Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director bharathiraja – Touring Talkies https://touringtalkies.co Sun, 31 Jul 2022 07:55:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director bharathiraja – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நான் சினிமாக்காரனாகவே இருக்க வேண்டும்..” – இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருப்பம் https://touringtalkies.co/even-if-it-takes-seven-births-i-want-to-be-a-film-maker-director-bharathirajas-wish/ Sun, 31 Jul 2022 07:54:19 +0000 https://touringtalkies.co/?p=23513 “சினிமா இப்போது என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல; ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாகவே வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை..” என்று பேசியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. நேற்று சிகரம் மஹாலில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் பேசும்போது பாரதிராஜா இவ்வாறு பேசினார். இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக, பாசமாக […]

The post “ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நான் சினிமாக்காரனாகவே இருக்க வேண்டும்..” – இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருப்பம் appeared first on Touring Talkies.

]]>
சினிமா இப்போது என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல; ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாகவே வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை..” என்று பேசியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

நேற்று சிகரம் மஹாலில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் பேசும்போது பாரதிராஜா இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக, பாசமாக கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியில்தான். இதில் பல முகங்களை 40 வருடங்களுக்கும் மேலாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ நிகழ்ச்சிகளை… டெல்லி, மும்பை என்று பல இடங்களில் பார்த்துவிட்டேன். ஆனால், ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவதை… நினைக்கும்போது நான் இதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நெகிழ்ச்சியில் இருக்கும்போது வார்த்தைகள் வசப்படாது. அப்படியான ஒரு தருணத்தில்தான் இப்போது நான் இருக்கிறேன்.

அப்போதிருந்த பாரதிராஜா வேறு. இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு. இப்போது பொறுமையும், பக்குவமும் அதிகரித்துவிட்டது. இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகச் சரியாக கணித்து விமர்சனங்கள் செய்கின்றனர். அந்த அளவிற்கு பக்குவப்பட்ட நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. திட்டாமல், யார் மனதும் நோகாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர் சந்தோஷமாக இருக்கிறது நன்றி.

தம்பி லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம்’ படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன். இதற்கு முன்னர் அவரைப் பார்த்ததுகூட இல்லை. விக்ரம்’ படத்திற்கு பிறகுதான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன். ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப் பெரிய கலைஞானம் உள்ளது.

கமல் ஒரு அற்புதமான கலைஞர். சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம்தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ்தான்.

இப்படியான இயக்குநர்களையெல்லாம் பார்க்கும்பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளும் வந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நான்  நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகளை எழுதி முடித்துவிட்டேன்.

சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன்.

ஆனால், சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல; ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக்காரனாகவே வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

சினிமா பத்திரிகையாளர்களான உங்களிடம் சினிமா அறிவு இருக்கிறது. இத்தனை வருடங்களும் எந்த பத்திரிக்கையாளரும் என்னிடம் ஒரு பத்திரிகையாளராக நடந்து கொண்டதே இல்லை. சக நண்பனாக இருந்து என்னை விமர்சனம் செய்ததை காட்டிலும் நிறைய பாராட்டி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விழாவில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்..” என்றார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

The post “ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நான் சினிமாக்காரனாகவே இருக்க வேண்டும்..” – இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருப்பம் appeared first on Touring Talkies.

]]>
“இதே வடபழனியில் சாப்பாட்டுக்காக அலைந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜாவின் சோக அனுபவம்..! https://touringtalkies.co/i-have-wandered-for-food-in-the-same-vadapalani-director-bharathirajas-sad-experience/ Sat, 09 Apr 2022 07:21:31 +0000 https://touringtalkies.co/?p=21675 ஸ்ரீமகானந்தா சினிமஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. இயக்குநர் எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, […]

The post “இதே வடபழனியில் சாப்பாட்டுக்காக அலைந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜாவின் சோக அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீமகானந்தா சினிமஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’.

இயக்குநர் எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்துஇயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே… அனைவருக்கும் வணக்கம்.

இங்கே தயாரிப்பாளர் பேசும்போது தான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாக சொன்னார். கஷ்டப்பட்டு வந்தால்தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு, தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன்தான் இந்த பாரதிராஜா.

