Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஜெய் பீம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 10 Oct 2022 09:04:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஜெய் பீம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் https://touringtalkies.co/soorarai-potru-movie-bags-6-awards-in-filmfare-awards/ Mon, 10 Oct 2022 09:04:12 +0000 https://touringtalkies.co/?p=25094 நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும், சூர்யா தயாரித்து […]

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது.

இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம்’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த லிஜோ மோல் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினை த.செ.ஞானவேலும் பெற்றனர்.

அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை’ படமும் மூன்று விருதுகளை வென்றது. இந்தப் படத்தில்  ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘நீயே ஒலி’ என்ற பாடல் வரிகளை எழுதிய தெருக்குரல் அறிவு’க்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மீது மோசடி வழக்கு https://touringtalkies.co/fraud-case-against-jay-bheem-film-director/ Thu, 25 Aug 2022 07:11:32 +0000 https://touringtalkies.co/?p=24005 நடிகர் சூர்யா தயாரித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை பயன்படுத்த அவருக்கு பணம் தருவதாக கூறி தராமல் மோசடி செய்ததாக இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் போட்டிவரை சென்று திரும்பிய […]

The post ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மீது மோசடி வழக்கு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா தயாரித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை பயன்படுத்த அவருக்கு பணம் தருவதாக கூறி தராமல் மோசடி செய்ததாக இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

ஆஸ்கர் போட்டிவரை சென்று திரும்பிய ‘ஜெய் பீம்’ படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அதே சமயம் படத்திற்கு எதிர்ப்புகளும் தொடர்கிறது.

இந்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டமிட்டே இயக்குநர் ஞானவேல் இழிவுப்படுத்தியதாக அவர் மீதும் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஏற்கனவே ‘ஜெய் பீம்’ தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிதாக ஒரு வழக்கு இயக்குநர் ஞானவேல் மீது பாய்ந்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தின் கதையில் இடம் பெற்ற ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர், இயக்குநர் ஞானவேல் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தன்னுடைய கதாபாத்திரத்தை படத்தில் பயன்படுத்துவதற்காக தன்னிடம் ஞானவேல் அனுமதி பெற்றதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, சாஸ்திரி நகர் போலீசார், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலமாக மீண்டும் ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு தயாரிப்பாளர் சூர்யா ஏற்கெனவே நிவாரணம் வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மீது மோசடி வழக்கு appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை https://touringtalkies.co/chennai-high-court-order-to-police-about-jai-bhim-movie-case/ Mon, 18 Jul 2022 09:35:23 +0000 https://touringtalkies.co/?p=23291 ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பான வழக்கில், சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சிலர் காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தனர். இதையொட்டி நடிகர் சூர்யா, மற்றும் இயக்குநர் ஞானவேலு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கினை எதிர்த்து […]

The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை appeared first on Touring Talkies.

]]>
ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பான வழக்கில், சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சிலர் காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தனர். இதையொட்டி நடிகர் சூர்யா, மற்றும் இயக்குநர் ஞானவேலு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கினை எதிர்த்து நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலுவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கூறியதோடு வழக்கை ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் https://touringtalkies.co/jai-bhim-movie-telecast-in-oscar-awards-committees-youtube-channel/ Tue, 18 Jan 2022 09:40:48 +0000 https://touringtalkies.co/?p=20296 சினிமாவிற்கான மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் அமைப்பின் யூ டியூப் சேனலில் தமிழ் படமான ‘ஜெய் பீம்’ படத்தின் சில காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த சினிமா விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். […]

The post ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சினிமாவிற்கான மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் அமைப்பின் யூ டியூப் சேனலில் தமிழ் படமான ஜெய் பீம்’ படத்தின் சில காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த சினிமா விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும்.

அந்த ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் அமைப்பு, தனது சொந்த யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜாமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து ஓடிடியில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் பேசப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஆஸ்கர் அமைப்பு.

அந்த வீடியோவில் ஜெய் பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குர் அந்த படத்தைப் பற்றிப் பேசும் சில விஷயங்களையும் ஆஸ்கர் அமைப்பு பகிர்ந்துள்ளது.

“இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய கவுரவம்” என்று திரையுலகத்தினர் பலரும் சூர்யாவிற்கும், இயக்குநர் ஞானவேலுவிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

The post ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகர் பார்த்திபன் https://touringtalkies.co/actor-parthiban-celebrated-his-birthday-differently/ Fri, 19 Nov 2021 11:01:09 +0000 https://touringtalkies.co/?p=19467 எதையுமே புதுமையாகவும்,வித்தியாசமாகவும் செய்வதில் வல்லவரான  இயக்குநர் மற்றும் நடிகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், சமீபத்தில் தனது பிறந்த நாளையும் சற்று வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளன்று சினிமா பிரபலங்களுடன் ‘ஜெய் பீம்’ படத்தின் உண்மை நாயகனான நீதியரசர் சந்துருவை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி.. ஒரு விழாபோல் நடத்தியிருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு இது : “சமீபத்தில் என் பிறந்த நாள் வந்தது. பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. […]

The post தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகர் பார்த்திபன் appeared first on Touring Talkies.

