Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
R.S.Karthick – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Nov 2022 19:05:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png R.S.Karthick – Touring Talkies https://touringtalkies.co 32 32 பரோல் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/parole-movie-review/ Mon, 14 Nov 2022 19:04:51 +0000 https://touringtalkies.co/?p=27097 ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மதுசூதனன் இந்தப் ’பரோல்’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ‘பீச்சாங் கை’ படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் ‘சேதுபதி’ & ’சிந்துபாத்’ படத்தில் நடித்த லிங்கா இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.எஸ்., ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பு – மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்), எழுத்து இயக்கம் – துவாரக் ராஜா, ஓளிப்பதிவு […]

The post பரோல் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மதுசூதனன் இந்தப் ’பரோல்’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘பீச்சாங் கை’ படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் ‘சேதுபதி’ & ’சிந்துபாத்’ படத்தில் நடித்த லிங்கா இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.எஸ்., ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்), எழுத்து இயக்கம் – துவாரக் ராஜா, ஓளிப்பதிவு – மகேஷ் திருநாவுக்கரசு, இசை – ராஜ்குமார் அமல், படத் தொகுப்பு – முனீஸ், பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM). இயக்குநர் துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘காதல் கசக்குதய்யா’ படத்தை இயக்கியவர்.

இது பரோல் சம்ந்தமான அரசியலைப் பேசுகிற படம். 48 மணி நேரங்களில் சென்னைல வியாசர்பாடியில் துவங்கி திருச்சி, மதுரை என்று பயணித்து திரும்பவும் விக்கிரவண்டி, சேலையூர், வியசார்பாடி என்று வந்து முடியும் கதை இது.  க்ரைம், திரில்லர், ஆக்ஷன், டிராமா என்று அனைத்தையும் கலந்து கட்டி இந்தப் படத்தில் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.

‘பரோல்’  என்பது சிறையில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையின் பெயர். ஒரு தண்டனை கைதி வருடத்திற்கு 30 நாட்கள் அவர்களது குடும்பத்தினருடன் தன் வீட்டில் இருக்கலாம். அதாவது சிறை தண்டனையில் இருந்து விடுமுறை அளிப்பதுபோல..!

இந்த ‘பரோல்’ விடுமுறையை மிக முக்கியமான குடும்பத்தின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களின் விசேஷங்களுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும்கூட கொடுப்பார்கள். அப்படியொரு துக்க நிகழ்வில் பங்கேற்க சிறை தண்டனையை அனுபவித்து வருபவனுக்குக் கிடைக்கும் ‘பரோல்’ சலுகையை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

அம்மா ஜானகி சுரேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்.எஸ்.கார்த்திக். இன்னொருவர் லிங்கா. இதில் மூத்த மகன் லிங்கா சிறு வயதிலேயே தன் தாயிடம் தகாத முறையில் நடந்து கொண்டவனை படு கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றவர். அங்கேயிருந்து திரும்பி வெளியில் வந்தவர் அந்தச் சூழலிலேயே சிக்கிக் கொண்டு கூலிப் படை தலைவனாகி பல கொலைகள் செய்து வருகிறார்.

இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து கொண்டு வீட்டையும் தாயையும் கவனித்துக் கொள்கிறார். ஆனால் அம்மா ஜானகி சுரேஷுக்கு மூத்த மகன் மேல் அதீத அன்பு. தன்னால்தான் அவனது வாழ்க்கை இப்படி மாறிப் போனது என்பதால், அவனை எப்படியாவது திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கிறார். இதனால் இளைய மகனான ஆர்.எஸ்.கார்த்திக் தாய் மீதும், அண்ணன் லிங்கா மேலும் கோபத்தில் இருக்கிறார்.  

இந்த நிலைமையில் லிங்கா வழக்கம்போல ஒரு முறை இரட்டைக் கொலைகளை செய்துவிட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இந்த வழக்கில் இருந்து லிங்காவை எப்படியாவது விடுதலையாக்கிவிட வேண்டும் என்று தாய் ஜானகி முயற்சி செய்கிறார். ஆனால் இதை விரும்பாத கார்த்திக் அம்மாவைத் தடுக்கிறார்.

“இனிமேல் நான் மட்டும்தான் அம்மாவுக்கு மகனாக இருக்க வேண்டும்” என்ற எண்ணம் கார்த்திக்குள் ஆழமாக இருக்கும் நேரத்தில் அவரது தாய் ஜானகி இறந்து விடுகிறார்.

அண்ணன் மீது இருக்கும் பொறாமை மற்றும் வெறுப்பினால் அம்மாவுக்குத் தானே இறுதி சடங்கை நடத்த நினைக்கிறார் கார்த்திக். ஆனால், “அப்பாவுக்குத்தான் இளைய மகன்.. தாய்க்குத் தலைமகன்தான் கொள்ளி வைக்க வேண்டும். அதனால் அண்ணனை பரோலில் அழைத்து வா” என்று கார்த்திக்கின் சொந்த, பந்தங்கள் அவரை நெருக்குகின்றன.

