Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் விவேக் – Touring Talkies https://touringtalkies.co Wed, 25 Aug 2021 10:56:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் விவேக் – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகர் விவேக்கின் மரணத்தில் மர்மம்-தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது https://touringtalkies.co/national-human-rights-commission-enquire-about-actor-vivek-death/ Wed, 25 Aug 2021 10:55:58 +0000 https://touringtalkies.co/?p=17313 தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலையில் திடீர் மாரடைப்பினால் காலமானார். அவரின் திடீர் மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதியன்று நடிகர் விவேக் கொரோனா […]

The post நடிகர் விவேக்கின் மரணத்தில் மர்மம்-தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலையில் திடீர் மாரடைப்பினால் காலமானார்.

அவரின் திடீர் மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதியன்று நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அந்த நிகழ்வை வீடியோ செய்தியாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பரப்புரையும் செய்திருந்தார்.

ஆனால் அதற்கடுத்த நாள் ஏப்ரல் 16-ம் தேதி காலை 10 மணிக்கு தனது வீட்டில் திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

விவேக்கை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே அவர் சுய நினைவுடன் இல்லை. மூளை இறந்து போன நிலையில்தான் இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினார். உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் மறுநாள் ஏப்ரல் 17-ம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

விவேக் கொரோனா தடுப்பூசி போட்டதினால்தான் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால் விவேக்கிற்கு நூறு சதவிகிதம் ரத்த சப்ளையே இல்லை என்பதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள்.. இது தடுப்பூசியினால் ஏற்பட்டதில்லை என்று விளக்கம் தெரிவித்தனர்.

இதனை அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு இந்தப் பிரச்சினையில் எந்தக் குழப்பமும் இல்லாமல் விவேக்கின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது.

ஆனாலும், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்த புகாரை தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இனி மாநில அரசு, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.

The post நடிகர் விவேக்கின் மரணத்தில் மர்மம்-தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது appeared first on Touring Talkies.

]]>
சத்யஜோதி பிலிம்ஸூக்காக படம் இயக்கத் தயாராகியிருந்த நடிகர் விவேக்..! https://touringtalkies.co/actor-vivek-was-ready-to-director-a-movie-for-sathyajothi-films/ Sun, 18 Apr 2021 06:01:33 +0000 https://touringtalkies.co/?p=14443 நேற்றைக்கு திடீரென்று காலமான தமிழ்த் திரைப்பட நடிகரான விவேக் இயக்குநராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது தெரிய வந்துள்ளது. தான் முதன்முதலாக இயக்கப் போகும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும் என்று விவேக் விரும்பியிருக்கிறார். இதனால் அவர்களை அணுகியிருக்கிறார் விவேக். அவர்களும் இதற்கு ஓகே சொல்ல.. கடந்த ஒரு மாத காலமாக விவேக் சத்யஜோதி பிலிம்ஸ் […]

The post சத்யஜோதி பிலிம்ஸூக்காக படம் இயக்கத் தயாராகியிருந்த நடிகர் விவேக்..! appeared first on Touring Talkies.

]]>
நேற்றைக்கு திடீரென்று காலமான தமிழ்த் திரைப்பட நடிகரான விவேக் இயக்குநராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது தெரிய வந்துள்ளது.

தான் முதன்முதலாக இயக்கப் போகும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும் என்று விவேக் விரும்பியிருக்கிறார்.

இதனால் அவர்களை அணுகியிருக்கிறார் விவேக். அவர்களும் இதற்கு ஓகே சொல்ல.. கடந்த ஒரு மாத காலமாக விவேக் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தினமும் சென்று வந்திருக்கிறார்.

முழு கதை, திரைக்கதையையும் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் விவேக். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் கடந்த வாரம் முழுவதும் ஈடுபட்டிருக்கிறார் விவேக். நடிகை இந்துஜாவிடம்கூட இது பற்றிப் பேசி இந்த வாரம் அவரிடத்தில் கதை கேட்பதற்காக வரச் சொல்லியிருந்தாராம் விவேக்.

இந்தச் சூழலில்தான் எதிர்பாராதவகையில் விவேக்கின் இறப்பு நேரிட்டிருக்கிறது. காலனின் அவசரத்தால் விவேக்கின் இயக்குநர் கனவு நிராசையாகிவிட்டது.

