Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php(1) : eval()'d code:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
journalist – Touring Talkies https://touringtalkies.co Fri, 18 Aug 2023 06:29:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png journalist – Touring Talkies https://touringtalkies.co 32 32 கண் கலங்கிய பத்திரிகையாளர்! என்ன செய்தார் ஏ.வி.எம்.? https://touringtalkies.co/avm-that-thing-done-with-magnanimity/ Fri, 18 Aug 2023 06:29:24 +0000 https://touringtalkies.co/?p=35397   இந்திய திரையுலக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஏவி.எம். திரைப்பட தயாரிப்பு நிறுவனம். இதைத் துவங்கியவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இவரது வாழ்க்கை வரலாறு தொடராக வார இதழ் ஒன்றின் நிர்வாகம் விரும்பியது. மெய்யப்பட செட்டியாரும் ஒப்புக்கொண்டார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லச் சொல்ல.. அந்த வார இதழின் செய்தியாளர் பால்யூ, எழுதுவார். பிறகு இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட திட்டமிட்டார்கள். அப்போது மெய்யப்ப செட்டியார், ‘என் வாழ்க்கையை தொகுத்து எழுதிய செய்தியாளர் பால்யூவின் […]

The post கண் கலங்கிய பத்திரிகையாளர்! என்ன செய்தார் ஏ.வி.எம்.? appeared first on Touring Talkies.

]]>
 

இந்திய திரையுலக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஏவி.எம். திரைப்பட தயாரிப்பு நிறுவனம். இதைத் துவங்கியவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

இவரது வாழ்க்கை வரலாறு தொடராக வார இதழ் ஒன்றின் நிர்வாகம் விரும்பியது. மெய்யப்பட செட்டியாரும் ஒப்புக்கொண்டார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லச் சொல்ல.. அந்த வார இதழின் செய்தியாளர் பால்யூ, எழுதுவார்.

பிறகு இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட திட்டமிட்டார்கள். அப்போது மெய்யப்ப செட்டியார், ‘என் வாழ்க்கையை தொகுத்து எழுதிய செய்தியாளர் பால்யூவின் பெயர் புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும்’ என்றார்.

அதற்கு பால்யூ, ‘நீங்கள் சொன்னதைத்தான் நான் எழுதினேன்.. எனது பெயர் வேண்டாம்’ என மறுத்தார்.

ஆனால் மெய்யப்ப செட்டியார், ‘என் வாழ்க்கைதான்.. நான்தான் சொன்னேன். ஆனால் அதை அழகாக தொகுத்து எழுதியது நீங்கள். ஆகவே உங்களது பங்களிப்பை புத்தகத்தில் அங்கீகரிப்பதுதான் முறை’  என்றார்.

அதே போல புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த விதத்தில் பல்யூவின் பெயர் வெளியானது.

திரையுலகில் கோஸ்ட் ரைட்டர் என்கிற பெயர் சகஜமாக புழங்கும். அதவது யாரோ ஒரு திறமையாளர் எழுத, வேறு ஒருவர் தனது பெயரில் அதை வெளியிடுவார்.

இப்படிப்பட்ட சூழலில், எழுதியவருக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மெய்யப்ப செட்டியார் எவ்வளவு உயர்ந்தவர்!

ஆகவேதான், ஏவிஎம் செயலைக்கண்டு கண்கலங்கிவிட்டார் பத்திரிகையாளர் பால்யூ.

இது போல பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய  சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

 

The post கண் கலங்கிய பத்திரிகையாளர்! என்ன செய்தார் ஏ.வி.எம்.? appeared first on Touring Talkies.

]]>
பத்திரிகையாளரை விரட்டிய அஜித்! https://touringtalkies.co/ajith-chased-away-the-journalist/ Sun, 06 Aug 2023 02:39:59 +0000 https://touringtalkies.co/?p=35069 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்: “ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருககிறது. அஜித் நடிக்க வேண்டிய காட்சி. அந்த பிலிம் சிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ டிவி தொலைக்காட்சியின் வீடியோ கிராபர் அனுமதி இல்லாமல் உள்ளே வந்துவிட்டார். தவிர வீடியோவில் படம் பிடிக்கவும் துவங்கினார். இதைப் பார்த்து டென்சன் ஆன அஜித், அந்த வீடியோகிராபரை வெளியே போகச் சொன்னார். அதற்கு […]

The post பத்திரிகையாளரை விரட்டிய அஜித்! appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்:

“ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருககிறது. அஜித் நடிக்க வேண்டிய காட்சி.

அந்த பிலிம் சிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ டிவி தொலைக்காட்சியின் வீடியோ கிராபர் அனுமதி இல்லாமல் உள்ளே வந்துவிட்டார். தவிர வீடியோவில் படம் பிடிக்கவும் துவங்கினார்.

இதைப் பார்த்து டென்சன் ஆன அஜித், அந்த வீடியோகிராபரை வெளியே போகச் சொன்னார். அதற்கு அந்த வீடியோகிராபர், “இந்த பிலிம் சிட்டி நிறுவனம் நடத்தும் டிவியைச் சேர்ந்தவன் நான்” என திமிராகச் சொன்னார்.

