Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Film Producers Council – Touring Talkies https://touringtalkies.co Fri, 21 Jan 2022 11:00:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Film Producers Council – Touring Talkies https://touringtalkies.co 32 32 தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மீது மோசடிப் புகார் https://touringtalkies.co/fraud-complaint-against-tamil-film-producers-association-president-murali-ramasamy/ Fri, 21 Jan 2022 10:58:06 +0000 https://touringtalkies.co/?p=20352 நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தருவதாக கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன். இதன் தமிழ்நாட்டு கிளை நிர்வாக இயக்குனர் ராஷிக் அகமது கனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மீது மோசடிப் புகார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தருவதாக கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன். இதன் தமிழ்நாட்டு கிளை நிர்வாக இயக்குனர் ராஷிக் அகமது கனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி, தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் விநியோக உரிமைகள் இருப்பதாக கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் நிறுவனத்திடம் 30 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதன் பின்பு விசாரித்தபோது ‘பேட்ட’ படத்தின் வினியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் பொழுது கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 15 கோடி ரூபாய் பணத்தில் 5 கோடி ரூபாய்க்கு முன் தேதியிட்ட காசோலையும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பணத்திற்கு ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களின் விநியோக உரிமையை தருவதாக கூறி மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ‘காஞ்சனா-3’ படத்தின் விநியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும், நான் ருத்ரன்’ படம் இயக்கப்படாமலேயே கை விடப்பட்டதும் பின்புதான் தமக்குத் தெரிய வந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 கோடி ரூபாய்க்காக கொடுத்த காசோலையும் முரளி வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மோசடி செய்ததன் காரணமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவருமான முரளியிடம் முறையிட்டபோது, மிரட்டும் தொனியில் தங்களிடம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது” என மிரட்டல் விடுத்த முரளி மீது கடந்த ஆண்டு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் எந்தவித விசாரணையும் இல்லாமல் அந்தப் புகாரை போலீஸார் முடித்து வைத்துவிட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி தங்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மத்திய குற்றப் பிரிவு மீண்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

அடுத்தக்கட்டமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மீது மோசடிப் புகார் appeared first on Touring Talkies.

]]>
“R.K.செல்வமணியின் அவசரத்திற்கு என்ன காரணம்” – தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம் https://touringtalkies.co/tfpc-condemns-fefsi-president-r-k-selvamani/ Sun, 09 Jan 2022 12:10:34 +0000 https://touringtalkies.co/?p=20164 “பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகவில்லை…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி தெரிவித்துள்ளார். நேற்றைக்கு பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட ஒரு அறிக்கையில் “பெப்சி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதால் அதனை தமிழக முதல்வர் முன்னிலையில் நடத்த விருப்பப்படுகிறோம். இதனால் தமிழக முதல்வர் இதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும்…” என்று கேட்டிருந்தார். இந்தச் சூழலில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான என்.இராமசாமி இன்றைக்கு […]

The post “R.K.செல்வமணியின் அவசரத்திற்கு என்ன காரணம்” – தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
“பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகவில்லை…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

நேற்றைக்கு பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட ஒரு அறிக்கையில் “பெப்சி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதால் அதனை தமிழக முதல்வர் முன்னிலையில் நடத்த விருப்பப்படுகிறோம். இதனால் தமிழக முதல்வர் இதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும்…” என்று கேட்டிருந்தார்.

இந்தச் சூழலில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான என்.இராமசாமி இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரை உலகில் 24 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சியுடன் சம்பள உயர்வு குறித்து நமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இரு சாராரும் இன்னும் கையெழுத்து போட்டு இறுதியும் செய்யவில்லை. இன்னமும் சம்பள உயர்வு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை.

அதற்குள் அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவசர கதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன? இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி இறுதி செய்த பின்னர் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் அது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்  தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதன் பிறகுதான் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும்.

