரிப்பாளர் போனி கபூரையும், இயக்குநர் ஹெச்.வினோத்தையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில் இருக்கும் அஜீத்தின் ரசிகர்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘வலிமை’ படத்தின் பாடல்கள் பற்றிய செய்தியை ‘மாநாடு’ படத்தின் கலந்துரையாடலின்போது கசிய விட.. இன்னும் அதிகமாக கோபமாகிவிட்டார்கள் ரசிகர்கள். “தயாரிப்பாளரும், இயக்குநரும் சொல்ல வேண்டியதை இசையமைப்பாளர் சொல்றாரு.. நீங்களும் இருக்கீங்களே..?” என்னும் ரேன்ச்சுக்கு இயக்குநரையும், தயாரிப்பாளரையும் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள். […]

The post “சம்பவம் தரமா இருக்கும்” – ‘வலிமை’ படம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் ட்வீட் appeared first on Touring Talkies.

]]>
“வலிமை’ அப்டேட் பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறீர்களே..?” என்று தயாரிப்பாளர் போனி கபூரையும், இயக்குநர் ஹெச்.வினோத்தையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில் இருக்கும் அஜீத்தின் ரசிகர்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘வலிமை’ படத்தின் பாடல்கள் பற்றிய செய்தியை ‘மாநாடு’ படத்தின் கலந்துரையாடலின்போது கசிய விட.. இன்னும் அதிகமாக கோபமாகிவிட்டார்கள் ரசிகர்கள்.

“தயாரிப்பாளரும், இயக்குநரும் சொல்ல வேண்டியதை இசையமைப்பாளர் சொல்றாரு.. நீங்களும் இருக்கீங்களே..?” என்னும் ரேன்ச்சுக்கு இயக்குநரையும், தயாரிப்பாளரையும் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள்.

இதனால் இப்போது தனது டிவீட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் ஒரு செய்தியைப் பதிவிட்டிருக்கிறா்.

அந்தச் செய்தியில், “கோடம்பாக்கத்தில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘வலிமை’யின் வலிமையான கொண்டாட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய மற்றைய செய்திகளை மிக விரைவில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பார். அந்தச் சம்பவம் தரமா இருக்கும்.. கவலை வேண்டாம்..” என்று எழுதியிருக்கிறார்.

ஏதோ நல்லதா.. சீக்கிரமா கொடுத்தீங்கன்னா சந்தோஷம்ங்கோ..!

The post “சம்பவம் தரமா இருக்கும்” – ‘வலிமை’ படம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் ட்வீட் appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! https://touringtalkies.co/valimai-movie-first-look-will-release-on-may-1/ Mon, 15 Mar 2021 10:08:26 +0000 https://touringtalkies.co/?p=13614 நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு […]

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.

அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அஜீத்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் மொராக்காவிலா, தென் ஆப்ரிக்காவிலா..? https://touringtalkies.co/valimai-movie-last-schedule-shooting-in-morocco-or-south-africa/ Fri, 22 Jan 2021 11:02:11 +0000 https://touringtalkies.co/?p=12334 நடிகர் அஜீத்குமாரின் ‘வலிமை’ திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஹைதராபாத்தில் துவங்குகிறது. இந்த மாத இறுதிவரையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் படமாக்கப்பட வேண்டும். முதலில் ஹைதராபாத்திலேயே படமாக்கிவிடலாம் என்று நினைத்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். தற்போது பல வெளிநாடுகளில் கொரோனாவுக்கான லாக் டவுனை தளர்த்தியிருப்பதால் வெளிநாட்டில்தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் வினோத். இப்போது எந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. […]

The post ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் மொராக்காவிலா, தென் ஆப்ரிக்காவிலா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜீத்குமாரின் ‘வலிமை’ திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஹைதராபாத்தில் துவங்குகிறது. இந்த மாத இறுதிவரையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் படமாக்கப்பட வேண்டும்.

முதலில் ஹைதராபாத்திலேயே படமாக்கிவிடலாம் என்று நினைத்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். தற்போது பல வெளிநாடுகளில் கொரோனாவுக்கான லாக் டவுனை தளர்த்தியிருப்பதால் வெளிநாட்டில்தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் வினோத்.

இப்போது எந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இதற்காக இரண்டு நாட்களைத் தேர்வு செய்திருக்கிறாராம் இயக்குநர் வினோத். மொராக்கோ, தென் ஆப்ரிக்கா என்ற இரண்டு நாடுகளில் எந்த நாட்டிற்குச் செல்வது என்பது அடுத்த மாத துவக்கத்தில் தெரிந்துவிடுமாம்.

இதில் மொராக்கா நாட்டைத்தான் படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் வினோத் குறித்து வைத்திருந்த இடம். ஆனால் இப்போது அங்கே வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் சிலவை கடுமையாக இருப்பதால்தான் தயாரிப்பாளர் போனி கபூர் அதிக ஆர்வம் காட்டாமல் ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தாராம்.