உடனே அஜித், “நீ பிலிம் சிட்டியின் ஓனராகவே இரு. ஆனால் இப்போது நாங்கள் வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். எங்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது. வெளியே போ” என விரட்டிவிட்டார்.

அஜித் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர். யாருக்காவது பிரச்சினை என்றால் ஓடிப்போய் உதவி செய்பவர். அதே நேரம் தன்மானம் மிக்கவர். அதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி” என்றார் கே.எஸ். ரவிகுமார்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

 

The post பத்திரிகையாளரை விரட்டிய அஜித்! appeared first on Touring Talkies.

]]>
மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! https://touringtalkies.co/senior-film-journalist-mr-ramamurthy-passed-away/ Mon, 27 Mar 2023 05:34:12 +0000 https://touringtalkies.co/?p=31051 மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88)  நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில்  இயற்கை எய்தினார். சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான  ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள்  பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது […]

The post மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! appeared first on Touring Talkies.

]]>
மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88)  நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில்  இயற்கை எய்தினார்.

சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான  ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள்  பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளை ராமமூர்த்தி பெற்றுள்ளார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

மேலும் விவரங்கள்  அறிய:

திரு. கோபாலன் ( சகோதரர் ) :  98400 28716

The post மூத்த சினிமா பத்திரிகையாளர் ராமமூர்த்தி மறைவு! appeared first on Touring Talkies.

]]>
ஏற்றிவிட்டவரை இறக்கிவிட்ட இயக்குநர் அமீர்! https://touringtalkies.co/makkal-kural-ramji-director-amir-car-night-journalist/ Tue, 03 Jan 2023 07:09:12 +0000 https://touringtalkies.co/?p=29134 சில சம்பவங்கள், சின்னச் சின்ன விசயங்களாகத் தோன்றும்… ஆனால் வாழ்வின் பெரிய பாடங்களை அவை உணர்த்தும். அப்டி சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்…. இரவு நேரம்.. போக்குவரத்து சற்று குறைந்திருக்கும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை… பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார் அந்த மனிதர்.. அப்போது, ‘சர்..’ என வந்து பிரேக் அடித்து நிற்கிறது ஒரு உயர்தர சொகுசு கார். உள்ளிருந்தவர் பிரபல இயக்குநர் அமீர். கதவைத் திறந்து, ‘வாங்கண்ணே.. போகலாம்’ என்கிறார். நிறுத்தத்தில் நின்றவருக்கு ஆச்சரியம்.. அந்த நேரத்தில் […]

The post ஏற்றிவிட்டவரை இறக்கிவிட்ட இயக்குநர் அமீர்! appeared first on Touring Talkies.

]]>
சில சம்பவங்கள், சின்னச் சின்ன விசயங்களாகத் தோன்றும்… ஆனால் வாழ்வின் பெரிய பாடங்களை அவை உணர்த்தும்.

அப்டி சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்….

இரவு நேரம்.. போக்குவரத்து சற்று குறைந்திருக்கும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை…

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார் அந்த மனிதர்..

அப்போது, ‘சர்..’ என வந்து பிரேக் அடித்து நிற்கிறது ஒரு உயர்தர சொகுசு கார்.

உள்ளிருந்தவர் பிரபல இயக்குநர் அமீர். கதவைத் திறந்து, ‘வாங்கண்ணே.. போகலாம்’ என்கிறார்.

நிறுத்தத்தில் நின்றவருக்கு ஆச்சரியம்.. அந்த நேரத்தில் இவர் எதிர்பார்க்கவில்லை.. காரில் ஏறி அமர்கிறார்..

இவர்.. மூத்த பத்திரிகையாளர், ‘மக்கள் குரல்’ ராம்ஜி.

மக்கள் குரல் நாளிதழில் பல காலமாக பணியாற்றி வருபவர்.. திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறை குறித்து இவர் படைத்த கட்டுரைகள், நேர்காணல்கள் அத்தனை சிறப்பானவை. இவரது எழுத்துகள் ஒவ்வொன்றும், கலைத்துறையினருக்கு கிரியா ஊக்கி. இவர் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.

‘மக்கள் குரல்’ ராம்ஜி ( தனது பெயரனுடன்..)

காலில் ஏறிய ராம்ஜியிடம் அமீர், “என்னண்ணே இங்கே…” என்கிறார்.
அதற்கு ராம்ஜி, “மனைவி பிள்ளைகள் வெளியூர் செல்கிறார்கள். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலேற்றிவிட்டு வருகிறேன். போகும்போது காரில் சென்றேன்.. தற்போது பேருந்துக்காக காத்திருந்தேன்..” என்கிறார்.

இவர்கள் பேச்சு தொடர.. கார், ராம்ஜியின் வீட்டு வாசலில் நிற்கிறது. நன்றி சொல்லி விடைபெறுகிறார் ராம்ஜி.

