Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director sridhar – Touring Talkies https://touringtalkies.co Wed, 05 May 2021 13:20:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director sridhar – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-5௦ – உதவியாளருக்காக பட நிறுவனத்தைவிட்டு விலகத் துணிந்த இயக்குநர் ஸ்ரீதர் https://touringtalkies.co/cinema-history-50-director-sreedhar-who-dared-to-leave-the-film-company-for-an-assistant/ Wed, 05 May 2021 13:19:35 +0000 https://touringtalkies.co/?p=14915 ‘அமர தீபம்’, ‘உத்தமபுத்திரன்’, ’கல்யாணப் பரிசு’ உட்பட பல  வெற்றிப்  படங்களை எடுத்த ‘வீனஸ் பிக்சர்ஸ்’  நிறுவனம் எந்த அளவு மூலதனத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்தால்  யாராலும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. ‘எதிர்பாராதது’ படத்தில் பணியாற்றும்போது அப்படத்தின்  தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன்  ஆகியோரோடு ஸ்ரீதருக்கு மிகவும் நெருக்கமான நட்பு உருவானது. அதைத் தொடர்ந்து தினமும் தவறாமல் சந்தித்துப் பேசுவதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள். அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது சொந்தமாக […]

The post சினிமா வரலாறு-5௦ – உதவியாளருக்காக பட நிறுவனத்தைவிட்டு விலகத் துணிந்த இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.

]]>
‘அமர தீபம்’, ‘உத்தமபுத்திரன்’, ’கல்யாணப் பரிசு’ உட்பட பல  வெற்றிப்  படங்களை எடுத்த ‘வீனஸ் பிக்சர்ஸ்’  நிறுவனம் எந்த அளவு மூலதனத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்தால்  யாராலும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.

‘எதிர்பாராதது’ படத்தில் பணியாற்றும்போது அப்படத்தின்  தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன்  ஆகியோரோடு ஸ்ரீதருக்கு மிகவும் நெருக்கமான நட்பு உருவானது. அதைத் தொடர்ந்து தினமும் தவறாமல் சந்தித்துப் பேசுவதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது சொந்தமாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து நாம் படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றியபோது அவர்கள் யார் கையிலும் முழுதாக ஆயிரம் ரூபாய்கூட இல்லை என்பதுதான் அதில் முக்கியமான விஷயம்.

அப்படிப்பட்ட  சூழ்நிலையில் படம் எடுப்பது என்று முடிவெடுத்த அவர்கள் மூவரும் பணத்துக்கு என்ன செய்வது என்ற கேள்வியை ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டுக் கொண்டனர்.

அப்போது ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்  உருவாகிக் கொண்டிருந்த  படங்களின் தமிழ்ப் பதிப்புக்கு வசனம்  எழுத  ஒன்பதாயிரம் ரூபாய்வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

அதனால், “நான் பணியாற்றும் கம்பெனிகளில் பேசி ஐயாயிரம் ரூபாய்வரை நான் வாங்கித் தருகிறேன்” என்றார் ஸ்ரீதர். கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகிய இருவரும் தங்களால் முடிந்த பணத்தை புரட்டித் தர ஒப்புக் கொண்டனர்.

இரண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து ஸ்ரீதர் சொன்ன ‘அமர தீபம்’ என்ற  கதை அவரது நண்பர்கள் இருவருக்கும் பிடித்துப் போகவே அதையே படமாக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

அப்போது தமிழிலும், தெலுங்கிலும் பிரபலமாக இருந்த இயக்குநர் டி.பிரகாஷ்ராவின்    ஸ்டைல் ஸ்ரீதரை மிகவும் கவர்ந்திருந்த காரணத்தினால், “நம்முடைய முதல் படத்தை  இயக்கித் தரும்படி அவரையே கேட்கலாம்” என்றார் ஸ்ரீதர்.

‘பரிவர்த்தனா’ என்ற தெலுங்குப் படத்துக்கு தமிழில் வசனம் எழுதியபோதும், ‘மாதர் குல மாணிக்கம்’ படத்துக்கு வசனம் எழுதியபோதும் இயக்குநர் டி பிரகாஷ்ராவோடு  ஸ்ரீதருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த  நல்ல நட்பு  காரணமாகவும் நேரடித் தமிழ்ப் படத்தை இயக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு இது என்பதாலும் ‘அமர தீபம்’ படத்தை இயக்க டி.பிரகாஷ்ராவ் ஒப்புக் கொண்டார்.

