Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
k.rajan – Touring Talkies https://touringtalkies.co Tue, 18 Jul 2023 05:23:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png k.rajan – Touring Talkies https://touringtalkies.co 32 32 அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து https://touringtalkies.co/k-rajan-says-vijay-will-failin-politics/ Tue, 18 Jul 2023 05:23:41 +0000 https://touringtalkies.co/?p=34469 நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‘அவர் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார்’ என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளஇத்துள்ள பேட்டியில், “234 தொகுதிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்தது பாராட்டியதும், இரவு பாடசாலை அமைப்பதும் நல்ல விசயம். ஆனால் காமராஜர் பிறந்தநாளில் அதைத் தொடங்குவது அரசியல். தவிர, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.க்கு தனித்த குணநலன்கள் உண்டு. அவர்கள் எத்தனை ஏவுகணைகளையும் தாங்குவார்கள். ஆனால் விஜய் அப்படி […]

The post அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‘அவர் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார்’ என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளஇத்துள்ள பேட்டியில், “234 தொகுதிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்தது பாராட்டியதும், இரவு பாடசாலை அமைப்பதும் நல்ல விசயம். ஆனால் காமராஜர் பிறந்தநாளில் அதைத் தொடங்குவது அரசியல்.

தவிர, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.க்கு தனித்த குணநலன்கள் உண்டு. அவர்கள் எத்தனை ஏவுகணைகளையும் தாங்குவார்கள். ஆனால் விஜய் அப்படி அல்ல.
அவர் தனது தந்தையுடன் முரண்படுகிறார். அவரின் தந்தை விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்தார்.

தற்போது புஸ்ஸி ஆனந்த் பின்னால் விஜய் செல்கிறார். முழு நேர அரசியலுக்கு வந்தால் விஜய் படுதோல்வி அடைவார்” என்றார் கே.ராஜன்.

.

The post அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் https://touringtalkies.co/if-warisu-doesnt-get-a-theater-why-do-you-care-k-rajans-fury/ Tue, 06 Dec 2022 16:55:15 +0000 https://touringtalkies.co/?p=28150 Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி T.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் வகையில் உருவாகியிருக்கிறது ‘Hi 5’ திரைப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் […]

The post “வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் appeared first on Touring Talkies.

]]>
Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குர் பாஸ்கி T.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் வகையில் உருவாகியிருக்கிறது Hi 5’ திரைப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக் குழுவிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

ajayanbala

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, “இந்தப் படம் அன்பைப் பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள். மறைந்தும் வாழ்கிறார்கள். அதேபோல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப் படத்தில் கிராமமும் இருக்கிறது. நகரமும் இருக்கிறது. இப்படம் வயதானவர்களின் வலியை சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

k.rajan

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள். வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. அதற்காக ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

‘வாரிசு’ படத்திற்கு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தியேட்டர் கிடைக்கவில்லை என்று இங்கேயுள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை..? இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள்..? இங்கே இந்த மாதிரி சின்ன படம்தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இந்தப் படம் ஓட வேண்டும். இப்படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான பாஸ்கி T.ராஜ் பேசும்போது, “இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி.

முதியவர்கள் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வதுதான் இந்தப் படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்.  படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப் பழக்கம் இல்லாமல் வாழுங்கள்.

இந்தப் படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா, அப்பாவை போற்ற வேண்டும். அம்மா, அப்பாவை வணங்குபவன்தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.  இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது. ஆனால், வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம். ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக் காலம்தான் நம் வாழ்வில் முக்கியமானது. நாம் அந்தக் காலக்கட்டத்தில்தான் நமக்கு பிடித்ததை செய்ய விருப்பப்பட்டு வாழுகிறோம்.  முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

The post “வாரிசு’ படத்துக்கு தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – K.ராஜனின் சீற்றம் appeared first on Touring Talkies.

]]>
அஜித் மட்டுமே தயாரிப்பாளர் பற்றி கவலை படுவார் – கே. ராஜன் https://touringtalkies.co/ajith-is-the-only-one-who-worries-about-the-producer-k-rajan/ Thu, 01 Dec 2022 13:29:46 +0000 https://touringtalkies.co/?p=27911 தயாரிப்பாளர் கே.ராஜன் பொதுவாக நடிகர்களை பற்றி விமர்சித்து பேசுவது உண்டு. ஆனால் அவர் விதிவிலக்காக நடிகர் அஜித் பற்றி ஒரு பேட்டியில் பாராட்டியில் பேசியிருந்தார்.முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தங்களின் சம்பளம் பற்றி மட்டும் தான் யோசிக்கின்றனர். ஆனால் அஜித் மனிதாவிமானம் உள்ளாவர்.  சத்திய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி  தியாகராஜன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படம் 2017 ல் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. படம் தோல்வி அடைந்த போது தயாரிப்பாளர் பற்றி […]

The post அஜித் மட்டுமே தயாரிப்பாளர் பற்றி கவலை படுவார் – கே. ராஜன் appeared first on Touring Talkies.

