Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பாடல் – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Oct 2022 15:02:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பாடல் – Touring Talkies https://touringtalkies.co 32 32 எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! https://touringtalkies.co/mgr-gave-a-volley-of-bun/ Fri, 28 Oct 2022 15:00:00 +0000 https://touringtalkies.co/?p=26140 ஜாலியாக ஒருவருக்கு ஐஸ் வைப்பதை அல்வா கொடுப்பது என்போம். அதே போல எம்.ஜி.ஆருக்கு ‘பன்’ கொடுத்தவர் கவிஞர் வாலி. இதை அவரே சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி.  ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது. கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் […]

The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.

]]>
ஜாலியாக ஒருவருக்கு ஐஸ் வைப்பதை அல்வா கொடுப்பது என்போம். அதே போல எம்.ஜி.ஆருக்கு ‘பன்’ கொடுத்தவர் கவிஞர் வாலி. இதை அவரே சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி.  ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது.

கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் ஏற்பட்டதாம்.

நேராக சத்யா ஸ்டுடியோ சென்ற வாலி,  எம்.ஜி.ஆரை சந்தித்து உரிமையாக, “உலகம் சுற்று் வாலிபன் படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர்.,  உறுதியாகச் சொல்லாமல், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார், பட்டும் படாமல்.

உடனே வாலி, “ இந்தப் படத்தில் நான் பாடல் எழுதவில்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

குழப்பமாக எம்.ஜி.ஆர்., “ஏன்” என்று கேட்க.. அதற்கு வாலி, “படத்தின் பெயர், உலகம் சுற்றும் வாலிபன். இதில் ‘வாலிபன்’ என்பதில் என்னுடைய பெயரை நீக்கிவிட்டால்,  ‘உலகம் சுற்றும் பன்’ என்று ஆகிவிடுமே.. இதை எப்படி மக்கள் ஏற்பார்கள்?” என்று முகத்தை சீரிஸாக வைத்துக்கொண்டு வாலி கேட்டார்.

வாலி கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். ரசித்துச் சிரித்தார். அதோடு, “சரி, நீயும் பாட்டு எழுது” என அனுமதித்தார்.

பாடல் எழுத பாட்டுத்திறமை மட்டும் போதாது.. பேச்சுத் திறனும் வேண்டும் என்பதற்கு வாலி ஓர் உதாரணம்.

The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-the-context-in-which-kannadasan-wrote-the-famous-song/ Thu, 27 Oct 2022 11:43:09 +0000 https://touringtalkies.co/?p=26106 சந்திரபாபு பாடி, ஆடி நடித்த புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை.. என்ற பாடல் காலத்தால் அழியாதது. ஏவி.எம். தயாரிக்க கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்களால் உருவான அன்னை திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம் பெற்றது. சந்திரபாபு, பானுமதி, சௌகார் ஜானகி, என்.வி.ரங்காராவ் மற்றும் சந்திரபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் தோன்றினர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுதியிருந்தார். ஆர்.சுதர்சனம் இசை அமைக்க,  கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரும் பாடல்களை எழுதி இருந்தனர். அழகிய மிதிலை நகரிலே என்கிற காலத்தால் அழியாத […]

The post பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சந்திரபாபு பாடி, ஆடி நடித்த புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை.. என்ற பாடல் காலத்தால் அழியாதது.

ஏவி.எம். தயாரிக்க கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்களால் உருவான அன்னை திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம் பெற்றது.
 சந்திரபாபு, பானுமதி, சௌகார் ஜானகி, என்.வி.ரங்காராவ் மற்றும் சந்திரபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் தோன்றினர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுதியிருந்தார். ஆர்.சுதர்சனம் இசை அமைக்க,  கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரும் பாடல்களை எழுதி இருந்தனர். அழகிய மிதிலை நகரிலே என்கிற காலத்தால் அழியாத பாடல் இடம் பெற்றதும் இப்படத்தில்தான்.

இந்த படம் உருவாகிக்கொண்டு இருந்த காலத்தில்  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் கவிஞர் கண்ணதாசன். அப்போது திமுகவிலிருந்து  தமிழ் தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.   1962 தேர்தலில், அக் கட்சி சார்பில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டி இட்டார்.  தனது அறிவு திறமை அத்தனையும் பயன்படுத்தி பேசினார்,  தொகுதி முழுக்க புயல் போல் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்.

ஆனால் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

இந்த சூழலில்தான், அன்னை படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது.  படத்தில் நாயகன் விரக்தியுடன் பாட வேண்டிய காட்சி. கவிஞரும் விரக்தியில்தான் இருந்தார்.