அடுத்து அந்தக் கதையில் யார், யாரை நடிக்க வைக்கலாம் என்ற விவாதம் தொடங்கியபோது “இந்தக் கதையில்  சிவாஜிகணேசன்  கதானாயகனாக நடித்தால்தான்  நன்றாக இருக்கும்” என்று ஸ்ரீதர் சொல்ல “கதாநாயகிகள் இருவரில்  ஒருவர் பத்மினி இன்னொருவர் சாவித்திரி” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

அவர்கள் சொன்ன அந்த மூவருமே அன்று தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள். அந்த மூன்று பேரில்  ஒருவருக்கு  முன் பணம் கொடுக்கக்கூட அவர்கள்  கையில் அன்று காசு இல்லை என்ற போதிலும்  நட்சத்திரத் தேர்வை உற்சாகத்துடன் அவர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். பத்மினி, சாவித்திரி ஆகியோருடன் பேசுவதற்கு முன்னாலே சிவாஜியை சந்தித்து பேச முடிவு செய்து அவரது வீட்டுக்கு புறப்பட்டார் ஸ்ரீதர்.

‘எதிர்பாராதது’ படத்தில் நாயகனாக நடித்த  சிவாஜி, ஸ்ரீதரின்  திறமையைப்  பற்றி நன்கு அறிந்தவர். இளைஞராகவும், மிகச் சிறந்த திறமைசாலியாகவும் ஸ்ரீதர் இருந்த காரணத்தால் ‘எதிர்பாராதது’ படத்தின் படப்பிடிப்பின்போது அவருடன் மிகவும் பாசத்துடன் பழகினார் சிவாஜி.

அந்த பழக்கம் காரணமாக சிவாஜியை எளிதில்  தொடர்பு கொண்ட  ஸ்ரீதர், “உங்களிடம் ஒரு கதை சொல்ல வேண்டும். எப்போது வரலாம்..?” என்று கேட்க, “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்றார் சிவாஜி.  சிவாஜியை அவரது வீட்டில் சந்தித்த ஸ்ரீதர் ‘அமரதீபம்’ கதையை அவரிடம் சொன்னபோது,  “கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது” என்று  ஸ்ரீதரைப்  பாராட்டினார் அவர்.

“கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோரோடு சேர்ந்து நான் புதிதாகத் துவக்கியுள்ள ‘வீனஸ் பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியில்  இந்தக் கதையைத்தான் முதல்ல படமாக  எடுக்கப் போகிறோம். நீங்கதான் படத்திலே ஹிரோவா நடிக்கணும்.  ஆனால் உங்களுக்கு முன் பணம் கொடுக்கக்கூட எங்க மூணு பேர் கையிலேயும் இப்போ  பணம் இல்லை. அதனால உங்க பெயரைப் போட்டு நாங்கள் விளம்பரம் கொடுக்க நீங்க அனுமதி கொடுத்தால் நிச்சயமாக அந்த விளம்பரத்தைப் பார்த்து எங்களுக்குப் பணம் கொடுக்க பைனான்சியருங்க வருவாங்க. அதுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி  உங்களுக்கு நாங்க முன் பணம் கொடுத்திடறோம்” என்றார் ஸ்ரீதர். 

அவர் மூச்சுவிடாமல் அப்படிச்  சொன்னதைக் கேட்டு  சிரித்த சிவாஜி “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுங்கள். அதைப் பற்றி பிரச்னை இல்லை. நான் உங்கள் படத்தில் நிச்சயமாக நடிக்கிறேன். என் பெயரைப் போட்டு நீங்கள் தாராளமாக விளம்பரம் போட்டுக் கொள்ளலாம்” என்றார்.  

அடுத்து பத்மினியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீதர், சிவாஜியின் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் சொல்ல “சிவாஜி நடிக்கும்போது நான் உங்களுக்காக நடிக்க மாட்டேனா…? நிச்சயமாக நான் நடிக்கிறேன்..” என்று அவரும் முன் பணம் இன்றி   படத்திலே நடிக்க ஒப்புக் கொண்டார்.

டி.பிரகாஷ்ராவின் இயக்கத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் சாவித்திரி என்பதால் அவரை நடிக்க வைக்கின்ற பொறுப்பை  டி.பிரகாஷ்ராவ் ஏற்றுக் கொண்டார்.

