Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சசிகுமார் – Touring Talkies https://touringtalkies.co Wed, 30 Nov 2022 18:25:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சசிகுமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/sasikumars-nandhan-movie-first-look-poster-released/ Wed, 30 Nov 2022 18:25:07 +0000 https://touringtalkies.co/?p=27891 இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி […]

The post சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

The post சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
காரி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kaari-movie-review/ Fri, 25 Nov 2022 12:05:00 +0000 https://touringtalkies.co/?p=27574 ‘சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் […]

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், பத்திரிகை தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. உண்மையான நம்பிக்கையுடன் செயல்பட்டால் அது நிச்சயம் நடக்கும் என்கிறது இந்தப் படம். தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டி சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு வரும் நாயகன் அதை செய்து முடித்தானா… இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ராமநாதபுரம் அருகேயிருக்கும் காரியூர் மற்றும் சிவனேந்தல் என்ற இரண்டு கிராமங்களுக்கும் இடையே பொதுவான கோயிலாக கருப்பன் கோயில் இருக்கிறது. பல்லாண்டு காலமாக மோதல் காரணமாக சாமி கும்பிடாமல் இருக்கும் இந்தக் கோவிலை இந்த வருடம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால், இந்தக் கோயில் நிர்வாகத்தை யார் நடத்தி, திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவது யார் என்ற மோதல் இரண்டு கிராமத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடிக்கிறது. கடைசியில் இரு தரப்பினருக்கும் பொதுவாக 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி அதில் எந்த ஊர் ஜெயிக்கிறதோ அவர்களை கருப்பன் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடு்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகிறது.

போட்டிக்கான களம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்க, அதே காரியூரை பூர்விகமாக கொண்டவரான வெள்ளைச்சாமி சேர்வையைத் தேடி சென்னைக்கு வருகிறார்கள் ஊர்ப் பெரியவர்களான நாகி நீடுவும், வெள்ளைச்சாமி சேர்வையின் மைத்துனரும்.

சென்னையில் ஒரு சமூகப் போராளியாக, ஜீவகாருண்ய சங்கத்தின் முக்கியத் தளகர்த்தராகத் திகழும் ஆடுகளம் நரேனைத் தேடுகிறார்கள். இவர்கள் வந்த நேரம் நரேனின் மகனான சேது என்ற சசிகுமாருக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினை எழுந்து, தாங்க முடியாத மன வலியால் உயிரை விட்டுவிடுகிறார் நரேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளினால் சசிகுமார் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

இங்கே வந்து பார்த்தால் ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும்.. கருப்பன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும். மாநில அரசு அந்த ஊரை குப்பைக் கூளமாக்க நினைத்திருக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு வேலைகள் நாயகனுக்காக வரிசையாகக் காத்திருக்கின்றன.

இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது..? சேது ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையை அடக்கினாரா..? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் ‘காரி’ படம்.

சசிகுமாரின் உடன் பிறந்த திறமையான மதுரைக்கார தமிழும், அந்த எளிமையான நடிப்பும் இந்தப் படத்திற்குப் போதுமானதாக இருந்தாலும், நடிப்புக்குப் போதாமையாகத்தான் இருக்கிறது.

சமூகப் போராளியான நரேனின் ஆர்ப்பாட்ட அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் மகனாக பொங்கியெழுகிறார். நண்பனுக்காக உதவி செய்வது முக்கியமா… அல்லது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது முக்கியமா என்று அப்பாவிடம் வாதிடுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் லவ்வாகி காதலை அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, துளிர்விட வைக்கிறார்.

பக்கத்து ஊர்க்காரர்களையும், அரசையும் வித்தியாசமான முறையில் ஏமாற்றி அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி ஜல்லிக்கட்டிலும் ஜெயித்துக் காட்டுகிறார். இப்படி ஒரு ஹீரோ என்னென்ன செய்வாரோ அனைத்தையும் செய்துவிட்டார் சசிகுமார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் வழமையானதுதான். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

படத்திலேயே நடித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பாராட்ட வேண்டுமென்றால் அது நாயகி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் மூவரின் நடிப்புதான்..! சிம்ப்ளி சூப்பர்ப்..!