The post சத்யஜோதி பிலிம்ஸூக்காக படம் இயக்கத் தயாராகியிருந்த நடிகர் விவேக்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது https://touringtalkies.co/actor-viveks-funceral-news/ Sat, 17 Apr 2021 13:25:30 +0000 https://touringtalkies.co/?p=14424 இன்று காலை மருத்துவமனையில் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்றைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்த நிலையிலும் அவர் இன்று விடியற்காலை 4.35 மணிக்குக் காலமானார். இதையடுத்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கலைஞர்களும், […]

The post நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது appeared first on Touring Talkies.

]]>
இன்று காலை மருத்துவமனையில் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்றைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்த நிலையிலும் அவர் இன்று விடியற்காலை 4.35 மணிக்குக் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கலைஞர்களும், நடிகர், நடிகைகளும், பத்திரிகையாளர்களும், பல்வேறு சமூகத்தினரும், பொதுமக்களும் திரளாக வந்திருந்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் கவுண்டமணி, நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் விக்ரம், நடிகர் நாசர், நடிகர் மயில்சாமி, நடிகர் வையாபுரி, நடிகர் ஆடுகளம் நரேன், கவிஞர் சினேகன், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் விச்சு, நடிகர் சூரி, நடிகர் கணேஷ். நடிகை ஆர்த்தி கணேஷ், நடிகர் தம்பி ராமையா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் அருண் விஜய், நடிகர் லொள்ளு சபா சாமிநாதன், நடிகை மதுமிதா, நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை குஷ்பூ, நடிகை கீர்த்தி சுரேஷ், சஞ்சனா சிங், இயக்குநர் சீமான், நடிகர் ரோபோ சங்கர், நடிகர் கொட்டாச்சி, கிளிமூக்கு சுப்ரமணி, இயக்குநர் எழில், வீ.சேகர், தயாரிப்பாளர் மோகன், பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி, நடிகர் போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் சரண், லிங்குசாமி, சுசீந்திரன், சரவணன், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மனோபாலா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வைகோ, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என்று திரையுலகத்தின் முக்கியப் பிரபலங்கள் பலரும் வந்து விவேக்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்திரளானா பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட கியூவில் நின்று காத்திருந்து விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையே நடிகர் விவேக்கின் பொது நல சேவையைப் பாராட்டி அவருக்கு போலீஸ் மரியாதை தரவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

அஞ்சலி செலுத்த வந்தக் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2.30 மணிவரையிலும்தான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு அவரது இறுதிச் சடங்கிற்கான வேலைகள் நடந்தன.

மாலை 4 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலம் கிளம்பியது. முன்னும், பின்னும் நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் படை சூழ விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கே தமிழக அரசு அறிவித்திருந்தபடி போலீஸார் 78 முறை துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்க வைத்து நடிகர் விவேக்கிற்கு தங்களது மரியாதையை செலுத்தினார்கள்.

அதன் பிறகு விவேக்கின் இளைய மகள் அஸ்வினி அவருக்கு இறுதிக் காரியங்களைச் செய்ய..  6 மணியளவில் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

The post நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகர் விவேக் காலமானார் https://touringtalkies.co/actor-vivek-dead-news/ Sat, 17 Apr 2021 03:34:10 +0000 https://touringtalkies.co/?p=14414 தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59. நேற்றைக்கு கடும் மாரடைப்பு காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. விவேக் 1987-ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக […]

The post பிரபல நடிகர் விவேக் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59.

நேற்றைக்கு கடும் மாரடைப்பு காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

விவேக் 1987-ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார்.

அவரது நடிப்பில் பூமகள் ஊர்வலம்’, ‘வாலி’ உள்ளிட்ட சில படங்கள் அவரது நகைச்சுவையினாலேயே பெரும் கவன ஈர்ப்பை பெற்றன. விவேக் பகுத்தறிவு பேசிய ‘திருநெல்வேலி’ படம்தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘லவ்லி’, ‘மின்னலே’, ‘யூனிவர்சிட்டி’, ‘ரன்’, ‘அழகி’, ‘தூள்’, ‘படிக்காதவன்’, ‘விஐபி’ என புகழ் பெற்ற பல திரைப்படங்களின் வாயிலாக எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தார் விவேக்.

தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது மற்றும் ‘கலைமாமணி’ ‘சின்னக் கலைவாணர்’, ‘ஜனங்களின் கலைஞன்’ உட்பட பட்டங்கள் பல பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அவருடைய இறப்புக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மரக் கன்றுகளை நடுவதை ஒரு இயக்கமாகவே நடத்திக் காட்டியவர். இன்றுவரையிலும் பல கோடி மரக் கன்றுகளை நடுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களும், பொதுமக்களும் அவரது வீட்டில் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The post பிரபல நடிகர் விவேக் காலமானார் appeared first on Touring Talkies.

]]>