Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Oscar – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Sep 2023 01:42:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Oscar – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஆஸ்காருக்கு ஜவான்!”: இயக்குனர் அட்லீ https://touringtalkies.co/jawaan-to-the-oscars-director-atlee-sharukhan/ Wed, 20 Sep 2023 01:42:24 +0000 https://touringtalkies.co/?p=36418 திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். உலகம் முழுவதும் இருந்து போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட படங்களில் இருந்து, சிறந்த படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. இதனால் இந்த விருதைப் பெற உலகம் முழுவதும் கடுமையான போட்டி நடைபெறும். இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுவரை கொண்டு செல்ல முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் அட்லீ குறிப்பிட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 […]

The post “ஆஸ்காருக்கு ஜவான்!”: இயக்குனர் அட்லீ appeared first on Touring Talkies.

]]>
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். உலகம் முழுவதும் இருந்து போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட படங்களில் இருந்து, சிறந்த படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. இதனால் இந்த விருதைப் பெற உலகம் முழுவதும் கடுமையான போட்டி நடைபெறும். இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுவரை கொண்டு செல்ல முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் அட்லீ குறிப்பிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரையரங்குகளில் வெளியானது. மூன்று மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, யோகி பாபு, சஞ்சய் தத் ஆகியோரின் நடிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு அனிருத்தினுடைய இசையும் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. படத்தின் மீது விமர்சனங்களும் குறிப்பிட்ட அளவு பாசிட்டிவாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே படத்தினுடைய வெற்றி விழாவை மும்பையில் சமீபத்தில் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீ ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருப்பது. திரைத் துறையில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்குமே கோல்டன் குளோப், ஆஸ்கர், தேசிய விருதுகளை பெறுவதற்கு ஆசை இருக்கும். அதேபோல் தான் எங்களுக்கும். ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு செல்ல இருக்கின்றோம். இதற்காக நடிகர் ஷாருக்கான் நானும் பேசி வருகிறோம் என்று தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தையும் ஆஸ்கர் தேர்வு பட்டியலுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

The post “ஆஸ்காருக்கு ஜவான்!”: இயக்குனர் அட்லீ appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கர் அகாடமி குழுவில் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் https://touringtalkies.co/oscars-invite-karan-ram-charan-jr-ntr-mani-ratnam-to-become-academy-members/ Fri, 30 Jun 2023 03:26:05 +0000 https://touringtalkies.co/?p=33926 ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர். அந்த வகையில், 2023-ஆம் அண்டுக்கான புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் உள்ள 398 கலைஞர்களைத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் இயக்குநர் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், […]

The post ஆஸ்கர் அகாடமி குழுவில் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் appeared first on Touring Talkies.

]]>
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர். அந்த வகையில், 2023-ஆம் அண்டுக்கான புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் உள்ள 398 கலைஞர்களைத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் இயக்குநர் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், கீரவாணி உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்கர் அகாடமி குழுவில் சூர்யா, கஜோல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இணைந்தனர். ஆஸ்கர் அகாடமி குழுவில் 10,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆஸ்கர் அகாடமி குழுவில் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கார் விருதுக்கு பின் ஐதராபாத் திரும்பினார் ராம்சரண்! https://touringtalkies.co/ram-charan-returned-to-hyderabad-after-the-oscars/ Fri, 17 Mar 2023 05:22:05 +0000 https://touringtalkies.co/?p=30651 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற, ‘நாட்டு… நாட்டு..’. பாடலுக்கு கிடைத்தது. இதேபோன்று, சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படம் ஆஸ்கார் விருது வென்றது. இதனால், இந்த முறை இந்திய திரை துறைக்கு 2 ஆஸ்கார் […]

The post ஆஸ்கார் விருதுக்கு பின் ஐதராபாத் திரும்பினார் ராம்சரண்! appeared first on Touring Talkies.

]]>
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற, ‘நாட்டு… நாட்டு..’. பாடலுக்கு கிடைத்தது. இதேபோன்று, சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படம் ஆஸ்கார் விருது வென்றது.

இதனால், இந்த முறை இந்திய திரை துறைக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்து உள்ளன.

