Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Film Producers Council Election 2020 – Touring Talkies https://touringtalkies.co Sun, 22 Nov 2020 07:28:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Film Producers Council Election 2020 – Touring Talkies https://touringtalkies.co 32 32 “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! https://touringtalkies.co/producer-dhananjayan-comments-about-vishal-contest-tfpc-election/ Sun, 22 Nov 2020 07:26:31 +0000 https://touringtalkies.co/?p=10286 நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே […]

The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே சிக்கலில் மாட்டிக் கொள்வார். இப்படித்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வந்தபோது விஷால் அதில் நிற்பதாகவே இல்லை. அவர் ஒரு அணி அமைத்து அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகத்தான் முதலில் அவருடைய திட்டம் இருந்தது.

இது குறித்து பல முறை அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வேனில் அமர்ந்து மணிக்கணக்காக நான் பேசியிருக்கிறேன். பின்பு அவரது அலுவலகம், என் அலுவலகம் என்று பல இடங்களிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

என்னை பொருளாளர் பதவிக்கு நிற்கச் சொன்னார். நானும் “ஓகே” என்று சொல்லிவிட்டேன். டி.சிவாவை தலைவர் பதவிக்கு முதலிலேயே நிறுத்தலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

திடீரென்று விஷால் தனது நண்பர்கள் பேச்சைக் கேட்டு “தலைவர் பதவியில் நான் நிற்கிறேன்…” என்றார். இதில் எனக்கு உடன்பாடில்லை. “இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது சரியல்ல…” என்று விஷாலிடம் சொன்னேன். விஷால் கேட்கவில்லை. அப்போ.. நானும் போட்டியிடவில்லை என்று சொல்லி விலகிக் கொண்டேன்.

பிறகு சுயேச்சையாக தனித்து நிற்கலாம் என்று கூட நினைத்து, பின்பு அதுவும் வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொண்டேன். விஷால் அந்தத் தேர்தலில் நின்றிருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து..” என்றார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! https://touringtalkies.co/3rd-front-team-contest-in-tfpc-election-2020/ Sun, 01 Nov 2020 06:33:28 +0000 https://touringtalkies.co/?p=9552 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள். 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இந்த ’முன்னேற்ற அணி’யின் […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இந்த ’முன்னேற்ற அணி’யின் வேட்பாளர்களின் அறிமுக விழா நேற்று காலை, சென்னையில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் 21 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு :

1.எஸ்.ரங்கா (எ) ரங்கா ரெட்டி

  1. எஸ்.வி.தங்கராஜ் – சுந்தரா டிராவல்ஸ்
  2. ஏ.ஏழுமலை
  3. எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார்
  4. பி.ஜி.பாலாஜி
  5. கே.சுரேஷ் கண்ணன்
  6. பி.ராஜேந்திரன் (எ) கெட்டப் ராஜேந்திரன்
  7. எஸ்.ஜோதி
  8. கே.வி.குணசேகரன்
  9. வின்னர் பூமா ராமச்சந்திரன்
  10. எஸ்.கமலக்கண்ணன்
  11. பி.ராஜசேகரன் (எ) சாந்தகுமார்
  12. ஏ.ஜெமினி ராகவா
  13. எஸ்.சேகர்
  14. கே.ஆர்.சுரேஷ்
  15. Lr.Dr.ஆதிவெங்கடாசலம் MA, ML, D.HUM.,
  16. வி.சி.கணேசன்
  17. பி.ராஜேந்திரன்
  18. பெஞ்சமின்
  19. எம்.எஸ்.யாகூப்தீன்
  20. பி.செல்வகுமார் (எ) நண்டு பாஸ்கி

வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முன்னேற்ற அணியினர் பேசும்போது, “இந்தத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளுக்கு நாங்கள் யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறோம்.

இதற்கு காரணம், ஒவ்வொரு முறையும் போட்டியிடும் அணி மற்றும் அந்த அணியைச் சார்ந்தவர்கள், சிலருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், சிறு பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்டும் வாக்குறுதிகள் அனைத்தும் கிடப்பில் போடப்படுகின்றன.

