Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor sathyaraj – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Sep 2022 07:37:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor sathyaraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் https://touringtalkies.co/dont-celebrate-actors-by-holding-them-on-their-heads-actor-sathyarajs-request/ Mon, 12 Sep 2022 07:36:53 +0000 https://touringtalkies.co/?p=24469 “நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல” என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம். அதேபோல் […]

The post “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல” என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம்.

அதேபோல் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவையால் ஏற்படுகிற மன அழுத்தம். மேலும், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம், பெண் அடிமைத்தனத்தால் ஏற்படுகிற அழுத்தம் போன்றவை ஆகும். இதில், பொருளாதார சிக்கல் என்பது முக்கியமான இடத்தை வகிக்கிறது.

நீட் தேர்வு சம்பந்தமாக நடந்த தற்கொலை நிகழ்வு மிகவும் மனதைக் காயப்படுத்திய விஷயம். நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு நீட் தேர்வு என்பது கஷ்டம். முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவது ரொம்ப முக்கியம். டாக்டர், வழக்கறிஞர்களின் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்கத் தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம்.

உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. உலகில் யாரும் புத்திசாலி இல்லை. தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்ஜிஆரின் படப் பாடல்களைக் கேட்பேன். அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும்.

பெரியார், அம்பேத்கர் சமூக மருத்துவர்கள் மட்டுமல்ல; சிறந்த மன நல மருத்துவர்கள். நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல. படத்தைப் பாருங்கள். ஆனால் அதற்காக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்…” என்று பேசினார்.

The post “நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு https://touringtalkies.co/actor-sathyaraj-speech-in-theerppugal-virkkappadum-movie-function/ Thu, 16 Dec 2021 17:12:05 +0000 https://touringtalkies.co/?p=19871 சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்.’ ‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத் தொகுப்பை சரத் கவனிக்கிறார். ‘குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிய, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்திருக்கிறார். […]

The post “நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்.’

‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத் தொகுப்பை சரத் கவனிக்கிறார்.

குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிய, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி நேற்று இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சத்யராஜ், சிபிராஜ், மயில்சாமி, சந்துரு, எஸ்.ஏ. சந்திரசேகர், திலகவதி ஐ.பி.எஸ்., நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அது சார்ந்த விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் சத்யராஜ் பேசுகையில், “நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க. கை தட்டுங்க. ஆனால், நிஜ ஹீரோக்களைத்தான் போற்ற வேண்டும். வேதம் புதிது’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை எம்.ஜி.ஆர்.தான் தீர்த்து வைத்தார். அதேபோன்று பெரியார்’ படத்திற்கும் பிரச்சினை வந்தது. ‘பெரியார்’ படம் வெளியானதற்கு காரணம் இங்கே வந்துள்ள நீதியரசர் சந்துருதான்.

தணிக்கைச் (சென்சார்) சான்றிதழ்கள் தற்போது பல வடிவங்களில் உள்ளன. அதனால் மேடையில் பேசும்போது பார்த்து பேச வேண்டியுள்ளது. பெரியார், அம்பேத்கர் படங்கள் உள்ள திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுகின்றன. ஆங்கிலம் பேசுவது என்பது அறிவுக்காகத்தான். நீதியரசர் சந்துரு அவர்களே சர்டிபிகெட் குடுத்திட்டார்.. தீர்ப்புகள் விற்கப்படலாம்’ டைட்டில் ஓகே என்று.. பிறகென்ன.. நிச்சயமாக இத்திரைப்படம் தடைகளை உடைத்து திரைக்கு வரும்…” என்றார்.

The post “நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! https://touringtalkies.co/actor-sathyaraj-director-anu-mohan-story/ Fri, 15 Jan 2021 08:05:57 +0000 https://touringtalkies.co/?p=12162 இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும் அனு மோகனின் இயக்கத்தில் நடிக்க சத்யராஜ் பெரிதும் தயங்கியிருக்கிறார். அனு மோகனுக்கு முதன்முதலில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் அணுகியது சத்யராஜைத்தான். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை தேடிப் போய்ப் பார்த்து கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனு […]

The post இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும் அனு மோகனின் இயக்கத்தில் நடிக்க சத்யராஜ் பெரிதும் தயங்கியிருக்கிறார்.

