Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
டி.ராஜேந்தர் – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Oct 2021 17:55:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png டி.ராஜேந்தர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! https://touringtalkies.co/i-will-fast-in-front-of-stalins-house-t-rajender-warns/ Wed, 20 Oct 2021 17:53:00 +0000 https://touringtalkies.co/?p=18932 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார். சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு. இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு […]

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து ‘அன்பானவன், அசராவதவன், அடங்காதவன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிம்பு அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிம்புவின் மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
“தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை https://touringtalkies.co/re-election-to-the-producers-association-should-be-held-t-rajenders-request/ Wed, 21 Apr 2021 06:54:55 +0000 https://touringtalkies.co/?p=14544 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த அணியின் சார்பாக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணனும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயினும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கதிரேசனும் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என்று எதிரணியினர் பலரும் புகார் தெரிவித்தனர். ஏனெனில் இந்தச் சங்கத்தின் விதிமுறைப்படி சங்க நிர்வாகத்திற்குப் போட்டியிடுபவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் […]

The post “தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த அணியின் சார்பாக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணனும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயினும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கதிரேசனும் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என்று எதிரணியினர் பலரும் புகார் தெரிவித்தனர்.

ஏனெனில் இந்தச் சங்கத்தின் விதிமுறைப்படி சங்க நிர்வாகத்திற்குப் போட்டியிடுபவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதாவது ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவர்கள் மூவருமே கடந்த ஐந்தாண்டுகளுக்காக எந்தவொரு படத்தையும், தயாரித்து வெளியிடவில்லை என்று எதிரணியினர் புகார் அளித்தனர். ஆனால், இந்த மூன்று தயாரிப்பாளர்களும் ஏதோ ஒரு படத்தை வெளியிட்டதாக போஸ்டர்களை காண்பித்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் ஒரு திரைப்படத்தை பாண்டிச்சேரியில் ஒரேயொரு ஷோ மட்டும் ஓடியதாகக் கணக்குக் காட்டியிருந்தார்.

மேலும் இவர்கள் மூவருமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளுக்குப் பின்பே தங்களது படங்களை தியேட்டர்களில் வெளியிட்டதாக எதிரணியினர் ஆதாரம் காட்டியிருந்தார்கள். அதனால் இவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்தார்.

ஆனால், தேர்தல் அலுவலர் இந்தப் புகார்களை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களது வேட்பு மனுக்களை அனுமதித்தார். அதோடு தேர்தலும் நடந்து, அவர்கள் மூவருமே வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மூவரும் சங்கத்தில் அந்தந்தப் பதவிகளில் தொடர்வதற்கு தடை விதித்தது.

இதையடுத்து இன்று காலை இந்தச் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது “தற்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், துணைத் தலைவர் கதிரேசன் மூவருக்கும் அந்தப் பதவியில் தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இவர்கள் தேர்தலில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள் என்று நாங்கள் வேட்பு மனு பரிசீலனையின்போதே எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், எங்களது எதிர்ப்பையும் மீறி தேர்தல் அலுவலர் அவர்களது வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டார். இதுவே முதல் தவறு. அன்றைக்கே இவர்களது வேட்பு மனுவை தள்ளுபடி செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயலாளரும் இல்லை. பொருளாளரும் இல்லை. துணைத் தலைவர்களில் ஒருவரான கதிரேசனும் பொறுப்பில் இல்லை. இதனால் சம்பந்தப்பட்ட மூன்று தயாரிப்பாளர்களும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், அந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் முழுப் பட்டியலும் தரப்படவில்லை. வாக்களித்தவர்களை சரி பார்க்க சிசிடிவி புட்டேஜ் கேட்டும் கொடுக்கவில்லை. எனவே இந்த அணி இனிமேல் பதவியில் நீடிக்கவே கூடாது.