எனவேதான் நாங்கள் எந்த அணியையும் சாராமல், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டிடுகிறோம்.

எங்களது தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’யில் இருப்பவர்கள் அனைவரும் 15 வருட திரைப்பட தயாரிப்பு அனுபவம் கொண்டவர்கள். அதுமட்டுமின்றி, நாங்கள் அனைவரும் பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகித்ததோடு, பலரது வெற்றிக்காக உழைத்திருக்கிறோம்.

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம். அதனால், நாங்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி.

நாங்கள் வெற்றி பெற்று வரும்பட்சத்தில், தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்போம்.

அதே சமயம், எங்களுடைய கோரிக்கைகளையும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகைகளும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.

எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் என்னவென்றால்,

சிறு முதலீட்டு திரைப்படங்களை தொலைக்காட்சிகள் வாங்க வேண்டும்.

எப்.எம்.எஸ். என்று செல்லக் கூடிய வெளிநாட்டு உரிமம் விற்பனையாக வேண்டும்.

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பங்களை ஒழுங்கு முறைப்படுத்தி சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு ஏற்படாமல் செய்ய வேண்டும்.

இந்தி டப்பிங் உரிமை விற்பனை முறைப்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கோரிக்கைகளும் அனைத்து சிறு முதலீட்டு படங்களுக்கும் நிறைவேறும் வகையில் நாங்கள் செயல்படுவோம்.

தற்போதைய காலக்கட்டத்தில் முதலீடு செய்து திரைப்படம் தயாரிக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வருமானம் வருவதற்கான அனைத்து சூழல்களும் இருந்தாலும், அவற்றை சிலர் திட்டமிட்டு தடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வரும் வகையில் பணியாற்றுவோம்…” என்றனர்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு https://touringtalkies.co/actor-parthiban-refuses-to-contest-in-tfpc-election-2020/ Tue, 20 Oct 2020 07:24:31 +0000 https://touringtalkies.co/?p=9046 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி அணி என்று 3 அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது. இதில் டி.ராஜேந்தர் அணியில் அவர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்த அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட நடிகர் பார்த்திபனை அழைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால் பார்த்திபனோ தனது அடுத்தப் பட […]

The post டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி அணி என்று 3 அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.

இதில் டி.ராஜேந்தர் அணியில் அவர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட நடிகர் பார்த்திபனை அழைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால் பார்த்திபனோ தனது அடுத்தப் பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இந்த முறை சங்கத்தில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டாராம்.

பார்த்திபன் விஷால் தலைமையில் அமைந்திருந்த சென்ற நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மொத்த வேட்பு மனுக்களையும் இன்றைக்கு டி.ராஜேந்தர் வாங்கிச் சென்றுள்ளார்.

அவர் அணியின் மொத்த வேட்பாளர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! https://touringtalkies.co/tamil-film-producers-council-2020-election-dates-announcement/ Fri, 09 Oct 2020 06:08:10 +0000 https://touringtalkies.co/?p=8483 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகள் நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு அடுத்த மாதம், நவம்பர் 22-ம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை :

வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 15 முதல் 23-ம் தேதி மாலை 3.30 மணி வரையிலும் சங்க அலுவலகத்தில் தரப்படும். 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை அக்டோபர் 16 முதல் 23-ம் தேதி மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

வேட்பு மனுக்களை பரிசீலைனை செய்வது அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

வேட்பு மனுக்களை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 29-ம் தேதி மாலை 4 மணிவரையிலும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

அக்டோபர் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

அக்டோபர் 30-ம் தேதியன்று தேர்தலில் நிற்கும் இறுதி வேட்பாளர் பட்டியல்.. தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாக்குப் பதிவு நவம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விபரங்கள் :

தலைவர் பதவிக்கு – ஒரு லட்சம் ரூபாய் மட்டும்

மற்ற நிர்வாகப் பதவிகளுக்கு – ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூபாய் பத்தாயிரம் மட்டும்.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.

]]>