Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
update – Touring Talkies https://touringtalkies.co Sat, 30 Dec 2023 11:47:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png update – Touring Talkies https://touringtalkies.co 32 32 புதிய போஸ்டர்:  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/captain-miller-release-date-update/ Sat, 30 Dec 2023 01:46:50 +0000 https://touringtalkies.co/?p=39305 தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் […]

The post புதிய போஸ்டர்:  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்…’ என்ற முதல் பாடல் மற்றும் ‘உன் ஒளியிலே…’ என்ற இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஏற்கனவே பொங்கல் வெளியீடு எனப் படக்குழு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புதிய போஸ்டர்:  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
சல்மான் கானுக்கு ஜோடியாக   த்ரிஷா https://touringtalkies.co/trisha-bollywood-movie-update/ Sat, 30 Dec 2023 01:45:33 +0000 https://touringtalkies.co/?p=39302 பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை முடித்து மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார். அங்கு முன்னணி நடிகரான […]

The post சல்மான் கானுக்கு ஜோடியாக   த்ரிஷா appeared first on Touring Talkies.

]]>
பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை முடித்து மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார். அங்கு முன்னணி நடிகரான சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்பு தகவல் வெளியானது. அதோடு ஆக்‌ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் த்ரிஷா இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னால் 2010 ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடித்த கட்டா மேத்தா படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் முதல் மற்றும் கடைசி படமாக இதுவரை இருந்து வருகிறது.

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மோகன்லாலின் ‘ராம் பார்ட் 1’ படத்தை கைவசம் வைத்துள்ளார்.

 

The post சல்மான் கானுக்கு ஜோடியாக   த்ரிஷா appeared first on Touring Talkies.

]]>
கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! https://touringtalkies.co/gautami-bjp-azagappan-case-update/ Fri, 22 Dec 2023 02:02:18 +0000 https://touringtalkies.co/?p=39064 நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் […]

The post கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! appeared first on Touring Talkies.

]]>
நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து “25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன். ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டிய கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! appeared first on Touring Talkies.

]]>
‘விஜய் 68’ : அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு! https://touringtalkies.co/thalapathy-vijay-68-update-fight-scene-in-thailand-venkat-prabhu/ Wed, 08 Nov 2023 03:52:15 +0000 https://touringtalkies.co/?p=37668 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது. “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். ‘தளபதி 68’-ல் இன்னும் நிறைய ஷூட் மற்றும் பல்வேறு கட்ட ஷெட்யூல் உள்ளது. தாய்லாந்தில் பிரதான சண்டைக் காட்சியை இரவு […]

The post ‘விஜய் 68’ : அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு! appeared first on Touring Talkies.

]]>
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். ‘தளபதி 68’-ல் இன்னும் நிறைய ஷூட் மற்றும் பல்வேறு கட்ட ஷெட்யூல் உள்ளது. தாய்லாந்தில் பிரதான சண்டைக் காட்சியை இரவு நேரத்தில் ஷூட் செய்தோம். அதனால் உங்கள் பிறந்தநாள் அன்று உங்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது” என அர்ச்சனா எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நேற்று (நவ.7) வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள்.

The post ‘விஜய் 68’ : அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு! appeared first on Touring Talkies.

]]>
லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி https://touringtalkies.co/latha-rajinikanth-kochadaiyaan-issue-case-update/ Thu, 12 Oct 2023 05:15:53 +0000 https://touringtalkies.co/?p=37066 கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார். பின்பு முரளி கடனாகப் பெற்ற […]

The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 170: அப்டேட்! https://touringtalkies.co/rajini-170-update/ Mon, 02 Oct 2023 04:26:24 +0000 https://touringtalkies.co/?p=36796 ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ரஜினி நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக, தலைவர் 170 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. மேலும், படம் பற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாகத் […]

The post தலைவர் 170: அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ரஜினி நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக, தலைவர் 170 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.