அதுவரையில் இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள்  வழங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்த கொரோனா மற்றும் ஓமைக்காரன் பிடியில் சிக்காமல் முக கவசத்தை படப்பிடிப்பு குழுவினருக்கு தவறாமல் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு, பாடல் மற்றும் வசன பதிவு உட்பட அனைத்து திரைத்துறை பணிகளையும் எச்சரிக்கையுடன் தயாரிப்பாளர்கள் திரைப்பட  பணிகளை கையாள வேண்டுகிறேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். தயாரிப்பாளர்கள் நலமுடன் இருந்தால்தான் நம்மை நம்பி இருப்பவர்களும் நலமுடன் இருப்பார்கள். சமூக அக்கறையுடன் திரையுலக தொழில் நுட்பக் கலைஞர்களை  காப்பதும் நமது கடமை” என்று  அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

The post “R.K.செல்வமணியின் அவசரத்திற்கு என்ன காரணம்” – தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
“எனக்கு 20 வயது குறைந்துவிட்டது” – மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் வடிவேலு https://touringtalkies.co/my-age-was-reduced-20-years-actor-vadivelu-at-the-peak-of-happiness/ Sat, 28 Aug 2021 12:27:21 +0000 https://touringtalkies.co/?p=17426 ‘வைகை புயல்’ வடிவேலுவுக்கு எதிராக தமிழ்த் திரையுலகத்தில் நீடித்து வந்த மறைமுக தடை நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டதால் நடிகர் வடிவேலு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். ’இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத் தயாரிப்பின்போது தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரிடம் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அந்தப் படத்திலிருந்து தடாலடியாக விலகினார் வடிவேலு. இயக்குநர் ஷங்கர் இதனை தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கொண்டு செல்ல.. அங்கே பஞ்சாயத்துக்கு ஏற்பாடானது. ஆனால் வடிவேலு பஞ்சாயத்திற்கு வராமல் […]

The post “எனக்கு 20 வயது குறைந்துவிட்டது” – மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
வைகை புயல்’ வடிவேலுவுக்கு எதிராக தமிழ்த் திரையுலகத்தில் நீடித்து வந்த மறைமுக தடை நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டதால் நடிகர் வடிவேலு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

’இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத் தயாரிப்பின்போது தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரிடம் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அந்தப் படத்திலிருந்து தடாலடியாக விலகினார் வடிவேலு.

இயக்குநர் ஷங்கர் இதனை தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கொண்டு செல்ல.. அங்கே பஞ்சாயத்துக்கு ஏற்பாடானது. ஆனால் வடிவேலு பஞ்சாயத்திற்கு வராமல் போனதால் அவர் மீது மறைமுகத் தடையை தயாரிப்பாளர் சங்கம் விதித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் நேற்றைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை மூலமாக செய்தியை வெளியிட்டது.

இது குறித்து நடிகர் வடிவேலு இன்று அளித்த பேட்டியில், “எனக்கு எதிரான ரெட் கார்டை நீக்கியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனக்கு நிச்சயமாக மறு பிறவிதான். எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு.

நான் மீண்டும் சினிமாவில் தோன்ற இருப்பதை நினைத்தால், முதன்முதலில் நான் நடிக்க வாய்ப்பு தேடியது போன்ற உணர்வைத் தருகிறது. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது.

என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன். அவர் இனிமேல் சபாஷ்கரன் என்றழைக்கப்படுவார்.

நான் அடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன்.

நான் தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர்தான் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்…” என்று கூறியுள்ளார் வடிவேலு.