உடனடியாக அவர்கள் ராஜினாமா செய்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்…” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

The post “தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்.. என்ன காரணம்..? https://touringtalkies.co/what-is-the-reason-of-t-rajendar-resign-from-tmms/ Thu, 24 Dec 2020 06:29:13 +0000 https://touringtalkies.co/?p=11414 நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் சமீபத்தில் தான் உருவாக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் தலைவர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான், பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், […]

The post தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்.. என்ன காரணம்..? appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் சமீபத்தில் தான் உருவாக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் தலைவர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான், பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.

எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும், கோரிக்கையும் தெரிவித்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்…” என்று அறிவித்திருக்கிறார்.

இதேபோல் இந்தத் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் செயலாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக திரு. டி.ராஜேந்தர் அவர்கள் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார்.

மேலும், அந்தச் சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழிலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று தெரிவித்திருக்கிறார்.

டி.ராஜேந்தர் திடீரென்று எடுத்த இந்த முடிவு பற்றி தமிழ்த் திரையுலகத்தில் இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் நின்றபோதே பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

“விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டத் திட்டத்தின்படி அந்தச் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் வேறு சினிமா சங்கங்களின் பொறுப்பில் இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் எப்படி இந்தச் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “எங்களது சங்கத்தின் செயற்குழுவில் இது குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றி.. அந்தத் தீர்மானத்தை பொதுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மிக விரைவில் பொதுக் குழுவைக் கூட்டி அந்தச் சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெறுவோம்..” என்று டி.ராஜேந்தர் கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்ததை அடுத்து அவசரம், அவசரமாக ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தைத் தோற்றுவித்து அதற்குத், தானே தலைவராகவும் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருக்கும் முக்கியமான விநியோகஸ்தர்கள் அனைவரும் தனியாகச் சென்று வேறொரு புதிய சங்கத்தைத் தோற்றுவித்துவிட்டார்கள். இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஒற்றுமையாக இருந்த சங்கத்தில் டி.ராஜேந்தர் குழப்பத்தை ஏற்படுத்தி முக்கியமான விநியோகஸ்தர்களை வெளியேற்றி, புதிய சங்கத்தை உருவாக்க வைத்துவிட்டதாக நடுநிலையான விநியோகஸ்தர்கள்கூட டி.ராஜேந்தர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக் குழு வரும் டிசம்பர் 27-ம் தேதியன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் பொதுக் குழுவில் டி.ராஜேந்தர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பல உறுப்பினர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தின் பொதுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் டி.ராஜேந்தர் வேறு சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது சட்ட விதிகளின்படி தவறு என்பதால் டி.ராஜேந்தரின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தில் போர்க் குரல்கள் ஒலித்து வருகின்றன.

சங்கத்தின் பொதுக் குழுவில் தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும்விதமாகத்தான் இன்றைக்கு அவசரம், அவசரமாக டி.ராஜேந்தர் ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தில் இருந்து விலகியிருப்பதாக விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

“நான் இப்போது நமது சங்கத்தைத் தவிர வேறு சங்கத்தில் பொறுப்பில் இல்லை’
என்று டி.ராஜேந்தர் பொதுக் குழுவிற்கு வந்து சொன்னாலும், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவது உறுதி..” என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள்.

என்ன நடக்கப் போகிறதோ.. 27-ம் தேதிவரையிலும் காத்திருப்போம்…!

The post தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்.. என்ன காரணம்..? appeared first on Touring Talkies.

]]>
“VPF கட்டணம் கட்ட முடியாது” – டி.ராஜேந்தரின் சங்கமும் போர்க்கொடி தூக்கியது..! https://touringtalkies.co/tmms-union-meeting-news/ Mon, 07 Dec 2020 09:39:12 +0000 https://touringtalkies.co/?p=10788 இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன : 1.தமிழ் நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்… மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர்  நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு  வர வேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள்  உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்… எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் […]

The post “VPF கட்டணம் கட்ட முடியாது” – டி.ராஜேந்தரின் சங்கமும் போர்க்கொடி தூக்கியது..! appeared first on Touring Talkies.