சினிமா லவ்வபல் வேர்ட். இது யாரையும் கைவிடாது. நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கன்னா.. அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும்போது அதில் ஒரு தாக்கம் வேண்டும்.. அப்படி இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

இந்தப் படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும்போது தன்னடக்கத்தோடு பேசினார். அதுதான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள். ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அதைக் கக்கத்தில்தான் வைக்க வேண்டும். நான் அப்படித்தான் செய்வேன்.

என்னை ‘இயக்குநர் இமயம்’, அப்படி இப்படினு சொல்லுவாங்க. அது அவங்களுக்குத்தான். அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்.

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும். ஆனால், இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லாருமே நம்முடைய சகோதரர்கள்தான். எனவே அனைத்தையுமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

இதில் நடித்திருக்கும் பசங்களைப் பார்க்கும்போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. படம் நம்ம அலைகள் ஓய்வதில்லை’ போல இருக்குமோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும்போல  தோன்றுகிறது.

உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள்.. என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

இதில் தயாரிப்பாளரின் மகனும் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அவருடைய அப்பாவும், அம்மாவும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம்.

நிலம், நீர், காற்று இந்த மூன்றும்தான் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு நம்முடைய அப்பா, அம்மாதான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே, அவர்களை நாம் எந்தத் தருணத்திலும் மறக்கக் கூடாது.

இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம்.  நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். படத்தின் பெயர் ‘கம்பெனி’ என்பதால் இந்தப் படம், ‘கிழக்கிந்திய கம்பெனி’ போல மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

The post “இதே வடபழனியில் சாப்பாட்டுக்காக அலைந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜாவின் சோக அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! https://touringtalkies.co/new-tamil-movies-will-release-on-coming-deepavali-day-2/ Tue, 10 Nov 2020 09:48:45 +0000 https://touringtalkies.co/?p=9903 தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது. இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு […]

The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன.

வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது.

இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன.

பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின்  நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ அழுத கதையாக, டிஜிட்டல் புரொஜெக்சன்  நிறுவனங்கள் திடீரென்று ‘VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு ரத்து’ என அறிவித்து இருக்கின்றன. நல்லது..!

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.

பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் தற்போது VPF கட்டணத்தை விலக்கியிருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்களது சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்களில் மட்டும் எங்களது திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதேசமயம் VPF கட்டணத்தைக் கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல, நிலையான ஒரு தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருக்கின்றன.

தயாராகி வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படங்களில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’, ‘களத்தில் சந்திப்போம்’,’ எம்.ஜி.ஆர். மகன்’ ஆகியவை தீபாவளி ரேஸில் உள்ளன.

இவற்றில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்..!

The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.

]]>
“என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” https://touringtalkies.co/nizhalgal-ravi-interview-about-manvasanai-movie/ Fri, 06 Nov 2020 10:54:55 +0000 https://touringtalkies.co/?p=9773 ‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். “1989-ல் ‘நிழல்கள்’ படத்தில் நான் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தமிழில் அதிகமாக எனக்குப் படங்கள் வரவில்லை. அதனால் மலையாளத்தில் நடிக்கத் துவங்கினேன். மலையாளத்தில் நான் நடித்த முதல் படம் ஹிட்டானதால் தொடர்ந்து எனக்கு அங்கே வாய்ப்புகள் […]

The post “என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” appeared first on Touring Talkies.

]]>
‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“1989-ல் ‘நிழல்கள்’ படத்தில் நான் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தமிழில் அதிகமாக எனக்குப் படங்கள் வரவில்லை. அதனால் மலையாளத்தில் நடிக்கத் துவங்கினேன். மலையாளத்தில் நான் நடித்த முதல் படம் ஹிட்டானதால் தொடர்ந்து எனக்கு அங்கே வாய்ப்புகள் கிடைத்தது.

1981, 1982, 1983-ம் ஆண்டுகளில் அதிகமாக கேரளாவில்தான் நான் இருந்தேன். அதிகமான மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் நம்மை நடிக்க யாரும் கூப்பிடவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் நான் கோயம்புத்தூரில் எனது வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் என்னை போனில் அழைத்து பாரதிராஜா என்னை உடனே தேனிக்குக் கிளம்பி வரச் சொல்வதாகச் சொன்னார்.

