Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
award – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Dec 2023 11:58:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png award – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க”:  நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி https://touringtalkies.co/you-have-given-an-award-for-crying-actor-vadivelu/ Sun, 24 Dec 2023 01:57:09 +0000 https://touringtalkies.co/?p=39143 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘அயோத்தி’ தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு  பெற்றார். அப்போது பேசிய வடிவேலு, “சர்வதேச திரைவிழா 7 நாட்கள் இங்கே நடக்கிறது. எனக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. சர்வதேச படவிழாவுக்கு நான் இதுவரை சென்றதில்லை. […]

The post “அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க”:  நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘அயோத்தி’ தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு  பெற்றார். அப்போது பேசிய வடிவேலு, “சர்வதேச திரைவிழா 7 நாட்கள் இங்கே நடக்கிறது. எனக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. சர்வதேச படவிழாவுக்கு நான் இதுவரை சென்றதில்லை.

பழைய படங்களைப் பார்த்தால் சௌகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். ‘வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற’ என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் ‘மாமன்னன்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது. அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். இது படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் போல. சீரிய சிந்தனைவாதி. நாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் கண்முன் கொண்டுவருகிறார். அந்தக் காட்சியில் காமெடி நிறைய இருக்கிறது. அதனை முன்பே சொல்லியிருந்தால் படத்துக்கு போயிருக்க மாட்டீர்கள்.

‘மாமன்னன்’ படத்தின் காட்சிகளை கொஞ்சம் திருப்பினால் காமெடியாகிவிடும். ஒரு காட்சியில், ‘கதவ சாத்திட்டு ஏங்க உள்ள உட்காரணும்’ என மாரி செல்வராஜிடம் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘அண்ணே சிரிச்சுடாதீங்க’ என்றார். சீரியஸான அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய காமெடி நடந்தது. ஒரே ஒரு ‘மாமன்னன்’ படத்தில் நடித்தேன்… இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். மாமன்னன் படம் மக்களிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

 

The post “அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க”:  நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! https://touringtalkies.co/award-sasikumar-controversial-ciff-award-best-tamil-cinema-ayothi/ Thu, 21 Dec 2023 02:29:41 +0000 https://touringtalkies.co/?p=39028 சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்`அயோத்தி’. “தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா” என்று வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில்,  படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழுந்தது. பட டைட்டிலில், கதை –  எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது.  ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை  என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார். இந்த நிலையில், 21-வது […]

The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்`அயோத்தி’. “தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா” என்று வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில்,  படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழுந்தது.

பட டைட்டிலில், கதை –  எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது.  ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை  என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார்.

இந்த நிலையில், 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்பட போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதில் சிறந்த படமாக   அயோத்தி படம் தேர்ந்தெடுக்ககப்பட்டது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.

]]>
சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் https://touringtalkies.co/satyaraj-appreciation-it-was-like-giving-an-award-viji-chandrasekhar/ Wed, 13 Dec 2023 01:27:32 +0000 https://touringtalkies.co/?p=38800 விஜி சந்திரசேகர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை ஆவார். பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் அவருடன் நடித்த போது நீ எப்படி ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசினாய் என்று என்னை கூப்பிட்டு பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு  விருது கொடுத்தது போன்று இருந்தது. டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தான் நடித்த […]

The post சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
விஜி சந்திரசேகர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை ஆவார். பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் அவருடன் நடித்த போது நீ எப்படி ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசினாய் என்று என்னை கூப்பிட்டு பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு  விருது கொடுத்தது போன்று இருந்தது. டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தான் நடித்த அந்த சீன் பற்றி பகிர்ந்து கொண்டார் விஜி சந்திரசேகர்.

The post சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
சர்வதேச விருது பெற்ற ‘யாத்திசை’! https://touringtalkies.co/international-award-winning-yaathisai/ Thu, 14 Sep 2023 03:03:14 +0000 https://touringtalkies.co/?p=36224 வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய புனைவு கதைதான் ‘யாத்திசை இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும், படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் இப்படம் […]

The post சர்வதேச விருது பெற்ற ‘யாத்திசை’! appeared first on Touring Talkies.

]]>
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய புனைவு கதைதான் ‘யாத்திசை

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும், படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் இப்படமானது 2022- 2023 ஆண்டிற்கான கனடா டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது . நூற்றிற்கும் மேலான உலக நாடுகளின் திரைப்படங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சிறந்த திரைப்படமாக (People choice award) யாத்திசை தேர்வாகியுள்ளது.. செப்டம்பர் 8 தொடங்கி 10 தேதி வரை விழா நடைபெற்றது . கனடா நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் சினிமா விரும்பிகள் இவ்விழாவை பார்த்து சிறப்பித்தனர். சர்வதேச விருது பெற்ற யாத்திசை படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post சர்வதேச விருது பெற்ற ‘யாத்திசை’! appeared first on Touring Talkies.

]]>
பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது https://touringtalkies.co/p-c-sriram-cheran-award/ Sat, 05 Aug 2023 01:03:25 +0000 https://touringtalkies.co/?p=35041 நண்பன் என்கிற அமைப்பு, நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வில் இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது. இயக்குனர் சேரன் பேசும்போது, ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் […]

The post பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது appeared first on Touring Talkies.

]]>
நண்பன் என்கிற அமைப்பு, நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வில் இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது.

