Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
censor board – Touring Talkies https://touringtalkies.co Sun, 13 Aug 2023 05:17:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png censor board – Touring Talkies https://touringtalkies.co 32 32 எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! https://touringtalkies.co/censor-board-banned-the-mgr-song/ Sun, 13 Aug 2023 05:17:45 +0000 https://touringtalkies.co/?p=35254 எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அன்பே வா. இதில் இடம் பெற்ற, புதிய வானம் புதிய பூமி.. பாடல் மிகப் பிரபலமானது. இந்த படத்தைப் பார்த்த சென்சார்  அதிகாரிகள், குறிப்பிட்ட பாடலை முழுதுமாக நீக்க வேண்டும் என்றனர். படக்குழுவினர் பதறிப்போய் ஏன் என்று கேட்டனர். அதற்கு சென்சார் அதிகாரிகள், உதய சூரியன் என்கிற வார்த்தை கட்சி சின்னத்தை குறிக்கிறது என்றனர். அந்த வார்த்தைதானே பிரச்சினை அதை மாற்றலாம் என்றனர், படக்குழுவினர். பாடலை எழுதிய […]

The post எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அன்பே வா. இதில் இடம் பெற்ற, புதிய வானம் புதிய பூமி.. பாடல் மிகப் பிரபலமானது.

இந்த படத்தைப் பார்த்த சென்சார்  அதிகாரிகள், குறிப்பிட்ட பாடலை முழுதுமாக நீக்க வேண்டும் என்றனர்.

படக்குழுவினர் பதறிப்போய் ஏன் என்று கேட்டனர்.

அதற்கு சென்சார் அதிகாரிகள், உதய சூரியன் என்கிற வார்த்தை கட்சி சின்னத்தை குறிக்கிறது என்றனர்.

அந்த வார்த்தைதானே பிரச்சினை அதை மாற்றலாம் என்றனர், படக்குழுவினர்.

பாடலை எழுதிய வாலி, உதய சூரியன் என்பதை, புதிய சூரியன் என மாற்றினார்.

பாடலை பாடிய டி.எம்.எஸ்ஸை உடனடியாக வரவழைத்து, வார்த்தை மாற்றி பாட வைதது படத்தில் சேர்த்தனர்.

அதன் பிறகுதான் சென்சார் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் https://touringtalkies.co/some-scenes-and-shots-are-cut-in-vikram-movie/ Mon, 30 May 2022 07:51:49 +0000 https://touringtalkies.co/?p=22342 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் பல இடங்களில் காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளதாம் சென்சார் போர்டு. ‘GST’ என்று குறிப்பிடும் வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ரீல் 2 – 44.35-ல் ஷாட் […]

The post ‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’.

இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் பல இடங்களில் காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளதாம் சென்சார் போர்டு. ‘GST’ என்று குறிப்பிடும் வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

ரீல் 2 – 44.35-ல் ஷாட் எண் 162-ல் இடம் பெற்றிருந்த ‘GST’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் கமல்ஹாசன் தன் நடு விரலை காட்டும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஒருவரைத் தாக்கும் காட்சியின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

லூசு’, ‘சைக்கோ’ உள்ளிட்ட இன்னும் பல தகாத வார்தைகள் படத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அவை அனைத்தும் சத்தமில்லாமல் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.

கழுத்தை வெட்டும் காட்சி, கோரமாக அதிலிருந்து ரத்தம் வழியும் காட்சி, கால்கள் துண்டாகும் காட்சி, தலை துண்டிக்கப்படும் காட்சி, வாயில் கத்தி இறங்குவது போன்ற வன்முறைகள் நிறைந்த சில காட்சிகளின் பல ஷாட்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் பாலியல் ரீதியான சில காட்சிகளிலும் கத்திரி போடப்பட்டுள்ளதாம். ஒரு பெண்ணின் பாலியல் பழக்க வழக்கத்தை விவரிக்கும் வசனம், அது தொடர்பான விசுவல்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆபாசமான முக்கல், முனகல் காட்சிகளின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளதாம்.

The post ‘விக்ரம்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் appeared first on Touring Talkies.

]]>
தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் https://touringtalkies.co/aadhaar-movie-gets-censor-certificate/ Mon, 09 May 2022 08:38:46 +0000 https://touringtalkies.co/?p=21903 இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ […]

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, U / A சான்றிதழ் பெற்றிருக்கிறது.

விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை..! https://touringtalkies.co/anti-indian-movie-was-re-banned-by-central-censor-board/ Wed, 19 May 2021 13:41:35 +0000 https://touringtalkies.co/?p=15172 சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை  பார்த்தனர்.  ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ‘ரிவைசிங் கமிட்டி’ என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. […]

The post ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை..! appeared first on Touring Talkies.

]]>
சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’.

2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை  பார்த்தனர். 

ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி’ என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர்.

படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டு மொத்தக் குழுவினரும் பாராட்டினார்கள். ஆனால் நிறையவே நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார்கள்.

“இந்தப் படம் கண்டிப்பாக வெளியே வர வேண்டுமென்று நாங்களும் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்ய வேண்டும்.

