Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Jul 2022 16:01:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! https://touringtalkies.co/tfpc-44th-annual-day-function-news/ Tue, 19 Jul 2022 15:59:17 +0000 https://touringtalkies.co/?p=23312 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது வருட துவக்க விழா நேற்று அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராம.நாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, […]

The post “சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது வருட துவக்க விழா நேற்று அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராம.நாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ஏ.எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, விஷால் கிருஷ்ணா ஆகியோருக்கு நினைவு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி பேசும்போது, “பாரம்பரியம் மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பினை ஏற்று சிறப்பித்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

திரையுலகினரின் நலனுக்காக சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினையும் நிலுவையில் உள்ள தமிழக அரசின் திரைப்பட விருதுகள்  வழங்கிட தங்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், “தயாரிப்பாளர்களில் நலிந்த தயாரிப்பாளர்கள் என்று கூறுவது மனதிற்கு சங்கடமாக உள்ளது. நானும் சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்தான். எனக்கும் அவர்கள் படும் சிரமங்கள் அனைத்தும் தெரியும்.

படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உதவி தொகை கேட்டு பெறுவது என்னை வருத்தமடைய செய்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, சம்பளமும் கொடுத்தவர்கள். கொடுக்கும் இடத்தில் இருந்தவர்கள். இருப்பவர்கள். ஆகவே அவர்களின் அந்த பரிதாப நிலை மாற வேண்டும்.

சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு உதவிட வேண்டும். அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தையே இனி இல்லாமல் அவர்களை பாதுகாத்திட அரசு உதவிட வேண்டும்..” என்றர்.

விழாவின் இறுதியாக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது, “இந்தத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நமது மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்ட அதே தேதியில்தான் இந்த தயாரிப்பாளர்கள் சங்கமும் துவங்கியுள்ளது என்பது ஒரு சிறப்பான ஒற்றுமையாக உள்ளது.

தமிழ்த் திரையுலகம் நசிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கொரோன தொற்று, மேலும் அழுத்தி இந்த தொழிலை நசுக்கியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

நான் ஒரு விவசாய குடும்பத்தினை சார்ந்தவன். ஒரு விதத்திலே விவசாயமும்  இந்த திரைத்துறையும் ஒத்துப் போகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் தற்போது ஒரே மாதிரிதான் உள்ளது.

உழைத்த விவசாயிகள் செலவு பத்தணா; வரவு எட்டணா’ என்று சொல்வார்கள். அதே போன்ற சூழ்நிலைதான் இங்கேயும் இருக்கிறது என்பதை இந்த மேடையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேசும்போது தெரிந்து கொண்டேன்.

நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை முதல்வரிடம் நான் எடுத்து செல்வதற்கு முன்னாலேயே அவருக்கு போய் சேர்ந்துவிடும். இங்குள்ள நிலைமைகள் அவருக்கும் தெரியும்.

இங்கு சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு சரி செய்யபடும்.

ராஜாஜி ஹால், மியூஸியம்,  வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான துறை ரீதியான அனுமதியை பெற்று தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இப்பொழுதுகூட சென்னை அடையாறில் இருக்கும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியை உலகத் தரத்தில் மேம்படுத்த அதன் திட்டப் பணிகளுக்காக முதல்வர் ரூபாய் பத்து லட்சத்தை ஒதுக்கித் தந்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தர நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்..” என்றார்.

இந்த விழாவில் பிலிம் சேம்பர் சார்பில் காட்ர கட்ட பிரசாத், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சி.கல்யாண், டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி’ ஜி.சேகரன், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஏ. எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், டி.ஜி.தியாகராஜன், கேயார், எஸ்.தாணு, ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

The post “சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் ஒன்றுதான்” – அமைச்சர் சாமிநாதன் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை https://touringtalkies.co/fefsi-tfpc-employees-wages-jointly-statement/ Fri, 11 Mar 2022 11:51:05 +0000 https://touringtalkies.co/?p=21165 பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதன்படி பெப்சியில் இணைந்துள்ள 23 சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய ஒப்பந்தம் 2025-ம் வருடம் மார்ச் 9-ம் தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும். இந்த ஊதிய விகிதங்கள் பற்றி பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது.

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை appeared first on Touring Talkies.