இயக்குனர் சேரன் பேசும்போது, ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

The post பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது appeared first on Touring Talkies.

]]>
விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ! https://touringtalkies.co/seenu-ramasamy-udhayanidhi-movie-getting-awards/ Mon, 31 Jul 2023 01:48:59 +0000 https://touringtalkies.co/?p=34895 சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடியாக நடித்த படம் ‘கண்ணே கலைமானே’. வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, தரமான படம் என்ற பராட்டுக்களையும் பெற்றது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. தற்போது ‘கண்ணே கலைமானே’ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க […]

The post விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ! appeared first on Touring Talkies.

]]>
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடியாக நடித்த படம் ‘கண்ணே கலைமானே’. வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, தரமான படம் என்ற பராட்டுக்களையும் பெற்றது.

ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. தற்போது ‘கண்ணே கலைமானே’ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, “நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது!”  என்றார்.

The post விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ! appeared first on Touring Talkies.

]]>
“விருது படம் வேண்டாம்!”:  ப்ரியாமணி அதிரடி https://touringtalkies.co/no-award-film-priyamani-in-action/ Tue, 13 Jun 2023 05:15:20 +0000 https://touringtalkies.co/?p=33430 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இவரே அட்டகாடு’  படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். இந்த நிலையில்,  2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்தி வீரன் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இந்த நிலையில் முஸ்தப்பா […]

The post “விருது படம் வேண்டாம்!”:  ப்ரியாமணி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இவரே அட்டகாடு’  படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார்.

இந்த நிலையில்,  2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்தி வீரன் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
இந்த நிலையில் முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மீண்டும் திரையுலகுக்கு வந்துள்ள அவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், “கமர்சியல் படங்களியே நடிக்க விரும்புகிறேன். ஆர்ட் படம்.. விருதுக்கான படம்.. போன்றவற்றில் நடிக்க விரும்பவில்லை” என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

 

The post “விருது படம் வேண்டாம்!”:  ப்ரியாமணி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
சர்வதேச விருது பெற்ற ‘இராவண கோட்டம்’:  ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு https://touringtalkies.co/raavana-kottam-ott-update/ Wed, 07 Jun 2023 01:03:08 +0000 https://touringtalkies.co/?p=33230 விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம், இராவண கோட்டம்.   கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடித்தார். படத்தில், சாதி கலவரங்களின் பின்னணியில் உள்ள ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சிறப்பாக சொல்லி இருந்தார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். மேலும், கருவேல மர ஒழிப்பின் அரசியல் சிக்கல்களையும் பேசியிருந்தார்.இவரது இயக்கத்தை பாராட்டி, ரோனியா நாட்டில் நடைபெற்ற […]

The post சர்வதேச விருது பெற்ற ‘இராவண கோட்டம்’:  ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம், இராவண கோட்டம்.   கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடித்தார்.

படத்தில், சாதி கலவரங்களின் பின்னணியில் உள்ள ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சிறப்பாக சொல்லி இருந்தார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். மேலும், கருவேல மர ஒழிப்பின் அரசியல் சிக்கல்களையும் பேசியிருந்தார்.இவரது இயக்கத்தை பாராட்டி, ரோனியா நாட்டில் நடைபெற்ற ‘கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்துக்காக அவருக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

The post சர்வதேச விருது பெற்ற ‘இராவண கோட்டம்’:  ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
இராவண கோட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது! https://touringtalkies.co/best-director-award-for-ravana-kottam-director-vikram-sukumaran/ Fri, 02 Jun 2023 04:25:16 +0000 https://touringtalkies.co/?p=33069 சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இராவண கோட்டம் படம். இவரக்கு, கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டு உள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக, பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன்,  வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதினார்.  மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், சமீபத்தில் இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். கண்ணன் […]

The post இராவண கோட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இராவண கோட்டம் படம். இவரக்கு, கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டு உள்ளது.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக, பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன்,  வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதினார்.  மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், சமீபத்தில் இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடித்தார்.

படத்தில், சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஆதாய அரசியல் குறித்து பேசியிருந்தார்.இந்நிலையில்தான், ரோனியா நாட்டில் நடைபெற்ற ‘கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்துக்காக  அவருக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்துள்ளது.

 

 

The post இராவண கோட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது! appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு சிறந்த நடிகர் விருது! https://touringtalkies.co/japan-osaka-film-festival-manadu-and-sarpatta-parambarai-won-awards-and-best-actor-vijay-vijay-simbu-arya/ Mon, 22 May 2023 18:40:53 +0000 https://touringtalkies.co/?p=32712 ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை அமைப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான […]

The post விஜய்க்கு சிறந்த நடிகர் விருது! appeared first on Touring Talkies.

]]>
ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை அமைப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த திரைக்கதை பிரிவில் மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மாநாடு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், கர்ணன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் தேனி ஈஸ்வர், சிறந்த நடன அமைப்பு பிரிவில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் குமார், சிறந்த துணை நடிகர் ஜெய்பீம் மணிகண்டன், சிறந்த துணை நடிகை ஜெய்பீம் லிஜோமோல் ஜோஸ், சிறந்த நகைச்சுவை டாக்டர் படத்திற்காக நடிகர் ரெட்டின் கிங்ஸ்லே,சிறந்த படத்தொகுப்பு மாநாடு படத்திற்காக பிரவீன் கே.எல். மற்றும் சிறப்பு விருது யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விஜய்க்கு சிறந்த நடிகர் விருது! appeared first on Touring Talkies.

]]>