Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கெளதம் வாசுதேவ் மேனன் – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 16:03:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கெளதம் வாசுதேவ் மேனன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-am-waiting-for-vendu-satnuthanu-kadu-part-2-producer-udayanidhi-stalins-speech/ Thu, 10 Nov 2022 16:02:21 +0000 https://touringtalkies.co/?p=26913 Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் […]

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது https://touringtalkies.co/13-movie-teaser-news/ Fri, 21 Oct 2022 19:06:37 +0000 https://touringtalkies.co/?p=25814 மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம் மேக்கர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் ’13’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், இயக்குநர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ’13’ படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை […]

The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம் மேக்கர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் ’13’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், இயக்குநர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ’13’ படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக் கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன், ‘ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது’ எனத் தெரிவித்து கதையின் முன்னுரையை பார்வையாளர்களுக்குச் சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.

அன்ஷூ பிராபகர் ஃபிலிம்ஸூடன் இணைந்து மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை K.விவேக் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகிய மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழு விவரம்:

இசை: சித்துகுமார்,
DOP: C.M. மூவேந்தர்,
எடிட்டர்: JF காஸ்ட்ரோ,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஷங்கர்,
கலை இயக்குநர்: நாஞ்சில் P.S. ராபர்ட்,
பாடல் வரிகள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
நடனம்: சந்தோஷ்,
ஸ்டைலிங் மற்றும் உடை: ஹீனா,
சண்டைப் பயிற்சி: ‘ஸ்டண்ட்’ ராம்குமார்,
DI: Accel Media,
ஒலி வடிவமைப்பு & கலவை: ஜெய்சன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One

The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/vendhu-thaninthadhu-kaadu-movie-review/ Sun, 18 Sep 2022 05:58:43 +0000 https://touringtalkies.co/?p=24555 ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல தயாரிப்பாளர்கள், கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவு செய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’.   பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர். கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் […]

The post வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல தயாரிப்பாளர்கள், கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவு செய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’.  

பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர்.

கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் விட்டுவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனின் கதையுடன் புதிய களம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது, அவனது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. அந்தத் திருப்பத்தினால் விளையும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

திருச்செந்தூர் அருகில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் ஏழ்மையில் வாழ்ந்து வரும் பி.எஸ்.சி. பட்டதாரியான ‘முத்து வீரன்’ என்ற சிம்பு தற்போதைக்கு ஊரிலேயே கருவேல மரங்களை பாதுகாக்கும் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் கருவேல மரங்கள் தீப்பிடித்து எரிந்துவிட அந்த வேலையும் பறிபோகிறது.

இதனால் வேலை கொடுத்தவருக்கும், சிம்புவுக்கும் மோதல் ஏற்பட இதில் தன் மகனின் வாழ்க்கை வீணாகிவிடுமே என்று நினைக்கும் தாய் ராதிகா, தனது உறவினர் மூலமாக சிம்புவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.

மும்பையில் ‘செம்பூர்’ பகுதியில் இருக்கும் ‘இசக்கி பரோட்டா கடை’யில் வேலைக்குச்  சேர்கிறார் சிம்பு. காலையில் பரோட்டா கடையில் வேலை செய்யும் சில ஊழியர்கள் இரவானதும், கொலை செய்யும் அடியாட்களாகவும் இருக்கிறார்கள்.

இது தெரியாமல் வேறொரு உலகத்தில் இருக்கும் சிம்புவைக் கவர்கிறார் நாயகி சித்தி இத்னானி, தன்னைவிட நான்கு வயது கூடியிருந்தாலும் சித்தியை விடாது பின் தொடர்ந்து காதலிக்கிறார் சிம்பு. இந்தக் காதல் கை கூடும் நேரத்தில், வீரனின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து தங்களை கொலை செய்ய வந்தவர்களைச் சுட்டுத் தீர்த்ததும் உடனடியாக ஆன் தி ஸ்பாட்டிலேயே தளபதியாகிறார் சிம்பு. இப்போது மும்பையை ஆண்டு கொண்டிருக்கும் கர்ஜி டீம், குட்டி பாய் டீம் என்ற இரண்டு போட்டி குழுக்களில் ஒன்றில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சிம்புவுக்கு.