]]>
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இதன்படி பெப்சியில் இணைந்துள்ள 23 சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய ஒப்பந்தம் 2025-ம் வருடம் மார்ச் 9-ம் தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும்.

இந்த ஊதிய விகிதங்கள் பற்றி பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது.

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது https://touringtalkies.co/tamil-producers-unions-formed-joined-committee/ Tue, 21 Sep 2021 16:49:23 +0000 https://touringtalkies.co/?p=18182 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக இரண்டு தயாரிப்பாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்த கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கினார்கள். இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  எந்தச் சங்கத்தில் சென்சாருக்கு அனுப்ப வேண்டிய அங்கீகாரக் கடிதம் பெறுவது முதற்கொண்டு சங்க உறுப்பினருக்கு பிரச்சினை என்றால் எந்தச் சங்கம் முன்னின்று பேச்சுவார்த்தை […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக இரண்டு தயாரிப்பாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்த கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கினார்கள்.

இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  எந்தச் சங்கத்தில் சென்சாருக்கு அனுப்ப வேண்டிய அங்கீகாரக் கடிதம் பெறுவது முதற்கொண்டு சங்க உறுப்பினருக்கு பிரச்சினை என்றால் எந்தச் சங்கம் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுவரையிலும் பிரச்சினைகள் வெடித்தன.

இதனால் இதனை சரி செய்யும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைக் கருதி, ஒருங்கிணைந்த கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி செப்டம்பர் 17 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிவாகிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ’ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக் குழு(Joint Producers Committee or JPC)’ அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் முதல் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டிற்கு உதவுவது என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

விளம்பர செலவுகளை குறைப்பது குறித்தும், விபிஎஃப் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கைய முடிவுகள் எடுக்கப்படும்.
ஃபெப்சியுடன் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒப்பந்தங்கள் செய்யப்படும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் இரு முறை இந்தக் குழுவினர் சந்தித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை இணைந்து முடிவெடுத்து செயல்படுத்த உறுதி செய்யப்பட்டது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளான முரளி ராமநாராயணன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.லலீத்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! https://touringtalkies.co/simbu-michael-royappan-issue-solved-in-tfpc/ Thu, 26 Aug 2021 06:27:40 +0000 https://touringtalkies.co/?p=17335 நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரி பல வருடங்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பிற்கு பிரச்சினை எழுந்தது. பெப்சி […]

The post சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரி பல வருடங்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பிற்கு பிரச்சினை எழுந்தது. பெப்சி முதலில் அனுமதி மறுத்துவிட்டு பின்பு அனுமதி கொடுக்க.. பெப்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் பெரும் பிரச்சினை எழுந்தது.

இதற்கடுத்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை வந்தவர் “இது கோர்ட்டில் உள்ள விஷயம். இதனால் இதில் எந்தப் பேச்சுவார்த்தையையும் யாரும் நடத்தக் கூடாது. இது குறித்து நாங்கள் கோர்ட்டில் புகார் செய்வோம்..” என்று தயாரிப்பாளர் சங்கத்தினரை எச்சரித்துவிட்டு சென்றார்.

ஆனாலும் இதில் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று தயாரிப்பாளர்சங்கம் உறுதியுடன் இருந்தது. பெப்சி அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கு ஆட்களை அனுப்பினால் அடுத்தடுத்து வேறு தொழிலாளர்களை வைத்துக் கொண்டும், சம்பளத்தைக் குறைத்தும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் நெருக்கடி முற்றியது. அவரும் அந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால் சங்கத்தின் முடிவை நீங்கள் ஏற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிம்பு மைக்கேல் ராயப்பனுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகைக்கு நானே பொறுப்பு. அந்தத் தொகையை நான் தருகிறேன் என்று கடிதம் மூலமாக ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் சமர்ப்பித்திருக்கிறார்.

இதையடுத்து சிம்பு படத்துக்கு எதிரான மறைமுகத் தடையை தயாரிப்பாளர் சங்கம் விலக்கிக் கொண்டுவிட்டதாம்.

நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினையை இரு தரப்பினரும் அங்கேயே பார்த்துக் கொள்ளட்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒதுங்கிவிட்டனர்.

சிம்பு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ‘பத்து தல’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

The post சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! appeared first on Touring Talkies.

