Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
stills ravi – Touring Talkies https://touringtalkies.co Fri, 17 Sep 2021 05:22:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png stills ravi – Touring Talkies https://touringtalkies.co 32 32 மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/ Fri, 17 Sep 2021 05:22:35 +0000 https://touringtalkies.co/?p=18039 The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>

The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>
‘தல’ அஜீத்துடன் பணியாற்ற விருப்பம்தான். ஆனால்..? https://touringtalkies.co/stills-ravi-spoke-about-thala-ajithkumar/ Wed, 11 Nov 2020 08:51:00 +0000 https://touringtalkies.co/?p=9938 “தமிழ்த் திரையுலகத்தில் ‘தல’ என்று போற்றப்படும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருந்தாலும் அவருடைய படங்களில் தொடர்ந்து பணியாற்றும் கலைஞர்களெல்லாம் என்னுடைய தம்பிமார்கள் என்பதால் அதில் தலையிடுவதற்கு எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது..” என்று அடக்கத்துடன் கூறுகிறார் தமிழ்ச் சினிமாவின் மூத்த புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி. இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். “அஜீத்துடன் எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை. இரண்டு முறைகள்தான் அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய படங்களில் […]

The post ‘தல’ அஜீத்துடன் பணியாற்ற விருப்பம்தான். ஆனால்..? appeared first on Touring Talkies.

]]>
“தமிழ்த் திரையுலகத்தில் ‘தல’ என்று போற்றப்படும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருந்தாலும் அவருடைய படங்களில் தொடர்ந்து பணியாற்றும் கலைஞர்களெல்லாம் என்னுடைய தம்பிமார்கள் என்பதால் அதில் தலையிடுவதற்கு எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது..” என்று அடக்கத்துடன் கூறுகிறார் தமிழ்ச் சினிமாவின் மூத்த புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அஜீத்துடன் எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை. இரண்டு முறைகள்தான் அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய படங்களில் நான் பணியாற்றவும் இல்லை.

ஆனால் அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய பழகும் தன்மை, உதவி செய்யும் குணம்.. அடக்கமான பண்பு இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிந்திருக்கிறேன்.

என்னுடைய சக புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான பாலமுருகன் ஒரு சம்பவத்தை என்னிடம் சொன்னார்.

ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் அஜீத் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் அமர்ந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி நின்றபடியே ஒரு தொழிலாளி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தார்.

அவருடைய அம்மாவிடம் தனக்கு அவசியமாக பைக் தேவைப்படுவதாகவும்.. அது இல்லாமல் படப்பிடிப்புக்கு வருவதும், போவதும் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்.. அந்த பைக் வாங்குவதற்கு கொஞ்சம் பணம் தன் கையில் இருப்பதாகவும், மீதிப் பணத்தை அம்மா அனுப்பி வைத்தால் தான் வாங்கிவிடுவேன் என்றும் தன் அம்மாவிடம் அவர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பேச்சு அஜீத்தின் காதுகளில் விழுந்துவிட்டது. அவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவிவிட்டு எழுந்து போய்விட்டார். திரும்பவும் சாயந்தரம் ஷூட்டிங் முடிந்த பின்பு திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு புத்தம் புது பைக் ஒன்று வந்திறங்கியது.

அது அந்தப் பையன் ஆசை, ஆசையாக தன் அம்மாவிடம் போனில் கேட்டுக் கொண்டிருந்த பைக். அந்தத் தொழிலாளியை அழைத்த அஜீத் அவரிடம் பைக்கின் சாவியைக் கொடுத்து என் அன்பளிப்பா வைச்சுக்க என்று சொல்லிக் கொடுத்தாராம்.

இதை பாலமுருகன் என்னிடம் சொன்னதும், என்னால் நம்பவே முடியவில்லை. இந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ள நடிகரோடு இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் இருக்கிறது.

