Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பஞ்சு அருணாச்சலம் – Touring Talkies https://touringtalkies.co Tue, 27 Sep 2022 18:10:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பஞ்சு அருணாச்சலம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் https://touringtalkies.co/cinema-history-81-rajinikanths-first-punch-dialogue/ Wed, 28 Sep 2022 05:51:17 +0000 https://touringtalkies.co/?p=24704 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர். ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு […]

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர்.

ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதை  வழக்கமாக்கிக் கொண்டார் ரஜினி. அவரோடு பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தைத் தொடப் போகும் நடிகர் என்று பஞ்சு அருணாசலத்துக்குப் புரிந்துவிட்டது.

தொடர்ந்து தனது படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அந்த முதல் சந்திப்பின்போதே  பஞ்சுஅருணாசலம் எடுத்துவிட்டார்.

கவிக் குயில்’ படத்தைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ பாஸ்கருடன் இணைந்து ‘விஜய மீனா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அந்த நிறுவனத்தின் சார்பில் காயத்ரி’ என்ற படத்தை தயாரித்தார்.

‘காயத்ரி’ சுஜாதா எழுதிய கதை. ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளி வந்திருந்தது. அந்தக் கதையைப் படித்த பஞ்சு அருணாசலத்துக்கு அதைப் படமாக எடுத்தால் நிச்சயம் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என்று தோன்றியதால் உடனடியாக எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

“சாவி சார் கேட்டார் என்பதற்காக நான் அவசரத்தில் எழுதிக் கொடுத்த கதை அது. “தினமணி கதிரில்” அந்தக் கதை வந்தபோதே ‘நீங்கள் இப்படி எழுதலாமா?’ என்று எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள் வந்தன. பத்திரிகையில் வெளியானதற்கே அவ்வளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட அந்தக் கதையை நீங்கள் எப்படிப் படமாக எடுப்பீர்கள்?’ என்று சுஜாதா கேட்டபோது, “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை மட்டும் கொடுங்கள்..” என்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தக் காலக்கட்டத்தில் பஞ்சு அருணாசலத்துடன் தொடர்ந்து பணியாற்றியது இரண்டு இயக்குநர்கள்தான். ஒருவர் எஸ்.பி.முத்துராமன், இன்னொருவர் தேவராஜ் மோகன்.

எஸ்.பி.முத்துராமன் அப்போது பஞ்சு அருணாசலம் எழுதிக் கொண்டிருந்த வேறு இரண்டு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவராஜ் மோகன் தனது சொந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆகவே இந்த ‘காயத்ரி’ படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பட்டு என்கிற பட்டாபிராமனுக்கு அளித்தார் பஞ்சு அருணாசலம். சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படம்  முதல் கிருஷ்ணன் பஞ்சுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பட்டு.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும்  நடிக்க 1977-ம் ஆண்டு வெளிவந்த காயத்ரி’ வெற்றிப் படமாகவும் அமைந்தது.

சுஜாதா எழுதியிருந்த அந்தக் கதையில் தான் செய்திருந்த மாறுதல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை சுஜாதாவிற்குக் காட்டி அவரைஅசத்துவதற்காக ‘காயத்ரி’ படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு. ஆனால் அன்று தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து சுஜாதா அசந்ததைவிட அதிகமாக அசந்து போனவர் பஞ்சு அருணாசலம்தான்.

‘காயத்ரி’ படத்தின் வில்லனான ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தபோது ரசிகர்கள் ஆவேசமாக ஜெய்சங்கரைத் திட்டினார்கள். அதே நேரத்தில் ஹீரோ ஜெய்சங்கரை வில்லன் ரஜினி அடித்தபோது, தியேட்டரில் விசில் பறந்தது.

இனி ரஜினிகாந்த் வில்லனல்ல என்பதையும், தொடர்ந்து அவரை வில்லனாக நடிக்க வைத்துப் படம் எடுத்தால் அது மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் பஞ்சு அருணாசலத்திற்கு இந்த ‘காயத்ரி’ படம் தெளிவாக உணர்த்தியது.