]]>
“தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவை முடக்கப் பார்க்கிறார்கள்” – உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு https://touringtalkies.co/producers-union-is-trying-to-shut-down-simbu-usha-rajender-accused/ Sun, 22 Aug 2021 06:57:57 +0000 https://touringtalkies.co/?p=17221 நடிகர் சிம்புவை நடிக்கவிடாமல் அவரைத் திரையுலகத்தில் முடக்கி வைக்கும்விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செயல்படுவதாக சிம்புவும் தாயாரும், தயாரிப்பாளரும், நடிகையுமான உஷா ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் தர வேண்டியிருப்பதால் அந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வராமல் சிம்பு நடிக்கும் எந்தப் படத்தையும் துவக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் மறைமுகமாகத் தடை சொல்லியிருக்கிறது. சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பிற்கும் முதலில் தடை விதித்தது […]

The post “தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவை முடக்கப் பார்க்கிறார்கள்” – உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவை நடிக்கவிடாமல் அவரைத் திரையுலகத்தில் முடக்கி வைக்கும்விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செயல்படுவதாக சிம்புவும் தாயாரும், தயாரிப்பாளரும், நடிகையுமான உஷா ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் தர வேண்டியிருப்பதால் அந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வராமல் சிம்பு நடிக்கும் எந்தப் படத்தையும் துவக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் மறைமுகமாகத் தடை சொல்லியிருக்கிறது.

சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பிற்கும் முதலில் தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால், பெப்சியின் உதவியுடன் அந்தப் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

அந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இந்தப் படப்பிடிப்புக்குத் தடை போடுவதற்காக தயாரிப்பாளர் சங்கம் மும்முரமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நேற்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு உஷா ராஜேந்தருக்கு அழைப்பு வந்தது. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த உஷா ராஜேந்தர் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “சிம்பு மீது புகார் கொடுத்திருந்த 4 தயாரிப்பாளர்களின் புகார்களில் 3 புகார்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இருப்பது ஒரேயொரு புகார்தான். அது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார். அதுவொரு பொய்யான புகார்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் ஏ டூ இஸட்வரையிலும் சிம்புதான் இருப்பார். முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் அவர் இருப்பார். அப்புறம் எப்படி அவர் அந்தப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார். எப்படி அவருக்குப் பதிலாக டூப் போட்டிருப்பார்கள்..? இது பொய்யான குற்றச்சாட்டு.

மைக்கேல் ராயப்பன் மீது 2019-ம் ஆண்டிலேயே சிம்பு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் அதே வழக்கிற்காக தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா.. இது சட்டப்படி தப்பில்லையா.. இதை நாங்கள் கோர்ட்டின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் இன்னும் நாட்களில் துவங்கவுள்ளது. இப்போது செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படியாவது சிம்புவை நடிக்கவிடாமல் அவரை வீட்டிலேயே முடக்கி வைத்துவிடலாம் என்று இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தினர் நினைக்கிறார்கள். அது நடக்காது.. சிம்பு நிச்சயமாக எல்லாவற்றையும் தாண்டி ஜெயிப்பார்..” என்றார் உஷா ராஜேந்தர்.

The post “தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவை முடக்கப் பார்க்கிறார்கள்” – உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது https://touringtalkies.co/tfpc-fefsi-agreement-cancelled-by-tfpc/ Sat, 07 Aug 2021 12:28:27 +0000 https://touringtalkies.co/?p=16855 பெப்சி அமைப்புடன் செய்து கொண்ட சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நடிகர் சிம்புவிடம் இருந்து  4 தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண விவகாரத்தில் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக செயல்படுவதால் அவர் பெப்சி அமைப்பன் தலைவராக இருக்கும்வரையிலும் அந்தச் சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள […]

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது appeared first on Touring Talkies.

]]>
பெப்சி அமைப்புடன் செய்து கொண்ட சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சிம்புவிடம் இருந்து  4 தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண விவகாரத்தில் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக செயல்படுவதால் அவர் பெப்சி அமைப்பன் தலைவராக இருக்கும்வரையிலும் அந்தச் சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :

“தமிழ்த் திரையுலகம் சுமூகமாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும், தமிழ்த் திரையுலத்தை காப்பாற்றும் வகையிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 06.08.2021-அன்று நடைபெற்று அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

1. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்) 06.08.2021-முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, பணி செய்பவர்களை தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.”