‘அமரதீபம்’ படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, சாவித்திரி ஆகிய எல்லோருக்கும் வசனங்களைச் சொல்லித் தருகின்ற வேலையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

“நான் எழுதிய வசனங்களை நடிகர்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாணிதான் என் வசனங்களுக்கே உயிர் ஊட்டியது என்று சொல்வேன். எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர் நடித்தே காட்டி விடுவார்” என்று கோபாலகிருஷ்ணனின் திறமையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீதர்.

‘அமர தீபம்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து  பிரம்மாண்டமான படம் ஒன்றை  எடுக்க வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முடிவு செய்தனர். அந்தப் படம்தான் சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தமபுத்திரன்’. அந்தப் படத்திலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதரின் உதவியாளராகப் பணியாற்றினார்.

“உத்தமபுத்திரன்” பட வசனங்களை எழுதி முடித்தவுடன்  முதலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத்தான்நான் படித்துக் காட்டுவேன்.  தனக்கு  திருப்தியாக இல்லை என்று அவர் சொல்லி விட்டால் உடனே அந்த வசனங்களை அடித்துவிட்டு அவரது திருப்தியைப் பெறும்வரையில் திரும்பத திரும்ப  எழுதிக் காட்டுவது என் வழக்கம். ஏனெனில், அவரது கணிப்பு அவ்வளவு  சரியாக இருக்கும்…” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திறமையைப் பாராட்டியுள்ளார் ஸ்ரீதர்.

 அந்த அளவிற்கு ஸ்ரீதர் மரியாதை வைத்திருந்த கோபாலகிருஷ்ணனை, ஸ்ரீதர் கண் முன்னாலேயே ஒருவர் அவமானப்படுத்தினார். அன்று ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ‘உத்தமபுத்திரன்’ கதை,  விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீனஸ் பிக்சர்சில் இருந்த ஒருவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை  அவமானப்படுத்தும் வகையில் துடுக்குத்தனமாக பேசினார். அவர் அப்படி பேசியவுடன் அவமானத்தால் குன்றிப் போனார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

“பலர் முன்னிலையில் என்னை அவர் அப்படி அவமானப்படுத்தி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர் பேசியதும் எனக்கு ரொம்பவும் வேதனையாகிவிட்டது. இப்படி எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டாரே என்ற தலைக்குனிவு காரணமாக  என்னால் பதில் பேச முடியவில்லை. அதே சமயம் அந்த வேதனையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மனதிற்குள்ளேயே புழுங்கினேன். பொருமினேன். ஆனால், என்னைவிட பல மடங்கு அதிகமாகப் புழுங்கிய இதயம் ஒன்று அங்கே இருந்தது. அந்த இதயத்துக்கு சொந்தக்காரர் என் மதிப்பிற்குரிய கதாசிரியர் ஸ்ரீதர்…” என்று ஓரு கட்டுரையில்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அந்த நபர் விமர்சித்துப் பேசியதும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்ரீதர் நேராக வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தியிடம் சென்றார்.

“நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போலவே கோபாலகிருஷ்ணனும் ஒரு எழுத்தாளர். என் கண் முன்னால் அவரை அவமானப்படுத்துவது என்பது என்னை அவமானப்படுத்துவது போலத்தான். எனக்கு ஆண்டவன் அருள் இருந்ததால் சந்தர்ப்பம் கிடைத்து நான் திரைக்கதாசிரியனாகவும், தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டேன். அவருக்கு இன்னும் அந்த சந்தர்ப்பம் வரவில்லை என்பதுதான் எனக்கும் அவருக்குள்ள வித்தியாசம். ஆனால், திறமையில் அவர் எந்த வகையிலும் என்னைவிடக்  குறைந்தவர் அல்ல.

ஆகவே அவரை அவமானப்படுத்தியவர் உடனடியாக அவரிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த கம்பெனியில் இருக்க நான் தயாராக இல்லை…” என்று பொரிந்து தள்ளினார் ஸ்ரீதர்.

சிறிது நேரம் யாரும் பேசவில்லை. அந்த இடம் புயலடித்து ஓய்ந்த பூமி போல இருந்தது. ஸ்ரீதரின் கொந்தளிப்பிற்குப் பிறகு கோபாலகிருஷ்ணனை அவமானப்படுத்திய நபர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்தச் சம்பவம் பற்றி குறிப்பிடும்போது, “என்னால் கதாசிரியர் ஸ்ரீதரை அந்த இடத்தில் அப்போது பார்க்க முடியவில்லை. எழுத்தாளனின் உரிமையைக் காக்கும் போர் வீரனையே அங்கு கண்டேன். தன் சகாவை விட்டுக் கொடுக்காத ஒரு கடமை தவறாத அதிகாரியாக அவரைப் பார்த்தேன்.