‘காயத்ரி’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் பெற்ற அந்த அனுபவம்தான் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் ஒரு முக்கியமான மாறுதலை அவர் செய்யக் காரணமாக அமைந்தது.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் தயாரிப்பாளரான  எம்.ஏ.எம்.மணியும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம்.ஸ்டுடியோவில் மணி புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றியபோது எஸ்.பி.முத்துராமன், அங்கே எடிட்டிங் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய இயக்குராக உயர்ந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் மணி.

அப்போது மகரிஷி எழுதிய ‘பத்ரகாளி’ கதை திருலோகசந்தர் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. ஆகவே அவர் எழுதி ‘குமுதம்’ இதழில் வெளியான ‘புவனா ஒரு கேள்விக் குறி’ கதையின் உரிமையை வாங்கிய மணி, அந்தக் கதையின் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கு சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் பஞ்சு அருணாசலத்தை சந்திக்க வந்தார்.

மகரிஷி எழுதிய நாவலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்ட பஞ்சு அருணாசலம் உடனே அதைப் படித்து முடித்தார். அந்த நாவல் அவருக்கும் பிடித்திருந்தது.

அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்தபோது வாழ்க்கையைப் பறி கொடுத்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகுமாரும், கதாநாயகியைக் கெடுத்துவிட்டு அவளைவிட்டு விலகும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் அந்தப் படம் வழக்கமான ஒரு படமாக ஆகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாக பஞ்சு அருணாசலத்துக்குத் தோன்றியது.

தன்னுடைய கருத்தை தயாரிப்பாளரான மணியிடமும், இயக்குநரான எஸ்.பி.முத்துராமனிடமும் சொன்னார் அவர். அவரது அந்தப் பயம் நியாயமானது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாலும்  அந்த நல்லவன் வேடம்தான் சிவகுமாருக்கு என்று ஒப்பந்தம் செய்யும்போதே, சிவகுமாரிடம் சொல்லிவிட்டதால் மீண்டும் அவரிடம் போய் எப்படி மாற்றி சொல்வது என்று அவர்கள் இருவரும் சங்கடப்பட்டார்கள்.

“நெகடிவ்வான பாத்திரத்தை ஏற்று நடித்தால் அவருக்கும் அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில் படம் வெற்றி பெறவும் அது உதவியாக இருக்கும் என்பதை சிவகுமாருக்கு சொல்வோம். அதற்குப் பிறகும் ‘எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. நான் அந்த நல்லவன் பாத்திரத்திலேயே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்கட்டும்” என்றார் பஞ்சு.

சிவகுமாரை சந்தித்து புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவருடைய பாத்திரத்தை   மாற்றியிருப்பது பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் சொன்னபோது “என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?” என்று முதலில் ஆதங்கப்பட்டாலும், பாத்திரங்களை மாற்றியதற்கான காரணங்களை பஞ்சு அருணாசலம் விளக்கிச் சொன்ன பிறகு பெருந்தன்மையோடு சிவகுமார் ஒப்புக் கொண்டார்.

அப்போது ரஜினிகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகராக இருந்த போதிலும் பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆகவே இந்த ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் தான் ஏற்கவிருந்த பாத்திரம் மாற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் பஞ்சு அருணாசலம் கொண்டு வந்த முதல் மாற்றம் அது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பஞ்சு அருணாசலம்தான் ரஜினியின் முதல் ‘பஞ்ச்’ டயலாக்கையும்  எழுதியவர்.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் கதைப்படி சிவகுமார் தவறு செய்துவிட்டு வர, அதனைத் தெரிந்து கொள்ளும் ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார் “பத்தோடு பதினொண்ணு விட்றா” என்று அலட்சியமாக பதில் சொல்ல   ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்”என்று அழுத்தம் திருத்தமாக ரஜினிகாந்த் சொல்வார். ரஜினிகாந்த் திரையில் பேசிய முதல்  ‘பஞ்ச்’ டயலாக் இதுதான்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
“பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா எங்க பரம்பரையே இல்லை” – கங்கை அமரனின் நன்றி பேச்சு https://touringtalkies.co/panchu-arunachalam-birthday-function-news/ Tue, 14 Jun 2022 17:30:19 +0000 https://touringtalkies.co/?p=22659 தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை கொண்ட பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இசை ஞானி’ இளையராஜா இருவரின் தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep நிறுவனங்கள் இணைந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர். இவ்விழாவை அறிமுகப்படு்த்தும் நிகழ்ச்சி சமீபத்தில் தி பார்க் […]