மகளின் கல்யாணத்திற்காக மாட்டை விற்கப் போகுமிடத்தில் பாலாஜி சக்திவேல் காட்டும் நடிப்பு அசர வைக்கிறது. அவருடைய உடல் மொழியே பேசியிருக்கிறது. விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து மகளை சமாதானம் செய்ய முடியாமல் அவர் தவிக்கும்  தவிப்பு இன்னும் ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை.!

ஆடுகளம் நரேன் சுற்றுச் சூழல் போராளியாக.. சமூகப் போராளியாக தானே முன்னின்று போராடும் காட்சிகளில் தனித் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரது மேக்கப்புதான் உறுத்தலாக இருக்கிறது. அதேபோல் மகன் ரேஸ் பந்தயத்தில் தோல்வியடைந்த பின்பு அவர் காட்டும் ஆக்ரோஷம் அசத்தல்..!

நாயகியோ அறிமுகப் படம் என்பதால் அடக்கி வாசிக்காமல் எரிமலையாய் வெடித்திருக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் காட்டி ரசிகர்களைக் குளிர வைத்த கையோடு மாடு விற்பனையானது தெரிந்து கதறி, அழுது, கூப்பாடு போடும் காட்சியில் தனது நடிப்புத் திறனையும் வெளிக்காட்டியிருக்கிறார். நல்வரவுதான்..!

‘காரி’ என்ற அந்தக் காளையைக் காண்பித்திருக்கும்விதமே சூப்பர். அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி இருவரும் ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல நடித்துள்ளனர். வில்லனான ஜே.டி.சக்கரவர்த்தி தனது வில்லனத்தனத்தை மொத்தமாய் காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சிகள் மிக அழகாய் படமாகியிருக்கிறது. புழுதி பறக்கும் ஆடுகளம்… சீறிப் பாயும் காளைகள், தூக்கி வீசப்படும் வீரர்கள்… என்று அது காட்டும் விஸ்தாரமான காட்சிகள் சற்றுப் பிரமிப்பைத் தருகின்றன. மேலும் அடிக்கடி காண்பிக்கப்படும் அந்தக் கிராமத்தின் ஏரியல் ஷாட்டுகள் அங்கேயே நம்மைத் தூக்கிச் செல்கின்றன. 

டி.இமானின் பின்னணி இசை ஜல்லிக்கட்டு போட்டிக்கு போர்க்களக் காட்சிக்கான விவரணையைக் கொடுத்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகமாக இல்லையென்றாலும் நமது காதுகளை அலற வைக்கவில்லை.

மெது, மெதுவாக நகர்ந்து கடைசியில் பேரலையாக வந்து மோதும் இந்தப் படத்தின் திரைக்கதை, இடையிடையே பல இடங்களை நோக்கி இலக்கில்லாமல் அலை பாய்ந்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறைபாடு.

மொத்தத்தில் இந்தக் ‘காரி’ படம், கிளைமாக்ஸில் காட்டிய வேகத்தை படத்தின் துவக்கம் முதலே காட்டியிருந்தால் இதைவிடவும் அதிகமான பாராட்டுக்களும், பெருமையும் இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்கும்.

இருந்தாலும் படத்தில் நாகி நீடு முன் வைக்கும் “எந்தவொரு நல்ல நோக்கத்தோடு வைக்கப்படும் நம்பிக்கையும் வீண் போகாது…” என்ற கருத்துக்காகவே இந்தப் படம் பாராட்டுக்குரிய திரைப்படமாகிறது..!

RATING : 3.5 / 5

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி https://touringtalkies.co/horse-racing-is-not-animal-cruelty-kari-film-producer-laxman-kumar-question/ Thu, 24 Nov 2022 09:36:32 +0000 https://touringtalkies.co/?p=27547 ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா […]

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர்.

கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்.

கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க கூடாது என தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

இதன் தீர்ப்பு எந்த விதமாக வரும் என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் தமிழகத்தில் உருவாகிவிட்டது. இந்தநிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள காரி திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் இந்த படம் திடீர் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். சர்தார் என்கிற வெற்றி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 25-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் துவங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு எந்தவிதமாக இடம் பெற்றுள்ளது மற்றும் அது எப்படி நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சசிகுமார், இயக்குநர் ஹேமந்த், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், நாயகி பார்வதி அருண் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் ஹேமந்த் பேசும்போது, “படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம்.

