Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Film Active Producers Association – Touring Talkies https://touringtalkies.co Sat, 01 May 2021 16:23:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Film Active Producers Association – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்சார் கடித அனுமதி கிடைத்தது https://touringtalkies.co/tfapa-gets-permission-for-noc-to-new-movies-censor-certifcate/ Sat, 01 May 2021 07:42:04 +0000 https://touringtalkies.co/?p=14812 தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் தலைப்புக்கு அனுமதி பெறுவது மற்றும், விளம்பர அனுமதிக்கான உரிமத்தை தென் பிராந்திய தணிக்கை அதிகாரி வழங்கியுள்ளார். இது குறித்து இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி.சிவா இன்று காலையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…. “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடப்பில் அதிகம் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும் […]

The post நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்சார் கடித அனுமதி கிடைத்தது appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் தலைப்புக்கு அனுமதி பெறுவது மற்றும், விளம்பர அனுமதிக்கான உரிமத்தை தென் பிராந்திய தணிக்கை அதிகாரி வழங்கியுள்ளார்.

இது குறித்து இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி.சிவா இன்று காலையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்….

“தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நடப்பில் அதிகம் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும் பலர் ஒவ்வொரு மாதமும் இணைந்து வருகிறார்கள்.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, நமது உறுப்பினர்களான தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வந்திருக்கிறது. 

குயூப் (QUBE) கட்டணத்திற்கான ஒப்பந்தம் செய்வது, OTT தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்வது, FEFSI தொழிலாளர்கள் சங்கத்துடன் பல விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது என பல ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளை நமது சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.

இவ்வாறு அனைத்து சேவைகளையும் நமது தயாரிப்பாளர்களுக்கு செய்து வந்தாலும், அவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான சேவைகளான திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதிகளை நமது சங்கத்தால் உடனே தர முடியவில்லை.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த அனுமதி கோரி, தீவிர முயற்சிகள் எடுத்து, பல முறை புதுடெல்லி சென்று மத்திய அமைச்சர் முதல் அனைத்து அதிகாரிகளையும் பார்த்து கோரிக்கை வைத்து வந்தோம்.

நமது இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நேற்று (30.4.2021), இந்த அனுமதியை, பிராந்திய தணிக்கை அதிகாரி (Regional Censor Officer) வழங்கி உத்தரவு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இனி நமது சங்க உறுப்பினர்களுக்கு திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதியை நமது சங்க அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

இனி நமது சங்கம், உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் முழு வீச்சுடன் தர தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும், இந்த சேவைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

புதிதாக திரைப்படம் எடுக்க விழையும் புதிய தயாரிப்பாளர்களும், தமிழ் சினிமாவின் முன்னணி சங்கமாக வளர்ந்து வரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்…” என்று கூறியுள்ளார்.

ஒரு திரைப்படத்தைத் தணிக்கை செய்ய வேண்டும் எனில் அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் கடிதம் வேண்டும். அது டைட்டிலுக்கான அனுமதியாகவே கருதப்படும்.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு அமைப்பு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று அமைப்புகளில் இருக்கும் உறுப்பினர்களும் தத்தமது படங்களை சென்சாருக்கு அனுப்புவதற்காக இந்த மூன்று அமைப்புகளில் தாங்கள் இருக்கும் அமைப்புகளில் கடிதம் வாங்கி இணைத்துக் கொடுப்பார்கள். இந்தக் கடிதம் இருந்தால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் சென்சார் செய்யப்படும். இது விதிமுறையாகும்.

ஆனால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக சென்ற ஆண்டுதான் துவக்கப்பட்டதால் அதற்கு இதுவரையிலும் இந்தக் கடிதம் கொடுக்கும் அனுமதி தரப்படவில்லை.

இதுவரையிலும் இ்ந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை வெளியிடுவதற்கு அனுமதி கடிதத்தை தாங்கள் உறுப்பினராக இருக்கும் இன்னொரு சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தே பெற்று தணிக்கைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சங்கடத்தைத் தவிர்க்கும் பொருட்டுத்தான் தங்களது சங்கத்திற்கும் இந்த ஒப்புதல் கடிதம் கொடுக்கும் அனுமதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அனுமதியும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. இதனால் கடைசியாக இந்தச் சங்கத்தினருக்கு இருந்த ஒரு சங்கடமும் தீர்ந்துவிட்டது.

இதனால், தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முற்றிலும் முழுமையான தயாரிப்பாளர்கள் சங்கமாக உருவெடுத்துள்ளது.

The post நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்சார் கடித அனுமதி கிடைத்தது appeared first on Touring Talkies.

]]>
“ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை https://touringtalkies.co/director-bharathiraja-gives-statment-about-yelea-movie-release-issue/ Wed, 10 Feb 2021 14:02:27 +0000 https://touringtalkies.co/?p=12933 ‘ஏலே’ படத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு தமி்ழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “ஏலே’ படம் தியேட்டருக்கு வந்து 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என்னும் ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தால்தான் அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடுவோம்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் […]

The post “ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
ஏலே’ படத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு தமி்ழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏலே’ படம் தியேட்டருக்கு வந்து 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என்னும் ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தால்தான் அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடுவோம்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அந்தச் சங்கத்தின் தலைவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, “யார் தடுத்தாலும் ‘ஏலே’ படம் வெளியாகும். மக்களைச் சென்றடையும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

The post “ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? https://touringtalkies.co/vpf-charges-crisis-meeting-news/ Tue, 10 Nov 2020 06:38:05 +0000 https://touringtalkies.co/?p=9885 கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான். “சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” […]

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான்.

“சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள்.

ஆனால், “இது திரையீட்டுக்கான கட்டணம்தானே ஒழிய.. புரொஜெக்டருக்கான கட்டணம் இல்லை…” என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம்.