]]>
எதையுமே புதுமையாகவும்,வித்தியாசமாகவும் செய்வதில் வல்லவரான  இயக்குநர் மற்றும் நடிகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், சமீபத்தில் தனது பிறந்த நாளையும் சற்று வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்.

தன்னுடைய பிறந்த நாளன்று சினிமா பிரபலங்களுடன் ஜெய் பீம்’ படத்தின் உண்மை நாயகனான நீதியரசர் சந்துருவை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி.. ஒரு விழாபோல் நடத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு இது :

“சமீபத்தில் என் பிறந்த நாள் வந்தது. பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. காரணம் என் தாயின் வயிற்றில் இருந்து உருவமாக நான் வெளியில் வந்த நாளைவிட, ஒரு கலைஞனாக பார்த்திபன்’ என்ற பெயரிட்டு என்னை இந்தத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் திரு.பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.

1989, 1990-களில் என் பிறந்த நாளின்போது, மிகப் பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்தித் தாள்களில், தினத் தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் அவர்கள் அப்போது என்னிடம், ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்படும். அதனால் இது வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன்  என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை.

நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அதுதான் உண்மை. ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின்புதான் தெரிகிறது. இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று, அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம். மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போதுகூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி, கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர் பிச்சை தந்தார்கள். அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை.

இவ்வருடம் அக்குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும்போது எனக்கு என்ன தோன்றியதென்றால் அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.

பிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்ட நாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய் பீம்’ படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார்.

இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது. பிரதிபலன் பாராமல்தான் அவர் இந்தக் காரியங்களெல்லாம் செய்திருக்கிறார்.

அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும்.எனது சில நிகழ்ச்சிகளில் அவர் தலைமை கண்டிருக்கிறார். ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக் கொள்வதை போல ஒரு சுயநல விசயாமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன்.

 நண்பர் ஓவியர் ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை  அவரிடம் கொடுத்து, அவரின் துணைவியாரையும் வரச் சொல்லி, திரு பாரதிராஜா, திரு பாக்யராஜ், பிரபு தேவா, விஜய் சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் இப்படி சிலருடன் அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது.

திரு சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பிரசேனாக இளைஞர்களுக்கு ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும். இந்த வாழ்கையில் பணத்தை மீறி, புகழை மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை. அகம் மகிழ்ந்து போகுமதில்… அப்படிப்பட்ட அக மகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள திரு சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமைய வேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக் கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி..” என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

The post தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகர் பார்த்திபன் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா https://touringtalkies.co/surya-donates-rs-15-lakh-to-jai-beam-original-heroine-parvathi/ Tue, 16 Nov 2021 17:30:20 +0000 https://touringtalkies.co/?p=19418 ‘ஜெய் பீம்’ படம் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார். சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேலின் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்.’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற […]

The post ‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஜெய் பீம்’ படம் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார்.

சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேலின் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்.’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1994-ம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் ராஜ்கண்ணுவை கொடூரமாக சித்ரவதை செய்து, கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் பெயரை குரு மூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலண்டர் படத்தில் இடம் பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸூம் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பா.ம.க. தொண்டர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அக்னி கலச காலாண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசுநாதர் காலாண்டரை மாட்டாமல், மகாலட்சுமி காலாண்டரை மாற்றியது பற்றி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டித்திருந்தார்.

இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்று பேசிய காணொலி சமூக ஊடங்களில் வைரலானது.

இதற்குப் பிறகு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி – நடிகர் சூர்யா சந்திப்பு இன்று மாலை சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பின்போது நடிகர் சூர்யாவின் சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலை ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியிடம் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவிந்திருந்ததற்கு மாறாக, கூடுதலாக 5 லட்சம் ரூபாயை தற்போது சூர்யா வழங்கியிருக்கிறார்.

The post ‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
“சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் https://touringtalkies.co/it-is-wrong-to-use-violence-against-surya-director-bharathiraja-condemns-anbumani-ramadoss/ Tue, 16 Nov 2021 17:09:52 +0000 https://touringtalkies.co/?p=19416 ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்புமணி ராமதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது : சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத் தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த […]

The post “சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்புமணி ராமதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது :

சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று பேசப்படும் ஏற்றத் தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு, உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.

திரைத் துறை என்பது எல்லாவற்றையும் பேசக் கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்கு தளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவேமுயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே “ஜெய்பீம்”. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பூதக் கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான்.