கர்ஜி டீமின் தலைவரான கர்ஜிக்கு மெய்க்காப்பாளனாகிறார் சிம்பு. குட்டி பாய் டீம் கர்ஜியை தீர்த்துக் கட்ட போடும் ஒவ்வொரு திட்டத்தையும் முறியடித்துக் கொண்டே வரும் சிம்புவுக்கு முடிவில் என்ன கிடைக்கிறது..? அவரது காதல் என்னவானது..? என்பதைத்தான் இந்த அடர்ந்து விரிந்த கதைப் பரப்பில் சொல்லியிருக்கிறார்கள் கதாசிரியர் ஜெயமோகனும், இயக்குநர் கெளதம் மேனனும்..!

படத்தில் வழக்கமான இயக்குநரான கௌதம் மேனனைப் போலவே, சிம்பு என்ற நடிகரும் நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ‘முத்து’ என்கிற முத்து வீரனாக மாறுபட்ட தோற்றத்தில் இப்படியெல்லாம், இதுவரையிலும் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சிம்பு. நம்ம சிம்புவா இது என வியந்து போகும் அளவுக்கும் உருமாறியிருக்கிறார்.

ஒரு ஏழை அப்பாவி இளைஞனாக அதற்கேற்ற நடை, உடை, பாவனை, உடல் மொழி இவற்றில் முழுவதுமாக தன்னை மாற்றிக் காண்பித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பும், அவரது கதாபாத்திரம் நம் மனதிற்குள் வரவில்லை.

தொடக்கக் காட்சிகளில் மெலிந்த நிலையில் பார்ப்பதற்கே பரிதாபத்தை உருவாக்கும் தோற்றத்தில் காணப்படும் சிம்புவுக்கும், கிளைமாக்ஸில் நவீன வேலு நாயக்கராக தோன்றும் காட்சிக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத வித்தியாசங்கள்..!

தாங்கித் தாங்கி நடப்பது, உதடுகளை எப்போதும் பிரித்தே வைத்திருப்பது.. அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் அறிந்திராத நெல்லை தமிழ்ப் பேச்சினை சரளமாகப் பேசியது என்று இந்தக் கிராமத்துக் கதாபாத்திரத்துக்காக நிறையவே உழைத்திருக்கிறார் சிம்பு.  

கொஞ்சம் கொஞ்சமாகக் கதை விரிய, விரிய சிம்பு தற்போதைய சிம்புவாக மாறும் காட்சிகள் வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதல் காட்சிகளில் புரியாத புதிராக நிற்பதும், காதலைச் சொல்வதற்குக்கூட தெரியாமல் சங்கடப்பட்டு நிற்பதும் சிம்புவிடம் புதுமையான நடிப்பைக் காண்பித்திருக்கிறது.

துப்பாக்கியைத் தூக்கிய தளபதியானவுடன் அவரது பேச்சு வேறு லெவலுக்குப் போவதும், காதலிக்கே ஐடியா கொடுத்து தைரியம் சொல்லி தானே சென்று பெண் கேட்கும் அளவுக்குச் செல்வதுமாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை ரசித்து, ரசித்து செய்திருக்கிறார் இயக்குநர்.

காதலி, மனைவியான அன்றைய இரவில் நடக்கும் காட்சிகளில் சிம்பு படும் அவஸ்தையும், பதட்டமும், அப்புக்குட்டியை ‘துரோகி’ என்று இனம் கண்ட பின்பும் அமைதியாய் “நீதானண்ணே..?” என்று விரக்தியாய் கேட்கும் காட்சியிலும் நம் மனதைத் தொடுகிறார் சிம்பு.

இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம்தான் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார் சிம்பு.

சண்டை காட்சிகளில் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்திருக்கிறார் சிம்பு. பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இடைவேளை சண்டைக் காட்சியிலும், என்ன நடந்ததோ, என்ன நடக்கவிருக்கிறதோ என்ற பதைபதைப்புடன் கொண்டு சென்றிருக்கும் இறுதிக் காட்சிகளிலும் சிம்புவுக்கு ஐ லவ் யூ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நிச்சயமாக சிம்புவுக்கு இந்தப் படம் ஒரு செகண்ட் இன்னிங்ஸ்தான்.

ஹீரோயின் சித்தி இட்னானி கேமிராவுக்கேற்ற முகம். சின்ன வயது சிம்புவைவிடவும் வயதானவராக கதைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார். சின்ன சின்ன ஆக்சன்களில் இளசுகளைக் கவர்ந்திழுக்கிறார். காதலன்-காதலி பேச்சு ஆண், பெண் உரிமை மீறல் பேச்சாக மாறும் தருணங்களில் தனது பெண்ணுரிமையை ஆணித்தரமாக பதிவு செய்வதுபோல நடித்திருக்கிறார் சித்தி. வெல்கம் டூ கோடம்பாக்கம்..!