ஆகவே இரண்டுக்கும் பொருந்தும் வகையில், ‘புத்தி உள்ள மனிதருக்கு வெற்றி கிடைப்பதில்லை..’ என்ற பாடலை எழுதினார்.

அது இன்றுகூட பலரும் நினைத்துப் பார்க்கும் பாடலாக அமைந்துவிட்டது. அதுதான் காலத்தால் அழியாக கவிஞர் கண்ணதாசனின் படைப்புத்திறன்.

 

The post பிரபல பாடலை கண்ணதாசன் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! https://touringtalkies.co/chance-to-act-what-happened-to-kannadasan/ Mon, 24 Oct 2022 02:05:47 +0000 https://touringtalkies.co/?p=25921 கண்ணதாசன் என்றாலே கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும். ஏனென்றால் காலத்தால் அழியாத எத்தனையோ அருமையான பாடல்களை நமக்கு அளித்தவர் அவர். ஆனால் ஒரு படத்தில்  அவர் பாடல் எழுத வாய்ப்பு கேட்க.. “பாடல் வேண்டாம்.. நடிக்க வாருங்கள்” என்று கூறப்பட்டது. ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான். இப்படி பாடல் மறுக்கப்பட்டு கண்ணதாசன் நடித்த திரைப்படம், பராசக்தி. சிவாஜி நடித்த முதல் படமான பராசக்திதான். பாடல் வாய்ப்பு கேட்ட கண்ணதாசனிடம், தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், “பாடல் […]

The post நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
கண்ணதாசன் என்றாலே கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும். ஏனென்றால் காலத்தால் அழியாத எத்தனையோ அருமையான பாடல்களை நமக்கு அளித்தவர் அவர்.

ஆனால் ஒரு படத்தில்  அவர் பாடல் எழுத வாய்ப்பு கேட்க.. “பாடல் வேண்டாம்.. நடிக்க வாருங்கள்” என்று கூறப்பட்டது.

ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.

இப்படி பாடல் மறுக்கப்பட்டு கண்ணதாசன் நடித்த திரைப்படம், பராசக்தி. சிவாஜி நடித்த முதல் படமான பராசக்திதான்.

பாடல் வாய்ப்பு கேட்ட கண்ணதாசனிடம், தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், “பாடல் எழுத ஏற்கெனவே கவிஞர்களை ஒப்பந்தம் செய்துவிட்டேன். சில காட்சிகளில் நடி. நிச்சயமாக உணக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்” என்றார்.

அவரது வார்த்தையைத் தட்ட முடியாத கண்ணதாசனும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெரிய வேடம் இல்லை. சிறிய வேடம்தான்.

தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் கூறியது போல பிற்காலத்தில் முக்கிய பிரபலமாக ஒளிர்ந்தார் கண்ணதாசன்.  ஆனால் நடிகர் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு கவிதையில் உயர்ந்தார்.

அதன் பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

“அப்போதெல்லாம் பி.ஏ. பெருமாள் அன்று கூறியதை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்வேன். மூத்தோர் வாக்கு பொய்ப்பதில்லை” என்று சொல்லி இருக்கிறார் கண்ணதாசன்.

The post நடிக்கத்தான் வாய்ப்பு! : கண்ணதாசனுக்கு நேர்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி! https://touringtalkies.co/lyrics-by-karunanidhi/ Mon, 24 Oct 2022 01:57:45 +0000 https://touringtalkies.co/?p=25912 திரையுலகில் எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரது படங்கள் பலவற்றுக்கு கவிஞர் வாலி பாடல் எழுதிக்கொண்டு இருந்தார். “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற, திரைப்படம் + அரசியல் இணைந்த வரிகளை அளித்தவர் வாலிதான்.  இந்த நிலையில் முரசொலி மாறன் தயாரிக்க எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த  “எங்கள் தங்கம்” திரைப்படம் 1970 ஆம் ஆண்டு உருவாகியது.  இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதினார். “தங்கப்பதக்கத்தின் மேலே”, “நான் செத்துப் பொழச்சவன்டா” போன்ற பிரபலமான […]

The post கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி! appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரது படங்கள் பலவற்றுக்கு கவிஞர் வாலி பாடல் எழுதிக்கொண்டு இருந்தார்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற, திரைப்படம் + அரசியல் இணைந்த வரிகளை அளித்தவர் வாலிதான்.

 இந்த நிலையில் முரசொலி மாறன் தயாரிக்க எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த  “எங்கள் தங்கம்” திரைப்படம் 1970 ஆம் ஆண்டு உருவாகியது. 

இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதினார். “தங்கப்பதக்கத்தின் மேலே”, “நான் செத்துப் பொழச்சவன்டா” போன்ற பிரபலமான பாடல்கள் இவர் எழுதியவைதான்.

