Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vaarisu movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 06 Dec 2022 16:56:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vaarisu movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் https://touringtalkies.co/if-warisu-doesnt-get-a-theater-why-do-you-care-k-rajans-fury/ Tue, 06 Dec 2022 16:55:15 +0000 https://touringtalkies.co/?p=28150 Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி T.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் வகையில் உருவாகியிருக்கிறது ‘Hi 5’ திரைப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் […]

The post “வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் appeared first on Touring Talkies.

]]>
Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குர் பாஸ்கி T.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் வகையில் உருவாகியிருக்கிறது Hi 5’ திரைப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக் குழுவிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

ajayanbala

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, “இந்தப் படம் அன்பைப் பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள். மறைந்தும் வாழ்கிறார்கள். அதேபோல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப் படத்தில் கிராமமும் இருக்கிறது. நகரமும் இருக்கிறது. இப்படம் வயதானவர்களின் வலியை சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

k.rajan

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள். வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. அதற்காக ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

‘வாரிசு’ படத்திற்கு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தியேட்டர் கிடைக்கவில்லை என்று இங்கேயுள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை..? இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள்..? இங்கே இந்த மாதிரி சின்ன படம்தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இந்தப் படம் ஓட வேண்டும். இப்படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான பாஸ்கி T.ராஜ் பேசும்போது, “இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி.

முதியவர்கள் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வதுதான் இந்தப் படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்.  படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப் பழக்கம் இல்லாமல் வாழுங்கள்.

இந்தப் படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா, அப்பாவை போற்ற வேண்டும். அம்மா, அப்பாவை வணங்குபவன்தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.  இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது. ஆனால், வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம். ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக் காலம்தான் நம் வாழ்வில் முக்கியமானது. நாம் அந்தக் காலக்கட்டத்தில்தான் நமக்கு பிடித்ததை செய்ய விருப்பப்பட்டு வாழுகிறோம்.  முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

The post “வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Mon, 28 Nov 2022 14:51:53 +0000 https://touringtalkies.co/?p=27768 தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் பைலிங்குவல் படமான இதனை தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என […]

The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் பைலிங்குவல் படமான இதனை தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தயாரித்துள்ளார்.

இப்படம் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆந்திரா ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், “தொடக்கத்திலிருந்தே ‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என சொல்லிருந்தோம். மே மாதமே நாங்கள் கூறிவிட்டோம்.

அதன் பிறகு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூன் மாதம்தான் அறிவிக்கப்பட்டது. அதேபோல பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்தது.

பண்டிகை காலங்களில் மூன்று படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் என்னுடன் நல்லுறவில் தான் இருக்கின்றனர். அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தப் புகாரையும் அளிக்காதபோது, மற்றவர்கள் ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என புரியவில்லை.

ஹைதராபாத்தில் உள்ள 420 திரைகளில் 37 திரைகளை லீஸுக்கு எடுத்துள்ளேன். ஏசியன் சுனில் 100 திரைகளை வைத்துள்ளார். மற்ற திரைகள் உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன. விநியோகஸ்தர் வட்டாரத்தில் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.

]]>
‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் https://touringtalkies.co/animal-welfare-board-sent-a-notice-to-vaarisu-movie-producer/ Thu, 24 Nov 2022 09:50:23 +0000 https://touringtalkies.co/?p=27551 விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு […]

The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதால் புதிய பிரச்னை ஒன்றும் உருவாகியுள்ளது.

Notice

அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். எனவே அனுமதி பெறாமல்  5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ‘வாரிசு’ படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக் குழு பெரிதும் கவலையடைந்துள்ளது.

The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை https://touringtalkies.co/if-warisu-is-not-released-no-other-film-will-be-released-director-prameradu-kalal/ Wed, 23 Nov 2022 06:01:52 +0000 https://touringtalkies.co/?p=27500 “பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்” என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது, “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. […]

The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்” என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது,தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.

நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு பீஸ்ட்’ படம் வெளியான அதே சமயத்தில்தான், ‘கே.ஜி.எப்.-2’ படமும் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் ‘பீஸ்ட்’ படத்திற்கு போலவே, கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்கள ஒதுக்கப்பட்டது.