இந்தப் படத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். நிச்சயமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக இருக்கும்.

இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வசனங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, யாருக்கும் எதிரான வசனங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை ஆர்ப்பாட்டமாக சொல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் கூறியிருக்கிறோம்.

கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை என்னுடைய பார்வையில் நான் கூறியுள்ளேன்

இதில் சசிகுமார் குதிரைப் பந்தய ஜாக்கியாகவும், ஆடுகளம் நரேன் குதிரைப் பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.” என்றார்.

நாயகன் சசிகுமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது பற்றி நாம் விரிவாக பேசமுடியாது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நம் தமிழக அரசு சரியான முறையில் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எப்படியும் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம்.

மாடுகளில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது காரி காளை மாடுதான். அதேசமயம் படப்பிடிப்பின்போது எந்த ஜல்லிக்கட்டு காளையுடனும் நாம் நெருங்கி பழக முடியாது. காரணம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடு நமக்கு எதிராக இருக்கும். அது எந்தப் பக்கம் போகும், நம் மீது பாயுமா என்பதெல்லாம் அந்த நொடியில்கூட கணிக்க முடியாது. சில மாடுகள் நம்மைத் தாண்டி சென்றுவிட்டு மீண்டும் தாக்குவது போல் திரும்பி வந்ததும் உண்டு..  அதேசமயம் முறைப்படி அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியதால் இந்த படத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.” என்று கூறினார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “சில அமைப்புகள், திரையுலகை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, ஒட்டு மொத்த திரையுலகின் கருத்து அல்ல..

ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. ஜல்லிக்கட்டை யார் எதிர்த்தாலும் அவற்றை உயிராக நினைக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இந்த படத்தை நாங்கள் எடுத்து இருப்பதே அந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் அதை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதை இந்த படம் மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

ஜல்லிக்கட்டு மட்டும்தான் மிருக வதையா? குதிரை பந்தயத்தில் அது இல்லையா? அதற்கு மட்டும் தடை விதிக்காமல் ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்றால், குதிரைப் பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு.. ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. அவ்வளவுதான் இதில் உள்ள அரசியல்…” என்றார்.

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/naan-mirugamaai-maara-movie-review/ Tue, 22 Nov 2022 18:34:39 +0000 https://touringtalkies.co/?p=27465 ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் ‘பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார். இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. […]

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார்.

இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து செய்த படுகொலைகளுக்கு சாட்சிகள் இருப்பதாகச் சொல்லும் புதிய வில்லன், சசிகுமாருக்கு புதிய அஸைண்மெண்ட்டை கொடுக்கிறான். அவன் சொன்னதை செய்யவில்லையென்றால் சசிகுமாரின் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான்.  

செய்வதறியாமல் தவிக்கும் சசிகுமார் வில்லனுக்கும், தன் குடும்பத்துக்கும் நடுவில் மாட்டிக் கொள்கிறார். இனி அவர் என்ன செய்கிறார்..? தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா..? இல்லையா..? என்பதை ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்கிறது இந்த ‘நான் மிருகமாய் மாற’ படம்.

சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் இந்த அளவுக்கு ரத்தம் சிதறியது இந்தப் படத்தில்தான் இருக்கும். சசிகுமாரின் முதல் படமான சுப்ரமணியபுர’த்தில் நடந்த ரத்தச் சிதறல்களையும் இந்தப் படம் தாண்டிவிட்டது.

அழுகை, கோபம், இயலாமை, சோகம், பதற்றம் என்ற பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நடிப்பைத் தன்னால் முடிந்த அளவு காண்பித்திருக்கிறார் சசிகுமார். சசிகுமாரை மிக அதிகக் காட்சிகளில் அழுக வைத்திருப்பதும் இந்தப் படம்தான். சிரிப்பே இல்லாமல் சசிகுமார் தனது சோக முகத்தை வைத்தே கடைசிவரையிலும் படுகொலைகளைச் செய்கிறார்.

சசிகுமார் மட்டுமல்ல.. அவருடன் நடித்திருக்கும் அனைவருமே தங்களது சோகத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி நம்மையும் கதற வைக்கிறார்கள். ஹரிபிரியாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சில நிமிடங்களுக்கு பார்வையாளர்களுக்கு இளைப்பாற்றலை தந்தாலும் 90 சதவிகிதம் அழுவாச்சி காவியமாக இந்தப் படம் மாறியிருக்கிறது.

