Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
singer – Touring Talkies https://touringtalkies.co Sun, 15 Oct 2023 07:19:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png singer – Touring Talkies https://touringtalkies.co 32 32 பாரதி – ஸ்வர்னலதா சோகமான ஒற்றுமை! https://touringtalkies.co/bharti-swarnalatha-sad-unity/ Sun, 15 Oct 2023 07:19:15 +0000 https://touringtalkies.co/?p=37162 பிரபல திரைப்பாடகியாக விளங்கியவர் ஸ்வர்ணலதா.  நீதிக்கு தண்டனை படத்தில் எம்.எஸ்.வி. இசையும் முதன் முறையாக பாடினார். 22 வருடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இந்தியிலும் ரங்கீலா உள்ளிட்ட பல படங்களுக்கு (ஏ.ஆர். ரஹ்மான் இசையில்) பாடியுள்ளார். தேசிய விருதும் பெற்றவர். மகாகவி பாரதிக்கும் இவருக்கும்  சோகமான ஒரு ஒற்றுமை  உண்டு.. அதை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..  

The post பாரதி – ஸ்வர்னலதா சோகமான ஒற்றுமை! appeared first on Touring Talkies.

]]>
பிரபல திரைப்பாடகியாக விளங்கியவர் ஸ்வர்ணலதா.  நீதிக்கு தண்டனை படத்தில் எம்.எஸ்.வி. இசையும் முதன் முறையாக பாடினார்.

22 வருடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இந்தியிலும் ரங்கீலா உள்ளிட்ட பல படங்களுக்கு (ஏ.ஆர். ரஹ்மான் இசையில்) பாடியுள்ளார்.

தேசிய விருதும் பெற்றவர்.

மகாகவி பாரதிக்கும் இவருக்கும்  சோகமான ஒரு ஒற்றுமை  உண்டு..

அதை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..

 

The post பாரதி – ஸ்வர்னலதா சோகமான ஒற்றுமை! appeared first on Touring Talkies.

]]>
எஸ்.பி.பி.யின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?! https://touringtalkies.co/spps-unfulfilled-desire/ Wed, 11 Oct 2023 05:00:57 +0000 https://touringtalkies.co/?p=37049 மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி., தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி  உள்ளிட்ட 16 இந்திய மொழி திரைப்படங்களில், 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை ஆறுமுறை பெற்றுள்ளார்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கர்நாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்டவரின் […]

The post எஸ்.பி.பி.யின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி., தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி  உள்ளிட்ட 16 இந்திய மொழி திரைப்படங்களில், 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை ஆறுமுறை பெற்றுள்ளார்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கர்நாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இப்படிப்பட்டவரின் நிறைவேறாத ஆசை என்ன..

இதை அறிய  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post எஸ்.பி.பி.யின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?! appeared first on Touring Talkies.

]]>
தேசிய கொடி அவமதிப்பு: உக்ரைன் பாடகி மீது வழக்கு! https://touringtalkies.co/ukrainian-singer-uma-shanti-booked-for-insulting-india-flag-at-pune-concert/ Mon, 28 Aug 2023 02:53:46 +0000 https://touringtalkies.co/?p=35725 உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற இசைக்குழு, சாந்தி பீப்பிள் என்பதாகும்.  சைவ இந்த இசைக்குழுவினர் இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து வழங்குபவர்கள். இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் முன்னணி பாடகி உமா சாந்தி. இந்தக் குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. பெங்களூரு மற்றும் போபாலில் இசை நிகழ்ச்சி நடத்திய இவர்கள், சமீபத்தில் புனேவில் இசை நிகழ்ச்சி நடத்தினர். பாடகி உமா சாந்தி இரண்டு […]

The post தேசிய கொடி அவமதிப்பு: உக்ரைன் பாடகி மீது வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற இசைக்குழு, சாந்தி பீப்பிள் என்பதாகும்.  சைவ இந்த இசைக்குழுவினர் இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து வழங்குபவர்கள். இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் முன்னணி பாடகி உமா சாந்தி.

இந்தக் குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. பெங்களூரு மற்றும் போபாலில் இசை நிகழ்ச்சி நடத்திய இவர்கள், சமீபத்தில் புனேவில் இசை நிகழ்ச்சி நடத்தினர். பாடகி உமா சாந்தி இரண்டு கைகளிலும் இந்திய தேசிய கொடியை பிடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். பின்னர் அந்தக் கொடிகளை பார்வையாளர்கள் மீது எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து தேசிய கொடியை அவமதித்ததாக, தானாஜி தேஷ்முக் என்பவர் நாக்பூர் மாவட்டத்தில் முந்த்வா போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேசிய கொடி அவமதிப்பு: உக்ரைன் பாடகி மீது வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
“அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  https://touringtalkies.co/ilayaraga-angry-with-singer-minmini/ Sun, 16 Jul 2023 00:03:18 +0000 https://touringtalkies.co/?p=34404 இளையராஜா குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, பத்திரிகையாளர் செல்வம் பகிர்ந்துகொண்டார். “1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர். அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜா, அடுத்த இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார். இளையராஜா இசையில்  பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் […]

The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, பத்திரிகையாளர் செல்வம் பகிர்ந்துகொண்டார்.

