Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
age – Touring Talkies https://touringtalkies.co Sun, 24 Sep 2023 03:39:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png age – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? https://touringtalkies.co/will-senior-actors-think-of-vijay-sethu-krithi-shetty/ Sun, 24 Sep 2023 03:39:34 +0000 https://touringtalkies.co/?p=36539 ‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார். ‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் […]

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.

‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.

மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில், பத்திரிகையாளர் செல்வம், “விஜய் சேதுபதியை பார்த்தாவது, சீனியர் நடிகர்கள் திருந்துவார்களா” என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.

]]>
39 வயது வித்தியாசம்… ரஜினியுடன் நடித்தது ஏன்?: தமன்னா https://touringtalkies.co/tamannaah-bhatia-dismisses-39-year-age-gap-between-her-and-jailer-co-star-rajinikanth/ Wed, 02 Aug 2023 05:28:09 +0000 https://touringtalkies.co/?p=34953 ஜெயிலர் படத்தில், ஹீரோவாக நடித்துள்ள ரஜினிகாந்த்க்கு தற்போது 72 வயதாகும் நிலையில், நாயகியாக நடித்துள்ள தமன்னாவுக்கு 33 வயதாகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த தமன்னாவிடம், வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஏன் வயது வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்? திரையில் நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை நீங்கள் பார்க்க வேண்டும். இதற்கு ஹாலிவுட் நடிகர் நடிகர் டாம் குரூஸை உதாரணமாக கூறலாம்.  தனது […]

The post 39 வயது வித்தியாசம்… ரஜினியுடன் நடித்தது ஏன்?: தமன்னா appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் படத்தில், ஹீரோவாக நடித்துள்ள ரஜினிகாந்த்க்கு தற்போது 72 வயதாகும் நிலையில், நாயகியாக நடித்துள்ள தமன்னாவுக்கு 33 வயதாகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த தமன்னாவிடம், வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஏன் வயது வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்? திரையில் நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.
இதற்கு ஹாலிவுட் நடிகர் நடிகர் டாம் குரூஸை உதாரணமாக கூறலாம்.  தனது வாழ்க்கை முழுவதும், குரூஸ் பல அதிரடித் திரைப்படங்களில் நடித்த டாம்,  அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதில் எந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கும் அவர் டூப் பயன்படுத்தியதில்லை.

“நான் வயதைப் பற்றி பேச வேண்டும் என்றால், 60 வயதிலும் டாம் குரூஸின் ஸ்டண்ட்களைப் பார்ப்பேன். அதேபோல் அந்த வயது வரும்போது நான் அசத்தலான நடனம் ஆட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

The post 39 வயது வித்தியாசம்… ரஜினியுடன் நடித்தது ஏன்?: தமன்னா appeared first on Touring Talkies.

]]>
இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! https://touringtalkies.co/93-year-old-ageing-superstar-charuhaasan-in-haraa-movie/ Wed, 02 Aug 2023 05:16:37 +0000 https://touringtalkies.co/?p=34930 நடிகர் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் […]

The post இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார்.

இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’தாதா 87’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

’ஹரா’ படத்தின் படப்பிடிப்பின்போது அவர் மோகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கு படக்குழுவினர், ஏஜிங் சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதம் நடந்து வருகையில், இன்னொரு சூப்பர் ஸ்டார் என்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

The post இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! appeared first on Touring Talkies.

]]>
“ரஜினி நோ யூஸ்!”: அண்ணன் சத்ய நாராயண ராவ் சொல்கிறார் https://touringtalkies.co/rajini-no-use-says-his-brother-satya-narayana-rao/ Tue, 30 May 2023 01:11:09 +0000 https://touringtalkies.co/?p=32965 நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அவை வெற்றி பெறவம், ரஜினி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவன் அருள் புரிய வேண்டம். மற்றபடி அரசியலுக்கு வருவதில்லை என அவரே சொல்லிவிட்டார்.  தவிர அவருக்கு வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் […]

The post “ரஜினி நோ யூஸ்!”: அண்ணன் சத்ய நாராயண ராவ் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அவை வெற்றி பெறவம், ரஜினி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவன் அருள் புரிய வேண்டம்.