அடிக்கடி, ‘டேய் உன்ன வெட்டிக் கொன்றுவேன்டா’ என்று பலரிடமும் கத்துகிறார் சசிகுமார். இந்த வசனத்தையாவது காட்சிக்குக் காட்சி மாற்றியிருந்தால் கேட்பதற்காகவாவது நன்றாக இருந்திருக்கும்.

இடைவேளைக்கு முன்புதான் விக்ராந்த் கதைக்குள்ளேயே வருகிறார். இவரது வருகை படத்தின் திரைக்கதையில் வேகத்தையும், திருப்பத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. போதாக்குறைக்கு இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பின்னணிக் குரலிலும் மிடுக்கும், தைரியமும்  இல்லாமல் போக.. சுமாராகிப் போனது இவரது கேரக்டர்.

நேரடியாகக் களத்தில் இறங்கி அடித்து ஆடியிருக்க வேண்டிய விக்ராந்தை, சும்மா நிக்க வைத்து.. நடக்க வைத்து.. போனிலேயே பேச வைத்து கதையை முடித்திருக்கிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் அப்பானி சரத் முதல் பாதியில் சிறிது வில்லத்தனத்தை செய்திருக்கிறார். ஆனால் பின் பாதியில் இவரும் காணாமல் போய்விட்டார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் திறமைக்கு நல்ல வேலை கொடுத்துள்ளார் இயக்குநர். அந்த வகையில் நமது கண்களுக்கு ஈறு விளைவிக்காமல் சமர்த்தாக இருக்கிறது ஒளிப்பதிவு. இது போன்ற திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய துணையே பின்னணி இசைதான். இந்தப் படத்தில் ஜிப்ரான் இதை முழுமையாகச் செய்யாததால் அதுவும் வீணாகிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள்வரையிலும் பரபரப்பாக ஓடிய திரைக்கதை பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அமுங்கிவிட்டது. ரத்தச் சகதியை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நம் மனசுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சவுண்டு இன்ஜினியர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கதையிலேயே சவுண்ட் டிஸைனிங் சுமார் என்றால் எப்படிங்கோ..? சிலர் பேசும்போது டப்பிங்கில் சின்க் ஆகாமல் போகிறது. தேவையற்ற நேரங்களில், தேவையற்ற ஒலி ஊடுறுவியிருக்கிறது. டெக்னிக்கல் சைடில் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தம்பிக்காக 6 கொலைகளை செய்யத் துணியும் சசிகுமாருக்கு அந்தத் தம்பியுடனான நட்பும், பாசமும், அன்பும் எப்படியிருந்தது என்பதைக் காட்ட ஒரு காட்சியும் இல்லாததால் சசிகுமாரின் சோகத்தில் ரசிகர்களாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே ஏதோ கத்தியை எடுத்தார். வீராவேசமாக எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து வெட்டு, குத்து என்று அத்தனை பேரையும் சம்ஹாரம் செய்துவிட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து குளியலைப் போட்டுவிட்டு அமர்வதையெல்லாம் நாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சசிகுமார் ஒலிப்பதிவு பொறியாளர் என்பதால் வில்லன் பேசும் ஆடியோவை வைத்து அவன் இருக்கும் ஏரியாவையும், சுற்றுச் சூழலையும் கண்டறியுவிதம் சிறப்பாகத்தான் உள்ளது என்றாலும் இதுவும் கொலை செய்யவே உதவுகிறது என்பதால் இதுக்குத்தான் அதுவா என்று நமக்கு அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

விக்ராந்த், சசிகுமாருக்குத் தரும் கொலை அசைண்மெண்ட்டை ஏற்று மருத்துவமனையில் மதுசூதனனை கொலை செய்ய முயற்சிக்கும் அத்தருணம் சற்று படபடப்பையும், பரபரப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இந்த உணர்வைக் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே..!?