The post “பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா எங்க பரம்பரையே இல்லை” – கங்கை அமரனின் நன்றி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை கொண்ட பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இசை ஞானி’ இளையராஜா இருவரின் தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep நிறுவனங்கள் இணைந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர்.

இவ்விழாவை அறிமுகப்படு்த்தும் நிகழ்ச்சி சமீபத்தில் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர்.கே.செல்வமணி,  அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் நோக்கில்
மூத்த பத்திரிக்கையாளர்களான தேவிமணி, தேவராஜ், கலைப்பூங்கா TN ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் காட்டக் கூடியவர்கள் ஆர்.ஜே.விக்னேஷ், சுட்டி அரவிந்த். பிளாக்‌ஷிப்பின் கடுமையான உழைப்புதான் அவர்களது வளர்ச்சிக்கு காரணம். சோ உடைய நாடகங்கள் போல், இவர்கள் நாடகம் இருக்கும்.

திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். அவருடன் நான் வெகுநாட்கள் பயணம் செய்து இருக்கிறேன். அவருக்கு இவ்வளவு நாட்கள் பாராட்டுகள் வழங்கப்படாதது வருத்தம். இப்போது இது நிகழவிருப்பது பெரிய சந்தோசம்.. என்றார்.

கலைப்புலி தாணு பேசும்போது, “50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்..” என்றார்.

இயக்குநர் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இங்கு வந்த பிறகு இரண்டு நிகழ்ச்சிகள் நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கௌரவிக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். தேவராஜை நான் அறிமுகப்படுத்தியதை சொன்னார். இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது.

ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களை தந்தவர் பஞ்சு சார். அதே போல் கமல் சாரை ‘சகலகலாவல்லவன்’ போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர்.

அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா. அந்த விழாவில் அவரால் பயனடைந்தவர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரன் பேசும்போது, “எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன்தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜாதான். அவருக்கும் நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்…” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் எல்லாரும் அவரால் வளர்ந்தவர்கள்தான். அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார்.

என்னுடைய  அனைத்து படங்களையும் அவருக்கு போட்டுக் காட்டுவேன், அவர் அதில் திருத்தங்கள் சொல்வார். அது என் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாய் இருக்கும்.

பஞ்சு அருணாச்சலம் உடைய பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவர் திறமையான எழுத்தாளர். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்கு தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்…” என்றார்.

The post “பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா எங்க பரம்பரையே இல்லை” – கங்கை அமரனின் நன்றி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! https://touringtalkies.co/cinema-history-27-panchu-arunachalam-meets-ilayaraja-with-r-selvaraj/ Thu, 29 Oct 2020 13:14:47 +0000 https://touringtalkies.co/?p=9447 ‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய  பஞ்சு அருணாச்சலத்துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர்.செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை கம்யுனிஸ்ட் கட்சித்  தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.1970-களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக் குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் […]

The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.

]]>
‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய  பஞ்சு அருணாச்சலத்துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர்.செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி.

ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை

கம்யுனிஸ்ட் கட்சித்  தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.1970-களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக் குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

மதுரையிலே அப்படிப்பட்ட கச்சேரிகள் நடக்கும்போதெல்லாம் மங்கம்மா சத்திரத்தில்தான் தங்குவார் பாவலர் வரதராஜன் . அப்போது மதுரையில் தங்கியிருந்த ஆர்.செல்வராஜ் முதன்முதலாக மங்கம்மா சத்திரத்தில்தான் ராஜாவை சந்தித்தார்.