சென்னையில் அஜீத்தை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அவரை துபாயில் இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் துபாயில் எனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, பக்கத்தில் இருந்த பூங்காவில் அஜீத் நடித்த ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கேள்விப்பட்டவுடன் நான் நேரில் சென்று பார்த்தேன். அப்போது அஜீத் என்னிடம் வந்து ஸார் என்று கை கொடுத்து. ‘எப்படி இருக்கீங்க..? என்ன பண்றீங்க..?’ என்று அக்கறையாக விசாரித்தார். மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

நான் தமிழ்ச் சினிமாவில் அனைத்துக் கலைஞர்களுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அஜீத்துடன் மட்டும்தான் எடு்க்க முடியாமல் இருந்தது. அதனால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நேரம் கேட்டிருந்தேன்.

ஒரு நாள் திடீரென்று போனில் அழைத்து “உடனே வர முடியுமா…?” என்றார். அப்போது வெளியில் இருந்த நான் அவசரமாக வீ்டடுக்கு ஓடோடி வந்து கேமிராவை எடுத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் போனேன். நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். அந்தச் சந்திப்பு மனதுக்கு நிறைவாக இருந்தது.

அவருடைய படங்களில் இப்போது தொடர்ச்சியாகப் பணியாற்றும் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்த சக கலைஞர்கள் என்பதால் அவரிடத்தில் வாய்ப்பு கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அதனால் கேட்கவில்லை.

கொஞ்சம் வயதானாலோ.. ஒரு துறையில் மூத்தவராக இருந்தாலோ இதுதான் பிரச்சினை.. இதில் ‘கலைமாமணி’ விருது வேறு வாங்கிவிட்டேன். அதனால் ‘ரொம்ப மூத்தவர்’ என்று சொல்லி இண்டஸ்ட்ரியில் மரியாதையுடன் நடத்துகிறார்கள்.. இந்த மரியாதையும், சந்தோஷமுமே போதும் என்று நினைக்கிறேன்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

The post ‘தல’ அஜீத்துடன் பணியாற்ற விருப்பம்தான். ஆனால்..? appeared first on Touring Talkies.

]]>
“ரஜினியைக் கண்டித்து செட்டை விட்டு வெளியேறினேன்..” – ‘ஸ்டில்ஸ்’ ரவி சொல்லும் ஒரு சுவாரசியக் கதை..! https://touringtalkies.co/rajini-stills-ravi-clash-in-shooting-set/ Tue, 10 Nov 2020 13:15:24 +0000 https://touringtalkies.co/?p=9918 “ரஜினியை எதிர்த்து புகைப்படம் எடுக்காமல் படப்பிடிப்பு செட்டில் இருந்து வெளியேறினேன்…” என்று ஒரு உண்மைக் கதையைச் சொல்லியிருக்கிறார் புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி. அவர் இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். “நான் கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘சிவா‘ படத்தில் புகைப்படக் கலைஞனாகப் பணியாற்றினேன். அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் சாயந்தர வேளையில் ‘இரு விழியின்’ பாடலின் நடனக் காட்சி ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் படமாக்கப்பட்டுக் […]

The post “ரஜினியைக் கண்டித்து செட்டை விட்டு வெளியேறினேன்..” – ‘ஸ்டில்ஸ்’ ரவி சொல்லும் ஒரு சுவாரசியக் கதை..! appeared first on Touring Talkies.

]]>
“ரஜினியை எதிர்த்து புகைப்படம் எடுக்காமல் படப்பிடிப்பு செட்டில் இருந்து வெளியேறினேன்…” என்று ஒரு உண்மைக் கதையைச் சொல்லியிருக்கிறார் புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

அவர் இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘சிவா‘ படத்தில் புகைப்படக் கலைஞனாகப் பணியாற்றினேன்.

அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் சாயந்தர வேளையில் ‘இரு விழியின்’ பாடலின் நடனக் காட்சி ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினியும், ஷோபனாவும் சூப்பரான காஸ்ட்யூம்ஸ் போட்டிருந்தாங்க.  