முத்துவின் தாயாராக ராதிகா. இந்தக் கதாப்பாத்திரத்திற்கு வேறு யாருமே கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் இல்லை என்பதைப் போலவே தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ராதிகா. மகனின் கோபத்தினால் விரும்பத்தகாதது நடக்கும் என்று நினைத்து மகனை வெளியூருக்கு அனுப்ப நினைக்கும் அந்த இடத்திலிருந்து, சிம்பு மும்பைக்குக் கிளம்பும்வரையிலும் மனதில் நிற்கிறார் சித்தி ராதிகா..!

கட்ஜியாக நடித்திருக்கும் நடிகருக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்டை போட வேண்டும். “என்னை கொலை செஞ்சுருவியா..? அந்த நினைப்பு இருக்கா..? இப்பவும் இருக்கா..?” என்று விதம்விதமாக சிம்புவிடம் கேள்வி கேட்கும் ஸ்டைலில் மனிதர் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

குட்டி பாயாக சித்திக். தனது அனுபவ நடிப்பினால் அந்தக் கேரக்டருக்கு உரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஒரு சிறு இடறல்கூட இல்லை. இவரின் உதவியாளராக நடித்திருக்கும் நீரஜ் மாதவ்.. ஒரு அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரது பரிதாப வாழ்க்கை வேறொரு உலகத்தையும் காட்டுகிறது.

அப்புக்குட்டி நல்லவன்போல் நடிக்கும் நண்பன் என்ற கதாப்பாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். சிம்புவிடம் அனைத்து ஊழியர்களையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே நமக்கு மிகவும் பிடித்துப் போனவராகிவிடுகிறார் அப்புக்குட்டி. இறுதியில் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

‘விக்ரம்’ படத்தில் குறடு வைத்துக் கொண்டு கால் நரம்பை கட் செய்யும் நபராக நடித்து நம் மனதில் நின்றவர்.. இந்தப் படத்தில் சிறப்புக் கொலையாளி ராவுத்தராக நடித்திருக்கிறார். இவரை நடிக்க வைத்தமைக்காகவே கெளதம் மேனனுக்கு ஒரு ஷொட்டு..! அவ்வளவு அதகளம் செய்திருக்கிறார்.

எப்போதும்போல  தொழில் நுட்பத்தில் சிறப்புக்களையே செய்திருக்கிறார் கெளதம் மேனன். படத்தின் துவக்கத்தில் நடுவக்குறிச்சியில் பொட்டல் காட்டையும், கருவேல மரங்களின் சூழலையும் அழகுற பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.

ஹோட்டல் மாடியில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், ஹோட்டலுக்குள் நடக்கும் காட்சிகளிலும் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு மிக அருமை. பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில்கூட மும்பையின் அழகையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘மல்லிப் பூ’ பாடல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. ‘காலத்துக்கும் நீ வேணும்’, ‘உன்னை நெனைச்சதும்’, ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல் காட்சிகளில் நாயகனையும், நாயகியையும் பாடல் வரிகளை உச்சரிக்க வைத்தே படமாக்கியிருப்பது வித்தியாசமான அனுபவமாகத் தோன்றுகிறது.

பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் அடித்து ஆடியிருக்கிறார். இடைவேளை காட்சியில் துப்பாக்கியை சிம்பு கையில் எடுக்கும்போது ஒலிக்கும் பின்னணி இசை மாஸாக ஒலிக்கிறது. வழக்கமான டானுக்கான செட்டப் தீம் இசையை போடாமல் டான் முத்து வீரனை இறுதியில் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..!

இந்தப் படத்தின் கதாசிரியரான ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளர். அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியை லாவகமாக இந்தப் படத்தில் கொணர்ந்திருக்கிறார்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் நீடிக்கும் அந்தக் கிராமத்துக் கதையில் பேசப்படும் வசனங்களும், சொல்லப்படும் கதையும் அந்த ஸ்டைலான புத்தம் புதிய தமிழால் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்துள்ளது.

