Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sunny leon – Touring Talkies https://touringtalkies.co Thu, 17 Nov 2022 18:34:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sunny leon – Touring Talkies https://touringtalkies.co 32 32 “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு https://touringtalkies.co/heroines-who-make-tamil-film-makers-scream-thee-ivan-directors-sensational-speech/ Thu, 17 Nov 2022 18:33:45 +0000 https://touringtalkies.co/?p=27235 ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநரான T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’ ‘நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். ‘மேலே […]

The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.

]]>
‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநரான T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’

நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று  படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து  படக் குழுவினர் பத்திரிகையாளர்களை  சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “ரஜினி, கமலுக்கு நிகராக நவரச  நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

நமது தமிழ்ச் சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள்.  பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு  வருகிறது.

இது போன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தையும்,   படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது,  “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள  இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ நவரச  நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இத அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.

பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல்  கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது. இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்ன மாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னி லியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.

அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படமும், பாடலும்  அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்…” என்றார்.

The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.

]]>
‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! https://touringtalkies.co/sunny-leone-danced-in-thee-ivan-movie/ Thu, 17 Nov 2022 18:25:54 +0000 https://touringtalkies.co/?p=27219 ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’ ‘நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். ‘மேலே ஆகாயம் […]

The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.

]]>
ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’

நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று  படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து  படக் குழுவினர் பத்திரிகையாளர்களை  சந்தித்தனர். அப்போது நடிகை சன்னி லியோன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “குறுகிய கால இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன்.

ஆனால், இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்பவும் கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர்  மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும், நன்றாகவும் நடனமாட முடிந்தது. படத்தின் ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்.

நான் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.

நான் இந்தப் பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

இன்றைக்கு தேசிய பத்திரிகையாளர் தினம். நீங்கள் இல்லாமல் நாங்கள் மக்களை சென்று சேர முடியாது. உங்க வேலை என்றைக்குமே நிற்காது. இந்த நாளில் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் Y.N.முரளி, காதல் கந்தாஸ், முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள சுமன் J, தயாரிப்பாளார் நிர்மலா தேவி ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இறுதியில் ‘தீ இவன்’ படத்தின் டீசரை சன்னி லியோன் வெளியிட்டார்.

The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.

]]>
“சன்னி லியோன் நடித்ததால்தான், நானும் நடித்தேன்” – நடிகர் சதீஷின் ஜொள்ளு..! https://touringtalkies.co/because-sunny-leone-acted-i-also-acted-actor-satishs-jollu/ Thu, 03 Nov 2022 16:30:11 +0000 https://touringtalkies.co/?p=26473 VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’(OMG). நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் […]

The post “சன்னி லியோன் நடித்ததால்தான், நானும் நடித்தேன்” – நடிகர் சதீஷின் ஜொள்ளு..! appeared first on Touring Talkies.

]]>
VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’(OMG).

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் ஹாரர், காமெடி கலந்து இந்தப் படம் தயாராகியுள்ளது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக அரங்கேறியது.

இந்த விழாவில் நடிகர் சதீஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர். முதலில் அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவரோ மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப் பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

இந்த விழாவில் நடிகை சன்னி லியோன் பேசும்போது, “தமிழகம்  வந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த OMG’ படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.  

இந்தப் படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை..” என்றார்.

இயக்குநர் யுவன் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர். அவரிடம் இந்தக் கதையை சொன்ன போதே இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது.

இந்தப் படம் சன்னி லியோன் வந்த பிறகுதான் மிகப் பெரிய படமாக மாறியது. அவர் மொழி தெரியாமல் மிக அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு நடித்தார். அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும்படியான படமாக இருக்கும்…” என்றார்.

The post “சன்னி லியோன் நடித்ததால்தான், நானும் நடித்தேன்” – நடிகர் சதீஷின் ஜொள்ளு..! appeared first on Touring Talkies.

]]>
படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..! https://touringtalkies.co/sunny-leones-important-condition-for-acting-in-films/ Thu, 20 Oct 2022 16:03:36 +0000 https://touringtalkies.co/?p=25741 கனடா தேசத்து நடிகையான சன்னி லியோன் முதலில் ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் அந்த மாதிரிப் படங்களில் நடித்தது போரடிக்கிறது என்று சொல்லிவிட்டு ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியா வந்து மும்பையில் குடியேறினார். தொடர்ந்து சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும், தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குத்தாட்டமும் ஆடி வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடும்போது படக் குழுவினருக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளாராம். இது […]

The post படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.