அனு மோகனுக்கு முதன்முதலில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் அணுகியது சத்யராஜைத்தான். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை தேடிப் போய்ப் பார்த்து கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனு மோகன்.

கதையைக் கேட்ட சத்யராஜ், “கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போ நான் ஓல்டு கெட்டப் போட வேண்டாம்ன்னு நினைச்சிருக்கேன். அதுனால வேண்டாம். நீங்க பிரபுவை அப்ரோச் பண்ணுங்க. அவருக்குப் பொருத்தமா இருக்கும்..” என்று பிரபுவிடம் டைவர்ட் செய்துவிட்டாராம்.

பிரபுவிடம் அனு மோகன் சென்று இந்தக் கதையைச் சொன்னவுடன் பிரபு “கதை நல்லாயிருக்கே.. நான் நடிக்கிறேன்…” என்று சொல்லி நடிக்க ஒத்துக் கொண்டார். அந்தப் படம்தான் 1989-ல் வெளியான ‘நினைவுச் சின்னம்’ திரைப்படம்.

2 வருடங்கள் கழித்து மீண்டும் சத்யராஜிடம் போய் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அனு மோகன். இந்த முறை கதையைக் கேட்டுவிட்டு “இப்போ இந்த மாதிரி கதைல நான் நடிக்கிறதில்லையே..” என்று இழுத்த சத்யராஜ் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஆனால், இதற்குப் பின்பு சில நாட்கள் கழித்து இயக்குநர் கே.சுபாஷ் அனு மோகனை சந்தித்து, சத்யராஜிடம் ஏதோ கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை வைச்சு நான் படமாக்கலாம்ன்னு நினைக்கிறேன். கதையைத் தர்றீங்களான்னு கேட்டிருக்கிறார். எப்படியோ தன் கதை படமானால் போதும் என்று சொல்லி அந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார் அனு மோகன்.

இந்தக் கதையில் உருவான திரைப்படம்தான் 1992-ம் ஆண்டு சத்யராஜ்-பானுப்பிரியா நடிப்பில் கே.சபாஷ் இயக்கத்தில் வெளியான ‘பங்காளி’ திரைப்படம்.

இதன் பின்பும் முயற்சியைக் கைவிடாமல் சத்யராஜிற்கு மீண்டும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை முழுவதையும் கேட்டுவிட்டு “நல்லாத்தான் இருக்கு. யோசித்து சொல்றனே…” என்று சொல்லியனுப்பியிருக்கிறார் சத்யராஜ்.

சில நாட்கள் கழித்து சத்யராஜ் அனுப்பி வைத்ததாகச் சொல்லி இயக்குநர் குரு தனபால் அனு மோகனை நேரில் வந்து சந்தித்திருக்கிறார். “சத்யராஜ்கிட்ட ஒரு கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை எனக்குக் கொடுக்குறீங்களா..? நான் அவரை வைச்சு படம் பண்ணப் போறேன்..” என்று கேட்டிருக்கிறார்.

இந்த முறையும் ஏமாற்றத்துடன் அனு மோகன் தன் கதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்தக் கதையில் உருவான படம்தான் சத்யராஜின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய 1994-ல் வெளியான ‘தாய் மாமன்’ திரைப்படம்.

இதன் பின்பு அனு மோகனுக்கே படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போக.. சத்யராஜவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு என்னும் அவரது நீண்ட நாள் ஆசை நிராசையாகவே போய்விட்டது..!

The post இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
“அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! https://touringtalkies.co/rajinikanth-is-universal-super-star-sathyaraj-interview/ Thu, 17 Dec 2020 06:35:46 +0000 https://touringtalkies.co/?p=11158 சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர். இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் […]

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர்.

இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் ஒருத்தர்தான்.

இன்றைய உலகத்துல எந்த நாட்டுல, எந்த மொழில.. எந்த நடிகன் 45 வருஷமா ஹீரோவாகவே நடிச்சிட்டு வர்றாரு..? சொல்லுங்க.. அதுலேயும் இன்னிக்கு தமிழ்ச் சினிமால 100 கோடி ரூபாய் சம்பளத்தையும் அவரால வாங்க முடியுதுன்னா அதுதானே அவரோட திறமை.. பெருமை..! அவருக்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் தீவிர பக்திமான். நான் தீவிர நாத்திகன். இதுதான் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடே தவிர.. வேறில்லை..” என்றார்.

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஆனந்த்ராஜின் திரையுலக வளர்ச்சிக்கு உதவிய நடிகர் சத்யராஜ்..! https://touringtalkies.co/anandhraj-sathyaraj-cinema-life-story/ Sat, 14 Nov 2020 13:31:24 +0000 https://touringtalkies.co/?p=10048 திரைப்பட நடிகரான ஆனந்த்ராஜ் 1984-ம் ஆண்டில் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்ற மாணவர். இவருடன் சக வகுப்புத் தோழராக படித்தவர் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன் சிவ்ராஜ் குமார். ஆனந்த்ராஜ் முதன்முதலாக ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படம் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார். அந்த அறிமுக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். “நான் கல்லூரிப் […]

The post நடிகர் ஆனந்த்ராஜின் திரையுலக வளர்ச்சிக்கு உதவிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட நடிகரான ஆனந்த்ராஜ் 1984-ம் ஆண்டில் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்ற மாணவர். இவருடன் சக வகுப்புத் தோழராக படித்தவர் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன் சிவ்ராஜ் குமார்.

ஆனந்த்ராஜ் முதன்முதலாக ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படம் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.

அந்த அறிமுக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய பேட்ச்சில் பிராசசிஸிங் பிரிவில் படித்த ராஜனுக்கு இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படம்தான் நடிகர் கார்த்திக்கையும், ராகினியையும் இணைத்து வைத்த ‘சோலைக்குயில்’ திரைப்படம். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

அந்தப் படத்தின் துவக்க வேலைகளிலேயே நான் ராஜனுடன் பணியாற்றினேன். முழு கதையும், திரைக்கதையும் எனக்குத் தெரியும். எனக்கும் அந்தப் படத்தில் ஒரு வேடம் கொடுத்திருந்தார் ராஜன்.

மனம் முழுக்க கனவுடன் படப்பிடிப்புக்காக நான் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. ஊட்டிக்கு படக் குழுவினருடன் போய் சேர்ந்தோம். ஹோட்டலில் தங்கினோம். மறுநாள் காலையில் நான் மேக்கப்பெல்லாம் போட்டுத் தயாராக அமர்ந்திருந்தேன்.

அந்த நேரம்தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய வேடத்தில் தன்னுடைய நண்பரான ஒரு நடிகர்தான் நடிக்க வேண்டும் என்று நாயகன் கார்த்திக் விருப்பப்பட்டாராம். இதனால் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

மேக்கப்பை கலைக்காமலேயே அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டின் அருகேயுள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அமர்ந்து வாய்விட்டு கதறி அழுதேன். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தும்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே எண்றெண்ணி அழுதேன்.

ஆனால், இதனால் கார்த்திக் மீது இப்போதுவரையிலும் எனக்குக் கோபமில்லை. அவர், அவரது நண்பருக்கு உதவி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.. இதற்குப் பிறகு நானும் கார்த்திக்கும், பல படங்களில் சேர்ந்து நடித்துவிட்டோம். கார்த்திக் இப்போதும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.