வசனங்களும்கூட கெளதம் மேனனின் படங்களில் எப்போதும் இருக்கும் அதே ஸ்டைலிலேயே அமைந்திருக்கின்றன. அப்புக்குட்டி சக ஊழியர்களை அறிமுகப்படுத்தும் காட்சியிலும், அடியாட்களின் தவறைச் சுட்டிக் காட்டும் கட்ஜியின் உதவியாளர் திட்டும் காட்சியிலும் வசனங்கள் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன.

காதல் காட்சிகளில்கூட மெச்சூர்டான வசனங்களே வந்திருக்கின்றன. ஹோட்டலில் நாயகியைப் பார்த்துவிட்டு சிம்பு சூடாகி தொடர் கேள்விகளைக் கேட்க.. “நீ ஆம்பளை கேட்டுட்ட.. அதே ஹோட்டல்ல நீ என்ன பண்ணிக்கிட்டிருந்தன்னு நானும் கேக்கலாம்ல..” என்று ஆண், பெண் சமத்துவத்தை சுட்டிக்காட்டும் விதமாக நாயகி பேசும் பேச்சும் ரசனைக்குரியது.

கட்ஜி சிம்புவிடம் “நீ என்னை கொல்லப் போறியா.. நான் உனக்கு எவ்ளோ செஞ்சிருக்கேன்.. அதனால நீ என்னைய கொல்ல மாட்டேன்னு நானே என் மனசைத் தேத்திக்கறேன்..” என்று சொல்லுமிடத்திலும், “உன் மன்னிப்பெல்லாம் எனக்கு வேணாம்.. நீ செத்துடு போதும்..” என்று சொல்லுமிடத்திலும் அப்புக்குட்டியை துரோகியென சிம்பு அழைக்கும் காட்சியிலும் வசனங்களில் தனது தனித்தன்மையைக் காட்டி படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் வெகுஜன மக்கள் விரும்பி, ரசித்துப் பார்க்கும் திரைப்படங்களின் வெற்றிக்கு எப்போதும் உதவ மாட்டார்கள். அவர்களின் கதை சினிமா கதைக்கு உதவாது.. என்ற பல வருட பேச்சினை இன்றைக்கு இந்தப் படத்தின் மூலமாக உடைத்தெறிந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

இந்த ‘வெந்து தணிந்தது காடு’ கதை, திரைக்கதையின் வழியே சொல்லிக் கொண்டே போய்தான் படமாக விரிந்திருக்கிறது. ஒரு சாதாரண முத்து வீரன் எப்படி அசாதரணமான வீரனாக உருவெடுக்கிறான் என்பதை இந்த வகையில்தான் சொல்ல முடியும். இந்த விரிவான திரைக்கதையாக்கத்தினால்தான் ரசிகர்களாலும் இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது.  

இது வழக்கமான கேங்ஸ்டர் படமில்லை. ஆனால் ஒரு கேங்க்ஸ்டரின் வாழ்க்கைப் பயணம். அந்தப் பயணத்தைதான் திரைக்கதையில் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

ஆரம்பக் கட்ட காட்சிகள் கொஞ்சம் மெதுவாய் நகர்ந்தாலும், இடைவேளை வரைக்குமான சாதாரண முத்து வீரன், டான் வீரனாக உருவெடுக்கும் காட்சிவரையிலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.

முதல் பாதியில் மும்பைக்கு வேலை தேடிச் சென்ற தமிழகத்து இளைஞர்கள் அங்கே எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.. என்ன துன்பப்படுகிறார்கள் என்பதையும் டீடெயிலிங்காக காட்டியிருக்கிறார். ஊரில் இருக்கும் மனைவியுடன் வீடியோ காலில் பேசி அவரை பாடச் சொல்லி ரசிக்கும் கணவனின் வலியை உணர்த்தும் அந்தக் காட்சி ஏ கிளாஸ் ரகம்.

இரண்டு போட்டிக் குழுக்களுக்கு இடையே தொடரும் பல வருட மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலை திரைக்கதையில் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.  

படம் முடிவடைந்துவிட்டது என்று நினைத்தபோது திடீரென ‘ஐந்து வருடங்களுக்குப் பிறகு’ என்று சொல்லி இரண்டாம் பாகத்திற்கான முன்னறிவிப்புடன் சிம்பு  வேறு கெட்டப்பில் தோன்றும் காட்சி அவரது ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சிதான். இரண்டாம் பாகத்துக்கான லீட் என்பதிலும் கவனமாக இந்த டான் எப்படி தனது டான் வாழ்க்கையைத் தொடர்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டி முன்னுரையை முடித்திருக்கிறார் இயக்குநர்.