அந்த சந்திப்பை, இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு செல்வராஜ்தான் ஒரு கருவியாக இருக்கப் போகிறார் என்பதால் காலம் ஏற்படுத்திய ஒரு  சந்திப்பு என்றுதான் கொள்ளவேண்டும். இல்லையென்றால் முதல் சந்திப்பிலேயே அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்க வாய்ப்பில்லை.

தன் நண்பனான செல்வராஜிற்கு தனது சகோதரர்களான பாஸ்கர், அமர்சிங் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜா. அதைத்  தொடர்ந்து அந்தச் சகோதர்கள் எப்போது மதுரை வந்தாலும் தவறாது செல்வராஜை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் சென்னை நோக்கி நகர்ந்த  ஆர்.செல்வராஜ் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

ஆர்.செல்வராஜைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் ராஜா சென்னைக்கு வந்தபோது அவரது இன்னொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா சினிமாவில் சேர தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இசையமைப்பாளராக வேண்டுமென்றால் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது என்று ராஜாவுக்கே தோன்றியதோ இல்லை யாராவது அறிவுறுத்தினார்களோ தெரியவில்லை.

அப்போது மைலாப்பூரில் இருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய இளையராஜா, கருவியையும், கிடார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் கிளாசிகல் கிடார்  தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னையிலே பாரதிராஜாவின்  நாடகம் தவிர மற்ற நாடகக் குழுக்களிலும் கிடார் வாசித்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களோடும், ஜி.கே.வெங்கடேஷ் அவர்களோடும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற  கனவை சுமந்து கொண்டிருக்கும்  தனது தம்பியை எப்படியாவது இசையமைப்பாளராக ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்த பாஸ்கர், தினமும் காலை முதல் மாலைவரை கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரோடு இணைந்து இளையராஜாவிற்கு வாய்ப்பு தேடுகின்ற பணியில் அப்போது ஆர். செல்வராஜும் முழு மூச்சோடு செயல்பட்டார்.

பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர்.செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை  அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம்  வெளிப்படுத்தினார்.

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே செல்வராஜ் காத்திருந்தார். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன்  பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான்.

இப்போ இசையமைப்பாளர்  ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கான். அவன் போட்ட பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான்.  அவனுக்குப் எப்படியாவது இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான்  லட்சியம். உங்களுக்கு ஓ.கே-ன்னா சொல்லுங்க    நாளைக்கே நான் அவனைக்  கூட்டிக்கிட்டு  வர்றேன்…” என்றார் செல்வராஜ்.

பல ஊர்ல கச்சேரி பண்ணியிருக்கான். நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல், இசையமைப்பாளர்  ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று  மனதுக்குள்ளேயே ஒரு  கணக்குப் போட்ட பஞ்சு அருணாச்சலம், “சரி நாளைக்கு அவனை  கூட்டிகிட்டு வா…” என்றார்.

அன்று இரவு முழுவதும்  செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப்பாளரைப் பற்றிய நினைவு  பஞ்சு அருணாச்சலத்தை சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே தமிழிற்கு அவர் அழைத்து வந்திருந்த விஜய பாஸ்கர் என்ற கன்னட இசையமைப்பாளர் வெற்றி பெற்றிருந்ததால் தான் அடுத்து அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கினார் பஞ்சு.

மறுநாள் மாலையில்  பஞ்சு அருணாச்சலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே… இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார். ஷர்ட்டை  இன்  பண்ணிக் கொண்டு  ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது.

தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப்  பழகிய அவரது கண்களால்  கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று  கொஞ்சமும்  ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.

ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு  லேசான நம்பிக்கை  பிறந்திருக்கும். ஆனால், ராஜா அதையும் செய்யவில்லை..

செல்வராஜ் நம்மை இப்படி கவுத்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உடகாரச் சொன்னார் பஞ்சு அருணாச்சலம்.