ஸ்ரீதர் என்னும் அந்த அற்புதமான மனிதாபிமானிக்கு அன்று என் மனதிற்குள் லட்சார்ச்சனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ள கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதருடன் பணி புரிந்த நாட்களில் இம்மாதிரியான இன்ப அதிர்ச்சிகள் பலவற்றுக்கு என் பலவீனமான இதயம் உள்ளாகியிருக்கிறது…” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது உதவியாளருக்காக அப்படிப் பொங்கி எழுகின்ற போர் குணத்தை, இன்று எத்தனை பேரிடம்  பார்க்க முடியும்…?

(தொடரும்)

The post சினிமா வரலாறு-5௦ – உதவியாளருக்காக பட நிறுவனத்தைவிட்டு விலகத் துணிந்த இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர் https://touringtalkies.co/cinema-varalaaru-49-directors-sridhar-ksg-friendship-story/ Sat, 01 May 2021 13:38:09 +0000 https://touringtalkies.co/?p=14832 தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்ததில் ‘புதுமை இயக்குநரான’ ஸ்ரீதருக்கு முக்கியமான பங்கு உண்டு. எண்பதுகளில் தமிழ் சினிமாவை  பாரதிராஜாவின் சீடர்களான கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார் ஆகியோர் ஆண்டதுபோல, அறுபதுகளில் ஸ்ரீதரின் உதவியாளர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் உலகில் கொடி கட்டிப் பறந்தனர். ஸ்ரீதரின் முக்கியமான உதவியாளராகப் பணியாற்றிய  இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலில் ஸ்ரீதருக்கு போட்டியாளராக இருந்து பின்னர் அவரிடமே  உதவியாளராகச் சேர்ந்தவர். ‘மதுரை தேவி கான  வினோத சபா’ என்ற […]

The post சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்ததில் ‘புதுமை இயக்குநரான’ ஸ்ரீதருக்கு முக்கியமான பங்கு உண்டு.

எண்பதுகளில் தமிழ் சினிமாவை  பாரதிராஜாவின் சீடர்களான கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார் ஆகியோர் ஆண்டதுபோல, அறுபதுகளில் ஸ்ரீதரின் உதவியாளர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் உலகில் கொடி கட்டிப் பறந்தனர்.

ஸ்ரீதரின் முக்கியமான உதவியாளராகப் பணியாற்றிய  இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலில் ஸ்ரீதருக்கு போட்டியாளராக இருந்து பின்னர் அவரிடமே  உதவியாளராகச் சேர்ந்தவர்.

‘மதுரை தேவி கான  வினோத சபா’ என்ற பெயரிலே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் தனது ஏழாவது வயதில் இணைந்த  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனம், பாட்டு, நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் அங்கே தேர்ச்சி பெற்றார்.

நாடக உலகில்  வருமானம் மிகவும் சொற்பமாக இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஒரு கட்டத்தில் முடிவெடுத்த கோபாலகிருஷ்ணன் நாடகத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தின் துணையோடு தனது பத்தொன்பதாவது வயதில் நாடக சபாவிலிருந்து விலகி பாடலாசிரியர் உடுமலை நாராயணகவியிடம் உதவியாளாராகச் சேர்ந்தார்.

பின்னாளில் மிகப் பெரிய இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும்  வளர்ந்த கோபாலகிருஷ்ணன் தமிழ்த் திரையுலகில் முதலில் பாடலாசிரியராகத்தான் அறிமுகமானார். அதற்கு, அவருக்கு பேருதவியாக இருந்தது உடுமலை நாராயணகவியிடம் அவர் பெற்ற பயிற்சியே.

அந்த சந்தர்ப்பத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்த சுந்தரம் பிள்ளை ரெக்கார்டிஸ்ட் கோவிந்தசாமி, கேமிராமேன் ராமசாமி, ஜி,உமாபதி, கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் சேர்ந்து ‘சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கதை கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன் தான் நாடகமாக எழுதி வெற்றி பெற்றிருந்த ‘தம்பி’ என்ற கதையை அவர்களுக்குச் சொன்னார். அவர்களுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது.