“1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர்.

அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜா, அடுத்த இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார்.

இளையராஜா இசையில்  பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் அவர் மினிமினிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் பாடி கொண்டிருந்த போது ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோருக்கும் முன்பும்  ‘நீ அங்கயே போய் பாடு. இனிமே என்கிட்ட வாராத’ என இளையராஜா கத்தினார்” என்றார் பத்திரிகையாளர் செல்வம்.

 

The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா!  appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா மீது இன்னொரு புகார்! https://touringtalkies.co/another-complaint-against-ilayaraja-music-director-ar-rahman-minmini-singer-roja-chinna-chinna-aasai/ Mon, 26 Jun 2023 01:44:15 +0000 https://touringtalkies.co/?p=33788 இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை […]

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம்.

இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்மினி,  “ஏற்கெனவே இளையராஜா இசையில் நான் பாடி வந்தேன். ஆனாலும்  சின்ன சின்ன ஆசை பாடல் தான் எனக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில்  அந்த பாடலை பாடிய பிறகு இளையராஜா எனக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை” என்றார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! https://touringtalkies.co/the-singer-sasireka-gave-a-hit-without-ilayaraja/ Sun, 28 May 2023 02:30:14 +0000 https://touringtalkies.co/?p=32863 1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பாடகி குறித்து பத்திரிகையாளர் செல்வம் பேசியுள்ளார். “ 1973-ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம், திரையுலகில் தடம் பதித்தார்  பி.எஸ்.சசிரேகா.  அந்த காலகட்டத்தில்,  தமிழ் சினிமாவில் பாடகர்கள்,  […]

The post இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! appeared first on Touring Talkies.

]]>
1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பாடகி குறித்து பத்திரிகையாளர் செல்வம் பேசியுள்ளார்.

“ 1973-ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம், திரையுலகில் தடம் பதித்தார்  பி.எஸ்.சசிரேகா.  அந்த காலகட்டத்தில்,  தமிழ் சினிமாவில் பாடகர்கள்,  இளைராஜாவின் கூடாரத்துக்கு வராமல், பிரபலமாக முடியாது.

சசிசேராவும் இளையராஜா இசையில் முதன் முதலாக, ஒரு ஓடை நதியாகியது என்ற படத்தில் தென்றல் என்னை முத்தமிட்டது பாடலை பாடினார்.  தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை,கோபுரங்கள் சாய்பதில்லை  உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு வாய்ப்பு அளித்தார் இளையராஜா.

ஆனால் எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோருக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாட வாய்ப்பு அளித்த இளையராஜா, பிறகு சசிரேகாவை கண்டுகொள்ளவில்லை.

இவரின் திறனை அறிந்து அதிகமான வாய்ப்பு கொடுத்தவர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மனோஜ்கியான்.

விஜயகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஊமைவிழிகள் படத்தில் மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு என்ற இரு ஹிட் பாடல்களை பாடியிருந்தார். அதேபோல் செந்தூரபூவே படத்தில் இடம்பெற்ற செந்தூரபூவே இங்கு தேன் சிந்த’ பாடல் இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்  பட்டியலில் உள்ளது.

அதேபோல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உயிருள்ளவரை உஷா படத்தில் ‘இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாலோ’, உறவை காத்த கிளி படத்தில் ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’,  ஒரு தாயின் சபதம் படத்தில் ‘சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது’ என ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிழக்கு சீமையிலே படத்தில் மாணுத்து மந்தையிலே பாடல் பாடியவர் சசிரேகாதான்.

இன்றும் யு டியுபில் ரசிகர்கள், சசிரேகாவின் பாடல்களைத் தேடித்தேடி கேட்டு ரசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா! appeared first on Touring Talkies.

]]>
தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா! https://touringtalkies.co/singer-ks-chitra-said-her-cinema-experience/ Sun, 16 Apr 2023 00:54:46 +0000 https://touringtalkies.co/?p=31612 பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தின் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து  பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். இளையராஜா, கங்கை அமரன், சங்கர் –  கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பலரது இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் […]

The post தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா! appeared first on Touring Talkies.

]]>
பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தின் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து  பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.

இளையராஜா, கங்கை அமரன், சங்கர் –  கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பலரது இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கே.எஸ் சித்ரா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “நான் பாடகியாக வந்த புதிதில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்கள் கொடுத்தார்கள். பாடும்போது நான் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி அடுத்த பாடலில் அதை திருத்திக்கொள் என்று சொல்வார்கள்.

அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலை முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தேவா சார் சாந்தமானவர். அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார் ரொம்ப வல்கரா இருக்கு என்று சொன்னேன்.

அவரும் சரிமா நான் ட்ரை பண்றேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம். இன்னொரு நான் நான் சொல்றேன் நீங்க கிளம்புங்க என்று சொன்னார். அதன்பிறகு என்னை கூப்பிடவே இல்லை.

சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து தேவா சார் ஸ்டூடியோவில் பாட முடியாது என்று சொன்னாயா என்று கேட்டார்.