லேசான ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார “செல்வராஜ் அடிக்கடி உன்னைப் பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னவுடன் அதுவரை பேசாமல் இருந்த ராஜா “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசையுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக  முயற்சிபண்ணிட்டிருக்கேன்.  பாவலர்கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன் எல்லாம்கூட போட்டு வெச்சிருக்கேன்…” என்றார்.

 “அப்படீன்னா சரி… அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம். இரண்டு நாள் கழித்து வாங்க. வரும்போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

“இவனே ரொம்ப நல்லா பாடுவான். பாடிக் காட்ட சொல்லவா…?” என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் ஆர்.செல்வராஜ். ‘சரி’ என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாச்சலம் தலையை ஆட்ட தான் அமர்ந்திருந்த  டேபிள் மீது  தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா.

தமிழ்த் திரையுலகில் தனது அரங்கேற்றம்  நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ் சினிமா உலகை தனது இசைத் திறனால்  இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று  தெரியாது.

‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களை ராஜா பாடிக் காட்டியவுடனேயே  ராஜா எப்படிப்பட்ட திறமைசாலி என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு  புரிந்துவிட்டது.

ராஜா பாடிய பாடல்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலம் ராஜாவிடம் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை.. நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை.

ராஜாவைப் பொறுத்தவரை இது அவருக்கு புது அனுபவமில்லை. பல பட நிறுவனங்களில் இதைவிட மோசமானஅனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார் என்பதால் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார் அவர்.

அதற்குப் பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும், அதற்குப் பிறகும் எப்படிப்பட்ட போராட்டங்களை எல்லாம் முதல் படத்தில் இளையராஜா சந்திக்க வேண்டி இருந்தது என்பது குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..!  

The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் https://touringtalkies.co/cinema-varalaaru-17-panchu-arunachalam-mgr-msv-ksg/ Sat, 17 Oct 2020 10:46:31 +0000 https://touringtalkies.co/?p=8939 கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார். கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு […]

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார்.

கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது.

சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து “என்னுடைய படங்களுக்கு வசனம் எழுதவோ,  பாடல் எழுதவோ கண்ணதாசனை அழைக்காதீர்கள்…” என்று தனது தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் கண்டிப்பாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

அப்படி கண்ணதாசனிடமிருந்து எம்.ஜி.ஆர். விலகி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கிடைத்தது.

அந்த வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்துக்கு வழங்கியவர் பஞ்சுவின் நெருங்கிய நண்பராக இருந்த  ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்கள்.

‘கலங்கரை விளக்கம்’ படத்திற்காக ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலையும், ‘என்னை மறந்ததேன்’ என்ற பாடலையும் எழுதியிருந்தார் பஞ்சு.

எம்.ஜி.ஆர். படத்துக்காக தான் எழுதிய பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்  பதிவானவுடன் அவருக்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். ஏனெனில், அப்போது எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு அரிதான ஒரு விஷயம்.

பாடல் பதிவான மறு தினமே மிகப் பெரிய வில்லங்கத்தை அந்தப் பாடல் சந்திக்கப் போகிறது என்று அப்போது பஞ்சு  அருணாச்சலத்துக்குத்  தெரியாது.

பதிவு செய்யப்பட்ட பாடலை மறுநாள் எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காண்பித்தார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். “இன்னொரு தடவை போடுங்க” என்றதும் வேலுமணிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரே., இன்னொரு தடவை கேட்க விரும்புகிறார் என்றால் பாட்டு நிச்சயமாக பெரிய ஹிட்டாகி விடும் என்ற நினைப்புடன், இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போட்டார் வேலுமணி.

இரண்டவது முறை கேட்டுவிட்டு ‘இன்னொரு முறை’ என்ற எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாகப் பாடலைக் கேட்டு முடித்தவுடன் ஜி.என்.வேலுமணியைப் பார்த்து, “இந்தப் பாட்டை யார் எழுதினதுன்னு சொன்னீங்க…?” என்றார்.

அதுவரை ஆனந்தமாக இருந்த ஜி.என்.வேலுமணியின் முகம் எம்.ஜி.ஆர்., இந்த கேள்வியைக் கேட்டதும் லேசாக மாறியது.