இதையடுத்து, வேண்டாவெறுப்பாக அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முனைகிறார் கார்த்தி. பரோல் கிடைத்ததா, இல்லையா? வெளியில் வந்து என்ன ஆனது..? இருவரின் நட்பும் நீடித்ததா.. இல்லையா..? என்பதுதான் இந்தப் பரோல் படத்தின் திரைக்கதை.

லிங்காவும், ஆர்.எஸ்.கார்த்தியும் நிஜமான அண்ணன் தம்பியைப் போலவே நடித்துள்ளனர். அண்ணன் மீது அம்மாவுக்கு இருக்கும் பாசத்தை நினைத்து மருகிப் போய் கொதிக்கும் கார்த்தி அவ்வப்போது தான்தான் குடும்பத்தை நல்லா பார்த்துக்குறனே என்று தனக்கான அங்கீகாரத்தை தன் தாயிடம் எதிர்பார்க்கும் காட்சிகளில் செண்டிமெண்ட் தூள் பறக்கிறது.

அதேபோல் ரவுடியாகி தன் வாழ்க்கை வேறு பாதையில் மாறினாலும் தன்னைப் புரிந்து கொள்ளாத தம்பியை புரிந்து கொள்ள வைக்கப் போராடும் அண்ணனாக லிங்கா தனது குறிப்பிடத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் இருவருமே ஆக்ரோஷத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.

ஹீரோயின்களான கல்பிக்கா, மோனிஷா இருவரும் கொஞ்சம் நேரமே திரையில் தோன்றினாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதிலும் மோனிஷா கார்த்திக்கிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு டெர்ரராக்கும் காட்சி ஏ ஒன்.

இவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சுரேஷ் யதார்த்தமான ஒரு அம்மாவை நினைவுபடுத்துகிறார் வக்கீலான வினோதினி வைத்தியநாதன் தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பால் கதையின் ஓட்டத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.

வெட்டு, குத்து, கொலைகள் என்று ரத்தச் சகதியில் படமாகியிருக்கும் இதற்கு படத் தொகுப்பாளர் முனீஸ்தான் மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறார். ராஜ் குமார் அமலின் பின்னணி இசை ஓகே. மகேஷின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாமலும், நிறைவானது என்றும் சொல்ல முடியாதபடிக்கும் அமைந்துள்ளது.

ஒரு கொலைக் குற்றவாளியை பரோலில் எடுப்பதன் பின்னணியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இந்தப் படம் அங்குலம், அங்குலமாக அலசி இருக்கிறது. 

படத்தை அடுத்தடுத்த காட்சிகளில் வழக்கமான படமாக சொல்லி இருந்தால் இன்னும் குழப்பம் இல்லாமல் ரசிக்க முடிந்திருக்கும். இதில் இருக்கும் நான் லீனியர் முறை படம் பார்ப்பவர்களின் மூடையும் முன், பின்னாக நகர்த்துவதால் ஒருங்கே முழு மனதுடன் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

இந்த வன்முறைக் கதையை நல்ல முறையில் முடித்திருப்பதும், கதையை விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் கொடுத்திருப்பதும் படத்திற்குக் கிடைத்திருக்கும் பவம்தான்.

இயக்குநர் துவாரக் ராஜா இந்தப்படத்தின் மூலம் நம்பிக்கை வைக்கக் கூடிய இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

படத்தின் துவக்கக் காட்சியில் இருந்தே வன்முறைகள், படுகொலைகள் அதிகம் காட்டப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு படத்தில் ஆபாச வார்த்தைகள், ஆபாச கை சமிக்ஞைகள் என்று ஏ-த்தனமான அத்தனை காவாலித்தனத்தையும் யதார்த்தம்’ என்ற போர்வையில் கொடூரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஏற்கெனவே வட சென்னை என்றாலே தாதாக்களின் உலகம்தான் என்று தமிழ் சினிமாக்கள் பறை சாற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்றாகியிருக்கிறது. அவ்வளவுதான்..!

RATING : 2.5 / 5

The post பரோல் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றிடும் முதல் தமிழ் பாடலின் வீடியோ வெளியீடு https://touringtalkies.co/video-release-of-the-first-tamil-song-in-praise-of-netaji-subhash-chandra-bose/ Fri, 28 Oct 2022 14:56:32 +0000 https://touringtalkies.co/?p=26172 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘போர்குடி’. இதில் ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர்தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். படத் […]

The post நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றிடும் முதல் தமிழ் பாடலின் வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘போர்குடி’.

இதில் ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர்தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை மணிகண்டன் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

பாடலாசிரியர் ஆர். தியாகு எழுதியிருக்கும் இந்த பாடலை, பாடகர் வி.எம்.மகாலிங்கம் மற்றும் பாடகி லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலைப் பற்றி நாயகன் கார்த்திக் பேசுகையில், ”ஒரு திரைப்படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும்போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும்.

ஆனால், எங்கள் படக் குழு முதன் முறையாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான திரைப்படப் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்…” என்றார்.

இந்த ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற பாடல் துள்ளலிசையாக அமைந்திருப்பதால் இணையவாசிகளையும், இசை ரசிகர்களையும் இது பெரிதும் கவர்ந்திருக்கிறது.

The post நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றிடும் முதல் தமிழ் பாடலின் வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
‘அஜினோமோட்டோ’வின் விஷத் தன்மையை மையமாக வைத்து உருவாகிய படம் https://touringtalkies.co/the-film-is-based-on-the-poisonous-nature-of-ajinomoto/ Fri, 07 Oct 2022 06:50:24 +0000 https://touringtalkies.co/?p=24940 நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படம் ‘அஜினோமோட்டோ.’ கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ.தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கே.கங்காதரன் […]

The post ‘அஜினோமோட்டோ’வின் விஷத் தன்மையை மையமாக வைத்து உருவாகிய படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படம் ‘அஜினோமோட்டோ.’

கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ.தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

கே.கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை எம்.எஸ்.ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். அறிமுக இயக்குநரான மதிராஜ் ஐயம்பெருமாள் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் பேசும்போது, “அஜினோமோட்டோ’ என்பது சுவையை அதிகரிக்கக் கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறோம்.

கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை.

மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும்போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும்…” என்றார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக்கில் இடம் பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

The post ‘அஜினோமோட்டோ’வின் விஷத் தன்மையை மையமாக வைத்து உருவாகிய படம் appeared first on Touring Talkies.

]]>
ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பரோல்’ பட டிரெய்லர் https://touringtalkies.co/parole-movies-trailer-gets-huge-response-from-fans/ Tue, 13 Sep 2022 09:39:56 +0000 https://touringtalkies.co/?p=24491 TRIPR ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரித்துள்ள படம் ‘பரோல்’. இந்தப் படத்தில் R.S.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் – துவாரக் ராஜா, தயாரிப்பாளர் – மதுசூதனன், இசை – ராஜ் குமார் அமல், ஒளிப்பதிவு – மகேஷ் திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – முனீஸ், கலை இயக்கம் – அருண் […]

The post ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பரோல்’ பட டிரெய்லர் appeared first on Touring Talkies.

]]>
TRIPR ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரித்துள்ள படம் ‘பரோல்’.

இந்தப் படத்தில் R.S.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் – துவாரக் ராஜா, தயாரிப்பாளர் – மதுசூதனன், இசை – ராஜ் குமார் அமல், ஒளிப்பதிவு – மகேஷ் திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – முனீஸ், கலை இயக்கம் – அருண் குமார்.A., ஆடை வடிவமைப்பு – அகிலன் ராம், டிஐ – ப்ரிசம் & பிக்சல்கள் Prism & Pixels, பத்திரிகை தொடர்பு –  சதீஷ் AIM, விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜெகன், டப்பிங் – ஜி ஸ்டுடியோஸ், ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்.K (ரெசனன்ஸ் ஸ்டுடியோ), மிக்சிங் – RT ஸ்டுடியோஸ்.

இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக இந்தப் பரோல் படம் உருவாகியுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார்.

இந்த டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா பேசும்போது, “எங்களது இந்த பரோல்’ படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்ல முடியாத ஒரு கதைதான் இது.  

தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் உள்ள பிரச்சனைகளும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம்.

இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை. ஆனால், வலுவான ஆக்சனும், பரபரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும்.

இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன். படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது “நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்கும்” என்றேன். உடனடியாக ஒப்புக் கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார். அவருக்கு மிகப் பெரிய நன்றிகள்.

இப்படத்தின் நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் படத்திற்கு மிகப் பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்..” என்றார்.

இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

The post ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பரோல்’ பட டிரெய்லர் appeared first on Touring Talkies.

]]>
“பா.ரஞ்சித்திற்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” – மறுக்கிறார் இயக்குநர் https://touringtalkies.co/ennaangasir-ungal-pattam-movienews/ Thu, 28 Oct 2021 08:59:55 +0000 https://touringtalkies.co/?p=19095 Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 29-ம் தேதியன்று Sony Liv ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இசை […]