]]>
கனடா தேசத்து நடிகையான சன்னி லியோன் முதலில் ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் அந்த மாதிரிப் படங்களில் நடித்தது போரடிக்கிறது என்று சொல்லிவிட்டு ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியா வந்து மும்பையில் குடியேறினார்.

தொடர்ந்து சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும், தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குத்தாட்டமும் ஆடி வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடும்போது படக் குழுவினருக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளாராம்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னைப் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப் பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்றார்.

அட.. சூப்பரா இருக்குல்ல..!

The post படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.

]]>
கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! https://touringtalkies.co/sunny-leone-is-dancing-in-karthiks-thee-ivan/ Mon, 17 Oct 2022 09:18:45 +0000 https://touringtalkies.co/?p=25571 மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தீ இவன்.’  இந்தப் படத்தில் நவரச  நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு – Y. N.முரளி, படத் தொகுப்பு – மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை – A.J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M.அப்பு, […]

The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.

]]>
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தீ இவன்.’ 

இந்தப் படத்தில் நவரச  நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – Y. N.முரளி, படத் தொகுப்பு – மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை – A.J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M.அப்பு, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – நிர்மலாதேவி ஜெயமுருகன்.

‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்த  T.M.ஜெயமுருகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும்  பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ளாராம். இது பற்றி இயக்குநர் T.M. ஜெயமுருகன் பேசும்போது, “நம் தமிழ் சமூகம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும், கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும்விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தில்  இடம் பெற உள்ள மேலே ஆகாயம்; கீழே பாதாளம்; நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு  நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.

நேற்று முன் தினம்  மும்பை  சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன். கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக் கொண்டார். அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து  நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் T.M.ஜெயமுருகன்.

The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.

]]>
சன்னி லியோன் நடிக்கும் ‘OH MY GHOST(OMG)’ தமிழ்த் திரைப்படம் https://touringtalkies.co/sunny-leon-acting-in-omg-tamil-movie/ Thu, 02 Sep 2021 10:56:50 +0000 https://touringtalkies.co/?p=17578 VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் D.வீரா  சக்தி  & K.சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட்’! இந்தப் படத்தில் அமெரிக்க ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகையான சன்னி லியோன் நடிக்கிறார். மேலும், நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில […]

The post சன்னி லியோன் நடிக்கும் ‘OH MY GHOST(OMG)’ தமிழ்த் திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் D.வீரா  சக்தி  & K.சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட்’!

இந்தப் படத்தில் அமெரிக்க ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகையான சன்னி லியோன் நடிக்கிறார்.

மேலும், நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய இயக்குநர்  R.யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இந்தப் படம் வரலாற்று பின்னணியில், உருவாகும் ஹாரர் காமெடி கலந்த திரைப்படம்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் D.வீரா சக்தி பேசும்போது, “பொதுவாக, OMG (OH MY GOD) என்பது இன்று அனைவரிடமும் வழக்கத்தில் புழங்கக் கூடிய ஒரு முக்கியமான வார்த்தை  பிரயோகம்  ஆகும். மேலும் உரையாடலின்போது ஆச்சரியமான எந்த  ஒன்றையும் தெரிவிக்கும் போது OMG (OH MY GOD) வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் திரைப்படமும்  அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விசயங்களை கொண்டிருப்பதால், இந்த OMG – OH MY GHOST என்ற தலைப்பு இதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.

ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை இப்படத்தில் பார்ப்பார்கள். இப்படம் இதுவரையிலும் நாம் திரையில் கண்டிராத  ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தை தரும்…” என்றார்.

சன்னி லியோன் இதற்கு முன்பாக பல்வேறு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானாலும் இதுவரையிலும் அந்தப் படங்களின் படப்பிடிப்புகள் துவங்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. நடிகை சன்னி லியோன் விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

The post சன்னி லியோன் நடிக்கும் ‘OH MY GHOST(OMG)’ தமிழ்த் திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>