“ஏன் கேட்கறீங்க..? பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார்” என்று ஜி. என். வேலுமணி சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே, “நிச்சயமாக இருக்காது” என்ற எம்.ஜி.ஆர்.,  “இந்தப் பாட்டை நிச்சயமாக பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்க முடியாது. இப்படிப்பட்ட பாடலை கண்ணதாசனால் மட்டும்தான் எழுத முடியும். அதனால என்கிட்டே  பொய் சொல்லாதிங்க. முதல்ல இந்தப் பாட்டை தூக்கிப் போட்டுட்டு வேற ஏதாவது ஒரு கவிஞர்கிட்ட பாட்டை எழுதி ரிக்கார்ட் பண்ணுங்க” என்று  திட்டவட்டமாகச்  சொன்னார்.

“இல்லேண்ணே. நான்தான் பஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து பாட்டெழுத வைத்தேன். என் முன்னாடிதான் பஞ்சு இந்தப் பாட்டை எழுதினார்…” என்றார் வேலுமணி.

“கண்ணதாசன் எழுத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா. அதனால திரும்பத் திரும்ப நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காம… நான் சொன்னதை செய்யுங்க…” என்று இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். சொன்னபோது அவர் குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆரிடம் தான் ஒரு வார்த்தை பேசினாலும் அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஜி.என்.வேலுமணி அடுத்து நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து நடந்த விஷயம் முழுவதையும் கூறினார்.

அதைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.விஸ்வநாதன், “நான் சொன்னாகூட நீங்க நம்ப மாட்டீங்களா..? அந்த இரண்டு பாட்டையும் எழுதினது பஞ்சுதான்…” என்று அவரிடம் சொன்னது மட்டுமின்றி, “அதில் ஒரு பாட்டு என் டியூனுக்கு அவன் எழுதினது. இன்னொரு பாட்டு  அவன் எழுதின பல்லவிக்கு நான் டியூன் போட்டது” என்று நடந்ததை அப்படியே விளக்கமாக எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

அதுவரை “இது பஞ்சுவின் பாட்டே இல்லை; கண்ணதாசனின் பாட்டுதான்” என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்ன  விளக்கத்திற்குப் பிறகு “பஞ்சு ரொம்ப நல்லா எழுதறாரே..” என்று பஞ்சு அருணாச்சலத்தைப் பாராட்டியது மட்டுமின்றி வேலுமணியை அழைத்து ”இனிமே நம்ம படத்தில்  எல்லாம் அவரைத்  தொடர்ந்து எழுதச் சொல்லலாம் என்றிருக்கிறேன். அதனால பஞ்சுவை  நாளைக்கு  என்னை வந்து  பார்க்க சொல்லுங்க…” என்றார்.

காலையில் புயல் வீசிய பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கையில் மாலையில் தென்றல் விசியது. இருந்தாலும் அவரால் நிம்மதியாகத்  தூங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கும், கவிஞருக்கும் இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத தன்னை அழைக்கிறார் என்று பஞ்சு சொன்னால் “தாராளமாக போய் வா” என்று ஆசி கூறி கவிஞர் தன்னை அனுப்பி வைப்பார் என்று பஞ்சுவிற்கு நன்றாகத்  தெரியும்.

ஆனாலும், அவரைப் பகைத்துக் கொண்டு இருப்பவரை சந்தித்து அவர் படங்களில் பாட்டெழுத வாய்ப்பு பெறுவதை பஞ்சு அருணாச்சலம் விரும்பாததால் மறுநாள் எம்.ஜி.ஆரை சந்திக்க அவர் போகவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமின்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வந்த வாய்ப்பையும், இதே காரணத்திற்காகத்தான் ஏற்க மறுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

கண்ணதாசனைப் பொறுத்தவரையில் ஒரு பாடலுக்கு இவ்வளவு தந்தால்தான் பாட்டு எழுதுவேன் என்று யாரிடமும் அவர் சொன்னதில்லை. இரண்டாயிரம், மூவாயிரம்  ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். வசதியில்லாத தயாரிப்பாளர் ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

அப்படி அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் கவிஞரின் நெருங்கிய நண்பரான பீம்சிங் அவரிடம் ”ஏன்  இப்படி ஒரு பாடலுக்கு  இரண்டாயிரம், மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு படத்துக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று என்று உங்களது தயாரிப்பாளர்களிடம் கூறிவிட வேண்டியதுதானே…” என்றார்.