ஒரு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முடிந்ததும் “ரஜினி ஒரு ஸ்டில்..” என்று ரஜினியிடம் கேட்டேன். ரஜினி என்ன நினைத்தாரோ.. திடீரென்று கோபத்துடன் “என்ன… என்ன… உங்களுக்கும் ஆடிக் காட்டணுமா…?” என்று கோபத்துடன் கேட்டார்.

இதைக் கேட்டதும் எனக்கும் சட்டென்று கோபம் வந்தது. பட்டென்று கேமிராவை மூடி கையில் எடுத்துக் கொண்டு, அப்படியே செட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் இருந்து 1-வது ப்ளோர்வரையிலும் நடந்து வந்தேன்.

‘இந்தப் படத்துக்கு இன்னியோட மங்களம் பாடிர வேண்டியதுதான். இனி இந்தப் படத்துல வேலை பார்க்கக் கூடாது’ன்னு நினைச்சுக்கிட்டே நடந்துக்கிட்டேயிருந்தேன்.

அப்போது ரஜினியின் உதவியாளரான ஜெயராமன் என்னைத் தேடி ஓடி வந்தார். “ஸார் கூப்பிடுறாரு…” என்று என்னை அழைத்தார். நான் திரும்பவும் ரஜினியைப் பார்க்கப் போனேன். செட்டுக்குப் பின்னாடி சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

“என்ன கோச்சுட்டீங்களா..?” என்றார். “ஆமாம்” என்றேன். “என்கிட்ட பெர்ஸனலா கோபப்பட்டா எனக்கு ஒண்ணுமில்லை. ஆனால் என் தொழில்ல ஏதாவது குறுக்கீடு வந்தா எனக்குக் கோபம் வரும்..” என்றேன்.. “ஸாரி.. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் கோபமாயிருச்சு…” என்றார் ரஜினி.

ஆனா, அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. “ரஜினிக்கு சாயந்தரமானா தண்ணியடிக்கணும். அந்த நேரத்துல யாராச்சும் லேட் செஞ்சா பயங்கர கோபம் வரும்”ன்னு அந்தப் படத்தோட இயக்குநர் அமீர்ஜான் சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன்.

இந்தப் பிரச்சினை அதோடு முடிஞ்சிருச்சு.. என்னிக்குமே ரஜினி அப்படி கோபப்பட மாட்டாரு. அன்னிக்கு ஏதோ ஒண்ணுன்றதால கோபமாயிட்டாருன்னு நினைக்கிறேன்.

பட்.. ரஜினி நிஜத்துல நல்ல மனுஷன். எல்லா விஷயத்துலேயும் பெர்பெக்ட்டான நபர். என்கிட்ட ஸ்டில்ஸ் எடுக்க வர்ற எல்லார்கிட்டேயும் நான் சொல்றது ரஜினி மாதிரி கண்ணாடி முன்பு நின்னு நீங்களே நடிச்சுப் பார்த்து உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்குங்கன்னு.

அவரும் அதை்ததான் செய்வாரு. எவ்வளவு பெரிய நடிகரான பின்னாடியும்.. சில காட்சிகள்ல நடிக்குறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துக்குவாரு. அப்போதான் ஷாட்ல நல்லா வரும்ன்னு நினைப்பாரு. இதைத்தான் நடிகனா ஆகணும்ன்னு நினைக்கிறவங்களுக்கும் நான் அடிக்கடி சொல்லுவேன்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

The post “ரஜினியைக் கண்டித்து செட்டை விட்டு வெளியேறினேன்..” – ‘ஸ்டில்ஸ்’ ரவி சொல்லும் ஒரு சுவாரசியக் கதை..! appeared first on Touring Talkies.

