Friday, April 12, 2024

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வருடம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது.

ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்தச் சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர்கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும் படம் தயாராகியுள்ளது.

இந்தக் குறும் படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட்’ என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும்கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும்விதமாகத்தான் இந்த குறும் படம் உருவாகியுள்ளது.

இந்த குறும் படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்திருக்கும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தக் குறும் படத்தை நடிக சுஹாசினி மணிரத்னமும், நடிகர் காளி வெங்கட்டும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் குறும் படம் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News