இப்போது நிலைமை அங்கே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் வலிமை அடுத்து தனது வித்தையைக் காட்டும் இடம் மொராக்காவாகத்தான் இருக்கும் என்கிறது இயக்குநர் வினோத்தின் நட்பு வட்டாரம்.

இதற்கிடையில் நடிகர் அஜீத்குமார் சென்ற முறை நடைபெற்ற ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது நண்பர்களுடன் தனக்குப் பிடித்த பைக்கிலேயே வட இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 5000 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே சுற்றி சிக்கிம் மாநிலம்வரையிலும் சென்று வந்திருக்கிறார். இந்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சிலும் தனக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தை அவர் தொடர்ந்து செய்து வருவதைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

The post ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் மொராக்காவிலா, தென் ஆப்ரிக்காவிலா..? appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..? https://touringtalkies.co/valimai-movie-update-news-3/ Tue, 15 Dec 2020 06:16:09 +0000 https://touringtalkies.co/?p=11039 ‘தல’ அஜீத்குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இதற்காக ஹைதராபாத் வந்து குவிந்திருக்கிறார்களாம். அனைத்து நடிகர், நடிகைகளும் ஹைதராபாத்தில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் வாடகையே பல ஆயிரங்கள் என்றால், 7 ஸ்டார் ஹோட்டலில் லட்சத்தைத் தாண்டி விடும். ஆனாலும், கடந்த மூன்று ஷெட்யூல்களிலும் அனைத்து நட்சத்திரங்களும் 7 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் […]

The post ‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..? appeared first on Touring Talkies.

]]>
‘தல’ அஜீத்குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இதற்காக ஹைதராபாத் வந்து குவிந்திருக்கிறார்களாம்.

அனைத்து நடிகர், நடிகைகளும் ஹைதராபாத்தில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் வாடகையே பல ஆயிரங்கள் என்றால், 7 ஸ்டார் ஹோட்டலில் லட்சத்தைத் தாண்டி விடும். ஆனாலும், கடந்த மூன்று ஷெட்யூல்களிலும் அனைத்து நட்சத்திரங்களும் 7 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் அங்கே கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் சாலைகளில் நடக்கும் பைக் ரேஸ் மற்றும் சண்டை காட்சிகள்தான். அவற்றை சென்னையிலேயே படமாக்கியிருந்தால் நிறைய செலவு மிச்சயமாகியிருக்கும்தான்.

ஆனால், இது குறித்து படத்தின் இயக்குநரான வினோத்திடம் கேட்டபோது, “படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு எந்தவிதக் குறையும் இருக்கக் கூடாது என்பது தயாரிப்பாளரின் உத்தரவு ஸார். அதனால் அவர்களுக்கு வேண்டிய வசதி, வாய்ப்புகளை செய்து தந்திருக்கிறோம்.

படப்பிடிப்பை பொறுத்தமட்டில் சென்னையில் ஒரு ரோட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமெனில் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. ஆனால், ஹைதராபாத்தில் அப்படியில்லை. தாராளமாக ஷூட் செய்யலாம். உடனேயே அனுமதி கிடைக்கும். அதனால்தான் வேறு வழியில்லாமல் ஹைதராபாத்தில் ஷூட்டிங் எடுக்கிறோம். தமிழக அரசு மனம் வைத்து இதில் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்…” என்றார்.

பகல் நேரங்களில் அண்ணா சாலை போன்ற பொது இடங்களில் ஷூட்டிங் வைத்தால் டிராபிக் ஜாமாகும். பொது ஜனங்களுக்கு பிரச்சினையாகும் என்பதால்தான் பகல் நேரங்களில் சென்னையில் சாலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே அனுமதி தரப்படுகிறது.

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டி போல சென்னையின் அருகே ஒரு பிலிம் சிட்டியை உருவாக்கி அதில் இது போன்ற சாலைகளை அமைத்துக் கொடுத்தால் படப்பிடிப்புகளை எளிதாக நடத்தி விடலாம்.

ஆனால், மாநில அரசு மனம் வைக்க வேண்டுமே..?!

The post ‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..? appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. https://touringtalkies.co/valimai-movie-update-news/ Thu, 26 Nov 2020 06:55:06 +0000 https://touringtalkies.co/?p=10383 ‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போதே முழுமையாக எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் வினோத். அடுத்து ஒரேயொரு ஷெட்யூலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும். அதன் பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மற்ற பின் பணி வேலைகளும் முடிந்து படம் […]

The post ‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. appeared first on Touring Talkies.

]]>
‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போதே முழுமையாக எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் வினோத்.

அடுத்து ஒரேயொரு ஷெட்யூலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும்.

அதன் பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மற்ற பின் பணி வேலைகளும் முடிந்து படம் ஏப்ரல் 14 அல்லது மே 1-ம் தேதியன்று கண்டிப்பாக திரைக்கு வரும் என்று அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 14-ல் ‘அண்ணாத்தே’ வெளியானால், ‘வலிமை’ மே 1-க்குத் தள்ளிப் போகும். அன்றைக்குத்தான் ‘தல’யின் பிறந்த நாள் என்பதால், அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கும்..!

The post ‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. appeared first on Touring Talkies.

]]>