இப்படி பாடல்களை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.யும், வாலியும்.

புதிய பாடல் ஒன்றுக்கு மெட்டு ஏற்றபடி,
“நான் அளவோடு ரசிப்பவன்” என்று முதல் வரியை வாலி எழுதிவிட்டார். ஆனால் அடுத்தவரி வரி அந்த மெட்டுக்கு ஏற்ற மாதிரி அமையவில்லை.

பிரசவ வேதனை போல தவித்தார் வாலி.

அப்போது  கலைஞர் அங்கே வந்தார், அவரிடம் வாலி விசயத்தைச் சொன்னார்.

 முதல்வரி, “நான் அளவோடு ரசிப்பவன்” என்பதை அறிந்த கலைஞர், உடனே, “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்றார்.. மெட்டுக்கு ஏற்றமாதிரி.

வாலிக்கும், எம்.எஸ்.வி.க்கும் பெரும் மகிழ்ச்சி.

 பிறகு இந்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர்., “பாடல் அருமை. அதிலும் “அளவின்றி கொடுப்பவன்” என்ற வரி மிகச்சிறப்பு”  என்றார்.

உடனே வாலி,  “இந்த பாராட்டை கலைஞருக்கு கொடுங்கள். அவர்தான் இந்த  வரியை எழுதியது எழுதினார்” என்றார்.

பிறரின் திறமைக்கான அங்கீகரத்தை தான் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வாலியின் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்?

The post கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி! appeared first on Touring Talkies.

]]>
எஸ்.எஸ். வாசனின் ‘ராணி’தந்திரம்! https://touringtalkies.co/ss-vasans-rani-trick/ Mon, 24 Oct 2022 01:52:46 +0000 https://touringtalkies.co/?p=25906 சிந்தித்து ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவரை,  ராஜதந்திரத்துடன்  செயல்பட்டார் என  அனைவரும் புகழ்வார்கள். அது போல பிரபல தயாரிப்பாளராக விளங்கிய அமரர் எஸ்.எஸ்.வாசன் ‘ராணி தந்திரம்’ செய்தது அந்தக் காலத்தில் திரையுலகினரால் ரசிக்குப் பேசப்பட்டது. அவரது தயரிப்பில் ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, வைஜெயந்திமாலா, பத்மினி  உள்ளிட்டோர்  நடித்த வஞ்சி கோட்டை வாலிபன் திரைப்படம் 1958ல் வெளியானது; பெரும் வெற்றி பெற்றது. இந்த படம்  இந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோதும் இதே கூட்டணி இணைந்தது. […]

The post எஸ்.எஸ். வாசனின் ‘ராணி’தந்திரம்! appeared first on Touring Talkies.

]]>
சிந்தித்து ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவரை,  ராஜதந்திரத்துடன்  செயல்பட்டார் என  அனைவரும் புகழ்வார்கள். அது போல பிரபல தயாரிப்பாளராக விளங்கிய அமரர் எஸ்.எஸ்.வாசன் ‘ராணி தந்திரம்’ செய்தது அந்தக் காலத்தில் திரையுலகினரால் ரசிக்குப் பேசப்பட்டது.

அவரது தயரிப்பில் ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, வைஜெயந்திமாலா, பத்மினி  உள்ளிட்டோர்  நடித்த வஞ்சி கோட்டை வாலிபன் திரைப்படம் 1958ல் வெளியானது; பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம்  இந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோதும் இதே கூட்டணி இணைந்தது.

அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் கலந்து..’ பாடலும்  இடையில் பி.எஸ்.வீரப்பா, “சபாஷ் சரியான போட்டி!”  என ரசித்துச் சொல்வதும் இன்றும் பிரபலம்.

அந்த பாடல் காட்சியில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டி போட்டு ஆடுவார்கள். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது கூறப்படாது. உயரத்தில் இருந்து ஒரு விளக்கு கீழே விழ, நட்சத்திரங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து நடனத்தை நிறுத்திவிடுவதைப் போல காட்சி இருக்கும்.

இந்த காட்சியை இயக்குநர் குழு யோசிக்கும்போது ஒரு சிக்கல் இருந்தது.

அந்த காலகட்டத்தில் வைஜயந்திமாலா பாலிவுட்டில் பிரபலமாக இருந்தார்..  பத்மினி கோலிவுட்டில் கோலோச்சினார்.  ஆகவே இருவரில் ஒருவரை வெற்றி பெற்றவராக, இன்னொருவரை தோல்வி அடைந்தவராக காண்பித்தால், அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.