இதனை தொடர்ந்து, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் நாடு திரும்பினர். இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி ரமா, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு நேற்று காலை திரும்பினர். எனினும், ஆர்.ஆர்.ஆர். படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்த நடிகர் ராம்சரண் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை வந்திறங்கினார்.

அவர் வந்தபோது, ரசிகர்களின் கூச்சல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, டெல்லியிலேயே அவர் தங்கினார். இதன்பின்பு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோர் சந்தித்தனர். இதுபற்றி மந்திரி அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்.ஆர்.ஆர். படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது ஆகியவற்றுக்காக ராம்சரணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன் என கூறினார்.

அதன்பின்பு நேற்றிரவு வரை டெல்லியிலேயே தங்கிய நடிகர் ராம்சரண், அதன்பின்பு நள்ளிரவில் ஐதராபாத் நகருக்கு வந்து சேர்ந்து உள்ளார். அவரை காணவும், வரவேற்கவும் அவரது ரசிகர்கள் திரண்டு வந்து இருந்தனர்.

திறந்த நிலையிலான காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தபடியே வந்த அவர் மீது ரசிகர்கள் சார்பில் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

The post ஆஸ்கார் விருதுக்கு பின் ஐதராபாத் திரும்பினார் ராம்சரண்! appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர். பாடல்! https://touringtalkies.co/oscar-nominated-rrr-song/ Fri, 23 Dec 2022 03:19:53 +0000 https://touringtalkies.co/?p=28902 ராஜமவுலி இயக்கத்தில் ராம் ரசரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்து பெரும் வெற்றி பெற்றது பான் இண்டியா படமான,  ‘ஆர்.ஆர்.ஆர்’. கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியான இப்படம், பல விருதுகளையும் பெற்றது. சமீபத்தில்கூட, ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல், ஒரிஜினல் […]

The post ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர். பாடல்! appeared first on Touring Talkies.

]]>
ராஜமவுலி இயக்கத்தில் ராம் ரசரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்து பெரும் வெற்றி பெற்றது பான் இண்டியா படமான,  ‘ஆர்.ஆர்.ஆர்’.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியான இப்படம், பல விருதுகளையும் பெற்றது. சமீபத்தில்கூட, ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார்.

இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல், ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பிடித்து உள்ளது.

இது குறித்து கூறியிருக்கும் ராஜமவுலி, “இந்த தேர்வும் படத்துக்கான ஒரு அங்கீகாரம்தான். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

இப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர். பாடல்! appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கர் விருதை தொலைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..! https://touringtalkies.co/ar-rahman-who-lost-the-oscar-award/ Mon, 05 Dec 2022 17:38:57 +0000 https://touringtalkies.co/?p=28082 மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். தனது இசையால் உலக ரசிகர்களை கட்டிப் போட்டவர். அவர் ஒரு பேட்டியில் தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருது காணாமல் போய் விட்டது என்றும் பிறகு நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைத்தததாகவும் கூறியிருந்தார். |விருது கிடைத்ததும் எனது அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.அதை அவர் துணியில் சுற்றி  அலமாரியில் வைத்து விட்டார். பின் அதைப்பற்றி பல ஆண்டுகளாக நான் யோசிக்க வில்லை. எனது அம்மா கரீமா பேகம் 2020 காலமானார். பிறகு தேடியபோதுஅலமாரியில் […]

The post ஆஸ்கர் விருதை தொலைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..! appeared first on Touring Talkies.

]]>

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். தனது இசையால் உலக ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

அவர் ஒரு பேட்டியில் தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருது காணாமல் போய் விட்டது என்றும் பிறகு நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைத்தததாகவும் கூறியிருந்தார்.

|விருது கிடைத்ததும் எனது அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.அதை அவர் துணியில் சுற்றி  அலமாரியில் வைத்து விட்டார். பின் அதைப்பற்றி பல ஆண்டுகளாக நான் யோசிக்க வில்லை. எனது அம்மா கரீமா பேகம் 2020 காலமானார்.

பிறகு தேடியபோதுஅலமாரியில் விருதுகள் இல்லை.

நான் தொலைத்து விட்டேன் என்றே நினைத்தேன். அதன் பிறகு எனது மகன் வேறு அலமாரியில் தேடிய போது கிடைத்தது அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது| என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார்.

The post ஆஸ்கர் விருதை தொலைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..! appeared first on Touring Talkies.

]]>