]]>
சுஹாசினி ஹீரோயினாக அறிமுகமானதில் ‘ஸ்டில்ஸ்’ ரவியின் பங்கு என்ன..? https://touringtalkies.co/how-to-be-suhasini-act-as-heroine-in-nenjathai-killathea-movie/ Tue, 10 Nov 2020 07:30:08 +0000 https://touringtalkies.co/?p=9891 நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே. அத்திரைப்படத்தில் அவரை நாயகியாக்கும்படி மகேந்திரனிடம் வற்புறுத்தி சொன்னது தமிழ்த் திரையுலகத்தின் மூத்த புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி. இது பற்றி அவர் இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார். அவர் பேசும்போது, “சுஹாசினி, என்.கே.விஸ்வநாதனிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருக்கும்போதே எனக்குத் தெரியும். அவர் பணியாற்றிய சில படங்களில் நானும் புகைப்பட கலைஞராகப் பணியாற்றியிருந்தேன். மகேந்திரன் ஸார் […]

The post சுஹாசினி ஹீரோயினாக அறிமுகமானதில் ‘ஸ்டில்ஸ்’ ரவியின் பங்கு என்ன..? appeared first on Touring Talkies.

]]>
நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.

அத்திரைப்படத்தில் அவரை நாயகியாக்கும்படி மகேந்திரனிடம் வற்புறுத்தி சொன்னது தமிழ்த் திரையுலகத்தின் மூத்த புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

இது பற்றி அவர் இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “சுஹாசினி, என்.கே.விஸ்வநாதனிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருக்கும்போதே எனக்குத் தெரியும். அவர் பணியாற்றிய சில படங்களில் நானும் புகைப்பட கலைஞராகப் பணியாற்றியிருந்தேன்.

மகேந்திரன் ஸார் இயக்கிய ‘ஜானி’ படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. அங்கு நான் போயிருந்தேன். அசோக்குமார்தான் கேமிராமேன். அவரிடத்தில் சுஹாசினியும் ஒளிப்பதிவு உதவியளாராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு நிகரா ஷூட்டிங்ல வேலை பார்ப்பாங்க சுஹாசினி.

அப்போது மகேந்திரன் அவரது அடுத்த படமான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். அந்த ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முன்னரே ஒரு ஹிந்தி நடிகையை பிக்ஸ் செய்திருந்தார்கள். ஆனால், திடீரென்று அந்த ஹீரோயினுக்கு வேறு கமிட்மெண்ட் வந்ததால் இதில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் வேறு ஹீரோயினைத் தேடினார்கள்.

எனக்கு சுஹாசினி மீது ஒரு பிரியம் உண்டு. அவர் அழகாக இருப்பதால் நிச்சயமாக ஹீரோயினாக சினிமாவில் நடித்தால் ஜெயிப்பார் என்று உறுதியாக நம்பினேன். இதனால் நான் மகேந்திரனிடம் சுஹாசினியையே அந்தக் கேரக்டருக்கு நடிக்க வையுங்கள் என்று சொன்னேன். மகேந்திரன் ஏற்கெனவே அசோக்குமார் மூலமாக சுஹாசினியிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவரோ தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

இதற்கிடையில் ‘ஜானி’ படத்திற்காக ஜெமினி பாலம் அருகேயிருந்த ஒரு அழகு சாதனக் கடையில் ஒரு நாள் ஷூட்டிங் நடைபெற்றது. அந்தக் கடையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. சுஹாசினி ச்சும்மா இருக்கும்போதெல்லாம் அந்தக் கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டேயிருப்பார்.

இதைப் பார்த்தபோது எனக்கு சுஹாசினிக்குள் ஒரு ஆசை இருக்கிறது. ஆனால், அவர்தான் விருப்பம் இல்லாதவராகக் காட்டிக் கொள்கிறார் என்று ஊகித்தேன். இப்போது மறுபடியும் மகேந்திரனிடம் வற்புறுத்தினேன். இப்போ மறுபடியும் கேட்டுப் பாருங்க ஸார்.. என்று அழுத்திச் சொன்னேன்.