The post “எனக்கு 20 வயது குறைந்துவிட்டது” – மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
சிம்பு தர வேண்டிய கடன்களை செட்டில் செய்ய டி.ராஜேந்தர் சம்மதம் https://touringtalkies.co/t-rajender-agrees-to-settle-the-debts-owed-by-simbu/ Thu, 12 Aug 2021 08:12:14 +0000 https://touringtalkies.co/?p=16975 நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே இருந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. நடிகர் சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் அந்தப் பணத்தை செட்டில் செய்த பின்புதான் அவரது அடுத்தப் படத்தைத் துவக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் கிடுக்கிப்பிடி போட்டது. நடிகர் சிம்புவின் நடிப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இந்தத் தடையால் பெரும் சிக்கலுக்குள்ளானது. கடைசியில், “4 நாட்கள் […]

The post சிம்பு தர வேண்டிய கடன்களை செட்டில் செய்ய டி.ராஜேந்தர் சம்மதம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே இருந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

நடிகர் சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் அந்தப் பணத்தை செட்டில் செய்த பின்புதான் அவரது அடுத்தப் படத்தைத் துவக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் கிடுக்கிப்பிடி போட்டது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இந்தத் தடையால் பெரும் சிக்கலுக்குள்ளானது. கடைசியில், “4 நாட்கள் மட்டும் படமெடுத்துக் கொள்கிறோம்” என்ற உத்தரவாதத்துடன் அந்தப் படத்தின் ஷூட்டிங் திருச்செந்தூரில் நடந்தது.

இந்தப் படப்பிடிப்பிற்கு அனுமதி தந்ததற்காக பெப்சி அமைப்பின் மீது கோபப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சியுடனான தங்களது ஒப்பந்தங்களை கேன்ஸல் செய்வதாக அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கத்தை கலைத்துவிட்டு மீண்டும் தாய்ச் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் அந்தச் சங்கத்தைச் சேர்ந்த 8 நிர்வாகிகளும் டி.ராஜேந்தருக்கு கடிதம் எழுதிய கையோடு பகிரங்கமாக வெளியிலும் சொல்லிவிட்டார்கள்.

அந்தச் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இது தொடர்பாக ஆடியோ பதிவினை வெளியிட டி.ராஜேந்தரின் நிலைமை சிக்கலுக்குள்ளாகியது.

இதேபோல் மற்றுமொரு ஆடியோவை வெளியிட்ட சிங்காரவேலன், அந்த ஆடியோவில் டி.ராஜேந்தரிடம் “எப்படியாவது சீக்கிரமாக கடனை செட்டில் செய்யுங்கள்” என்று பேசியது திரையுலகத்தில் அனைத்து சங்கங்களின் வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பவனி வர.. டி.ராஜேந்தருக்கு பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படு்த்தியது.

இப்போது கடனை செட்டில் செய்யாவிட்டால் மீண்டும் படப்பிடிப்பு துவங்காது என்பதைவிடவும் தான் நிறுவனராக இருக்கும் தயாரிப்பாளர்கள்  சங்கத்தில் இனிமேல் தான் மற்றும் தனது மனைவியைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் என்கிற நிதர்சனத்தை டி.ராஜேந்தர் சற்று காலதாமதமாகவே உணர்ந்திருக்கிறார்.

இதையடுத்து உடனேயே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுடன் அவரே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், விஜய், முரளி ராமசாமி ஆகியோருக்குத் தர வேண்டிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுத்துவிடுவதாகச் சொல்லிவிட்டார். இதற்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பாக்கியில் இருந்து பெற்றுக் கொள்ளவும் சம்மதித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்காக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் கிடைக்கப் போகும் சம்பளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும்படியும் டி.ராஜேந்தர் ஒப்புதல் சொல்லிவிட்டாராம்.

மைக்கேல் ராயப்பன் இப்போதுவரையிலும் 8 கோடி ரூபாய் வரையிலும் நஷ்ட ஈடு கேட்கிறாராம். ஆனால், இதில் 4 கோடியை மட்டும் கொடுப்பதற்கு இப்போது டி.ராஜேந்தர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் கெளதம் மேனனின் திரைப்படத்தின் அடுத்தக் கட்ட ஷூட்டிங் மிக விரைவில் துவங்குமாம். இப்போதைக்கு சிம்புவின் கடன் பிரச்சினைகள் இப்படித்தான் பேசி முடிக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சிம்பு தர வேண்டிய கடன்களை செட்டில் செய்ய டி.ராஜேந்தர் சம்மதம் appeared first on Touring Talkies.