ஆகவே இயக்குநர் குழு குழம்பிக்கொண்டு இருந்தது. அந்த நடனக்காட்சியையே நீக்கிவிடலாமா என நினைத்தது.

 இதை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், “இருவருமே பிரபலமான நடிகைகள். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு நடனமாடினால் மக்கள் ரசிப்பார்கள். ஆகவே நடனக் காட்சியை நீக்க வேண்டாம்.

அதே நேரம் அவர்கள் மனம் வருந்தாதபடி, நடனத்தில் யாரும் வெற்றி தோல்வி அடையாதபடி முடித்துவிடலாம். அதாவது  விளக்கு மேலிருந்து விழுந்து நடனம் நின்றுவிடுவது போல காட்சி வைத்துவிடலாம்” என்று யோசனை சொன்னார்.

இந்த யோசனை சிறப்பாக இருக்கவே அதன்படியே காட்சி வைக்கப்பட்டது.

அதைத்தான் இன்றும் நாம் ரசித்துக்கொண்டு இருக்கிறோம்!

The post எஸ்.எஸ். வாசனின் ‘ராணி’தந்திரம்! appeared first on Touring Talkies.

]]>
20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! https://touringtalkies.co/kannadasan-advance-20-paise/ Sat, 22 Oct 2022 15:36:23 +0000 https://touringtalkies.co/?p=25831 திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர். இந்த நிலையில், 1971ம் வருடம் நீலநாராயணன் என்பவர், ‘அன்புக்கு ஒரு அண்ணன்’  என்ற திரைப்படத்தை தயாரித்தார். படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். ஆதலால் கண்ணதாசனின் வீட்டிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் இருவரை அனுப்பி பேசச்சொன்னார். அவர்களும் கண்ணதாசன் வீட்டுக்கு வந்து விபரத்தைச் […]

The post 20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! appeared first on Touring Talkies.

]]>
திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர்.

இந்த நிலையில், 1971ம் வருடம் நீலநாராயணன் என்பவர், ‘அன்புக்கு ஒரு அண்ணன்’  என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். ஆதலால் கண்ணதாசனின் வீட்டிற்கு, தயாரிப்பு நிர்வாகிகள் இருவரை அனுப்பி பேசச்சொன்னார்.

அவர்களும் கண்ணதாசன் வீட்டுக்கு வந்து விபரத்தைச் சொன்னார்கள். அவரும் பாடல் எழுத ஒப்புக்கொண்டார்.

இறுதியில், அவரிடம் அவரிடம் 20 பைசா நாணயம் ஒன்றை அளித்தார்கள்.  “இதுதான் அட்வான்ஸா” என அதிர்ந்த கண்ணதாசன், “ ஏதோ அந்த நிறுவனத்தின் சென்ட்டிமென்ட் போலும்” என நினைத்தார்.

வந்த இருவரும் அடுத்து எம்.எஸ்.வியை புக் செய்ய செல்வதாக கூறிச்சென்றனர். ஆகவே கண்ணதாசன் எம்.எஸ்.வி.க்கு போன் செய்து,  விசயத்தைக் கூறி, “அதிர்ந்துவிடாதே..” என கூறி போனை வைத்து விட்டார்.

எம்.எஸ்.வி. வீட்டுக்குச் சென்ற பட நிறுவன பிரதிந்திகள், அவரிடம் பேசிவிட்டு, ஒரு தங்க நாணயத்தை அட்வான்ஸாக அளித்தார்கள்.  ஆச்சரியப்பட்ட அவர், “கண்ணதாசனுக்கு இருபது காசுதான் கொடுத்தீர்களாமே” என கேட்டிருக்கிறார்.

சில மணி நேரத்திற்கு பின் அந்த பிரதிநிதிகள் எம்.எஸ்.வியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எம்.எஸ்.வியிடம் விவரத்தை கூறி ஒரு தங்க நாணயத்தை அவரிடம் கொடுத்தனர். உடனே எம்.எஸ்.வி. “கண்ணதாசனை ஒப்பந்தம் செய்யப்போன போது இருபது பைசா நாணயத்தை கொடுத்தீர்களாமே” என அவர்களிடம் கேட்டார்.

தயாரிப்பு நிர்வாகிகள் அதிர்ந்துபோய்,  “கண்ணதாசனுக்கும் தங்க நாணயம் கொடுக்க வேண்டும். ஆனால்  அதே வடிவில் இருந்த 20 பைசா நாணயத்தை தவறுதலாக அளித்துவிட்டோம்” என பதறி உடனடியாக கண்ணதாசன் வீட்டுக்குச் சென்று தங்கக்காசினை அளித்தனர்.

திரைத்துறையில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான சம்பவங்கள்!

The post 20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்! appeared first on Touring Talkies.

]]>