அன்றிரவு தன்னுடைய அறைக்கு  வந்து படுத்த கொபாலகிருஷ்ணனுக்குத் தூக்கமே வரவில்லை.  கதாசிரியராக சினிமாவில் வலம் வருவது போலவும் அதைத் தொடர்ந்து இயக்குநர் ஆவதற்கு வாய்ப்புகள் தன்னைத் தேடி வருவது போலவும் வந்த வண்ணக் கனவுகளுக்கு நடுவே சிறிது நேரமே கண்ணயர்ந்தார் அவர்.

தன்னுடைய கதையில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்போடு அடுத்த நாள் காலையில் அந்த நிறுவனத்திற்கு சென்றபோதுதான் ‘தம்பி’ கதையைத் தவிர இன்னொரு கதையையும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள விவரம் கோபாலகிருஷ்ணனுக்குத் தெரிய வந்தது.

அவர்கள் படமாக்குவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இன்னொரு கதை ஸ்ரீதர் எழுதியது. அந்த பட  நிறுவனத்தினர் தங்களது படத்திலே கதாநாயகனாக நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆகவே தாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள இரண்டு கதைகளில் எந்தக் கதை அவருக்குப் பிடிக்கிறதோ அதுவே முதலில் படமாக்கப்படும் என்று  கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சொன்னார் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுந்தரம் பிள்ளை.

சிவாஜி கணேசன் எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரோ என்று கோபாலகிருஷ்ணன் குழப்பத்தோடு இருந்தபோது அந்த பட நிறுவனத்தினர்  தேர்ந்தெடுத்திருந்த  இன்னொரு கதையை எழுதியவரான  ஸ்ரீதரும், கோபாலகிருஷ்ணனைப்  போலவே பெரும் தவிப்பில் இருந்தார். 

‘புதுமை இயக்குநர்’ என்றும் ‘இயக்குநர் திலகம்’ என்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டு  ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருந்த அந்த இரு இயக்குனர்களுக்குமிடையே அன்று நடந்த அந்தப் போட்டியில் இறுதியாக ஸ்ரீதரே வென்றார்.

ஸ்ரீதருடைய ‘எதிர்பாராதது’ கதை சிவாஜி கணேசனுக்கு பிடித்திருந்ததால் அவரது கதையையே முதலில் படமாக்குவது என்று சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முடிவெடுத்தனர்.

“சிவாஜிக்கு என்னுடைய கதை பிடித்திருந்ததின் காரணமாக என்னுடைய கதை தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவ்வளவுதானே தவிர எனக்கு எந்த வகையிலும் கோபாலகிருஷ்ணன் குறைந்தவர் அல்ல” என்று தன்னுடைய போட்டியாளரான கோபாலகிருஷ்ணன் பற்றி ஸ்ரீதர்  ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது  அன்றைய கலைஞர்கள் எந்த அளவு விசாலமான மனதுடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தன்னுடன் யார் போட்டி போட்டாரோ  அந்த ஸ்ரீதர்தான் தனக்காக சினிமா உலகின் கதவுகளைத் திறக்கப் போகிறவர் என்று அப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத் தெரியாது.

ஸ்ரீதரின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணன் சொன்ன ‘தம்பி’ கதையும் அந்தத் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்திருந்த காரணத்தினால் கோபாலகிருஷ்ணனை மிகவும் மரியாதையாக அந்த நிறுவனத்தினர் நடத்தினர். அதனால் அடிக்கடி அந்த நிறுவனத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக்  கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரைச்  சந்தித்து அவரோடு  பழகும் வாய்ப்பினைப் பெற்ற  ஸ்ரீதர்  “அவரைப் பார்த்ததும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த நிறுவனத்தில்  அவர்கள்  இருவரும் அடிக்கடி சந்தித்துப்  பேசியபோது “எனக்குப் பாடலும் எழுத வரும்” என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்ல உடனே ‘எதிர்பாராதது’ படத்தின் சில காட்சிகளைப் பற்றி  எடுத்துச் சொல்லி அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டு வரும்படி அவரிடம் சொன்னார் ஸ்ரீதர்.

அதைத் தொடர்ந்து அவர் சொன்ன ஒரு காட்சிக்கு “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்”  என்று தொடங்கும் பாடலை  எழுதித் தந்தார்  கோபாலகிருஷ்ணன். ஸ்ரீதருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால் அந்தப் படத்தின் இயக்குநரான சி.எச்.நாராயணமூர்த்தியிடம் அந்தப் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார் அவர். 

