Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
covid-19 virus – Touring Talkies https://touringtalkies.co Mon, 24 May 2021 11:18:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png covid-19 virus – Touring Talkies https://touringtalkies.co 32 32 இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் https://touringtalkies.co/corona-awareness-short-film-directed-by-music-director-ss-kumaran/ Mon, 24 May 2021 11:17:52 +0000 https://touringtalkies.co/?p=15251 கடந்த வருடம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்தச் சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட […]

The post இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் appeared first on Touring Talkies.

]]>
கடந்த வருடம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது.

ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்தச் சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர்கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும் படம் தயாராகியுள்ளது.

இந்தக் குறும் படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட்’ என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும்கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும்விதமாகத்தான் இந்த குறும் படம் உருவாகியுள்ளது.

இந்த குறும் படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்திருக்கும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தக் குறும் படத்தை நடிக சுஹாசினி மணிரத்னமும், நடிகர் காளி வெங்கட்டும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் குறும் படம் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்று வருகிறது.

The post இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் appeared first on Touring Talkies.

]]>
‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு..! https://touringtalkies.co/mgr-magan-movie-release-postponed/ Mon, 19 Apr 2021 10:56:03 +0000 https://touringtalkies.co/?p=14494 இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எம்.ஜி.ஆர்.மகன்’.   இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் படத்தை வெளியிடும் ‘ஸ்கிரீன் சீன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தற்போது கொரோனா வைரஸ்  பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு  படத்தை ஒத்தி வைப்பதாக..” அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், “விநியோகஸ்தர்களின் […]

The post ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எம்.ஜி.ஆர்.மகன்’.  

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் படத்தை வெளியிடும் ‘ஸ்கிரீன் சீன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது கொரோனா வைரஸ்  பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு  படத்தை ஒத்தி வைப்பதாக..” அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், “விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்…” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

The post ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு..! appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? https://touringtalkies.co/master-movie-will-release-2021-pongal-day/ Mon, 02 Nov 2020 11:47:34 +0000 https://touringtalkies.co/?p=9612 ‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன. தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் இருக்கும் திரையரங்குகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏகத்துக்கும் […]

The post ‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? appeared first on Touring Talkies.

]]>
‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் இருக்கும் திரையரங்குகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏகத்துக்கும் பல பஞ்சாயத்துக்கள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் மாஸ்டர்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களை சட்டென்று திரைக்குக் கொண்டு வருவது நிச்சயமாக முடியாத விஷயம் என்பதால், வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வரவே வராது என்று உறுதியாகச் சொல்லலாம்.

அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதியன்று பொங்கல் தினத்தன்றாவது ‘மாஸ்டர்’ வெளியாகுமா என்பதும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதற்கிடையில் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் இன்றைக்கு அளித்துள்ள பேட்டியில், “வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகாது. 2021 பொங்கலுக்கு வெளியாகுமா என்பது அப்போதைய காலச் சூழலைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்…” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ‘தியேட்டர்களின் திரையீட்டுக் கட்டண விவகாரத்தில் ஒரு சமூக முடிவு காணாதவரைக்கும் பெரிய பட்ஜெட் படங்களை திரையிட மாட்டோம்’ என்று ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தச் சங்கத்தில் முக்கியமான நபராக இருப்பதால் சங்கத்தின் முடிவுக்கு அவர் நிச்சயமாகக் கட்டுப்படுவார். இதனாலேயே ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றகிறது.

தயாரிப்பாளர் இந்த நிலையில் இருந்தாலும், படத்தின் நாயகனான ‘இளைய தளபதி’ விஜய்யின் எண்ணவோட்டம் வேறாக இருக்கிறதாம்.

பொதுவாக விஜய் படத்தின் வசூலை விஜய்யின் ரசிகர்களைவிடவும் அஜீத்தின் ரசிகர்கள்தான் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். காரணம், ‘அஜீத்தின் எந்தப் படத்தின் வசூலை விஜய்யின் இந்தப் படம் தாண்டியிருக்கிறது…?’ என்றுதான் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

விஜய் படமோ, அஜீத் படமோ வெளியான சில நாட்களில் டிவீட்டரிலும், முகநூலிலும் இரு தரப்பு ரசிகர்களிடையே சூடான விவாதங்கள் நடைபெறும். இரு தரப்புமே தங்களுக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விவரக் கணக்குகளைச் சொல்வார்கள்.

“தங்களது ஹீரோ நடித்த படம்தான் மிக அதிகமான ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டது. மிக அதிகமான தியேட்டர்களில் வெளியானது.. முதல் நாள் வசூலில் முந்தைய படத்தை தாண்டிவிட்டது. மொத்த வசூலிலும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது..” – இப்படி இரு தரப்பினருமே சுதந்திரப் போராட்டம் போல படத்தின் வசூல் கணக்கை வைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்புவார்கள்.

வசூல் ரீதியாக இது நாள்வரையிலும் பல்வேறு ரிக்கார்டுகளை தன் வசம் வைத்திருக்கும் விஜய், இப்போதைய சூழலில் மாஸ்டர்’ படம் வெளியானால் இதுவரை தான் நடித்த படங்களிலேயே மிகக் குறைவான வசூலையும், மிகக் குறைவான தியேட்டர்கள், மிகக் குறைந்த ஸ்கிரீன்கள், மிகக் குறைவான முதல் நாள் வசூல் என்று மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று யோசிக்கிறார்.