]]>
இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன :

1.தமிழ் நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்…

மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர்  நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு  வர வேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள்  உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்…

எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் மற்றும் சர்வீஸ் புரோவைடர்  நிறுவனங்களுடன்   சுமூக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பலவிதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத   காரணத்தாலும்… 

வேறு சில காரணங்களைச் சொல்லி காலம் தாழ்த்திக் கொண்டே இருந்ததாலும்…

“க்யூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது” என்று அவர்கள் தெரிவித்த காரணத்தாலும்… 

இன்று கூட்டப்பட்ட எங்களது தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் எங்களால்(தயாரிப்பாளர்களால்)  இனிமேல் விபிஎஃப் கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

2. படத்தை திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணமாக ஒரு திரையரங்கிற்கு ரூ.1,500 தவிர எங்களால் எந்தவிதத்திலும்  விபிஎஃப் மற்றும் எந்த கட்டணமும்  செலுத்த இயலாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். 

3. வட இந்திய  கம்பெனிகளுக்கு விபிஎஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலேயே படத்தை திரையிட வழி வகையினை செய்யும்போது எங்களுடைய தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களை பழி வாங்குவது எந்த அடிப்படையில் நியாயம்..? எங்களிடம் மட்டும்  விபிஎஃப் கட்டணத்தை வசூலிப்பது நியாயமான காரியமாக தெரியவில்லை எனவும் தெரிவித்து கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலை தராவிட்டால்  தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்பதை இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் செயலாளர் J.S.K.சதிஷ் குமார், பொருளாளர் – K.ராஜன், துணை தலைவர் – P.T. செல்வ குமார், துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன், இணை செயலாளர் – K.G. பாண்டியன், இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ், இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனர் உஷா ராஜேந்தர், இசக்கி ராஜா, பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post “VPF கட்டணம் கட்ட முடியாது” – டி.ராஜேந்தரின் சங்கமும் போர்க்கொடி தூக்கியது..! appeared first on Touring Talkies.

]]>
உதயமானது டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர்கள் சங்கம்..! https://touringtalkies.co/t-rajendar-starts-a-new-producers-association/ Sat, 05 Dec 2020 08:55:56 +0000 https://touringtalkies.co/?p=10719 பிரபல இயக்குர், நடிகர், தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் தலைமையில் புதிதாக உருவாகியிருக்கும் ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் அறிமுக விழா இன்று காலை டி.ராஜேந்தரின் வீட்டில் நடைபெற்றது இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் – டி.ராஜேந்தர் செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ் செயலாளர் – J.S.K. சதிஷ் குமார் பொருளாளர் – K.ராஜன் துணை தலைவர் – P.T. […]

The post உதயமானது டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர்கள் சங்கம்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இயக்குர், நடிகர், தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் தலைமையில் புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க’த்தின் அறிமுக விழா இன்று காலை டி.ராஜேந்தரின் வீட்டில் நடைபெற்றது

இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் – டி.ராஜேந்தர்

செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்

செயலாளர் – J.S.K. சதிஷ் குமார்

பொருளாளர் – K.ராஜன்

துணை தலைவர் – P.T. செல்வ குமார்

துணை தலைவர் – R.சிங்கார வடிவேலன்

இணை செயலாளர் – K.G. பாண்டியன்

இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்

இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்

சங்கத்தின் நோக்கங்களாக..

1. புதிய, சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்குவோம்.

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழிமுறைகளைக் காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்ட முயற்சிகளை மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின்போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

என்று அறிவித்துள்ளனர்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ளர்.

The post உதயமானது டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர்கள் சங்கம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! https://touringtalkies.co/tfpc-election-2020-polling-closed/ Sun, 22 Nov 2020 12:32:38 +0000 https://touringtalkies.co/?p=10301 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது. அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது.

அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல மாதங்கள் தள்ளிப் போன தேர்தல் ஒரு வழியாக இன்றைக்குத்தான் நடந்து முடிந்திருக்கிறது.

அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலையில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக ஓட்டுப் பெட்டிகளை சீல் வைப்பது தொடர்பாக சுயேட்சை உறுப்பினர்களின் சில கருத்துக்களைச் சொல்ல.. அதை மற்றவர்கள் எதிர்க்க சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கியது.

அதன் பின்பு காலை 9 மணியளவில் வாக்குப் பதிவு அரங்கத்தின் வெளியிலேயே ஓட்டளிக்க வரும் அங்கத்தினர்களுக்கு கையில் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகச் சொல்லி செளந்தர், பிரவீண் காந்த், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆதாரத்துடன் குரல் எழுப்பினார்கள்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. பின்பு அவர்கள் அனைவரும் தேர்தல் அதிகாரியான நீதிபதியிடம் புகார் செய்தனர். ஆனாலும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை.

வாக்களிக்கத் தகுதியுள்ள மொத்த உறுப்பினர்களான 1304 பேரில் 1050 பேர் மட்டுமே தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு அதே கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.  நாளை இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..! https://touringtalkies.co/nalini-manvasanai-trajendar-chithra-lakshmanan-story/ Mon, 16 Nov 2020 07:58:45 +0000 https://touringtalkies.co/?p=10079 தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுணன் தனது ‘காயத்ரி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘மண் வாசனை’. இத்திரைப்படத்தில்தான் நடிகை ரேவதி நாயகியாக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானார். “இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நளினி நடித்திருக்க வேண்டிய சூழலை இயக்குநர் டி.ராஜேந்தர் தடுத்துவிட்டார்…” என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இது குறித்து தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தில் இருந்து வெளிவரும் ‘எனக்குள் ஒருவன்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார். அவர் பேசும்போது, “1983-ம் ஆண்டில் […]

The post ‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுணன் தனது ‘காயத்ரி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘மண் வாசனை’.

இத்திரைப்படத்தில்தான் நடிகை ரேவதி நாயகியாக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

“இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நளினி நடித்திருக்க வேண்டிய சூழலை இயக்குநர் டி.ராஜேந்தர் தடுத்துவிட்டார்…” என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

இது குறித்து தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தில் இருந்து வெளிவரும் ‘எனக்குள் ஒருவன்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “1983-ம் ஆண்டில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் எனது தயாரிப்பில் உருவான முதல் படமான ‘மண் வாசனை’ படத்தில் நடிப்பதற்காக நாயகியைத் தேடி நான் அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. அத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த நளினிக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் அனுராதா என்னும் பின்னணி கலைஞர்.

அவரிடம் ஒரு நாள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது புது நாயகியைத் தேடி நான் அலைவதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர், “நான் இப்போது ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்திற்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறேன். இதில் நளினி என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். நல்லா நடிச்சிருக்கார். நீங்க போய் பாருங்க.. உங்களுக்குப் பிடிக்கும்..” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டபோதே நமக்கு ஒரு நாயகி கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்திற்கே போய்விட்டேன். மறுநாளே அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏ.பி.நாகராஜனின் டப்பிங் தியேட்டருக்கு  நளினியின் நடிப்பைப் பார்ப்பதற்காக சென்றேன்.

ஆனால், அங்கே இருந்த படத்தின் இயக்குநரான டி.ராஜேந்தர் என்னை உள்ளே அனுமதிக்கவே இல்லை. தான் அறிமுகப்படுத்தும் நாயகியை வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார்.

டி.ராஜேந்தரின் பிடிவாதத்தால் என்னால் அப்போது நளினியை பார்க்க முடியவில்லை. ‘உயிருள்ளவரை உஷா’ படம் வெளியான பின்புதான் பார்த்தேன். முன்பேயே நளினியின் நடிப்பைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், ஒருவேளை அவரே ‘மண் வாசனை’யில் நடித்திருப்பார். இந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்தது இயக்குநர் டி.ராஜேந்தர்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post ‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>