]]>
“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு https://touringtalkies.co/producers-union-president-complains-to-chief-minister-about-murali-producer-singaravelan-announcement/ Tue, 03 Aug 2021 06:09:08 +0000 https://touringtalkies.co/?p=16714 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி மீது கடுமையான புகார்களை எழுப்பியிருக்கிறார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் முரளியும், சிங்காரவேலனும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். மேலும் தற்போது சிங்காரவேலன் டி.ராஜேந்தர் கெளரவத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை சிங்காரவேலன் வெளியிடுவது வழக்கம். அதேபோல்தான் ஒரு ஆடியோ பதிவை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். ஆனால், அது அளவு கடந்த அர்ச்சனையாகிவிட்டதுதான் அனைவருக்கும் […]

The post “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி மீது கடுமையான புகார்களை எழுப்பியிருக்கிறார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் முரளியும், சிங்காரவேலனும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். மேலும் தற்போது சிங்காரவேலன் டி.ராஜேந்தர் கெளரவத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை சிங்காரவேலன் வெளியிடுவது வழக்கம். அதேபோல்தான் ஒரு ஆடியோ பதிவை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். ஆனால், அது அளவு கடந்த அர்ச்சனையாகிவிட்டதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியளித்த செய்தி.

முரளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு திரையுலகத்தில் பலரையும் மிரட்டி வருவதாகப் புகார் கூறியுள்ளார் சிங்காரவேலன்.

அவர் மேலும் கூறும்போது, “தன்னைத் தவிர வேறு யாரும் முதல்வருடன் நேரடியாக பேச முடியாது. நான் மட்டுமே பேசி வருகிறேன். எனவே இந்தத் திரையுலகத்துக்கே நான்தான் அத்தாரிட்டி என்பதைபோல முரளியின் செயல்பாடுகள் உள்ளன.

‘பெப்சி’யின் தலைவர் செல்வமணியைக்கூட முரளி மிரட்டி வைத்திருக்கிறார். “உங்களைப் பதவியைவிட்டுத் தூக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் நான்தான் உங்களுக்கு ஆதரவாகப் பேசி உங்களை இருக்க வைத்துள்ளேன். அதனால் நீங்கள் என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். மற்றைய சங்கங்களின் பேச்சைக் கேட்கக் கூடாது” என்று செல்வமணியை முரளி மிரட்டி வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இப்படி பெப்சி அமைப்பை மிரட்டித்தான் நடிகர் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்க வைத்துள்ளார் முரளி. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சிம்பு நிச்சயமாக கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது எதற்காக அவர் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டும்..? இது அராஜகமானது.

முரளியின் அத்துமீறல்களைப் பற்றி மிக விரைவில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதல்வரிடம் நேரில் சென்று புகார் கூறவுள்ளோம்..” என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

The post “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் https://touringtalkies.co/tamil-film-producers-association-asks-members-for-details-of-unreleased-films/ Fri, 25 Jun 2021 13:19:16 +0000 https://touringtalkies.co/?p=15778 கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுள்ளது. இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் இது : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனையும் செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை […]

The post உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுள்ளது.

இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் இது :

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனையும் செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்கள் ஆகியவற்றின் விபரங்ககளை தர வேண்டும்.

ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தால் அதன் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரங்களையும் எந்த லேப்-பில் படம் உள்ளது என்ற முழு விவரம், சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அந்தப் பிரச்சினை குறித்த முழு விவரங்கள் அனைத்தையும் தங்களது லெட்டர் பேடில் கடிதமாக எழுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வருகிற 28-ம் தேதிக்குள் தெரிவிக்க  வேண்டும்..” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களுக்காகவே உருவாக்க இருக்கும் ஓடிடி தளத்திற்காக இந்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

The post உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமானது..! https://touringtalkies.co/t-rajendar-forms-new-producers-council/ Wed, 02 Dec 2020 06:00:58 +0000 https://touringtalkies.co/?p=10601 இருக்கின்ற சங்கங்களே போதாதா என்னும் நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று புதிய சங்கமும் உருவாகியுள்ளது. இந்தச் சங்கத்தை இயக்குநர் டி.ராஜேந்தரே துவக்கியிருக்கிறார். சமீபத்தி்ல் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த டி.ராஜேந்தர் அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கென்று ஒரு சங்கத்தைத் திட்டமிட்டு துவக்கியிருக்கிறார் என்கிறார்கள். அதுவும்.. இன்றைக்கு காலையில்தான் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் முன்னிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் பதவியேற்றுக் […]

The post டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமானது..! appeared first on Touring Talkies.