ஏனெனில், இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும்தான் இன்றைய தேதிவரையிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் பல நாடுகளில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்காவில் பல மாநிலங்களில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.

இந்தச் சூழலில் மாஸ்டர்’ படத்தை இப்போது வெளியிட்டால் திரையிடப்படும் ஸ்கிரீன்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்.

மாஸ்டர்’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம் என்பதால் மிக அதிக வசூலையும் அந்தப் படம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசுகளின் விதிமுறையினால் இதுவரையிலும் வந்து கொண்டிருந்த தியேட்டர் வசூலில் இந்தப் படத்திற்கு பாதிதான் கிடைக்கும் என்ற கசப்பான உண்மையும், விஜய்யை யோசிக்க வைத்திருக்கிறது.

இதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து உலகம் தழுவிய அளவுக்கு கொரோனாவை விரட்டிவிட்டு… அனைத்துத் தியேட்டர்களும் திறந்த பின்பு மாஸ்டர்’  படத்தை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம்.

இதனாலேயே ‘மாஸ்டர்’ பற்றி எந்த முன்னேற்பாட்டையும் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தரப்பு திணறி வருகிறது.

The post ‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? appeared first on Touring Talkies.

]]>
AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..? https://touringtalkies.co/ags-company-will-stop-the-film-production/ Mon, 12 Oct 2020 05:34:04 +0000 https://touringtalkies.co/?p=8669 இந்தக் கொரோனா லாக் டவுனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சோதனையைக் கொடுத்திருக்கிறது. திரைப்படத் துறையே நசிந்து போய் கிடக்கும் இந்தச் சூழலில் ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த திரைப்படங்கள் மட்டுமே இப்போது படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புதிதாக திரைப்படங்களுக்கு பூஜை போடுவது அறவே நின்றுவிட்டது. ஏனெனில், புதிய தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய வழக்கமான பைனான்ஸியர்கள் தற்போது மறுத்து வருகிறார்கள். ஏற்கெனவே 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் […]

The post AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..? appeared first on Touring Talkies.

]]>

இந்தக் கொரோனா லாக் டவுனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சோதனையைக் கொடுத்திருக்கிறது.

திரைப்படத் துறையே நசிந்து போய் கிடக்கும் இந்தச் சூழலில் ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த திரைப்படங்கள் மட்டுமே இப்போது படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புதிதாக திரைப்படங்களுக்கு பூஜை போடுவது அறவே நின்றுவிட்டது.

ஏனெனில், புதிய தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய வழக்கமான பைனான்ஸியர்கள் தற்போது மறுத்து வருகிறார்கள். ஏற்கெனவே 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகை தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புழங்கி வருகிறது. இத்தொகையை அவர்கள் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் மீண்டும் கடன் தொகைகள் திரையுலகத்திற்குள் இறக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நேரத்தில் தமிழ்த் திரைப்பட துறையில் புகழ் பெற்ற, மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது தயாரிப்புத் தொழிலை நிறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

2006-ம் ஆண்டில் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தில் இருந்து தனது திரைப்பட தயாரிப்புத் தொழிலைத் துவங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் சென்ற வருடம் தயாரித்த ‘பிகில்’ படம்வரையிலும் 21 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. 10 திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளது. சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் நடத்தி வந்தது.

இந்த நிலையில் இந்தக் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதலினால் கடந்த 6 மாத காலமாக தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்பட தொழில் முடக்கப்பட்டதினால் மிகப் பெரிய நஷ்டத்தைச் சம்பாதித்துள்ளது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

மேலும், அந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்களின் மூலமாகவும் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. கடைசியாக அந்த நிறுவனம் தயாரித்த ‘பிகில்’ படத்தின் மூலம் என்ன கிடைத்தது என்பது பற்றி அவர்களுக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை. அப்படியொரு அதிர்ச்சியான ரிசல்ட் ‘பிகில்’ படத்தின் மூலம் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

இந்தச் சூழலில் இனிமேல் தயாரிப்பு என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து அதனை அதே அளவுக்கு திரும்ப எடுப்பது நிச்சயமாக சூதாட்டத்திற்கு ஒப்பானது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தங்களது தயாரிப்புப் பிரிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..? appeared first on Touring Talkies.

]]>
“தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். https://touringtalkies.co/minister-kadambur-rajus-interview-about-cinema-theatres-repoening/ Wed, 07 Oct 2020 06:13:36 +0000 https://touringtalkies.co/?p=8408 “வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறக்கலாம்” என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடவே, இது தொடர்பாக திரையரங்குகளும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கை குறிப்புகளையும் மத்திய அரசு நேற்றைக்கு வெளியிட்டுள்ளது. இருந்தாலும் இதுவரையிலும் தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், “தமிழகத்தில் திரையரங்குகள் […]

The post “தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். appeared first on Touring Talkies.

]]>

“வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறக்கலாம்” என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடவே, இது தொடர்பாக திரையரங்குகளும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கை குறிப்புகளையும் மத்திய அரசு நேற்றைக்கு வெளியிட்டுள்ளது.

இருந்தாலும் இதுவரையிலும் தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், “தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதிலளித்தபோது, “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

திரைத்துறையின் நல வாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கியிருக்கிறோம். கொரோனா பாதிப்பு இப்போதுதான் கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த நேரத்தில், சினிமா ரசிகர்கள் 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி,  மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு  அறிவிக்கப்படும்….” என தெரிவித்தார்.

The post “தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். appeared first on Touring Talkies.

]]>