அத்துடன் விடுவது அவரது வழக்கமில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடம், அமீருக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்புகிறார்.

அதில்..

“பாசத்துக்கும் மரியாதைக்கு உரிய அன்பு இயக்குனர் அமீர் அவர்களுக்கு,

வணக்கம்.

20 23 ஆம் ஆண்டின் புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்.
இரவு 10 மணி, பேருந்து வருமா வராதா பூவா தலையா போட்ட நிலையில்…

ஒருவேளை பேருந்து வராவிட்டால் ஓலா ஏறலாமா என்று அரைகுறை மனதில் சலன த்தோடு இருக்கும் நேரம்…

எதிர்பாராத சந்திப்பில் அன்போடு அருகே அழைத்ததும், சொகுசு காரில் பேசியபடியே இல்லம் நோக்கி காரை இயக்கியதும்,

வீட்டு வாசல் அருகில் இறக்கி விட்டு இரவு வணக்கத்தை சொல்லி விடை பெற்றதும்…

நன்றி சொல்வது அழகல்ல, இருந்தாலும்… நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இந்நாள் …. நினைவில் ஒரு நாள்.

என்றும் அன்புடன்,
கலைமாமணி வே. ராம்ஜி
மக்கள் குரல்
02.01.2023 “ என்று அந்த வாட்ஸ் அப் செய்தியில் குறிப்பிடுகிறார்.

அடுத்த சில நிமிடங்களில் அமீரிடமிருந்து வாட்ஸ் அப் செய்தி வருகிறது.
அதில்..

“மரியாதைக்குரிய அண்ணன் அவர்களுக்கு,
தங்களுடைய எழுத்தின் மூலம் பலரை சொகுசு கார்களில் பவணி வர ஏற்றிவிட்டவர்கள் நீங்கள்.

இரவு நேரத்தில் உங்களை தனியே பேருந்து நிறுத்தத்தில் பார்த்த பிறகும் கண்டும்காணாமல் செல்வது நன்றி இல்லா செயல்.

நான் சொகுசு காரில் செல்வதற்கு நீங்கள் எழுதிய எழுத்துக்களும் ஒரு காரணம்.
ஆகவே என்னுடைய கடமையை தான் செய்தேன்.

நன்றி

அன்புடன்
அமீர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எழுத்துக்களால் தன்னை ஊக்குவித்தவரை, உயரம் சென்ற பிறகும் மறக்காத அமீர்… அகால நேரத்தில் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டதற்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி எழுத்துகளாலும் நன்றி தெரிவித்து சிறு கடிதம் எழுதிய ராம்ஜி… பதிலுக்கும் தனது அன்பை – நன்றியை வெளிப்படுத்திய அமீர்!

இது போன்று அன்பை வெளிப்படுத்தும் சிறு சிறு சம்பவங்கள்தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.

வருடத்தின் இரண்டாம் நாள் நடந்த, முதல்தர சம்பவம் இது..! இந்த பண்பை, வருடம் முழுதும்.. இல்லையில்லை.. வாழ்க்கை முழுதும் கடைபிடிக்கலாமே!

The post ஏற்றிவிட்டவரை இறக்கிவிட்ட இயக்குநர் அமீர்! appeared first on Touring Talkies.

]]>
பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்! https://touringtalkies.co/rajinikanth-fans-surrounded-journalist-bismi-house-for-his-statement-about-vijay/ Mon, 02 Jan 2023 02:16:09 +0000 https://touringtalkies.co/?p=29083 விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “தமிழ்த் திரையுலகில் நெம்பர் ஒன் நடிகர் விஜய்தான்” என அவரது ரசிகர்கள் முழக்கமிட்டனர். இதையே மேடையில் இருந்து உற்சாகமாகச் சொன்னார் தயாரிப்பாளர் தில் ராஜ். மேலும் அதே விழாவில், “தற்போது நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார்” என நடிகர் சரத்குமார் பேசினார். இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் யார் சூப்பர் ஸ்டார் என சமூகவலைதளங்களில் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், “விஜய் தான் […]

The post பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “தமிழ்த் திரையுலகில் நெம்பர் ஒன் நடிகர் விஜய்தான்” என அவரது ரசிகர்கள் முழக்கமிட்டனர். இதையே மேடையில் இருந்து உற்சாகமாகச் சொன்னார் தயாரிப்பாளர் தில் ராஜ்.

மேலும் அதே விழாவில், “தற்போது நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார்” என நடிகர் சரத்குமார் பேசினார்.

இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் யார் சூப்பர் ஸ்டார் என சமூகவலைதளங்களில் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், “விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார்.

ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள்” என்று ஒரு யூ டியுப் சேனலில் பேசினார்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் பத்து பேர், சென்னையில் உள்ள பிஸ்மியின் வீட்டுக்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரஜினி குறித்து யூடியூபில் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா பத்திரிகையாளரின வீட்டுக்கே சென்று ரஜினி ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The post பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>