இந்த முடிவுறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது “வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கிடையாது. ஆனால், இங்கே மட்டும் கியூப்புக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதிலளித்த தியேட்டர்காரர்கள், “அப்போ ஹாலிவுட் படங்களுக்குத் தருவதுபோல நாம் பங்கு பிரித்துக் கொள்ளும் பெர்சேண்ட்டேஜை வைத்துக் கொள்வோமா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது தற்போதைய கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதாக இறங்கி வந்தது. இதையும் தியேட்டர்காரர்கள் 60 சதவிகிதமாக்கச் சொல்ல அதையும் கியூப் ஏற்றுக் கொண்டது. “இதுவும் டிசம்பர் 31-ம் தேதிவரையிலுமே…” என்று சொன்னார்கள் கியூப் நிறுவனத்தார்.

ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து “அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையிலும் வேண்டும்…” என்றார்கள். இதனை தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனத்தினரும் ஏற்றுக் கொண்டாலும் தயாரிப்பாளர்கள் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.

“அந்த மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் இந்தக் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம். இதை ஒரு நிபந்தனையாக வைக்கிறோம்…” என்றார்கள். ஆனால், இதனை கியூப் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பேச்சுவார்த்தையின் இன்னொரு கட்டத்தில், “தியேட்டர் உரிமையாளர்களே வி.பி.எஃப். கட்டணத்தை கட்டிக் கொள்ளட்டும். படத்தைத் திரையீட்டு முடிந்த பிறகு தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஷேர் தொகையில் அந்தப் பணத்தை அவர்கள் கழித்துக் கொள்ளட்டும்…” என்று தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

“அப்படியென்றால் எந்தவொரு பெரிய படத்திற்கும் தியேட்டர்காரர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் முன் பணம் பெறக் கூடாது.. இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டால் நாங்கள் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டத் தயார்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காததால் இந்த வாதமும் தோல்வியாகிவிட்டது.

கடைசியாக இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முறிந்து போனது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களது சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் நமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்க உறுப்பினர்களின் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது..!

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று காலை கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி.எஃப். கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் சலுகை இந்த நவம்பர் மாதம்வரையிலும்தான் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றே இந்த அரசு விரும்புகிறது. வி.பி.எஃப். பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் இருந்தால் நிச்சயமாக சமாதானப் பேச்சுவார்த்தையை அரசு முன்னின்று நடத்தும்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இனிமேல் கோட்டையில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில்தான் இந்த வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? https://touringtalkies.co/new-tamil-movies-will-release-on-coming-deepavali-day/ Wed, 04 Nov 2020 11:14:42 +0000 https://touringtalkies.co/?p=9690 ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். “தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட […]

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

“தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும்’ “வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்களும் கட்ட மாட்டார்கள்…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

கியூப் நிறுவனமோ தற்போது தாங்கள் வாங்கி வரும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும், இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதிவரைக்கும்தான் செல்லுமாம். இந்த அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் தியேட்டர்களை திறப்பது என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து, இன்று அல்லது நாளை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தாலும், பேசுவதற்குத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“திரையீட்டுக் கட்டணம் என்பது கியூப் நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. இதில் நாங்கள் பேசி என்ன ஆகப் போகுது.. எங்களிடம் எதற்காக வர வேண்டும்..?” என்று துவக்கத்திலேயே கதவைச் சாத்திவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போதைய நிலையில் இந்தத் தீபாவளிக்கு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற திரைப்படம், இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம், ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம், ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் ஆகிய 4 படங்கள் மட்டுமே இப்போதைக்கு கியூவில் நிற்கின்றன.

ஆனால், இவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் தங்களுடைய படத்தை வெளியிட மாட்டார்கள் என்பது உறுதி. இதனால் இந்தப் பிரச்சினையை எப்படி பேசித் தீர்ப்பது என்பது பற்றி தங்களுடைய உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்றால் அந்த நாளைக்கு 15 நாட்களுக்கு முன்பேயே அதன் விளம்பர வேலைகள் துவங்கிவிடும். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். தொடர்ந்து டிவி, ரேடியோ, பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் விளம்பரங்களும் வெளிவந்துவிடும்.

ஆனால், வரும் நவம்பர் 12-ம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இருக்கும் இந்த 4 படங்களுமே இப்போதுவரையிலும் எந்தவொரு ஸ்டெப்பையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தக் கடினமான சூழ்நிலையில் வரும் தீபாவளியன்று புதிய படங்களை ரசிகர்கள் பார்ப்பது.. தியேட்டர்காரர்கள் மற்றும் கியூப் நிறுவனத்தின் கைகளில்தான் உள்ளது.

The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.

]]>
“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! https://touringtalkies.co/actors-and-technicians-are-redcuced-30-percentage-in-their-salary/ Mon, 19 Oct 2020 11:27:00 +0000 https://touringtalkies.co/?p=8998 இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை. கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் […]

The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை.

கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத் தொகையைக் குறைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“நடிகர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்..

என் இனிய சொந்தங்களே… 

வணக்கம்…

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து,  பரிசோதனைகள் செய்து கொண்டு பணி செய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மனம் வைக்க வேண்டும். ஏற்கெனவே பிறரிடம் கடன் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம்… இதெல்லாம் தயாரிப்பாளர்களின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ் சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது இப்போதே உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்  நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா..?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தாமே முன் வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.  இதேபோல், இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா…?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், தற்போது முடிவடைய வேண்டிய நிலையில் உள்ள படங்களுக்கு உங்களது பங்களிப்பாக, 30 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்து தமிழ்ச் சினிமா உலகம் மீண்டெழ உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

தமிழ்த் திரையுலகம் மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழ வைப்போம்...”

பாசத்துடன்,

பாரதிராஜா

தலைவர்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>