Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ban – Touring Talkies https://touringtalkies.co Sun, 13 Aug 2023 05:17:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ban – Touring Talkies https://touringtalkies.co 32 32 எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! https://touringtalkies.co/censor-board-banned-the-mgr-song/ Sun, 13 Aug 2023 05:17:45 +0000 https://touringtalkies.co/?p=35254 எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அன்பே வா. இதில் இடம் பெற்ற, புதிய வானம் புதிய பூமி.. பாடல் மிகப் பிரபலமானது. இந்த படத்தைப் பார்த்த சென்சார்  அதிகாரிகள், குறிப்பிட்ட பாடலை முழுதுமாக நீக்க வேண்டும் என்றனர். படக்குழுவினர் பதறிப்போய் ஏன் என்று கேட்டனர். அதற்கு சென்சார் அதிகாரிகள், உதய சூரியன் என்கிற வார்த்தை கட்சி சின்னத்தை குறிக்கிறது என்றனர். அந்த வார்த்தைதானே பிரச்சினை அதை மாற்றலாம் என்றனர், படக்குழுவினர். பாடலை எழுதிய […]

The post எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அன்பே வா. இதில் இடம் பெற்ற, புதிய வானம் புதிய பூமி.. பாடல் மிகப் பிரபலமானது.

இந்த படத்தைப் பார்த்த சென்சார்  அதிகாரிகள், குறிப்பிட்ட பாடலை முழுதுமாக நீக்க வேண்டும் என்றனர்.

படக்குழுவினர் பதறிப்போய் ஏன் என்று கேட்டனர்.

அதற்கு சென்சார் அதிகாரிகள், உதய சூரியன் என்கிற வார்த்தை கட்சி சின்னத்தை குறிக்கிறது என்றனர்.

அந்த வார்த்தைதானே பிரச்சினை அதை மாற்றலாம் என்றனர், படக்குழுவினர்.

பாடலை எழுதிய வாலி, உதய சூரியன் என்பதை, புதிய சூரியன் என மாற்றினார்.

பாடலை பாடிய டி.எம்.எஸ்ஸை உடனடியாக வரவழைத்து, வார்த்தை மாற்றி பாட வைதது படத்தில் சேர்த்தனர்.

அதன் பிறகுதான் சென்சார் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post எம்.ஜி.ஆர். பாடலுக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
‘மாவீரன்’ பட கட்சிக்குத் தடை! https://touringtalkies.co/maveeran-party-flag-banned/ Thu, 13 Jul 2023 01:41:42 +0000 https://touringtalkies.co/?p=34316 மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் –  அதிதி சங்கர் ஜோடியாக நடிக்கும் மாவீரன் திரைப்படம்,  நாளை  திரைக்கு வருகிறது.  இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் எங்களது கட்சியின் சிகப்பு – வெள்ளை – சிகப்பு  வண்ண  கொடியும்,   அக்காட்சியில் கட்சியினர் அணியும் வேட்டியில் எங்கள் கட்சி  வண்ணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட […]

The post ‘மாவீரன்’ பட கட்சிக்குத் தடை! appeared first on Touring Talkies.

]]>
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் –  அதிதி சங்கர் ஜோடியாக நடிக்கும் மாவீரன் திரைப்படம்,  நாளை  திரைக்கு வருகிறது.  இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் எங்களது கட்சியின் சிகப்பு – வெள்ளை – சிகப்பு  வண்ண  கொடியும்,   அக்காட்சியில் கட்சியினர் அணியும் வேட்டியில் எங்கள் கட்சி  வண்ணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர், “காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒருவேளை படம் வெளியாகாவிட்டால், பெருத்த நஷ்டம் ஏற்படும்” என்று வாதிட்டார்.

பிறகு நீதிபதி, “படத்தின் துவக்கம், இடைவேளை மற்றும் இறுதியில், ‘எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை’ என பொறுப்புத் துறப்பை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதேசமயம், ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிடும் போது, குறிப்பிட்ட வண்ண கொடி, வேட்டி இருக்கக்கூடாது  என தடை விதித்தார்.

The post ‘மாவீரன்’ பட கட்சிக்குத் தடை! appeared first on Touring Talkies.

]]>
ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் https://touringtalkies.co/adipurush-case-update/ Wed, 28 Jun 2023 03:59:24 +0000 https://touringtalkies.co/?p=33858 ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் […]

The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.

]]>
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம். அனுமனும் சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுமாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்ப்பவையாக இருக்கிறது. இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். படத்தை முறையாக சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்

படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்… அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை” என்று கேட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.

]]>
மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! https://touringtalkies.co/poster-in-theni-to-ban-mamannan-movie/ Tue, 27 Jun 2023 07:06:01 +0000 https://touringtalkies.co/?p=33842 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், […]

The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போஸ்டரில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>
நேபாள நாட்டில் ஆதிபுருஷ் படத்துக்கு தடை! https://touringtalkies.co/the-movie-adipurush-has-faced-problems-in-nepal/ Sun, 18 Jun 2023 04:18:48 +0000 https://touringtalkies.co/?p=33562 ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நேற்று முன்தினம் (ஜூன் 16) உலகம் முழுவதும் வெளியானது. படத்தில், “சீதா இந்தியாவின் மகள்” என குறிப்பிட்டு இருந்தது. இது நேபாள நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியது. “சீதாதேவி பிறந்தது நேபாளத்தில்தான். ஆனால் படத்தில் இந்தியா என குறிப்பிட்டு உள்ளது. இந்த வசனத்தை நீக்கினால்தான் சென்சார் சான்றிதழ் அளிக்க முடியும்” என நேபாள அரசு தெரிவித்தது. இதையடுத்து அந்த வசனத்தை படக்குழு நீக்கியது. ஆனாலும் சட்டம், […]

The post நேபாள நாட்டில் ஆதிபுருஷ் படத்துக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நேற்று முன்தினம் (ஜூன் 16) உலகம் முழுவதும் வெளியானது.

படத்தில், “சீதா இந்தியாவின் மகள்” என குறிப்பிட்டு இருந்தது. இது நேபாள நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியது.

“சீதாதேவி பிறந்தது நேபாளத்தில்தான். ஆனால் படத்தில் இந்தியா என குறிப்பிட்டு உள்ளது. இந்த வசனத்தை நீக்கினால்தான் சென்சார் சான்றிதழ் அளிக்க முடியும்” என நேபாள அரசு தெரிவித்தது.

இதையடுத்து அந்த வசனத்தை படக்குழு நீக்கியது.

ஆனாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

The post நேபாள நாட்டில் ஆதிபுருஷ் படத்துக்கு தடை! appeared first on Touring Talkies.

]]>
“போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா https://touringtalkies.co/congratulations-to-all-those-who-took-part-in-the-protest-against-jallikattu-ban-actor-surya/ Fri, 19 May 2023 06:44:52 +0000 https://touringtalkies.co/?p=32597 ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், ” ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, “ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது. இதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” […]

The post “போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், ” ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, “ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது. இதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா appeared first on Touring Talkies.

]]>