உடனேயே கிளம்பி குரங்கு குல்லா அணிந்து கொண்டு ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து ஒரு வழியாக தேனிக்கு வந்து சேர்ந்தேன். அங்கே ‘மண்வாசனை’ படப்பிடிப்பை நடத்தக் கொண்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

மறுநாளே ஷூட்டிங். என்னுடைய கதாபாத்திரம் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அழகு தமிழில், கவிதை நடையில் பேச வேண்டிய வசனங்களை எனக்குத் தந்திருந்தார் இயக்குநர்.

அந்தப் படத்தின் டப்பிங்கின்போது நான் நடித்தக் காட்சிகளைப் பார்த்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது மிக ஏமாற்றமாகிவிட்டது. நான் நடித்த பல காட்சிகளை வெட்டிவிட்டதால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காட்சிகளே இருந்தன.

அன்றைக்கு ராத்திரி ரூமுக்கு வந்து குமுறி, குமுறி அழுதேன். நம்ம இயக்குநரே இப்படி செஞ்சுட்டாரேன்னு நினைச்சு அழுதேன்.. ஆனாலும் மறுநாள் சத்யம் தியேட்டரில் இந்தப் படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தபோது அகமகிழ்ந்தேன். ஏன்னா.. படத்தில் நான் வருகிறன்ற காட்சிகளிலெல்லாம் கை தட்டல்கள் பறந்தன. அந்தக் கை தட்டல்களே என் கண்ணீரைத் துடைத்தன.

இந்தப் பட வெளியீட்டுக்குப் பின்புதான் எனக்கு மளமளவென்று படங்கள் வந்து குவிந்தன. நானும் ஒரு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டா மாறினேன். அதுக்குக் காரணம் அந்த ‘மண்வாசனை’ படம்தான்..” என்றார் நிழல்கள் ரவி.

The post “என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” appeared first on Touring Talkies.

]]>
‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..? https://touringtalkies.co/how-to-assistant-director-babu-turns-on-hero-of-en-yuier-thozhan-movie/ Wed, 04 Nov 2020 07:54:39 +0000 https://touringtalkies.co/?p=9676 இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் ஒரு காட்சி வரும். இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் பாக்யராஜ், ஒரு நடிகரிடம் ஒரு காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும்.. நடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இதைத் தூரத்தில் இருந்து பார்க்கும் பாரதிராஜா அந்த நடிகரைவிடவும் வசனத்தையும், நடிப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாக்யராஜே, அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபர் என்று நினைத்து பாக்யராஜையே ஹீரோவாக்குவார். இந்தக் காட்சியில் இருக்கும் கதை உண்மையாகவே தமிழ் […]

The post ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் ஒரு காட்சி வரும்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் பாக்யராஜ், ஒரு நடிகரிடம் ஒரு காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும்.. நடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

இதைத் தூரத்தில் இருந்து பார்க்கும் பாரதிராஜா அந்த நடிகரைவிடவும் வசனத்தையும், நடிப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாக்யராஜே, அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபர் என்று நினைத்து பாக்யராஜையே ஹீரோவாக்குவார்.

இந்தக் காட்சியில் இருக்கும் கதை உண்மையாகவே தமிழ் சினிமாவில் அதுவும் அவருடைய இயக்கத்திலேயே உருவான ஒரு படத்தில் நடந்திருக்கிறது.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜவின் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘என் உயிர்த் தோழன்’.

அப்போதைய அரசியல் கட்சிகளின் போக்கையும், கட்சிப் பதவிகளைப் பயன்படுத்தி அப்பாவி தொண்டர்களை, கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த திரைப்படம் இது.

தமிழ்ச் சினிமாவின் அரசியல் பேசிய திரைப்படங்களின் பட்டியலில், இந்தப் படமும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர் பாபு. ஆனால் படத்தின் துவக்கத்தில் இவர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. படத்தின் துவக்கத்தில் இருந்து ஸ்கிரிப்ட் எழுதி முடித்து ஷூட்டிங்கிற்குப் போகும்வரையிலும் பாபு நடிப்புக்கே வரவில்லை. அவர் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். மெட்ராஸ் தமிழை மிகக் கச்சிதமாகப் பேசுவார்.

இந்தப் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் ராஜா சந்திரசேகர் என்பவர். இவர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், கவிஞர், எழுத்தாளர். இவருக்கு மெட்ராஸ் பாஷை தெரியாததால் அதைச் சொல்லிக் கொடுக்கும்படி பாபுவிடம் சொன்னார் பாரதிராஜா.