அதீத வன்முறை.. ரத்தச் சிதறல்.. பழி வாங்கும் உணர்வு, தேடுதல் வேட்டை.. என்று பயங்கர பரபரப்புக்கு தேவையான அத்தனையையும் வைத்துக் கொண்டு இதை குடும்ப சென்டிமெண்ட்டுக்குள் அடக்கப் பார்த்த இயக்குநர், கடைசியாக தோல்வியைத்தான் தழுவியுள்ளார்.

இது வன்முறையின் உச்சக்கட்டமாக மட்டுமே காட்சியளிக்கிறது..!!!

RATING :  2 / 5

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு https://touringtalkies.co/i-will-continue-to-act-in-village-films-for-my-people-sasikumar-announced/ Mon, 21 Nov 2022 14:28:22 +0000 https://touringtalkies.co/?p=27355 பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மண் குமார், இயக்கம் – ஹேமந்த், இசை – டி.இமான், ஒளிப்பதிவு […]

The post “என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மண் குமார், இயக்கம் – ஹேமந்த், இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவநந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், நடன இயக்கம் – ஹரிகிரண், சண்டைப் பயிற்சி இயக்கம் – அன்பறிவு, தினேஷ் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, பாடல்கள் – லலிதானந்த், ஹேமந்த், ஆடை வடிவமைப்பு – பூர்த்தி பிரவீண், உடை அலங்காரம் – பெருமாள் செல்வம், ஒப்பனை – கலைமாமணி வி.சண்முகம், மக்கள் தொடர்பு – A.ஜான்.

வரும் நவம்பர் 25-ம் தேதி இந்த ‘காரி’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகனான சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரே மாதிரி கதையில் நடிக்கிறீர்களே… அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..?

என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன். ஆனால், அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

அம்மு அபிராமி இந்த படத்தில் மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால் அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்ப குறைவாகவே இருக்கிறார்கள்.

இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, என்னை அழைத்து முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.

இந்த படத்தின் மூலம் ஒன்பதாவதாக புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப் பெரிய இயக்குநராக வருவார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார், இயக்குநர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதுதான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன் மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும். அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்ட நாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன். காலம் கடந்தும் இது பேசப்படும்.

ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில்கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை.

இது மக்களுக்காக எடுத்த படம். ஜல்லிக்கட்டு பற்றிய படம். அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்.. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன்.. அதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்றார்.

The post “என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“டைட்டிலை விட்டுக் கொடுக்க 50 லட்சம் கேட்கிறார்கள்” – நடிகர் சசிகுமார் குற்றச்சாட்டு https://touringtalkies.co/they-are-asking-50-lakhs-to-give-up-the-title-accused-by-actor-sasikumar/ Wed, 16 Nov 2022 10:05:36 +0000 https://touringtalkies.co/?p=27153 செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் “இந்தப் படத்திற்கு முதலில் காமன்மேன் என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த தலைப்பினை வேறு சிலர் பதிவு செய்திருந்ததால் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. அந்தத் தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் தலைப்பை […]

The post “டைட்டிலை விட்டுக் கொடுக்க 50 லட்சம் கேட்கிறார்கள்” – நடிகர் சசிகுமார் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் “இந்தப் படத்திற்கு முதலில் காமன்மேன் என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த தலைப்பினை வேறு சிலர் பதிவு செய்திருந்ததால் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.

அந்தத் தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் தலைப்பை பெற முடியவில்லை. இப்போதெல்லாம் படத்தின் தலைப்புக்காக 25 லட்சம், 50 லட்சம் என்று கேட்கிறார்கள். இது நமக்குக் கட்டுப்படியாகாது என்பதால் தலைப்பு ‘நான் மிருகமாய் மாற’ என்று மாற்றப்பட்டது.

இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனமும் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித் திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒலிப் பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன்.

படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல.. நீங்க பார்த்துட்டு சொல்லுங்க படம் எப்படி இருக்குன்னு..?” என்று தன் பாணியில் சொல்லி முடித்தார் சசிகுமார்.