]]>
இருக்கின்ற சங்கங்களே போதாதா என்னும் நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று புதிய சங்கமும் உருவாகியுள்ளது.

இந்தச் சங்கத்தை இயக்குநர் டி.ராஜேந்தரே துவக்கியிருக்கிறார். சமீபத்தி்ல் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த டி.ராஜேந்தர் அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கென்று ஒரு சங்கத்தைத் திட்டமிட்டு துவக்கியிருக்கிறார் என்கிறார்கள்.

அதுவும்.. இன்றைக்கு காலையில்தான் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் முன்னிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அனைவரின் செல்போனுக்கும் அதிர்ச்சியளிக்கும்விதமாக இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறது டி.ராஜேந்தரின் அணி.

இந்தப் புதிய சங்கத்திற்கு ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இ்ந்தப் புதிய சங்கம் சென்னை தெற்கு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சங்கம் நேற்று டிசம்பர் 1-ம் தேதியன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக சங்கப் பதிவாளர் ஒப்புதல் கடிதம் அளித்திருக்கிறார்.

இந்தச் சங்கத்திற்கு டி.ராஜேந்தரே தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.ராஜன் பொருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் அணியில் சார்பாக சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அனைத்து தயாரிப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனராம்.

நடந்து முடிந்த தேர்தலில் முரளி ராமசாமி அணியினர் மிகப் பெரிய அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம், தங்கக் காசு, டிவிக்கள் என்று அன்பளிப்புகளை அள்ளி வழங்கியதாலேயே அவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக டி.ராஜேந்தர் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் தேர்தலை நடத்திய நீதிபதி அதனை ஏற்க மறுத்து “தேர்தல் செல்லும்” என்று அறிவித்துவிட்டபடியால் “மேலும், அங்கேயிருந்து நாங்கள் அவமானப்பட விருப்பமில்லை…” என்று சொல்லி டி.ராஜேந்தர் வெளியேறியிருக்கிறார்.

தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களுக்கென்று இந்தப் புதிய சங்கத்தையும் சேர்த்து 5 சங்கங்கள் இருக்கின்றன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘கில்டு’ எனப்படும் தென்னிந்திய திரைப்படம்-டிவி தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்று 5 சங்கங்களாக தயாரிப்பாளர்கள் பிரிந்திருக்கின்றனர்.

ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் தமிழ்த் திரையுலகத்துக்குள்ளேயே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இப்படி 5 சங்கங்களாக பிரிந்து சென்று யாருக்காக இவர்கள் போராடப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

“தனி மனித ஈகோவினால்தான் சங்கங்கள் சாகின்றன” என்று பல திரையுலக பிரபலங்கள் சொல்லி வந்தார்கள். அது இப்போது டி.ராஜேந்தரின் இந்த புதிய சங்க முடிவிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தமிழ்த் திரையுலகத்தை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!

The post டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமானது..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! https://touringtalkies.co/simbu-venkat-prabhu-will-joins-for-tfpc-production-movie/ Mon, 30 Nov 2020 09:32:41 +0000 https://touringtalkies.co/?p=10466 நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” […]

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.

படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.

ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் https://touringtalkies.co/producers-union-election-fraud-t-rajender-complaint/ Fri, 27 Nov 2020 09:00:26 +0000 https://touringtalkies.co/?p=10427 நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தி பலரும் வாக்களித்துள்ளதாக இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்த டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் தனி அலுவலர் மஞ்சுளாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் “நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் appeared first on Touring Talkies.