அந்தப் படம் கை நழுவிய பிறகு பல இயக்குநர்களிடத்தில் ஸ்கிரிப்ட் வேலையில் உதவியாக இருந்தேன். அப்போது தமிழ்த் திரையுலகத்தின் முக்கால்வாசி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பாம்குரோவ் ஹோட்டலில்தான் ரூம் போட்டிருப்பார்கள். அங்கேதான் நானும் இருந்தேன்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இயக்குநரும், கதை, வசனகர்த்தாவுமான சண்முகப்பிரியனை அந்த ஹோட்டலில் சந்தித்தேன். அவர் அப்போதுதான் ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தைத் துவக்கியிருந்தார். ‘இந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க பண்றீங்களா..?’ன்னு கேட்டார். அப்படி, அவர் மூலமாகத்தான் அந்தப் படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் அறிமுகமானேன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே ‘மணப்பாடு’ என்னும் ஊரில் நடந்தது. அப்போதும்கூட அந்தக் காட்சி எடுக்கப்படும்வரையிலும் நான் அதை நம்பாமல்.. ‘கடவுளே.. வேற யாரும் எனக்குப் பதிலா வந்திரக் கூடாது’ன்னு வேண்டிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா நானே நடித்து தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிவிட்டேன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான ‘உறுதி மொழி’ படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் பிரபு-கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களுமே சக்ஸஸாக ஓடியதால்.. என்னை அனைவரும் கவனித்தார்கள். இதன் பின்புதான் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

ஆனாலும், என்னுடைய நடிப்பு கேரியரின் துவக்கத்திற்கு மிக முக்கியமான மறைமுகக் காரணமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ் ஸார்தான். அவர் அப்போதுதான் வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து நாயகனாக மாறினார்.

இதனால் வில்லன் கதாபாத்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் நான் உள்ளே நுழைய எனக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதற்காக சத்யராஜ் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..” என்று சிரித்தபடியே சொன்னார் நடிகர் ஆனந்த்ராஜ்.

The post நடிகர் ஆனந்த்ராஜின் திரையுலக வளர்ச்சிக்கு உதவிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் https://touringtalkies.co/cinema-history-9-sivaji-wrote-a-latter-to-mgr/ Fri, 09 Oct 2020 07:59:05 +0000 https://touringtalkies.co/?p=8513 ‘நடிப்பு’ என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய ‘நடிகர் திலகம்’ என்னும் அந்த மகா கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக் கூடிய அரிய  வாய்ப்பு பெற்றவன் நான். 1970-ம் ஆண்டு தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய ‘திரைக்கதிர்’ பத்திரிகை அதன் ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாகவே  வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், ‘சிவாஜியின் […]

The post சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>

‘நடிப்பு’ என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய ‘நடிகர் திலகம்’ என்னும் அந்த மகா கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக் கூடிய அரிய  வாய்ப்பு பெற்றவன் நான்.

1970-ம் ஆண்டு தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய ‘திரைக்கதிர்’ பத்திரிகை அதன் ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாகவே  வெளிவந்தது.

இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், ‘சிவாஜியின் டைரி’ என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் அவரது நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று  முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும்.

இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில்கூட எண்ணியதில்லை. அதை  இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’தான் தயாரிப்பாளராக எனக்கு முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர் திலகம்தான், என் இரண்டாவது தயாரிப்பான ‘வாழ்க்கை’ திரைப்படத்தின் நாயகன்.

சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து  தயாரித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத் தயாரிப்பின்போது நடந்த ஒரு  நிகழ்ச்சி என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத  இனிய நிகழ்ச்சியாக அமைந்தது .

ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “நாளை காலையில் ‘டப்பிங்’கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்..?” என்று அவரைக் கேட்டேன்.

நான் அப்படிக் கேட்டவுடன் சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா…?  உன் இஷ்டத்துக்கு டப்பிங் தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே…?” என்றார் அவர் .

சிவாஜி  அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஆகவே ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் எவ்வளவு பெரிய  தவறு செய்திருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது.

“எப்போது டப்பிங் பேசுகிறீர்கள்…?” என்று அவரைக் கேட்டுவிட்டு  அவர் என்று பேசுகிறேன் என்று சொல்கின்றாரோ அந்தத் தேதியில் ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்…?