இந்த முறை மகேந்திரன் கேட்டு.. அசோக்குமாரும் கன்வின்ஸ் செய்ய.. சுஹாசினி மறுக்கவில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தார். அதிலிருந்து அவரது கேரியர் துவங்கி, இன்று எங்கயோ போய்விட்டது..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

The post சுஹாசினி ஹீரோயினாக அறிமுகமானதில் ‘ஸ்டில்ஸ்’ ரவியின் பங்கு என்ன..? appeared first on Touring Talkies.

]]>
மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..? https://touringtalkies.co/mohan-stills-ravi-payanangal-mudivathillai-movie-news/ Sun, 08 Nov 2020 12:10:17 +0000 https://touringtalkies.co/?p=9842 நடிகர் மோகனின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கிய திருப்பு முனை படமாக அமைந்தது ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம். “அத்திரைப்படத்தில் மோகன் நடிப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன்” என்று ஸ்டில்ஸ் ரவி பேட்டியளித்துள்ளார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார் ஸ்டில்ஸ் ரவி. அவர் இது பற்றிக் கூறுகையில், “மோகனுடனான எனது முதல் அனுபவம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில்தான் கிடைத்தது. அந்தப் படம்தான் அவரது அறிமுகப் படம். அந்தப் படத்தின் […]

The post மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மோகனின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கிய திருப்பு முனை படமாக அமைந்தது ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம்.

“அத்திரைப்படத்தில் மோகன் நடிப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன்” என்று ஸ்டில்ஸ் ரவி பேட்டியளித்துள்ளார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார் ஸ்டில்ஸ் ரவி.

அவர் இது பற்றிக் கூறுகையில், “மோகனுடனான எனது முதல் அனுபவம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில்தான் கிடைத்தது. அந்தப் படம்தான் அவரது அறிமுகப் படம்.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நானும் சுஹாசினியும் கேமிராவுக்கு பின்னால் நின்று கொண்டு அவர் பேசும் தமிழை கிண்டல் செய்து கொண்டிருப்போம். அப்போது மோகனுக்கு கொஞ்சமாகத்தான் தமிழ் தெரியும்.

அது அவரது முதல் படம் என்பதால் அவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். உடன் நடித்த பிரதாப் போன்றவர்களெல்லாம் தினமும் எங்கேயாவது கூட்டமாக வெளியே சினிமாவுக்குப் போவார்கள். ஆனால் மோகனை மட்டும் கூப்பிட மாட்டார்கள்.

இதனால்தான் நான் மோகனுடன் நெருக்கமான நண்பனானேன். அப்போது மோகன் பாம்குரோவ் ஹோட்டலில் தங்கியிருந்தார். நான் தினமும் சாயந்தர நேரத்தில் அங்கே சென்று அவருடன் பேசிக் கொண்டிருப்பேன்.

அந்தப் படம் முடிந்தவுடன் அவருக்கு வாய்ப்பு கேட்டு என்னுடைய ஸ்கூட்டரில் பின்னால் அமர வைத்து பல திரைப்பட நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

அப்போது கோவைத்தம்பி ஸார் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தைத் துவக்கினார். இந்தப் படத்தில் முதலில் மோகன் நடித்த கதாபாத்திரத்தில் சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், படம் துவங்கிய நேரத்தில் சுரேஷுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய்விட்டதால் வேறு ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அதை நான் கேள்விப்பட்டு அந்தப் படத்துக்கு அப்போது பொறுப்பாளராக இருந்த கங்கை அமரனிடம் மோகனைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு தர சொன்னேன். அதேபோல் படத்தின் இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனிடமும் மோகனுக்காக வாய்ப்பு கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். இப்படித்தான் மோகன் அந்தப் படத்தில் நடித்தார்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

The post மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>