Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thalaivi movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 05 Sep 2021 12:49:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thalaivi movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம் https://touringtalkies.co/a-problem-raised-in-north-indian-cinema-theatres-releasing-thalaivi-movie/ Sun, 05 Sep 2021 12:48:28 +0000 https://touringtalkies.co/?p=17690 கங்கனா ரணாவத் நடித்திருக்கும் ‘தலைவி’ திரைப்படம் வட இந்தியாவில் திரையிடுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. வட இந்தியாவில் மிக அதிகமான மால் தியேட்டர்களைத் தங்கள் கை வசம் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினி போலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் ‘தலைவி’ படத்தைத் திரையிடுவதாக இல்லை என்று சொல்லிவிட்டன. தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ‘தலைவி’ படத்தை வெளியிட வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நிராகரித்ததே இதற்குக் காரணம். […]

The post ‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
கங்கனா ரணாவத் நடித்திருக்கும் ‘தலைவி’ திரைப்படம் வட இந்தியாவில் திரையிடுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

வட இந்தியாவில் மிக அதிகமான மால் தியேட்டர்களைத் தங்கள் கை வசம் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினி போலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் ‘தலைவி’ படத்தைத் திரையிடுவதாக இல்லை என்று சொல்லிவிட்டன.

தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ‘தலைவி’ படத்தை வெளியிட வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நிராகரித்ததே இதற்குக் காரணம்.

‘தலைவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியே சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதற்கான மாஸ்டர் பிரிண்ட்டும் தனித்தனியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

‘தலைவி’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘தலைவி’ படத்தின் ஹிந்தி உரிமை மட்டும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனையாகியுள்ளது.

தியேட்டர்களின் 4 வார கால இடைவெளி நிபந்தனையை தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமேஸான் நிறுவனம் ஏற்றுக் கொண்டதையடுத்து ‘தலைவி’ படத்தின் தென்னக மொழிகளின் பிரதி அமேஸான் பிரைம் வீடியோ தளத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இதன் ஹிந்தி பதிப்பை ஓடிடியில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த நிபந்தனையை ஏற்க மறுக்கிறது. 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதால் தாங்கள் இதை ஏற்க முடியாது என்று நெட்பிளிக்ஸ் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

தயாரிப்பாளர்கள் தரப்பும் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போயுள்ளனர். வேண்டுமென்றால் 55 கோடியைக் கொடுத்துவிட்டு படத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாம்.

இதனால் வட இந்தியாவில் மிக அதிகத் தியேட்டர்களைக் கையில் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் தலைவியைத் திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில் இந்தப் பிரச்சினை குறித்து வருத்தப்பட்டிருக்கும் படத்தின் நாயகியான கங்கனா ரணாவத், சமூக வலைத்தளத்தில் மிகவும் வருத்தப்பட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “எந்தத் திரைப்படமும் இன்றைய சூழலில் திரையரங்க வெளியீட்டுக்குச் செல்வதில்லை. விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் போன்ற துணிச்சலான சில தயாரிப்பாளர்கள்தான் பெரிய லாபத்தை வேண்டாம் என்று சமரசம் செய்து கொண்டும், பிரத்தியேக ஓடிடி வெளியீட்டு வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் காதல்.

இந்தக் கடினமான சூழலில் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும். துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது. நாங்கள் செய்திருக்கும் படத்தின் முதலீட்டைத் திரும்பச் சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை உரிமை.

இந்தி பதிப்புக்கு 2 வார கால இடைவெளி இருக்கிறது. தமிழுக்கு 4 வாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அங்கு மல்டிப்ளக்ஸ் தரப்பில் அனைவரும் எங்களுக்கு எதிராக அணி திரண்டு எங்கள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கிறார்கள்.

மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இது போன்றதொரு சோதனைக் காலத்தில் இது நியாயமற்ற, கொடூரமான செயல். திரையரங்குகளைக் காப்பாற்ற நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

The post ‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..! https://touringtalkies.co/kangana-ranavat-as-jayalalitha-character-in-thalaivi-movie/ Sun, 11 Oct 2020 08:32:00 +0000 https://touringtalkies.co/?p=8608 இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களிடம் இருந்து இத்திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்ற பின்புதான் இந்த ப் படம் உருவாகி வருகிறது.  விப்ரி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரியும், கர்மா மீடியா அண்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சைலீஸ் ஆர்.சிங்கும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் […]

The post ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.

]]>

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களிடம் இருந்து இத்திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்ற பின்புதான் இந்த ப் படம் உருவாகி வருகிறது. 

விப்ரி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரியும், கர்மா மீடியா அண்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சைலீஸ் ஆர்.சிங்கும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சசிகலா கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், பூர்ணா, ஜிஸ்னு சென்குப்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘பாகுபலி’ எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஆண்டனி படத் தொகுப்பு செய்கிறார். ஏ.எல்.விஜய் படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

The post ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.

]]>