இதேபோலத்தான் பொன்னியின் செல்வன்’ வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.

நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.

இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து போக முடியாது. இது நமது மானப் பிரச்சனை.

தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும்.

‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும், உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்..” என்றார்.

The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை https://touringtalkies.co/before-varisu-after-varisu-the-situation-will-change-director-lingusamy-cautions/ Wed, 23 Nov 2022 05:54:12 +0000 https://touringtalkies.co/?p=27492 பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு […]

The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.

‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.

The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! https://touringtalkies.co/a-new-problem-has-arisen-for-vijays-varisu-film/ Sun, 13 Nov 2022 15:21:03 +0000 https://touringtalkies.co/?p=27013 நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் அப்படத்தின் தயாரிப்பாளராலேயே பிரச்சனை எழுந்துள்ளது.   இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகி, அதன் வசூல் […]

The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் அப்படத்தின் தயாரிப்பாளராலேயே பிரச்சனை எழுந்துள்ளது.  

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகி, அதன் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரை மேலும் கவலையடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி தெலுங்கு படத்திற்கு, டப்பிங் படங்களைவிட குறைந்த அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. 

தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்க வேண்டும். மீதமிருக்கும் திரையரங்குகளை வேண்டுமானால் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கலாம்…” என்று கூறியிருந்தார்.

தனக்குத்தானே சூனியம் வைத்தது போன்று 2019-ம் ஆண்டு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படி பேசியது, இப்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக் காட்டி “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு மீதமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும்..” என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. 

‘வாரிசு’ படம் முழுக்க, முழுக்க தமிழ் மொழியில் உருவான படம் என்று இதன் இயக்குநர் வம்சி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், இதனால் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகப் போகும் வாரிசு படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. 

மேலும் வாரிசு’ படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப் போவதால், வாரிசு’ படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில் https://touringtalkies.co/was-the-vaarisu-movie-song-ranjithame-was-copied-poet-viveks-reply/ Sat, 12 Nov 2022 07:09:59 +0000 https://touringtalkies.co/?p=26986 தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர். இந்தப் பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது. ஆனால் கூடவே இந்தப் பாடல் மற்றும் நடனம் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன […]

The post “வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர். இந்தப் பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது. ஆனால் கூடவே இந்தப் பாடல் மற்றும் நடனம் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குநர் ஜானி என்று சொல்லி 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் 1994-ம் ஆண்டில் வெளியான ‘உளவாளி’ படத்தில் இடம் பெற்ற ‘மொச்ச கொட்ட பல்லழகி.. முத்து முத்து சொல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் இந்த ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதிய கவிஞர் விவேக் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு மெட்டை தொடர்ந்து பல மெட்டுக்கள் அதுபோல உருவெடுக்கும். ‘மொச்ச கொட்ட பல்லழகி…’ என்ற பாடல் 1990-களில் வெளியானது.. அதன் பின்னர் ‘சிலம்பாட்டம்’ படத்தில் ‘பார்ட்டிக்கு போகலாமா..’ என்ற பாடலும் ‘தர்மதுரை’ படத்தில் ‘மக்க கலங்குதப்பா…’ ஆகிய பாடல்களும் இதே போல இருக்கும்.

நான் ‘வாரிசு’ படத்தில் வசனங்களையும் எழுதியுள்ளேன். எனவே ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதும் போதும் இந்த ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலை தமனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டே காட்சிகளை வைத்தோம். ‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடலுக்கான காரணத்தையும் காட்சிகளாக வைத்துள்ளோம். படம் வரும்போது புரியம்.” என்றார் விவேக்.

The post “வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில் appeared first on Touring Talkies.

]]>
இணையத்தில் வைரலாகியிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ பட புரமோ பாடல் https://touringtalkies.co/vijays-varisu-promo-song-has-gone-viral-on-the-internet/ Thu, 03 Nov 2022 18:38:13 +0000 https://touringtalkies.co/?p=26503 நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி பல சாதனைகளைப் படைத்து வருகிறது. பீஸ்ட் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் அடுத்தப் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தயாரிப்பாளர் […]

The post இணையத்தில் வைரலாகியிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ பட புரமோ பாடல் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

பீஸ்ட் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் அடுத்தப் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் வந்து போன தீபாவளி தினத்தில் இந்த ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே ரசிகர்களை குஷிப்படுத்தும்விதமாக ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ பாடல் இன்றைக்கு வெளியானது.