அவர் சொன்ன திட்டம்  கவிஞருக்கும் சரியெனத்  தோன்றியதால் உடனே பஞ்சு அருணாச்சலத்தை அழைத்த அவர் “இனிமேல் படத்துக்கு சம்பளம் பேசும்போது பெரிய படங்களுக்கெல்லாம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று சொல்லிவிடு. அது எத்தனை பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிய நட்சத்திரங்கள் நடிக்கிற படத்துக்கு நாம்ப கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளலாம்…“  என்றார். 

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அத்தனை சிக்கல்கள் தோன்றும் என்று இதைப் பற்றி இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் செல்லும்வரை  பஞ்சு அருணாச்சலத்துக்கு தெரியாது. 

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவரே பாடல்களை எழுதக் கூடிய ஒரு கவிஞர் என்ற போதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். அப்படிப்பட்ட அவர் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்தபோது அவரைப் பார்த்து பேசிய பஞ்சு, “கவிஞர் இனி ஒரு படத்துக்கு தனது சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளார்…” என்ற செய்தியை அவரிடம் சொன்னார்.

அதைக் கேட்டவுடன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவ்வளவு ஆத்திரப்படுவார் என்று பஞ்சு அருணாச்சலம் கனவிலும் நினைக்கவில்லை.

“கவிஞர் ஒரு பாட்டுக்கு இருபத்தி ஐயாயிரம் கேட்டால்கூட நான் தரத் தயாராக இருக்கேன். அது வேற விஷயம். ஆனால், என் படத்தில்  எல்லா பாட்டையும் அவரே எழுதணும்னு  என்று அவர் முடிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?

நான் என்னுடைய படத்திலே அவருக்கு ஒரு பாட்டு கொடுப்பேன். இல்லே.. இரண்டு பாட்டு கொடுப்பேன். மீதி உள்ள பாடல்களை வேறு யாரையாவது விட்டு எழுதச்  சொல்வேன். இல்லே… நானே  எழுதுவேன். அதனால எங்கிட்ட இது மாதிரி கேட்கறதை எல்லாம் விட்டுவிட்டு அவரை வழக்கம்போல பாட்டுக்கு  இரண்டாயிரமோ, மூவாயிரமோ வாங்கிக் கொண்டு எழுதச் சொல்…” என்றார் அவர்.

இதை எப்படி கவிஞரிடம் சொல்வது என்று யோசித்த பஞ்சு அருணாச்சலம் இறுதிவரை இதைப் பற்றி அவரிடம்  சொல்லவேயில்லை. இதற்கிடையில் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வேண்டிய நாள் நெருங்கியது.

அப்போது பஞ்சு அருணாச்சலத்தை தொடர்பு கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சபரிநாதன் “கவிஞர் வரலேன்னா பரவாயில்லை. அண்ணன் இந்த படத்துக்கு உன்னையே பாட்டு எழுதச் சொல்லிட்டாரு. அதனால நாளைக்குக் காலையிலே ஸ்டுடியோவிற்கு வந்துவிடு” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் பஞ்சுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. “கவிஞரோட சம்பளத்தைப் பேச வந்த நான், இப்போது உங்களுடைய படத்துக்குப் பாட்டு எழுதினால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கவிஞருடைய வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டேன்னுதான் எல்லோரும் தப்பா எடுத்துக்குவாங்க. அதனால் என்னை மன்னிச்சிக்கங்க. என்னால வர முடியாது…” என்று உடனடியாக அவருக்கு பதில் கூறினார் பஞ்சு.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ‘கற்பகம்’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதினார் வாலி.

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>