]]>
நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தி பலரும் வாக்களித்துள்ளதாக இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்த டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் தனி அலுவலர் மஞ்சுளாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் “நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் மட்டுமே சரியானது. சுமார் 250 கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

யாரோ ஒரு சிலர் ஒட்டு மொத்தமாய் சந்தா கட்டாத உறுப்பினர்களுக்காக சந்தா கட்டி அவர்களுடைய அடையாள அட்டையை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் மூலமாக தேர்தலின்போது கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது..” என்று கூறியுள்ளார்.

இது குறித்து சில விளக்கங்களை கேட்டு பதிவுத் துறை அலுவலகத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் விண்ணப்பித்துள்ளார்.

மழைவிட்டும் தூவானம்விடவில்லை’ என்பார்கள். அது திரைப்பட சங்கங்களின் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும் போலிருக்கிறது.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! https://touringtalkies.co/tfpc-election-2020-result/ Mon, 23 Nov 2020 06:11:40 +0000 https://touringtalkies.co/?p=10310 நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் : மொத்தம் பதிவான வாக்குகள்-1050 ராமசாமி @முரளி-557 டி.ராஜேந்தர்-388 தேனப்பன்-88 செல்லாதவை-17 துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வாக்குகள் விபரம் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>
நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :

மொத்தம் பதிவான வாக்குகள்-1050

ராமசாமி @முரளி-557

டி.ராஜேந்தர்-388

தேனப்பன்-88

செல்லாதவை-17

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்குகள் விபரம் :

கதிரேசன் – 493

R.K.சுரேஷ் – 419

P.T.செல்வகுமார் – 305

பாண்டியன் – 277

சிங்காரவேலன் – 193

முருகன் – 110

மதியழகன் – 50

பொருளாளர் பதவிக்கான தேர்தலில் சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம் :

சந்திர பிரகாஷ் ஜெயின் – 407

K.ராஜன் — 382

J.S.K சதீஷ்குமார் – 233

கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.

துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர்.

கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர்.

மற்றைய வெற்றியாளர்கள் அனைவரும் முரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

1) ஆர்.வி.உதயகுமார் – 598

2) அழகன் தமிழ்மணி – 470

3) மனோபாலா – 431

4) கே.பி.பிலிம்ஸ் பாலு – 425

5) மனோஜ்குமார் – 420

6) ஷக்தி சிதம்பரம் – 419

7) செளந்தரபாண்டியன் – 414

8) ஆர்.மாதேஷ் – 397

9) விஜயமுரளி – 396

10) ஏ.எல்.உதயா – 394

11) பைஜா டோம் – 366

12) டேவிட் ராஜ் – 352

13) பாபு கணேஷ் – 343

14) ராஜேஸ்வரி வேந்தன் – 341

15) ஏ.எம்.ரத்னம் – 339

16) அன்பாலயா கே.பிரபாகரன் – 326

17) K.K.ராஜ்சிற்பி – 326

18) வி.பழனிவேல் – 310

19) எஸ்.ராமச்சந்திரன் – 308

20) பிரைமுஸ்தாஸ் – 297

21) வீ.சரவணன் – 283

இவர்களில்,

1. அழகன் தமிழ் மணி (EC-7)
2. K.பாலு (EC-11)
3. G.M.டேவிட் ராஜ் (EC-15)
4. R. மாதேஷ் (EC-32)
5. பழனிவேல் (EC-40)
6. ராஜேஸ்வரி வேந்தன் (EC-53)
7. K.K.ராஜ்சிற்பி (EC-55)
8. S.ராமசந்திரன் (EC-57)
9. S.சௌந்தரபாண்டியன் (EC-74)
10. N.விஜயமுரளி (EC-89)
11. A.L.உதயா (EC-92)
12. R.V.உதயகுமார் (EC-93) – ஆகிய 12 பேர் முரளியின் ‘தயாரிப்பாளரின் நலன் காக்கும் அணி’யைச் சேர்ந்தவர்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் முரளி அணியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>