என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம், ”மன்னிச்சிக்கங்க சார்.  ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ… அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்..” என்று சொல்லிவிட்டு  கிளம்புவதற்காக  சோபாவை விட்டு எழுந்தேன்.

உடனே தன் கைகளால் என் தோளைத் தொட்டு என்னை அமர்த்திய  சிவாஜி “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம். நான் நாளைக்கு  காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்..” என்றார்.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார்.. செய்யறேன்..” என்றேன்.

“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு.. டப்பிங் பேச வர்றேன்…” என்றார்.

கரும்பு தின்னக் கூலியா..?  உடனே ‘சரி’ என்று ஒப்புக் கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் அவர்  பேசி முடித்து விட்டார். அந்த இரண்டு நாளும் அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல, அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் சாப்பிட்டோம்.

1980-களில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு கவுரவமாக நடத்தப்பட்டார்கள்  என்பதைத் தெரிவிப்பதற்கு ‘வாழ்க்கை’ திரைப்படத் தயாரிப்பின்போது நடந்த இன்னொரு சம்பவம்  ஒரு  நல்ல உதாரணம்.

‘வாழ்க்கை’ படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி.  1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 12-ம் தேதியன்று சிவாஜியைத் தொடர்பு கொண்டேன்.

“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளை மறுநாள்  காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு  ஃபிளைட்ல டிக்கட்  எல்லாம்கூட போட்டாச்சி…” என்றார் அவர்.

தஞ்சாவூரில் தியேட்டர் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜியோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார்.

அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக  வீரபாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு  ஒரு வாரத்துக்குப்  பிறகுதான் நான் சென்னை திரும்பினேன். அதற்குப் பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக் கொண்டார் சிவாஜி.

எம்.ஜி.ஆர்.  அவர்களும், சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில்  நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி. 

“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்..? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்..? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப் போகிறார்..? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப்  புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.

எம்.ஜி ஆர்.-சிவாஜி  இருவரது நெருக்கத்தையும்  உணர்கின்ற ஒரு வாய்ப்பு சிவாஜி அவர்கள் ‘டாக்டர்’ பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது.

அந்த பாராட்டு விழாக் குழுவில்  பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் முக்கிய பொறுப்பு  ஏற்றிருந்தேன்.

அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை  தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு  தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா  தில்லிக்கு  எடுத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.

அந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் அப்போது கோபிசெட்டிப்பாளையத்தில் ‘மண்ணுக்குள் வைரம்’ படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டிபாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதன்படி நான் கோபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினேன்.

எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதியை எடுத்து அப்போதே  பத்திரப்படுத்துக் கொண்டேன்.

இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அது நீண்ட நாட்களுக்கு என் மனதிற்குள் ஒரு குறையாகவே இருந்தது. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த ‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன். அதற்கு பெரிதும் உதவியாக இருந்தவர் ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் நாயகனான சத்யராஜ்.

சிவாஜியும், சத்யராஜும் இணைந்து  நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை வகித்தார். ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழாவின்போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.

‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழா அழைப்பிதழின் முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும், நடுப்பக்கத்தில் சத்யராஜ் படத்தையும். கடைசி பக்கத்தில் சிவாஜி படத்தையும்  அச்சிட்டிருந்தோம்.

அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன்.

அந்த அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் சிவாஜி திரும்பக் கொடுத்தபோது அதன்  முதல் பக்கத்தில்  எம்.ஜி.ஆர். இருப்பது போல மடித்து என்னிடம் கொடுத்தார் சிவாஜி.

என் மனதைக் காயப்படுத்தாமல் அதே நேரத்தில் இதற்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்  என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே… அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.

சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ… அதைப் போல நூறு மடங்கு உண்மை, சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான  மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக் காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்தான்.

The post சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>