குறிப்பாக ஆன்டி இண்டியன்’ எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும்.

‘நடிகர் கபாலி’ எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

‘கமுக’, ‘அகமுக’ என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும்.

இப்படத்தில் வரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது. அந்த பெயரையும் நீக்க வேண்டும்’ என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர்.

“நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக் கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்…” என்றனர் ரீவைசிங் கமிட்டியினர்.

உட்தா பஞ்சாப்’, ‘பத்மாவதி’ போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான ‘கட்’களை வாங்கிய திரைப்படம் இந்த ‘ஆன்டி இண்டியன்’ படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.   

சமீபத்தில் ட்ரிபியூனல் கமிட்டி மத்திய அரசால் கலைக்கப்பட்டு விட்டதால், Re-Revising என்று சொல்லப்படும் மேல் மறு தணிக்கைக்கு இந்த ஆன்டி இண்டியன்’ படத்தை அனுப்ப படத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் ‘தமிழ் டாக்கீஸ்’ யூ ட்யூப் சேனலில் வெளியானது.

மூன்று மதங்கள் மற்றும் சமகால அரசியலை மையமாகக் கொண்டு  வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதென சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு 38 கட்களை மறு தணிக்கை குழுவினர் தந்துள்ளனர். இத்தனை கட்களை செய்தால் அவை படத்தின் மையக் கதை, காட்சிகள் சீராக நகரும் தன்மை மற்றும் முக்கிய காட்சிகளையும் பாதிக்கும்.

ஆகவே ரீரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கை உள்ளது. இப்படம் எவ்வித சேதமும் இன்றி திரையரங்குகளில் வெளியாக வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்கும்…” என்று மூன் பிக்சர்ஸ்’-ன் தயாரிப்பாளர் ஆதம் பாவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை..! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தணிக்கை வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் தடாலடி நடவடிக்கை..! https://touringtalkies.co/central-government-dissoved-film-certification-tribunal/ Thu, 08 Apr 2021 11:54:24 +0000 https://touringtalkies.co/?p=14253 திரைப்பட தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தடாலடியாக கலைத்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு அந்தந்த மாநில சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குகிறது. படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் இருந்தால் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்துவிடும். சான்றிதழ் பெற்றால்தான் படத்தை வெளியிட முடியும். அதனால் மாநில சென்சார் போர்டால் சான்றிதழ் மறுக்கப்பட்டவர்கள், மும்பையிலுள்ள சென்சார் போர்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் அந்த […]

The post திரைப்பட தணிக்கை வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் தடாலடி நடவடிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தடாலடியாக கலைத்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு அந்தந்த மாநில சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குகிறது. படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் இருந்தால் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்துவிடும். சான்றிதழ் பெற்றால்தான் படத்தை வெளியிட முடியும்.

அதனால் மாநில சென்சார் போர்டால் சான்றிதழ் மறுக்கப்பட்டவர்கள், மும்பையிலுள்ள சென்சார் போர்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் அந்த படத்தை காண்பித்து சான்றிதழ் பெறுவார்கள்.

1983-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்ட அமைச்சகம் நேற்றைக்கு அறிவித்துள்ளது.

ஒரு படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தால், இனி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு திரைப்படங்களின் மூலமாக தற்போதைய மத்தியில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை விமர்சிக்கும் பல திரைப்படங்கள் வெளிவந்ததுதான் காரணம் என்று திரையுலகத்தில் பேசப்படுகிறது.

மாநில சென்சார் போர்டால் நிராகரிக்கப்படும் பல திரைப்படங்கள் இந்த நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதியைப் பெற்று வெளியாகியுள்ளன.

2017-ம் ஆண்டு மத்திய சென்சார் போர்டு வெளியிட அனுமதிக்க முடியாது என்று மறுத்த லிப்ஸ்டிக் இன் புர்கா என்ற திரைப்படத்தை சில காட்சிகளை நீக்கிய பின்பு வெளியிட இந்த நடுவர் தீர்ப்பாயம்தான் அனுமதித்தது.

2016-ம் ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உட்டா பஞ்சாப் படத்தையும் இந்த நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்றுதான் வெளியிட்டார்கள்.

இது போன்று பல மொழித் திரைப்படங்களும் நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்று வெளியாகியுள்ளன. அதனால்தான் இந்தத் தீர்ப்பாயத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சட்டா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஷால் பரத்வாஜ் கூறும்போது, “திரைத்துறைக்கு இது சோகமான நாள். இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு, நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா..? இப்படி ஒரு முடிவு எடுக்க இப்போது என்ன அவசியம் வந்தது..?” என்றார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறும்போது, ‘மத்திய அரசின் இந்த திடீர் முடிவு திரையுலகை அச்சுறுத்துகிறது. இனிமேல் சினிமாவில் தைரியமான கருத்துகளை கூற இயக்குநர்கள் தயங்கி நிற்பார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..” என்றார்.

The post திரைப்பட தணிக்கை வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் தடாலடி நடவடிக்கை..! appeared first on Touring Talkies.

]]>