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது appeared first on Touring Talkies.

]]>
“திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன…” – தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு https://touringtalkies.co/theaters-are-evading-taxes-radhakrishnan-secretary-of-the-producers-association-accused/ Mon, 02 Aug 2021 11:53:23 +0000 https://touringtalkies.co/?p=16699 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள்தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1. திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு விற்பனை முழுக்க, முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையாக இருக்கவேண்டும். 2. இணையத்தில் நுழைவுச் சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும். 3. திரைப்படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும். […]

The post “திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன…” – தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக திரையரங்குகள்தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு விற்பனை முழுக்க, முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையாக இருக்கவேண்டும்.

2. இணையத்தில் நுழைவுச் சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்.

3. திரைப்படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்.

4. க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக் கருவிக்கான தவணைக் கட்டணத்தை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்.

5. திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் எனப்படும் மறைமுகக் கூட்டணி வைக்கக் கூடாது.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளரான ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினோம்.

அப்போது அவர், “இந்தத் தீர்மானங்களெல்லாம் முன்பே கொண்டு வரப்பட்டவைதான். விஷால் தலைமையிலான சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தபோது இவை பேசப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் முன் வைக்கப்பட்டு திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டவைதான் இவை.”

அதன் பின் என்ன நடந்தது..?

“அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜு,கே.சி.வீரமணி ஆகிய அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விசயங்கள் பேசப்பட்டன. ஆனால், அவை நடைமுறைக்கு வரவேயில்லை. அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை.

இப்போதைய முதலமைச்சர் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையோடு நடக்கிறார். அதேபோல இந்தத் துறையிலும் எல்லா இடங்களிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளிப்படைத் தன்மை இருக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.”

ஒரு துறையில் ஏற்படும் சிக்கலை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

“திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச் சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் நானூறு கோடியிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் கோடிவரையிலும் அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருவாய் சரியான முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்தால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மனியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும். எனவே எங்கள் கோரிக்கையை திரையரங்குக்காரர்கள் ஏற்கவில்லையென்றால் அரசாங்கத்திடம் முறையிடவுள்ளோம்.”

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என திருப்பூர் சுப்பிரமணியம் கூறி வருகிறாரே..?

“அவர் நீண்ட காலமாக அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் திரையரங்குகள் கணினி மயமாக்கப்பட்டு முன் பதிவு மூலம் சேவைக் கட்டணம் என்கிற பெயரில் ஒரு நுழைவுச் சீட்டுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.”

படம் தயாரிக்காதவர்கள் சங்க நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பதால் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளாரே…?

“தவறான கருத்து. படம் தயாரித்தவர்கள்தான் சங்க நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடவும், தேர்தலில் வாக்களிக்கவும் முடியும். எங்கள் சங்கத் தலைவர், செயலாளர் உட்பட பெரும்பாலோனோர் இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். நான் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் நடத்த இடம் பார்த்து வைத்திருக்கிறோம். படப்பிடிப்பு அனுமதி கிடைத்தவுடன் தொடங்குவோம்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் திருப்பூர் சுப்பிரமணியம் தொடர்ந்து அவதூறு கருத்துகளைக் கூறி வருகின்றார். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் பாரம்பரியம் மிக்க சங்கத்தை முடக்கிவிட்டு அதிமுக அமைச்சர்கள் ஆதரவுடன் தனி சங்கம் தொடங்கி தலைவரானவர் திருப்பூர் சுப்பிரமணியம். இதுவரை அந்தச் சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடைபெற்றதில்லை. நியமன தலைவர் முறைப்படி நடைபெற்ற தேர்தல் மூலம் வெற்றி பெற்ற எங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இல்லாதவர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்றாகப் பிரிந்திருப்பதால் மற்ற சங்கங்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டால் என்ன செய்வீர்கள்..?

நாங்கள் எல்லாத் தயாரிப்பாளர்களுக்காகவும்தான் பேசுகிறோம். சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுகிறவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னீர்களே…?

“நாங்கள் ஒன்றாகிவிடக் கூடாது என்பதற்காக சில தீய சக்திகள் வேலை பார்க்கின்றன. அவற்றைத் தாண்டி நல்லது நடக்கும்.”