ஆமாம் சார் வரிகள் கொஞம்சம் வல்கரா இருந்துச்சு அதான் என்று சொன்னேன். அதற்கு அவர், அதையெல்லம் நீங்க ஏன் பாக்குறீங்க. உங்க வேலை பாடுவது மட்டும் தான். எந்த கவிஞரும் வேண்டுமென்றே அவ்வாறு எழுதமாட்டார்கள். கதைக்கு தேவையானதை தான் எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்கு குரல் கொடுப்பது தான் உன் வேலை” என்று சொன்னார். அப்போது தான் நான் தவறு செய்தது புரிந்தது என்று கூறியுள்ளார்.

The post தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா! appeared first on Touring Talkies.

]]>
டி.எம்.எஸ்ஸால் மறக்க முடியாத அந்த இரு பெண்கள்! https://touringtalkies.co/two-women-who-will-never-be-forgotten-by-tms/ Tue, 04 Apr 2023 03:01:07 +0000 https://touringtalkies.co/?p=31257 மறைந்த புகழ் பெற்ற பாடகர் டி.எம்.எஸ். குறித்து அவரது மகன் பால்ராஜ் சிலாகித்து கூறினார்.  அப்போது அவர்  கூறியதாவது: “என்னுடைய தாயார் சுமித்ரா மீது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தனர். என் தந்தைக்காக தாயார் நிறைய தியாகங்களை செய்துள்ளார். எனவே அவர்களது காதல், அவரது பாடல்களில் எதிரொலிக்கும். அதே போல் சோகப்பாடலுக்கும் என் தந்தையின் வாழ்வில் வந்த ஒரு பெண்தான் காரணம். வாலிப வயதில் அந்த பெண்ணும், என் தந்தையும் காதலித்தனர். […]

The post டி.எம்.எஸ்ஸால் மறக்க முடியாத அந்த இரு பெண்கள்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த புகழ் பெற்ற பாடகர் டி.எம்.எஸ். குறித்து அவரது மகன் பால்ராஜ் சிலாகித்து கூறினார்.  அப்போது அவர்  கூறியதாவது:

“என்னுடைய தாயார் சுமித்ரா மீது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தனர். என் தந்தைக்காக தாயார் நிறைய தியாகங்களை செய்துள்ளார். எனவே அவர்களது காதல், அவரது பாடல்களில் எதிரொலிக்கும்.

அதே போல் சோகப்பாடலுக்கும் என் தந்தையின் வாழ்வில் வந்த ஒரு பெண்தான் காரணம். வாலிப வயதில் அந்த பெண்ணும், என் தந்தையும் காதலித்தனர். அந்த காதல் கைகூடாமல் போனதால், அந்த வருத்தம் தன்னை பாதித்ததாக என் தந்தை கூற கேட்டு இருக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் சோகப்பாடலிலும் அவரை சாதிக்க வைத்து இருக்கிறது” என்றார் பால்ராஜ்.

The post டி.எம்.எஸ்ஸால் மறக்க முடியாத அந்த இரு பெண்கள்! appeared first on Touring Talkies.

]]>
வாணி பாடிய கடைசி பாடல்! https://touringtalkies.co/vani-jayaram-singer-last-song/ Sat, 04 Feb 2023 15:23:45 +0000 https://touringtalkies.co/?p=30290 பிரபல பாடகி வாணி ஜெயராம்  இன்று மறைந்தார்.   அவர் கடைசியாக பாடியது மலை படத்தில இடம் பெற்ற பாடல். டி.இமான் இசை அமைத்து இருக்கிறார். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில்  யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை விழாவை பெரும் விமரிசையாக நடத்தவும், “பத்ம பூஷன்” திருமதி. வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.  […]

The post வாணி பாடிய கடைசி பாடல்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாடகி வாணி ஜெயராம்  இன்று மறைந்தார்.   அவர் கடைசியாக பாடியது மலை படத்தில இடம் பெற்ற பாடல். டி.இமான் இசை அமைத்து இருக்கிறார்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில்  யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் இசை விழாவை பெரும் விமரிசையாக நடத்தவும், “பத்ம பூஷன்” திருமதி. வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.  இந்நிலையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு  பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

படக்குழுவினர், “இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.  இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

The post வாணி பாடிய கடைசி பாடல்! appeared first on Touring Talkies.

]]>
வாணி ஜெயராம் மறைவு: முடியாத பேரிழப்பு!: முதலமைச்சர் இரங்கல் https://touringtalkies.co/singer-vani-jayaram-death-is-an-irreparable-loss-to-the-music-world-cm-stalin-condolence/ Sat, 04 Feb 2023 13:04:27 +0000 https://touringtalkies.co/?p=30255 பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் பின்வருமாறு; இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை […]

The post வாணி ஜெயராம் மறைவு: முடியாத பேரிழப்பு!: முதலமைச்சர் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

திருமதி வாணிஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாணி ஜெயராம் மறைவு: முடியாத பேரிழப்பு!: முதலமைச்சர் இரங்கல் appeared first on Touring Talkies.

]]>