Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வெந்து தணிந்தது காடு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 16:03:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வெந்து தணிந்தது காடு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-am-waiting-for-vendu-satnuthanu-kadu-part-2-producer-udayanidhi-stalins-speech/ Thu, 10 Nov 2022 16:02:21 +0000 https://touringtalkies.co/?p=26913 Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் […]

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? https://touringtalkies.co/does-simbu-have-any-advice-for-ajith-fans/ Wed, 09 Nov 2022 19:44:13 +0000 https://touringtalkies.co/?p=26839 ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழா இன்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. ‘மல்லிப் பூ’ […]

The post அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.

சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழா இன்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. மல்லிப் பூ’ பாடல் எழுதிய தாமரைக்கும் நன்றி.

இப்போது மக்களின் ரசனை மாறி உள்ளது. அவர்கள் விதம்விதமான சினிமாக்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதை சினிமாவின் பொற்காலம் என்பேன்.

அண்மையில் வெளியான ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’, தற்போது வெளியான ‘லவ் டுடே’ என அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் வித்தியாசமான படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.. தயவு செய்து ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். உங்களுக்காக.. ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் இப்படி அடிக்கடி அப்டேட் கேட்பதால் படத்தில் ஏதாவது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நல்ல படங்களை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறோம். என் படத்திற்கு மட்டுமல்ல; இனிமேல் எந்தப் படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். இதை சொல்ல சொன்னது பத்து தல’ இயக்குநர்தான்.

எல்லா ரசிகர்களும் ஹீரோவை கொண்டாடுவார்கள். ஆனால், நான் என் ரசிகர்களை கொண்டாடுவேன். அது இனியும் தொடரும்…” என்றார்.

வலிமை’ பட சூட்டிங் சமயத்தில்தான் அஜித் ரசிகர்கள் அடிக்கடி ‘வலிமை அப்டேட்’, ‘வலிமை அப்டேட்.. என கேட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், சிம்பு அஜித் ரசிகர்களை குறி வைத்துதான் இப்படி பேசினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? appeared first on Touring Talkies.

]]>
“சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! https://touringtalkies.co/national-award-confirmed-for-simbu-appreciation-of-producer-isari-ganesh/ Tue, 20 Sep 2022 05:52:26 +0000 https://touringtalkies.co/?p=24595 தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினரின் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் Dr ஐசரி K.கணேஷ் பேசும்போது, “இந்தப் படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.   நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக […]

The post “சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினரின் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் Dr ஐசரி K.கணேஷ் பேசும்போது, “இந்தப் படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.  

நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்தப் படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார். அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி படமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ.ஆர்.ரகுமான் சார்தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  

படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம்-2  விரைவில் தயாராகும்.” என்றார்.

The post “சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இத்னானி ஸ்டில்ஸ் https://touringtalkies.co/actress-siddhi-idnani-stills/ Tue, 13 Sep 2022 10:06:50 +0000 https://touringtalkies.co/?p=24499 The post வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இத்னானி ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இத்னானி ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
“வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! https://touringtalkies.co/actor-kamal-haasan-announces-vettayadu-vilaiyaadu-2nd-part-will-be-produced/ Sat, 03 Sep 2022 16:16:06 +0000 https://touringtalkies.co/?p=24274 ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றைக்கு அறிவித்தார். சிலம்பரசன் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது இதைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. அது போல் இந்தப் படத்திலும் அந்த […]

The post “வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றைக்கு அறிவித்தார்.

சிலம்பரசன் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது இதைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. அது போல் இந்தப் படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன்.

வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை.

நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க, கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ்ப் படங்களைத் தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படங்கள்தான். தமிழ்ப் படங்களைக் கெடுப்பதும் தமிழ்ப் படங்கள்தான். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. நல்ல படங்களுக்கு மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.

சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பேயே கௌதம் என்னிடம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.  

The post “வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு https://touringtalkies.co/i-dont-know-what-the-story-of-this-film-is-gautham-menons-shocking-speech/ Sat, 03 Sep 2022 15:51:25 +0000 https://touringtalkies.co/?p=24265 Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’ எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் […]

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்திற்கு ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு புது லைன் சொன்னார். ஆனால், “இது புது ஹீரோ பண்ணக் கூடிய கதை” என்றார். ஆனால் நான், “சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார்” என்று அந்தக் கதையை படமாக்க ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்னவுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐசரி ஸார் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.

இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கே இந்தப் படம் ஒரு புது விசயமாக இருந்தது. ஜெயமோகன், “ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளியே வந்து ஜெயித்தால்தான் இயக்குநர். இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்றார்.

ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். அவர் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல் ஒரு காதலை வைத்துள்ளேன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை கேட்டு, டியூன்களைப் போட்டுக் காட்டி விவாதிப்பார். அவருடன் வேலை செய்யும் அனுபவமே வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக் கதைக்கு 3 பாடல்களை தந்திருந்தார். பின்னர் இந்தக் கதையை சொன்னபோது புதிய பாடல்களை தந்தார். இவர்களால்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்றார்.

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு https://touringtalkies.co/a-magic-awaits-the-audience-in-this-film-silambarasan-talks/ Sat, 03 Sep 2022 11:18:56 +0000 https://touringtalkies.co/?p=24251 Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’ எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் […]

The post “ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “கௌதம் ஒரு இசைக் காதலன். அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக் கொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நான் நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன்.  தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால்தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகவும்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்தேன். பாடல்களும், படமும் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகர் நாசர் பேசும்போது, “கௌதம் மேனன் நிறைய ஆச்சர்யங்களை தருவார். இந்தப் படத்திலும் கண்டிப்பாக அசத்துவார் என்று நம்புகிறேன். கௌதம் மேனனிடம் எப்போதும் சிறப்பானது டைட்டில்தான். இந்தப் படத்திலும் டைட்டில் நன்றாக இருக்கிறது. சிம்பு மிக நன்றாக நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு நல்ல வெற்றியை தரும். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் R.J.பாலாஜி பேசும்போது, “சிம்பு என் நண்பர். அவர் திறமைக்கு இன்னும் மிகப் பெரிய விசயங்களை அவர் செய்யலாம் என அவரிடம் பேசும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். இப்போது மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என்று அவர் நிறைய புதுமையான படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தை கௌதம் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். கௌதம் இப்பொதெல்லாம் எல்லா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். எல்லா படங்களிலும் இருக்கிறார். வேல்ஸ் அங்கிள் என் தந்தைபோல். அவருக்கு சினிமா மீது இருக்கும் காதல் மிகப் பெரியது. சினிமா துறையை சேர்ந்த நிறைய பேருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். நான் கேட்டே பல விசயங்கள் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “இவ்வளவு பிரம்மாண்டமான விழாவை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ்  தரமான படங்களை தேர்வு செய்து அசத்தி வருகிறார்கள். ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி.  கண்டிப்பாக படம் புதுமையான ஒன்றாகத்தான் இருக்கும். கௌதமுடன் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தரமான இயக்குநர். நல்ல படங்களை உருவாக்கும் ஆர்வமுள்ளவர். இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “ஐசரி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்று இங்கு ரெண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ஆர்., சிம்பு. சிம்புவை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். அவனை உரிமையோடு திட்டுவேன். திறமையை வைத்து கொண்டு வீணாக்காதே என்பேன். இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். நடிப்பில் அசத்திவிட்டார். ஆடியன்ஸ்க்கு நிறைய சர்ப்ரைஸ் இந்தப் படத்தில் இருக்கிறது. நிச்சயமாக படம் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நாயகி சித்தி பேசும்போது, “ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரியது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு முதலில் வந்தபோது ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணியில் நடிக்கும் நாயகி லக்கியஸ்ட் கேர்ள் என நினைத்தேன். அதிர்ஷடவசமாக அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.

கௌதம் படத்தில் நாயகியாக நடிப்பது எல்லோருக்கும் கனவு. அவர் படங்களில் நாயகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். சிம்பு மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடித்ததும் மிக அற்புதமான அனுபவம். ஏ.ஆர்.ஆர். என் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களில் இசையாக உடனிருந்துள்ளார். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர் Dr ஐசரி K கணேஷ் பேசும்போது, “கமல்ஹாசன் சார் என் கலையுலக குருவாக இருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தம்பி சிம்பு இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார்.

இந்தப் படத்தை கௌதம் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தை Red Giant Movies சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். அது இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உதயநிதி அவர்களுக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் டி.ஆர்.சிலம்பரசன் பேசும்போது, “எனக்கு இந்த மாதிரி பிரம்மாண்டமான விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரம்மாண்டத்தை பார்த்ததும் நம் விழாதானா என்று சந்தேகமே வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது ‘விண்ணை தாண்டி வருவாயா’ விழாவிற்கும் வந்திருந்தார். அந்தப் படம்போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.

தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கூட்டிப் போனதிற்கு முழு காரணம் அவர்தான்.

கௌதம் வாசுதேவ் மேனனுடன் நான் இணையும் மூன்றாவது படம் இது. நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். படத்தில் ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப் படத்திலும் அது இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்களைதான் தருவார். அவருக்கு நன்றி.

சித்தி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

முதலில் ஒரு காதல் கதையாக செய்வதாகத்தான் இருந்தது. “இந்தப் படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம்…” என்றேன். அப்போதுதான் ஜெயமோகனின் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக் கூடாது. ரசிகர்கள்தான் படத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்..” என்றார்.

The post “ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>