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியனவற்றுக்கு தணிக்கைச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் அங்கீகாரத்தை அரசாங்கமே வழங்கியுள்ளதே. இனிமேல் உங்களுடன் இணைய வேண்டிய தேவை என்ன…?

“ஏழு பேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்தால் அதற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துவிடும், இது ஒரு படத்தைத் தயாரித்த பின் தணிக்கைக்குப் போகும் நேரத்தில் செய்ய வேண்டிய விசயம் இது. ஆனால் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பல விசயங்கள் தேவை.”

தொழிலாளர்கள் சங்கமும் அந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே…?

“திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை எங்கள் சங்கம்தான் செய்து வருகிறது. வருங்காலத்திலும் அதுவே தொடரும்…” என்றார்.

The post “திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன…” – தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு appeared first on Touring Talkies.

]]>
தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது https://touringtalkies.co/the-producers-association-has-imposed-conditions-on-the-release-of-films-in-theaters/ Fri, 02 Jul 2021 04:58:17 +0000 https://touringtalkies.co/?p=15924 கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு […]

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன.

வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக் குழு கூட்டம் அந்தச் சங்கத்தின் தலைவரான ராமசாமியின் தலைமையில் நேற்று நடை பெற்றது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினி மயமாக்க வேண்டும். அதன் வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தியேட்டரில் திரையிடப்படும் படங்களின் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. இதனால் தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும்.

தியேட்டர்களில் படங்களுக்கு இடையே வெளியாகும் விளம்பரங்களிலும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பங்கு வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர்களின் பெயரிலேயே இனிமேல் வரி கட்ட வேண்டும். தனி நபர்களின் பெயர்களில் வரியைக் கட்டக் கூடாது.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க,  சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.

சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, மூன்று வகையாக டிக்கெட்டுகளை விற்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் படங்களை வெளியிடும்போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம்.

இது குறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன்பே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு இதற்குத் தீர்வு காண வழி செய்யப்படும்.

இந்தத் தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆக தியேட்டர்களைத் திறக்கலாம் என்று அரசு அனுமதியளித்தாலும் புதிய படங்கள் திரைக்கு வருவது இந்தப் பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்தால்தான் தெரியும்.

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் https://touringtalkies.co/tamil-film-producers-association-asks-members-for-details-of-unreleased-films/ Fri, 25 Jun 2021 13:19:16 +0000 https://touringtalkies.co/?p=15778 கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுள்ளது. இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் இது : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனையும் செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை […]

The post உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுள்ளது.

இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் இது :

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனையும் செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்கள் ஆகியவற்றின் விபரங்ககளை தர வேண்டும்.

ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தால் அதன் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரங்களையும் எந்த லேப்-பில் படம் உள்ளது என்ற முழு விவரம், சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அந்தப் பிரச்சினை குறித்த முழு விவரங்கள் அனைத்தையும் தங்களது லெட்டர் பேடில் கடிதமாக எழுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வருகிற 28-ம் தேதிக்குள் தெரிவிக்க  வேண்டும்..” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களுக்காகவே உருவாக்க இருக்கும் ஓடிடி தளத்திற்காக இந்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

The post உறுப்பினர்களிடம் வெளியாகாத படங்களின் விபரங்களைக் கேட்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.

]]>
தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை https://touringtalkies.co/tfpc-gives10-laksh-donation-to-tamilnadu-chief-minister-relief-fund/ Wed, 09 Jun 2021 09:32:20 +0000 https://touringtalkies.co/?p=15445 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், ரோட்டரி கிளப்பும் இணைந்து தடுப்பூசி போடும் முகாமை இன்று காலை பிலிம் சேம்பர் வளாகத்தில் நடத்தின. இந்தத் தடுப்பூசி முகாமை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் […]

The post தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், ரோட்டரி கிளப்பும் இணைந்து தடுப்பூசி போடும் முகாமை இன்று காலை பிலிம் சேம்பர் வளாகத்தில் நடத்தின.

இந்தத் தடுப்பூசி முகாமை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பத்து லட்சம் ரூபாய் நன்கொடையையும் வழங்கினார்கள்.

The post தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை appeared first on Touring Talkies.

]]>