]]>

தயாரிப்பாளர் கே.ராஜன் பொதுவாக நடிகர்களை பற்றி விமர்சித்து பேசுவது உண்டு. ஆனால் அவர் விதிவிலக்காக நடிகர் அஜித் பற்றி ஒரு பேட்டியில் பாராட்டியில் பேசியிருந்தார்.முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தங்களின் சம்பளம் பற்றி மட்டும் தான் யோசிக்கின்றனர். ஆனால் அஜித் மனிதாவிமானம் உள்ளாவர். 

சத்திய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி  தியாகராஜன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படம் 2017 ல் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. படம் தோல்வி அடைந்த போது தயாரிப்பாளர் பற்றி கவலைப்பட்டர் அஜித்.

இயக்குனர் சிவாவை அழைத்து விஸ்வாசம் என்ற படம் தருகிறேன். சிக்கனமாக எடுங்கள் என்று அறிவுரை வழங்கி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மீண்டும் சிவா,அஜித்,தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் கூட்டணியில் விஸ்வாசம் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்தது.

அதனால் தான் சொல்கிறேன் அஜித் மற்ற நடிகர்கள் போல் கிடையாது. தயாரிப்பாளரின் சூழ்நிலையை புரிந்து கொள்பவர். அவர் மட்டுமே சினிமாவில் அவர்களைப் பற்றி கவலைப்படும் உயர்ந்த மனிதன் என்றார் கே. ராஜன்.

The post அஜித் மட்டுமே தயாரிப்பாளர் பற்றி கவலை படுவார் – கே. ராஜன் appeared first on Touring Talkies.

]]>
“பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைப்பதில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு https://touringtalkies.co/big-actors-dont-keep-cinema-alive-%e2%80%8b%e2%80%8bproducer-k-rajan-alleges/ Thu, 04 Aug 2022 04:37:02 +0000 https://touringtalkies.co/?p=23575 Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள்( Not Reachable). இந்தப் படத்தில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பேனர் – Crackbrain Productions  & M Creations, எழுத்து – படத் தொகுப்பு & இயக்கம் – சந்துரு முருகானந்தம், ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், இசை – சரண் குமார், […]

The post “பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைப்பதில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள்( Not Reachable).

இந்தப் படத்தில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேனர் – Crackbrain Productions  & M Creations, எழுத்து – படத் தொகுப்பு & இயக்கம் – சந்துரு முருகானந்தம், ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், இசை – சரண் குமார், ஒலி வடிவமைப்பு – விக்னேஷ் பாஸ்கரன், கலை இயக்குநர் – ஜெகதீஷ், VFX – ஹரிகரன்.K, சந்துரு முருகானந்தம், DI – பயர்பாக்ஸ் ஸ்டுடியோஸ், வண்ணக் கலவை – ஸ்ரீகாந்த் ரகு, ஒப்பனை – பெர்சி அலெக்ஸ், பாடல் வரிகள் – உடுமலை பிரவின், M.C.விக்கி, தி மாங்க், பத்திரிகை தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட  தயாரிப்பாளர்கள்தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள். ஆனால், வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன்.

இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை. அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள்தான் தமிழ் சினிமாவை வாழ வைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள். சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. இந்த நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன்..” என்றார்.

The post “பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைப்பதில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
“பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன? ஓடலன்னா என்ன?” – கே.ராஜனின் கோபப் பேச்சு https://touringtalkies.co/what-if-the-beast-movie-ran-or-not-run-k-rajans-angry-speech/ Fri, 15 Apr 2022 07:12:18 +0000 https://touringtalkies.co/?p=21767 கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் ‘தொடாதே’. இப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். ஒளிப்பதிவு – ராஜேஷ், இசை – ராஜா, பாடல்கள் – பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் – நாகேந்திரன், உதவி இயக்கம் – பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி இயக்கம் – சிவப்பிரகாஷ், படத் தொகுப்பு – நாகர்.ஜி, நடன […]

The post “பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன? ஓடலன்னா என்ன?” – கே.ராஜனின் கோபப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் தொடாதே’.

ப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ், இசை – ராஜா, பாடல்கள் – பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் – நாகேந்திரன், உதவி இயக்கம் – பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி இயக்கம் – சிவப்பிரகாஷ், படத் தொகுப்பு – நாகர்.ஜி, நடன இயக்கம் – பாரதி, இணைத் தயாரிப்பு – எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு – எஸ்.ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், எழுத்து, இயக்கம் – எஸ்.அலெக்ஸ்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும், தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இயக்குநர் ராசி அழகப்பன், இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸாலி, இயக்குநர் விருமாண்டி, நடிகர்கள் முத்துக்காளை, கூல் சுரேஷ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தத் ‘தொடாதே’ படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பார்த்தபோது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

காதல் சுகுமார் காமெடி நடிகராக இருக்கும்போதே அவரை நான் ரசித்து பார்ப்பேன். இன்று ஹீரோவாக நடிக்கிறார். அவர் நிச்சயம் நன்றாக நடித்திருப்பார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள். உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள்தான் பெரிய படம். பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம்.

பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய்தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள்.

இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க.. இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா..? அதிலும் நஷ்டம்தான் வருகிறது. நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லல. நீங்கள் வேற மாதிரி போட்றாதீங்க.

இப்பக்கூட என்னை வெளியில் பேட்டி எடுத்தாங்க. அரை மணி நேரம் எடுத்த பேட்டியில், ‘பீஸ்ட்’ படம் பற்றி என்கிட்ட கேக்குறாங்க. பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன.. ஓடலனா எனக்கென்ன… என்கிட்டபோய் ‘பீஸ்ட்’… ‘பீஸ்ட்’.. என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை.

காரணம், நான் விஜய்கிட்ட தேதி கேட்டு நிக்க போறதல்ல. பணம் கேட்டு நிக்க போறதல்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் குரல் கொடுக்கிறேன், தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன்.

மதுவால் ஏற்படும் தீமைகளை சொல்லும் இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். மதுவால் ஏழைகளின் குடும்பமும், அவர்களுடைய வருமானமும் எப்படி  பாதிக்கப்படுகிறது என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் என் பகுதியில் இருக்கும் பல மதுக்கடைகளை மூட நான் முயற்சித்து வருகிறேன். இப்போதுகூட இது பற்றி முதல்வர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன், அவரை அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

The post “பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன? ஓடலன்னா என்ன?” – கே.ராஜனின் கோபப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஹீரோயினின் பொட்டுக்காக ஒரு மணி நேரம் ஷூட்டிங் நிறுத்தம்-யாருக்கு நஷ்டம்..? https://touringtalkies.co/kanmani-movie-audio-release-function-news/ Wed, 01 Dec 2021 14:29:11 +0000 https://touringtalkies.co/?p=19678 தயாரிப்பாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன் குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாகமாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் இன்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக் […]

The post ஹீரோயினின் பொட்டுக்காக ஒரு மணி நேரம் ஷூட்டிங் நிறுத்தம்-யாருக்கு நஷ்டம்..? appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’.

இதில் தமன் குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாகமாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் இன்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப் படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். “நீங்கள் வந்தால் களை கட்டும்” என்றார். எனக்கு இந்தப் படம் கல்லா வேண்டும் என்பதுதான் ஆசை.

இந்தப் படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்..? தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.? தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால், இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை.

ஜெய் பீம்’ படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள். உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும்தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள்.

முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட் பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயினின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம்.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான். இந்தப் படத்தின் ஹீரோ அடுத்தப் படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர்தான்.

இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்ன படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட் கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு இருக்கிறதா..?

அடுத்த வாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம், “தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள்” என்று சொல்லப் போகிறேன். இந்தக் கண்மணி’ படம் மிக நன்றாக இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள்..” என்றார்.

The post ஹீரோயினின் பொட்டுக்காக ஒரு மணி நேரம் ஷூட்டிங் நிறுத்தம்-யாருக்கு நஷ்டம்..? appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு https://touringtalkies.co/actor-vijay-is-afraid-to-speak-out-against-the-central-government-producer-k-rajan-attacked/ Fri, 24 Sep 2021 07:32:51 +0000 https://touringtalkies.co/?p=18231 இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால்  சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக சிறிய விமர்சனத்தை […]

The post “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால்  சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன் வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள்.

நெய்வேலியில்  படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்தப் படத்திற்கு பிறகு  மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை…விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம்.

நீதிமன்றக் காட்சியில் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தணிக்கைக் குழு கூறியதாக இயக்குநர் கூறினார். திருமாவளவன், சீமான், வேல்முருகனிடம் இது பற்றி கூறி போராட்டம் நடத்த வேண்டும். திரைப்படங்களில் தவறான வார்த்தைகளையே அனுமதிப்பவர்கள் அம்பேத்கர் படத்தையும், திருக்குறளையும் படத்தில் காட்டக் கூடாது.. சொல்லக் கூடாது என்று கூறுவது சரியா..?

பா.ஜ.க. திரைத்துறையினருக்கு எதிராக சட்டங்களை திருத்தி அக்கிரமம் செய்து வருகிறது. காயத்ரி ரகுராம் போல தெருவில் திரிந்த பலருக்கு சினிமாக்காரர்கள் என்பதாலேயே பாஜகவில்  பொறுப்பு தந்தார்கள். அது இப்போது வள்.. வள்… என குரைக்கிறது…” என்று காரமாகவே பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

The post “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு appeared first on Touring Talkies.

]]>