மேலும், படம் பற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

The post தலைவர் 170: அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 171:  ரஜினியே கொடுத்த அப்டேட்! https://touringtalkies.co/rajini-give-update-for-his-171th-movie-with-lokesh-kanagaraj/ Tue, 19 Sep 2023 02:15:50 +0000 https://touringtalkies.co/?p=36370 இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து ப்ளாக் பஸ்டர் கொடுத்து உள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக ரஜினியுடன் படம் எடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “ தலைவர் 171 படம் […]

The post தலைவர் 171:  ரஜினியே கொடுத்த அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து ப்ளாக் பஸ்டர் கொடுத்து உள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக ரஜினியுடன் படம் எடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “ தலைவர் 171 படம் நிச்சயமாக நல்லா வரும். தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்.  அதன்பிறகு லோகேஷ் படம் வரும்” என்று கூறினார்.

The post தலைவர் 171:  ரஜினியே கொடுத்த அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
ஜப்பான் டப்பிங்: ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தி! https://touringtalkies.co/japan-movie-update/ Sun, 17 Sep 2023 06:08:54 +0000 https://touringtalkies.co/?p=36294 ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை […]

The post ஜப்பான் டப்பிங்: ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தி! appeared first on Touring Talkies.

]]>
ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ‘வாய்ஸ்கே இப்படீனா.. படம் ரிலீஸானா’ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

The post ஜப்பான் டப்பிங்: ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தி! appeared first on Touring Talkies.

]]>
ஆர்வத்தை அதிகரிக்கும் கேள்விக்குறி!: ‘மூன்றாம் கண்’ பர்ஸ்ட் லுக் https://touringtalkies.co/vidharth-kalaiyarasan-in-moondram-kann-update/ Wed, 13 Sep 2023 03:22:56 +0000 https://touringtalkies.co/?p=36184 கே. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் உருவாக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிக்கும் படம் ‘மூன்றாம் கண்’. இப்படத்திற்கு அஜீஸ் பாடல்களுக்கு இசையமைக்க ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை ஆர்யா, கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதையின் கதாபாத்திரங்கள் மேல் நோக்கி […]

The post ஆர்வத்தை அதிகரிக்கும் கேள்விக்குறி!: ‘மூன்றாம் கண்’ பர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.

]]>
கே. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் உருவாக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிக்கும் படம் ‘மூன்றாம் கண்’.

இப்படத்திற்கு அஜீஸ் பாடல்களுக்கு இசையமைக்க ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை ஆர்யா, கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதையின் கதாபாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று காட்சியளிக்கிறார்கள்.  இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படம் குறித்து இயக்குநர், “ஒரு  அதிரடியான சம்பவம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்டி ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக படம் அமைந்துள்ளது” என்றார்.

 

The post ஆர்வத்தை அதிகரிக்கும் கேள்விக்குறி!: ‘மூன்றாம் கண்’ பர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.

]]>
சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படம் : அப்டேட்! https://touringtalkies.co/director-seenu-ramasamy-new-movie-update/ Sat, 02 Sep 2023 01:45:39 +0000 https://touringtalkies.co/?p=35885 இயக்குனர் சீனு ராமசாமி விருதுகளின் இயக்குனர் அழைக்கப்படுபவர். இவர் இயக்கும் படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கியதாகவும், எதார்த்தமான வாழ்க்கை சூழலை காட்சிப்படுத்தியதாகவும் இருக்கும். மேலும் பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவதில் முதன்மை இயக்குனர்களின் ஒருவராக இருக்கிறார். விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். அதன் பிறகு தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற திரைப்படங்கள் சீனு ராமசாமிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன் தொடர்ச்சியாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் […]

The post சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படம் : அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சீனு ராமசாமி விருதுகளின் இயக்குனர் அழைக்கப்படுபவர். இவர் இயக்கும் படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கியதாகவும், எதார்த்தமான வாழ்க்கை சூழலை காட்சிப்படுத்தியதாகவும் இருக்கும். மேலும் பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவதில் முதன்மை இயக்குனர்களின் ஒருவராக இருக்கிறார்.

விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். அதன் பிறகு தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற திரைப்படங்கள் சீனு ராமசாமிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன் தொடர்ச்சியாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தற்போது புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க உள்ள திரைப்படத்திற்கு கோழிப்பண்ணை செல்லதுரை என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் காதல் கதையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்திற்கு எம்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார். மேலும் திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழுவின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது படத்தின்னுடைய நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.

The post சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படம் : அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>