சி.என்.பாண்டுரங்கனின் இசையில், ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் பதிவான அந்தப் பாடலே கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய முதல் பாடலாக  அமைந்தது.

‘எதிர்பாராதது’ மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமையவே ஸ்ரீதருக்கு திரையுலகில் வரவேற்பு பெருகியது.

அந்தப்  படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்திதான் பின்னர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். ஸ்ரீதரும், அவரும் ஒத்தக் கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்ததால் ‘எதிர்பாராதது’  படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகினர்.

கிருஷ்ணமூர்த்திக்கு ‘பில்லியப்பா’ என்ற மதுரையைச் சேர்ந்த மிகப்  பெரிய பணக்காரர் ஒருவர்  நண்பராக  இருந்தார். கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட அவர் ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் ஆலோசனையின் பேரில்  ’பரிவர்த்தனா’ என்ற தெலுங்குப் படத்தை  தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதற்காக வாங்கினார்.

இது மாதிரி மொழி மாற்றப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் அனுபவமுள்ள பலர் அப்போது இருந்தபோதிலும் அவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஸ்ரீதரை அந்தப் படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி . அப்போது ஸ்ரீதர் ஏற்கனவே சில நேரடித் தமிழ்ப் படங்களுக்கு கதை வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கினார்.

“நண்பர் பில்லியப்பாவின் படம் என்பதால் நீங்கள்  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லவே வேறு வழியின்றி அப்படத்திற்கு பணியாற்ற ஒப்புக் கொண்டார் ஸ்ரீதர்.

வசனங்களை சரி பார்த்து பின்னணி பேசும் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு திறமையான  உதவியாளர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று  ஸ்ரீதர் எண்ணியபோது அவர் நினைவுக்கு வந்த முதல் நபர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.

திறமையாளர்களை மனம் விட்டுப் பாராட்ட எப்போதுமே தயங்காத இயக்குனரான ஸ்ரீதர் “டப்பிங் படத்துக்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே கோபாலகிருஷ்ணன்தான்” என்று அவரது திறமையைப் பாராட்டியுள்ளார். 

‘லட்சாதிபதி’ என்ற பெயரில் வெளியான அந்த மொழி மாற்றப்  படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும்  படம் எடுக்க விரும்பிய பல தயாரிப்பாளர்கள், தமிழ்ப் படங்களுக்கு வசனம் எழுத ஸ்ரீதரைத் தேடி வரத் தொடங்கினார்கள். 

அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொண்ட ஸ்ரீதர் படப்பிடிப்புத் தளத்தில்  நடிகர்களுக்கு வசனங்களை  சொல்லித் தர கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதரிடம்  உதவியாளராகச்  சேர்ந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

வசனங்களை  ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லித் தருவதில்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கை தேர்ந்தவர் என்பதால் அவர் வசனம் பேச கற்றுத் தந்த பாணி எஸ்.வி.ரங்காராவ்,  சாவித்திரி போன்ற கலைஞர்களை மிகவும் கவர்ந்தது.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி ஆகியோர்  தமிழ்ப் படங்களில் நல்ல தமிழ் பேசி நடித்ததற்குக் காரணமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.

ஸ்ரீதரிடம் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   அவரோடு இணைந்து பணியாற்றிய கடைசி படமாக ‘உத்தம புத்திரன்’ அமைந்தது.

“அந்தப் படத்தில்தான் ஸ்ரீதர் யார் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது…” என்று குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.

]]>
“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! https://touringtalkies.co/kavingar-muthulingam-told-a-story-of-meenava-nanban-movie-song/ Wed, 28 Oct 2020 11:42:59 +0000 https://touringtalkies.co/?p=9392 ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும். அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார். அது இங்கே : “1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க […]

The post “எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும்.

அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றேன். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றேன்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே என் பக்கம் திரும்பி ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் வேணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர்.

அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்

அங்கங்களே மன்மதனின் படைக்களம்

இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ

இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்’

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் எம்.எஸ்.வி.க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி  

‘தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ –

நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினேன்.

இதை தயாரிப்பாளர், இயக்குநர், எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்…” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

The post “எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! appeared first on Touring Talkies.

]]>