The post “டைட்டிலை விட்டுக் கொடுக்க 50 லட்சம் கேட்கிறார்கள்” – நடிகர் சசிகுமார் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கும் நடிகை ஹரிப்பிரியா..! https://touringtalkies.co/actress-haripriya-is-back-in-tamil/ Tue, 18 Oct 2022 19:07:08 +0000 https://touringtalkies.co/?p=25626 தயாரிப்பாளர் T.D.ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற.’ இந்தப் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். மேலும் மதுசூதனராவ், அப்பனி சரத், ‘சூப்பர் குட்’ கண்ணன், K.S.G.வெங்கடேஷ், துளசி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு இந்த ‘நான்  மிருகமாய் மாற’  திரைப்படம், […]

The post மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கும் நடிகை ஹரிப்பிரியா..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் T.D.ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற.’

இந்தப் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். மேலும் மதுசூதனராவ், அப்பனி சரத், ‘சூப்பர் குட்’ கண்ணன், K.S.G.வெங்கடேஷ், துளசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு இந்த ‘நான்  மிருகமாய் மாற’  திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் உடன் 2-வது,  மற்றும் தமிழில் 4-வது படமாகும்.

கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்தது நடிகை ஹரிப்பிரியா பேசும்போது, “நான் நடித்திருந்த கன்னட படமான ‘பெல்பாட்டம்’ படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் எனக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால், உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நான் ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில், கணவன், குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்.

சிறிது காலம் தமிழ் சினிமாவிலிருந்து நான் ஒதுங்கி இருந்ததற்கு காரணம், கன்னடத்தில் நான் பிஸியாக இருந்ததுதான். தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கக் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக தொடர்ந்து தமிழிலும் நடிப்பேன்.

சசிகுமார் ஸார் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநராகவும் இருப்பதால், அவரிடமிருந்து நிறைய  விஷயங்கள், நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி…” என்றார்.

The post மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கும் நடிகை ஹரிப்பிரியா..! appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார் நடிக்கும் ‘காமன்மேன்’ தலைப்பு யாருக்கு..? சர்ச்சை நீடிக்கிறது..! https://touringtalkies.co/common-man-movie-title-crisis-news/ Fri, 11 Feb 2022 09:32:07 +0000 https://touringtalkies.co/?p=20648 ‘காமன்மேன்’(Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையத்தில் வெளியானது.  ஆனால், “இந்த தலைப்பின் உரிமை எங்களிடம்தான் உள்ளது…” என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. “டைரக்டர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018-ம் ஆண்டே இந்த “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய […]

The post சசிகுமார் நடிக்கும் ‘காமன்மேன்’ தலைப்பு யாருக்கு..? சர்ச்சை நீடிக்கிறது..! appeared first on Touring Talkies.

]]>
‘காமன்மேன்’(Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையத்தில் வெளியானது. 

ஆனால், “இந்த தலைப்பின் உரிமை எங்களிடம்தான் உள்ளது…” என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.

“டைரக்டர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018-ம் ஆண்டே இந்த “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக..” AGR RIGHT FILMS தெரிவித்தது.

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL COMMON MAN’ என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லியிருக்கிறது. சசிகுமாரோ, “எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் பேசி தீர்த்து கொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுக, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

பதில் வர தாமதமான நிலையில், CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் COMMON MAN’ என்கிற தலைப்பிலேயே படத்தின் டீசரை வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

AGR RIGHT FILMS COMMON MAN’ என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதி சான்று வழங்கக் கூடாது என்று Censor Board-க்கு சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.

அதற்கு சென்சார் போர்டு இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை  AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து முறையான சான்றிதழை வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவருமாம்.

இதனால், ஏற்கெனவே இதை தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்ட சசிகுமார் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post சசிகுமார் நடிக்கும் ‘காமன்மேன்’ தலைப்பு யாருக்கு..? சர்ச்சை நீடிக்கிறது..! appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் வெளியாகின்றன..! https://touringtalkies.co/sasikumars-2-movies-will-release-on-same-day/ Mon, 01 Nov 2021 06:50:13 +0000 https://touringtalkies.co/?p=19152 தற்போது பெரிய நடிகர்களுக்கு ஒரு படம் வெளியாவதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானால்..? இந்த இடியாப்ப பிரச்சினையை தற்போது சந்திப்பவர் நடிகர் சசிகுமார். இவருடைய படங்கள் மிகப் பிரமாதமாக ஓடி வசூல் சாதனை படைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக இவருக்கும் படங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இவரும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது சசிகுமார் ‘எம்.ஜி.ஆர்.மகன்’, ‘ராஜவம்சம்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘முந்தானை முடிச்சு-2’, ‘நா நா’ போன்ற படங்களில் […]

The post சசிகுமார் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் வெளியாகின்றன..! appeared first on Touring Talkies.