இதனால் தினமும் அந்த மெட்ராஸ் பாஷையை ராஜா சந்திரசேகருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் பாபு. அதை சில நாட்கள் கூர்ந்து கவனித்த பாரதிராஜாவுக்கு பாபு அந்த வசனங்களை சொல்லிக் கொடுத்தவிதம், பேசிய விதம்.. அப்போது அவரது முகத்தில் தெரிந்த நடிப்பு, பாவனைகள்.. எல்லாம் ராஜா சந்திரசேகரைவிடவும், பாபுவே இந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமானவர் என்பதைக் காட்டியது.

உடனேயே ராஜா சந்திரசேகருக்குப் பதிலாக பாபுவையே அந்தப் படத்திற்கு கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. இதனால் பெரிதும் மனத்தாங்கல் பட்ட ராஜா சந்திரசேகர் அப்போதே பாரதிராஜாவிடமிருந்து விலகிவிட்டாராம்.

ஆனாலும், பாரதிராஜாவின் தேர்வு சோடை போகாது என்பதை போல படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் பாபு.

இதேபோல்தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் கே.பாக்யராஜ் வசனங்களை சொல்லிக் கொடுக்கும்விதம்.. ஒரு கிராமத்து வாத்தியார் எப்படி நடந்து கொள்வார் என்று அவர் நடித்துக் காட்டியவிதமெல்லாம் பாரதிராஜாவை பெரிதும் கவர்ந்ததால் கே.பாக்யராஜையே ஹீரோவாக்கினார்.

சிறந்த இயக்குநர்களால் மட்டுமே நல்ல நடிகர்களை அடையாளம் காட்ட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.

The post ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>
“VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! https://touringtalkies.co/tfapa-president-bharathiraja-release-statement-about-vpf-fees/ Mon, 02 Nov 2020 10:27:16 +0000 https://touringtalkies.co/?p=9601 வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் […]

The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

7 மாதங்களுக்குப் பின்னர் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதால் புத்தம், புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் என்று திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் அப்படியொன்று நடந்துவிடாது என்பதற்கான அறிகுறிகள்தான் தமிழ்ச் சினிமாவில் தென்படுகிறது.

தமிழ்ச் சினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்னர் தற்போது படமெடுத்து வரும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி உருவாக்கிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட ஒளிபரப்புக் கட்டணத்தில் முட்டுக்கட்டை போடுவதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வருமா என்பது தெரியாத குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வி.பி.எஃப். கட்டணம் குறித்து இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்ட வேண்டிய கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனத்திற்கு செலுத்த முடியும்.

வாராவாரம் கட்டும் திரையிட்டூக் கட்டணத்தை இனியும் நாங்கள் செலுத்த மாட்டோம்.

இதை பற்றி நாங்கள் ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கும், டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிக்கும் தெரிவித்தும் அவர்கள் இதற்கு இப்போதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளியிடப்பட மாட்டாது…” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தரும் வி.பி.எஃப். கட்டணத்தை விநியோகஸ்தர்களும் கட்ட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் அங்கே இது பற்றி இப்போதைக்கு முடிவெடு்க்க முடியாது.

ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் திரையிடப்பட மாட்டாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது தியேட்டர்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களது தரப்பில் விசாரித்தபோது அவர்கள் விரைவில் தங்களது சங்கத்தினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறியிருக்கின்றனர்.

The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. https://touringtalkies.co/director-bharathirajas-life-story-lovers-hindi-movie-story/ Mon, 02 Nov 2020 06:24:45 +0000 https://touringtalkies.co/?p=9591 ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது திரையுலக அனுபவங்களை தனது யுடியூப் சேனல் வாயிலாகச் சொல்லி வருகிறார். இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார். “மண்வாசனை’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டபோது அது நான் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் அத்திரைப்படம் 250 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது. இந்த நேரத்தில் எனக்கு மும்பையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஹிந்தியில் […]

The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.

]]>
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது திரையுலக அனுபவங்களை தனது யுடியூப் சேனல் வாயிலாகச் சொல்லி வருகிறார்.

இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.

“மண்வாசனை’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டபோது அது நான் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் அத்திரைப்படம் 250 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் எனக்கு மும்பையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திர குமார் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

அவர் சென்னைக்கு வந்தபோது சோழா ஓட்டலில் தங்கியிருந்தார். நானும் அங்கே சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் தனக்காக ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கித் தரும்படி கேட்டார். ஏற்கெனவே ‘16 வயதினிலே’ படத்தை ஹிந்தியில் இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு என்றாலும், ஹிந்தியில் அத்திரைப்படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தமும் இருந்தது.