மற்றபடி அரசியலுக்கு வருவதில்லை என அவரே சொல்லிவிட்டார்.  தவிர அவருக்கு வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.

கர்நாடகாவில் வசிக்கும் சத்யநாராயண ராவ் அவ்வப்போது தமிழ்நாட்டு கோயில்களுக்கு வருவார். அப்போதெல்லாம், “விரைவில் ரஜினி அரசியலுக்கு வருவார்.. ஆறு மாதத்தில் வருவார்.. முதலமைச்சர் ஆவார்..” என்றெல்லாம் பேட்டி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “ரஜினி நோ யூஸ்!”: அண்ணன் சத்ய நாராயண ராவ் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
79 வயதில் தந்தை ஆன நடிகர்! https://touringtalkies.co/the-hollywood-actor-robert-de-niro-became-a-father-at-the-age-of-79/ Thu, 11 May 2023 07:54:35 +0000 https://touringtalkies.co/?p=32363 அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்பாதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தி ஐரிஷ் மேன், டாக்சி டிரைவர், ரேஜிங் புல், கேப் பியர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இவர், அமெரிக்க நடிகை டியான்னே அபோட்டை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து 1988-ல் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பின்னர் மாடல் அழகி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

The post 79 வயதில் தந்தை ஆன நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்பாதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தி ஐரிஷ் மேன், டாக்சி டிரைவர், ரேஜிங் புல், கேப் பியர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர், அமெரிக்க நடிகை டியான்னே அபோட்டை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து 1988-ல் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பின்னர் மாடல் அழகி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூலியன், ஆரோன் ஆகிய இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இவரையும் பிரிந்து கிரேஸ் ஹைடவரை மணந்தார். இவர்களுக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

ராபர்ட் நீரோவுக்கு தற்போது 79 வயது ஆகும்  நிலையில் 7-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.  இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ளன. 7-வது குழந்தை சமீபத்தில் பிறந்து இருக்கிறது. 7-வது குழந்தைக்கு தந்தையான நிலையிலும் இன்னும் எனக்கு குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

The post 79 வயதில் தந்தை ஆன நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
“சின்னப்பையனை காதலிப்பது தப்பில்லை!”: மாளவிகா மோகனன் https://touringtalkies.co/love-has-no-age-malavika-mohanan/ Mon, 30 Jan 2023 04:40:00 +0000 https://touringtalkies.co/?p=30066 ரஜினிகாந்தின் பேட்ட, விஜயின் மாஸ்டர், தனுஷின்  மாறன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் மாளவிகா மோகனன். தற்போது தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், “போலே என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானேன். பிறகு பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்தேன். அடுத்து தமிழில் நிறைய படங்களில் நடித்தேன். தற்போது மீண்டும் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறேன். […]

The post “சின்னப்பையனை காதலிப்பது தப்பில்லை!”: மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்தின் பேட்ட, விஜயின் மாஸ்டர், தனுஷின்  மாறன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் மாளவிகா மோகனன். தற்போது தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், “போலே என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானேன். பிறகு பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்தேன். அடுத்து தமிழில் நிறைய படங்களில் நடித்தேன்.

தற்போது மீண்டும் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறேன்.  இந்த படத்தில் என்னைவிட விட வயது குறைந்த இளைஞரை காதலிக்கும் வேடம்.

காதல் என்றால் காதல் தான். காதல் அந்தஸ்து பார்க்காது. காதலுக்கு வயது இல்லை. அதற்கு சமூக எல்லைகளும் கிடையாது” என்றார்.

The post “சின்னப்பையனை காதலிப்பது தப்பில்லை!”: மாளவிகா மோகனன் appeared first on Touring Talkies.

]]>