தமன் இசையில் விவேக் எழுதிய இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என தொடங்கும் இந்த பாடலின் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி டிரெண்ட்டிங்கிலும் இடம் பிடித்துவிட்டது.

மேலும் மிகக் குறுகிய நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனையும் படைத்துள்ளது.

விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளதால் இந்த வாரிசு’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வாரிசு’ படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இணையத்தில் வைரலாகியிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ பட புரமோ பாடல் appeared first on Touring Talkies.

]]>
‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் https://touringtalkies.co/the-actor-released-a-new-update-of-varisu/ Thu, 27 Oct 2022 17:12:11 +0000 https://touringtalkies.co/?p=26155 தெலுங்கு இயக்குநரான வம்சியின் இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிடுகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் முதல் […]

The post ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு இயக்குநரான வம்சியின் இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிடுகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய்யின் நண்பராக, நடிகர் ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் கதாப்பாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் ஸ்ரீமன் இன்றைக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில். “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். அது என்ன படம் என்று உங்களுக்கு தெரியும். V என்றால் வெற்றி…” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீமன்.

The post ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் appeared first on Touring Talkies.

]]>
மிகப் பெரிய வருத்தத்தில் இருக்கும் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் https://touringtalkies.co/the-producer-of-varisu-who-is-in-great-grief/ Wed, 19 Oct 2022 14:24:46 +0000 https://touringtalkies.co/?p=25658 தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படம். தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகத்தின் முக்கியமான தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் மிகப் பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராக நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தற்போது சில ஏமாற்றங்களை இந்த ‘வாரிசு’ […]

The post மிகப் பெரிய வருத்தத்தில் இருக்கும் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படம்.

தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகத்தின் முக்கியமான தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படம் மிகப் பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராக நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தற்போது சில ஏமாற்றங்களை இந்த வாரிசு’ படம் கொடுத்திருப்பதாக தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகத்தில் பலமான பேச்சு எழுந்துள்ளது.

இந்த ‘வாரிசு’ படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வந்தனர். இந்தப் படம் துவங்கியபோது பொங்கல் பண்டிகை படமாக ‘வாரிசு’ மட்டுமே லைனில் இருந்தது. இதனால் 90 சதவிகித தியேட்டர்கள் வாரிசு படத்துக்கே கிடைக்கும். நமக்குப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று நினைத்த தயாரிப்பாளர் தில் ராஜூ சந்தோஷத்தில் இருந்தார்.

ஆனால், திடீரென்று ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக அஜித்தின் ‘துணிவு’ படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜூவின் கனவில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

அஜீத், விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் சரி பாதியாகத்தான் தியேட்டர்கள் கிடைக்கும். இதனால் முன்பு எதிர்பார்த்த அளவுக்கான அதிக திரையரங்குகளில் ‘வாரிசு’ படம் வெளியாக வாய்ப்பில்லை. இதனால் வாரிசு’ படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வசூலும், பாதிக்குப் பாதி குறையும்.

தமிழில்தான் இந்த நிலைமை என்றால், தெலுங்குலகத்திலும் இந்த ‘வாரிசு’ படம் வெளியாகும் அதே பொங்கல் பண்டிகை தினத்தில் சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவிருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ மற்றும் சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா 154’ ஆகிய இரண்டு படங்களும் அன்றைக்கு வெளியாகப் போவதாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெரிய நட்சத்திர படங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன.

 

பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 107-வது படமும், அகில் அக்கினேனி மற்றும் மம்மூட்டி நடிக்கும் ‘அகில்ஸ் ஏஜென்ட்’  படமும் அன்றைக்கு வெளியாகவுள்ளனவாம்.  கடைசி நேர பிரச்சினைகளினால் இந்த 4 படங்களில் நிச்சயமாக 3 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இந்தப் படங்களினால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் தியேட்டர்கள் குறைவாகக் கிடைத்து அது ‘வாரிசு’ படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது பெருத்த கவலையில் இருக்கிறாராம்.

The post மிகப் பெரிய வருத்தத்தில் இருக்கும் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>