சரி.. இ்ப்போது ஒரு வாய்ப்பு வருகிறது.. பயன்படுத்திப் பார்ப்போம் என்று நினைத்து அதற்கு ஒத்துக் கொண்டேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையே ஹிந்தியில் படமாக்க எண்ணினேன். இந்தப் படத்தில் தனது மகன் குமார் கவுரவ்வை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென ராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.

அப்போதே.. அங்கேயே.. ஒரு பெரிய தொகையை.. அதுவரையிலும் நான் யாரிடமும் வாங்காத.. நினைத்துக் கூடப் பார்க்காத தொகையை எனக்குச் சம்பளமாகக் கொடுத்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்தப் படத்தை நான் ஒத்துக் கொண்டேன். படத்திற்கு ‘லவ்வர்ஸ்’ என்று பெயர் வைத்தேன். நாயகியாக பத்மினி கோலாப்பூரியை ஒப்பந்தம் செய்தோம். தமிழில் தியாகராஜன் செய்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டேனி செய்தார். சில்க் ஸ்மிதா செய்த கதாபாத்திரத்தில் நடிகை கஜோலின் அம்மாவான தனுஜா நடித்தார்.

அப்போது பத்மினி பல படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த நேரம். அவருடைய கால்ஷீட் கிடைப்பதே கஷ்டமான சூழலாக இருந்தது. அந்தம்மாவின் கால்ஷீட்டுக்கு ஏற்றவாறு மற்றவர்களின் கால்ஷீட்டை பெற்று அதற்கேற்றவாறு ஷூட்டிங் ஷெட்யூலை ஏற்பாடு செய்தோம்.

ஷூட்டிங் முதல் கட்டமாக கோவாவிலும், மும்பையிலும் நடப்பதாக திட்டமிட்டிருந்தோம். அப்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் இல்லாததால் சென்னையில் இருந்து கோவாவுக்கு செல்வதற்கே சிரமமமாக இருந்தது. சென்னையில் இருந்து முதலில் பெங்களூருக்கு சென்று.. பின்பு அங்கேயிருந்து கோவாவுக்கு வேறொரு விமானத்தில் செல்ல வேண்டும்.

பலவித பிரச்சினைகள் இருந்ததால் பெங்களூரில் இருந்து காரிலேயே கோவாவுக்கு பயணமானோம். அங்கே நல்ல லொகோஷன்களில் பாடல் காட்சியை படமாக்கினோம். எனக்கு முழுமையான திருப்தியை அது தரவில்லை. மேற்கொண்டு பல காட்சிகளை எனது முட்டம் கடற்கரைக்கு வந்து எடுத்தோம்.

ராஜேந்திர குமார் பல நேரங்களில் நிறைய திருத்தங்கள் சொல்வார். அவர்தான் தயாரிப்பாளர். அவருடைய மகன்தான் ஹீரோ என்பதால் நானும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சரியென்று பட்டால் செய்வேன்.

முட்டத்திலும் அப்படித்தான் ஒரு நாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது சில காட்சிகளை வைத்திருந்தேன். அப்போது ராஜேந்திர குமார் என்னருகில் வந்து சில திருத்தங்களைச் சொன்னார். அப்படி செய்யணும்.. இப்படி செய்யணும் என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு முட்டம் பகுதி இன்னொரு வீடு மாதிரி. அங்கேயிருந்தவர்களெல்லாம் என்னுடைய உறவினர்களை போல. அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம் அன்றைக்கு ஷூட்டிங் பார்க்க வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

ராஜேந்திரகுமார் என்னிடத்தில் பேசப் பேச.. அவர் ஏதோ என்னிடத்தில் சண்டை போடுவதாக நினைத்து வேகமாக எங்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள். ‘என்ன விஷயம்.. என்ன சொல்றாரு இவரு.. என்ன பிரச்சினை ஸார்..?’ என்று அவரை மிரட்ட ஆரம்பித்தார்கள்.