The post “பா.ரஞ்சித்திற்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” – மறுக்கிறார் இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 29-ம் தேதியன்று Sony Liv ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay, பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா, ராஜு, ஒப்பநை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடியவர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, ஸ்டில்ஸ் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம் மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One -மக்கள் தொடர்பு.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது. “என்னங்க சார் உங்க சட்டம்” என்ற இந்தத் திரைப்படமும் இதே கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறுவிதமான பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்த விழாவில் படம் பற்றி இயக்குநர் பிரபு ஜெயராம் பேசும்போது, “கமர்ஷியலாக ஒரு கதையை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாகத்தான் இந்த திரைக்கதையை அமைத்திருக்கிறேன். 1990 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் இதை எடுத்திருக்கிறோம்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இட ஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் இதை சொல்லியிருக்கிறோம். எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன். அதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களின் பின்னணியைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, கோபத்துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்கலாம் என தோன்றியது. அதனால்தான் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு ரஞ்சித் தாசன் என்று பெயர் வைத்தோம். இதைத் தவிர, ரஞ்சித் சாருக்கும் இந்தப் படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமுமில்லை…” என்றார்.

The post “பா.ரஞ்சித்திற்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” – மறுக்கிறார் இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
இணையத்தில் ஹிட்டாகியிருக்கும் ‘ஜீரக பிரியாணி’ லிரிக் வீடியோ https://touringtalkies.co/jeeraga-biriyaani-song-lyric-video-hits-in-social-media/ Wed, 25 Aug 2021 13:48:52 +0000 https://touringtalkies.co/?p=17319 அறிமுகக் கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஜீரக பிரியாணி’ என்ற பாடல் தற்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது. Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தில்தான் இந்தப் பாடல் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் […]

The post இணையத்தில் ஹிட்டாகியிருக்கும் ‘ஜீரக பிரியாணி’ லிரிக் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
அறிமுகக் கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஜீரக பிரியாணி’ என்ற பாடல் தற்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.

Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தில்தான் இந்தப் பாடல் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay,  பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம்.

சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படமும் இந்தக் கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

தற்போது படத்தின் வெளியீட்டுக்காக நேரம், காலம் பார்த்துக் கார்த்திருக்கும் படக் குழு படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களை வெளியிடத் துவங்கயுள்ளது.

இதில் முதல் பாடலாக ஜீரக பிரியாணி’ என்ற காதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுகக் கவிஞரும், பத்திரிகையாளருமான ஜெகன் கவிராஜ் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

கவித்துவமாக அதே சமயம் காதலைப் போற்றிப் புகழும் வண்ணம்.. மிக எளிமையான வார்த்தைகளால்.. அடுக்கு மொழிகளாலும் இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பம்சமாகும்.

பாடல் வரிகளை கச்சிதமாக பொருந்தி வரும் இடங்களும், வீடியோவில் அதைத் தெரிவித்தவிதமும் அற்புதமாக இருக்க.. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்காகிவிட்டது.  

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கவிஞரும், ‘பூம்புகார்’, ‘பந்தபாசம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’ உள்பட பல வெற்றிப் படங்களில் வெற்றிப் பாடல்களை எழுதிய மாயவநாதனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தப் படத்தில் எழுதியிருக்கும் மற்றுமொரு பாடலின் லிரிக் வீடியோவும் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

The post இணையத்தில் ஹிட்டாகியிருக்கும் ‘ஜீரக பிரியாணி’ லிரிக் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்க்கிறதா… இப்படம்? https://touringtalkies.co/ennanga-sir-unga-sattam-movie-news/ Mon, 23 Aug 2021 11:20:01 +0000 https://touringtalkies.co/?p=17259 Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்.’ இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர். இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு […]

The post அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்க்கிறதா… இப்படம்? appeared first on Touring Talkies.

]]>
Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம்.’

இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay,  பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம்.

சமீபத்தில் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படமும் இதே கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக் குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்த போதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்ற போவதில்லையாம். முதலில் வைக்கப்பட்ட  அதே பெயரில்தான் இந்தப் படத்தினை வெளியிட போகிறார்களாம்.

“படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது; நிச்சயமாக இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும்” என படக் குழுவினர் உறுதியாய் கூறுகிறார்கள். இந்தக் கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும்.

இயக்குநர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி  படத்திற்கான திரைக்கதையை அமைத்துள்ளார்.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு  படம் எப்படி இருக்குமென்கிற பெரும்  ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

Duplex’ என்ற வகையின் கீழ் உருவாகியுள்ளது. இது இரட்டை நிலையில் இருப்பதைக் குறிப்பது.

உதாரணத்திற்கு ஒரு வீடு இரு வாசல்’ என்பதே இதன் சாராம்சம். படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக  சொல்வதாக இருக்கும்.

இப்படத்தின் மேலும் ஒரு   சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் என படக் குழு உறுதியளிக்கிறது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும்விதமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது.

கும்பகோணம் மற்றும் சென்னையை சுற்றிய பகுதிகளில் இப்படத்தின்  படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் இசை, ட்ரெயிலர் மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

The post அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்க்கிறதா… இப்படம்? appeared first on Touring Talkies.

]]>