]]>
தற்போது பெரிய நடிகர்களுக்கு ஒரு படம் வெளியாவதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானால்..? இந்த இடியாப்ப பிரச்சினையை தற்போது சந்திப்பவர் நடிகர் சசிகுமார்.

இவருடைய படங்கள் மிகப் பிரமாதமாக ஓடி வசூல் சாதனை படைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக இவருக்கும் படங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இவரும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது சசிகுமார் ‘எம்.ஜி.ஆர்.மகன்’, ‘ராஜவம்சம்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘முந்தானை முடிச்சு-2’, ‘நா நா’ போன்ற படங்களில் நடித்துள்ளார் அல்லது நடித்து வருகிறார்.

இந்தப் படங்களில் எம்.ஜி.ஆர். மகன்’, ‘ராஜ வம்சம்’, ’கொம்ப வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கே தயாராக உள்ளன.

“100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதி” என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது வேகம், வேகமாக புதிய படங்களை வெளியிட அனைத்துத் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர். இதில் சசிகுமாரின் இரண்டு படங்களும் சிக்கியிருக்கின்றன.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது, இந்தப் படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. இயக்குநர் கதிர்வேலுவின் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் அதே நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அந்தப் பட நிறுவனமும் அறிவித்துள்ளது.

இப்படி சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறையாகும்.

இதனால் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்  ஏற்பட்டுள்ளது. இரண்டுமே சசிகுமார் நடித்திருப்பது என்றாலும் மற்றைய படங்கள் ஏதேனும் வந்துவிட்டால் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஏதாவது ஒரு படம்தான் சசிகுமாருக்குத் தர முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சுணக்கம் காட்டுகிறார்களாம்.

இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு படம் சுமாராக இருந்து கூட்டம் குறைந்தால் அது அடுத்தப் படத்தையும் பாதிக்குமே.. இதனால் தான் நடித்திருக்கும் அடுத்த படங்களுக்கு பாதிப்பு வருமே என்று சசிகுமார் வருத்தப்படுகிறாராம். எப்படியிருந்தாலும் இதில் சிக்கல் சசிகுமாருக்குத்தான் இருக்கிறது.

கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு படத்தை அடுத்த மாதத்திற்கு தள்ள வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தின ஸ்பெஷலாக நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சசிகுமார் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் வெளியாகின்றன..! appeared first on Touring Talkies.

]]>
‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/udanpirappea-movie-trailer/ Mon, 04 Oct 2021 11:45:31 +0000 https://touringtalkies.co/?p=18491 Amazon Prime Video presents Udanpirappe Official Trailer Starring Jyotika, Sasikumar & others, Written & directed by Era. Saravanan, Latest Tamil Amazon Original Movie, Produced by Jyotika & Suriya World Premiere – October 14 only on Amazon Prime Video Movie Credits Written & Directed by Era. Saravanan Director of Photography – R. Velraj ISC Editor – […]

The post ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
Amazon Prime Video presents Udanpirappe Official Trailer Starring Jyotika, Sasikumar & others, Written & directed by Era. Saravanan, Latest Tamil Amazon Original Movie, Produced by Jyotika & Suriya World Premiere – October 14 only on Amazon Prime Video Movie Credits Written & Directed by Era. Saravanan Director of Photography – R. Velraj ISC Editor – Ruben Art Director – Mujibur Rahmaan Stunt – Super Subbaraayan, Dhilip Subbaraayan Lyrics – Yugabharathi, Snekan Costume Designer – Poornima Ramaswamy Sound Mix – T. Udhay Kumar Sound Design – Sachin Sudhakaran Makeup – Giri Costumer – Arun VFX – Knack Studios Colorist – K. S. Rajasekaran Production Supervisor – S. Karthikeyan Stills – Saravanan PRO – Yuvraaj Designs – Kabilan Trailer & Promo Cut – T. Shivanandheeswaran Teaser Cut – Nash Chief Production Controller – B. Senthil Kumar Co-Producer – Rajsekar Karpoorasundarapandian Produced by Jyotika – Suriya

The post ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>