அன்று என்னுடைய வேதம் புதிது’ படத்தை முடக்க முயற்சித்தபோது புரட்சித் தலைவர் என்னுடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது..? அது போன்றதொரு படைப்புதான் “ஜெய் பீம்” படமும்.

இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் அவர் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்து கொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்… தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்… அவர் மீதான வன்மத்தையும்… வன்முறையை ஏவிவிடுவதும் மிகத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டு வர உதவும்.

சினிமாவைவிட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வர வேண்டாமே..!

நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்..?

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரி செய்து கொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். +

நன்றி..!

எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்

பாரதிராஜா,

தலைவர்,

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

The post “சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு https://touringtalkies.co/1-lakh-rupees-reward-for-attacking-actor-surya-paattaali-makkal-party-announcement/ Mon, 15 Nov 2021 18:04:43 +0000 https://touringtalkies.co/?p=19413 ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…” என்று மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு […]

The post “நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…” என்று மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம்’ திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுகுணாசிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் அந்தக் கட்சியினர் ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

நடிகர் சூரியா நடித்த ஜெய் பீம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே  வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும்விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத் தலைர் குருவின் பெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப் பெரிய  கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர்.

எனவே ஜெய் பீம்’ பட  தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல்’ திரைப்படம் திரையிடப்பட்ட  திரையரங்கிற்கு வந்த பா.ம.க.வினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக் கொண்டிருந்த வேல்’ திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பா.ம.க.வினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். இதனால் படம் நிறுத்தப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட செயலாளர்  பழனிச்சாமி, “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும். மேலும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பா.ம.க. அனுமதிக்காது…” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இச்சம்பவம் அறிந்து அங்கே விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் திரைப்பட காட்சியை நடத்தமாறு கூறினார்கள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தியேட்டர் நிர்வாகிகள் “நாங்கள் படத்தை மாற்றிக் கொள்கிறோம்” என்று சொல்லி காட்சிகளை ரத்து செய்தனர்.

The post “நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கமர்சியல் சினிமாவில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு..! https://touringtalkies.co/director-cheran-praises-jai-bhim-movie/ Sat, 13 Nov 2021 07:47:56 +0000 https://touringtalkies.co/?p=19380 இந்தியத் திரையுலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இயக்குநர் சேரனும் தனது பாராட்டினைத் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்படியோ… ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்திருக்கிறது.. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோல சமூகத்திற்கான படங்கள் செய்தால் சென்றடையும் வீச்சை.. வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால்.. நல்லது. ‘ஜெய்பீம்’ படம் பார்த்து தங்கள் ஹீரோக்களும் இது போன்ற சமூகத்திற்கான உண்மையான பிரச்னைகளை மையமாக […]

The post கமர்சியல் சினிமாவில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
இந்தியத் திரையுலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இயக்குநர் சேரனும் தனது பாராட்டினைத் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்படியோ… ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்திருக்கிறது.. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோல சமூகத்திற்கான படங்கள் செய்தால் சென்றடையும் வீச்சை.. வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால்.. நல்லது.

ஜெய்பீம்’ படம் பார்த்து தங்கள் ஹீரோக்களும் இது போன்ற சமூகத்திற்கான உண்மையான பிரச்னைகளை மையமாக வைத்து சோடனை இல்லாத சினிமாக்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் அன்பு ரசிகர்கள் அவரவர் ஆதர்ச நாயகர்களுக்கு சொல்லுங்கள்.. வருடம் ஒரு படமாவது முயலுங்கள் என்று.. நன்றி…” என்று பதிவிட்டுள்ளார்.

The post கமர்சியல் சினிமாவில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
“ஜெய் பீம் படத்தை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்”-அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா பதில் https://touringtalkies.co/actor-suriya-reply-to-anbhumani-ramadoss-for-jai-bhim-movie/ Thu, 11 Nov 2021 15:39:38 +0000 https://touringtalkies.co/?p=19338 சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படத்தைக் கடுமையாக விமர்சித்து அந்தப் படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவுக்கு கண்டனக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு தற்போது நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் இங்கே : மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. […]

The post “ஜெய் பீம் படத்தை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்”-அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா பதில் appeared first on Touring Talkies.

]]>
சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படத்தைக் கடுமையாக விமர்சித்து அந்தப் படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவுக்கு கண்டனக் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு தற்போது நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் இங்கே :

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம்.

தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ‘ஜெய் பீம்’ படத்தின் மையக் கரு.

பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவொரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக் குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக் காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன்.

அதேபோல, ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப் படம் அல்ல. “இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன் மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.

எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்.

தங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,
சூர்யா

The post “ஜெய் பீம் படத்தை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்”-அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா பதில் appeared first on Touring Talkies.

]]>