நானும் பதறிப் போய்.. ‘ஐயா.. இவர்தான் தயாரிப்பாளர்.. ச்சும்மா சாதாரணமா பேசிக்கிட்டிருக்கோம்.. பிரச்சினை ஒண்ணும் இல்ல..’ என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

அந்தப் படத்திற்கான பேட்ச் ஒர்க்கை மும்பையில் முடித்தேன். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஆர்.டி.பர்மன். வயதான நிலையிலும் ஒரு சுறுசுறுப்பான இளைஞரை போல அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வலம் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அப்படியே நடந்து போய் ஒரு சுவற்றில் ஏறி ரவுண்ட் அடித்து இறங்குவார். அப்படியொரு இளைஞராகத் திகழ்ந்தவர் ஆர்.டி.பர்மன். இந்தப் படத்திற்கு ஹிந்தியில் அழகான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருந்தார்.

இந்தப் படம் வெளியானபோது என்ன காரணம்ன்னு தெரியலை.. ஏதோ ஒண்ணு.. ஓஹோ என்று போகவில்லையென்றாலும், சுமாரான வெற்றியைத்தான் பெற்றது…” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் https://touringtalkies.co/actor-manoj-bharathiraja-turns-on-director/ Sat, 31 Oct 2020 11:20:20 +0000 https://touringtalkies.co/?p=9541 இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இயக்குநராகப் போகிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தையான இயக்குநர் பாரதிராஜா. அதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, ‘ஈர நிலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. […]

The post நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இயக்குநராகப் போகிறார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தையான இயக்குநர் பாரதிராஜா.

அதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, ‘ஈர நிலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பின்பும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

கடந்த சில வருடங்களாகவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. ஆனால் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐநா’, ‘கொலை நோக்குப் பார்வை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தைத் தயாரிக்கவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

The post நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் appeared first on Touring Talkies.

]]>
‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..! https://touringtalkies.co/man-vasanai-movie-story-told-by-director-bharathiraja/ Tue, 27 Oct 2020 11:13:25 +0000 https://touringtalkies.co/?p=9347 ‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரதிராஜா பேசும்போது, “மண் வாசனை’ படத்தின் துவக்கத்தில் பாண்டியனை ஏற்கத் தயங்கிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், வசனகர்த்தா கலைமணி, மற்றும் எனது உதவி இயக்குநர்கள் அனைவரும் பின்பு ஒரு கட்டத்தில் பாண்டியனின் நடிப்பைப் பார்த்துவிட்டு ‘இவரைத் தவிர வேறு யாரும் […]

The post ‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..! appeared first on Touring Talkies.

]]>
‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பாரதிராஜா பேசும்போது, “மண் வாசனை’ படத்தின் துவக்கத்தில் பாண்டியனை ஏற்கத் தயங்கிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், வசனகர்த்தா கலைமணி, மற்றும் எனது உதவி இயக்குநர்கள் அனைவரும் பின்பு ஒரு கட்டத்தில் பாண்டியனின் நடிப்பைப் பார்த்துவிட்டு ‘இவரைத் தவிர வேறு யாரும் கச்சிதமா இந்தக் கேரக்டருக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள்’ என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய தேர்வில் அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான் எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.

அந்தப் படத்தின் துவக்கத்தில் எனது அம்மா, அப்பா இருவரையும் வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருப்பதுபோல காட்டியிருந்தேன். எனது மண்.. எனது ஊர்.. எனது கலாச்சாரம்.. எனது மொழி.. என் பண்பாடு.. என்று எனக்குள் விதைக்கப்பட்டிருந்த கதைகளை நான் வெளிப்படுத்தும் வாய்ப்பு என் தாய், தந்தையால்தான் எனக்குக் கிடைத்தது. அவர்களை ஒரு காட்சியில் உலகத்திற்குக் காட்ட நினைத்து அதில் நான் பெருமிதமடைந்தேன்.

படத்தில் ‘முத்துப் பேச்சி’யாக நடித்த ரேவதி பரத நாட்டிய டான்ஸர். மிக அழகாக முக பாவனைகளைக் காட்டுவார். ஆனால் ‘வெட்கப்படு’ என்று நான் சொன்னபோது அதனை அவரால் தன் முகத்தில் கொண்டு வர முடியவில்லை. இதற்காக என்ன செய்தோம் என்றால், ரேவதியின் இடுப்பில் மெல்லிசாக ஒரு குச்சியால் வருடியபோது அவர் சற்று நாணி கோணினார். ‘ஓகே.. இதுதான் வெட்கம்..’ என்று சொல்லி எடுத்து முடித்தேன். இதுபோல அந்தப் படத்தில் எண்ணற்ற அனுபவங்கள் எனக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வினு சக்கரவர்த்தி ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். என்னை முதன்முதலில் பார்க்க வந்தபோது கதை சொல்லத்தான் வந்தார். அவர் சொல்லிய கதை ‘வண்டிச்சக்கரம்.’ பின்னர் அந்தக் கதை படமாக வந்து நன்றாக ஓடியது.

இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என்று எனக்கு யோசனை வந்தபோது பட்டென்று நினைவுக்கு வந்தது வினு சக்கரவர்த்தியின் முகம். உடனேயே அவரை வரவழைத்து நடிக்க வைத்தேன். மறக்க முடியாத ஒரு கேரக்டரை செய்தார் அவர்.

இதேபோல்தான் காந்திமதி. அவங்க என்னுடைய நாடகத்தில் நடித்த நடிகை. கடைசியாக நான் மயிலாப்பூர் நாடக சபாவில் போட்டிருந்த நாடகத்தில்கூட அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களெல்லாம் கை தட்டல்களை வாங்கின. அப்படியொரு வசனங்களை.. அந்த மண்ணின் மனம் கமிழ.. மதுரை வட்டார வழக்கோடு எழுதியிருந்தார் என் நண்பன் கலைமணி.

இந்தப் படத்தில் விஜயன் இடம் பெற்ற ஒரு காட்சி வரும். தன்னுடைய மாட்டை கொன்றுவிட்டு.. தானும் செத்துப் போகும் காட்சி. அப்போதைய காலக்கட்டத்தில் ரவுண்ட் டிராலி வசதியெல்லாம் இல்லை. அதனால் எனது ஒளிப்பதிவாளரான கண்ணன் தனது தோளில் கேமிராவை வைத்துக் கொள்ள.. அவரையும் ஒருவர் சுமந்து கொண்டு சுற்றிச் சுற்றி வந்து அந்த ஷாட்டை ஒரு விடியற்காலையில் எடுத்தோம். இன்றைக்கும் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அற்புதமான ஒரு காட்சியாக அது தெரியும்.

‘ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையே’ என்ற ஒரு பாடலும் இந்தப் படத்தில் இருக்கிறது. உண்மையில் இந்தப் பாடல் இந்தப் படத்துக்காகப் போடப்படவில்லை. அது வேறொரு ராணுவம் சம்பந்தப்பட்ட என்னுடைய கதைக்காகப் போடப்பட்ட பாடல். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதால் அந்தப் பாடல் அப்படியே இருந்தது. அந்தப் பாட்டை இதில் பயன்படுத்த நினைத்தேன்.

அந்தப் பாட்டில் இடையிடையே துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தம்.. பரபரப்பாக ஓடும் இசை என்பதெல்லாம் இருக்கும். ‘இதை வைச்சு நீ எப்படிய்யா இந்தப் படத்துல காட்சியமைப்ப..?’ என்று இளையராஜா என்னிடம் கேட்டான். ‘நீ இருக்குற மியூஸிக்லேயே என்னென்னமோ பண்றீல்ல.. அது மாதிரிதான். நான் செஞ்சு காட்டுறேன்..’ என்று சொல்லி அந்தப் பாடல் காட்சியை பிரமாதமாக எடுத்தேன். இன்றைக்கும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

The post ‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! https://touringtalkies.co/actors-and-technicians-are-redcuced-30-percentage-in-their-salary/ Mon, 19 Oct 2020 11:27:00 +0000 https://touringtalkies.co/?p=8998 இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை. கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் […]

The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை.

கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத் தொகையைக் குறைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“நடிகர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்..

என் இனிய சொந்தங்களே… 

வணக்கம்…

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து,  பரிசோதனைகள் செய்து கொண்டு பணி செய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மனம் வைக்க வேண்டும். ஏற்கெனவே பிறரிடம் கடன் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம்… இதெல்லாம் தயாரிப்பாளர்களின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ் சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது இப்போதே உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்  நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா..?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தாமே முன் வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.  இதேபோல், இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா…?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், தற்போது முடிவடைய வேண்டிய நிலையில் உள்ள படங்களுக்கு உங்களது பங்களிப்பாக, 30 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்து தமிழ்ச் சினிமா உலகம் மீண்டெழ உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

தமிழ்த் திரையுலகம் மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழ வைப்போம்...”

பாசத்துடன்,

பாரதிராஜா

தலைவர்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>