சிம்புவின் நடிப்புக்காகவும், சுவையான கதைக்காகவும், சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும், கெளதம் மேனனின் அழுத்தமான நடிப்புக்காகவும் இந்த வெந்து தணியும் காட்டில் நாம் அவசியம் பயணம் செய்யலாம்தான்..!

ஆனால், இது அத்தனையும் ஒரேயொரு கேள்வியில் அடிபட்டுவிடும் அளவுக்கு லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்பதுபோல, மும்பையில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டே இல்லையா..? என்ற கேள்வியை இயக்குநர், எழுத்தாளர் இருவரிடமும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

இத்தனை கொலைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நடந்திருக்கின்றன. இசக்கி ஹோட்டல் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் படுகொலைகளை பார்த்தும் போலீஸையே படத்தில் காட்டாமல் அது பற்றிய நினைப்பே படம் பார்க்கும் நேரத்தில் நம் நினைவுக்கு வராத அளவுக்கு படத்தில் ஒன்ற வைத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனனின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!!!

RATING : 4 / 5

The post வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் கெளதம் மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்! https://touringtalkies.co/director-gautham-menon-and-ram-pothinenis-new-film/ Fri, 16 Sep 2022 07:14:24 +0000 https://touringtalkies.co/?p=24540 வித்தியாசமான கதைக் களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைகிறார். தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படத்தில் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார். வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக் களமாகவும் இது இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் […]

The post இயக்குநர் கெளதம் மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
வித்தியாசமான கதைக் களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைகிறார்.

தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படத்தில் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார். வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக் களமாகவும் இது இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமான கேங்ஸ்டர் கதைக் களம் கொண்ட ‘வெந்து தணிந்தது காடு’ (தெலுங்கில் ‘தி லைஃப் ஆஃப் முத்து) தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்படுகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக் களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார்.

சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார். இந்த நிலையில், கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக் களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இது குறித்தான விவரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

The post இயக்குநர் கெளதம் மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
“இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு https://touringtalkies.co/i-dont-know-what-the-story-of-this-film-is-gautham-menons-shocking-speech/ Sat, 03 Sep 2022 15:51:25 +0000 https://touringtalkies.co/?p=24265 Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’ எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் […]

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்திற்கு ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு புது லைன் சொன்னார். ஆனால், “இது புது ஹீரோ பண்ணக் கூடிய கதை” என்றார். ஆனால் நான், “சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார்” என்று அந்தக் கதையை படமாக்க ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்னவுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐசரி ஸார் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.

இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கே இந்தப் படம் ஒரு புது விசயமாக இருந்தது. ஜெயமோகன், “ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளியே வந்து ஜெயித்தால்தான் இயக்குநர். இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்றார்.

ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். அவர் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல் ஒரு காதலை வைத்துள்ளேன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை கேட்டு, டியூன்களைப் போட்டுக் காட்டி விவாதிப்பார். அவருடன் வேலை செய்யும் அனுபவமே வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக் கதைக்கு 3 பாடல்களை தந்திருந்தார். பின்னர் இந்தக் கதையை சொன்னபோது புதிய பாடல்களை தந்தார். இவர்களால்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்றார்.

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் https://touringtalkies.co/gv-prakash-joins-with-thangarbachan-in-karumegangal-ean-kalaigindrana-movie/ Thu, 26 May 2022 08:34:01 +0000 https://touringtalkies.co/?p=22274 மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார். இப்புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் […]

The post தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் appeared first on Touring Talkies.

]]>
மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

இப்புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகையைத் தேடி வருகிறார்கள்.

மிக முக்கியமாக இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். இவர் முதன்முறையாக தங்கர்பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார்.

ஒளிப்பதிவு – N.K.ஏகாம்பரம், கலை இயக்கம் – முத்துராஜ் தங்கவேல். பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான்.

வரும் ஜூலை 25-ம் தேதி முதல் இரு கட்டங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.  

இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத் தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து, “தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப் போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..” என தனது அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான D.வீரசக்தி இப்படம் குறித்து பேசும்போது, “மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர்பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..” என்றார்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர்பச்சான்.

The post தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் appeared first on Touring Talkies.

]]>
15 கிலோ எடையைக் குறைத்து சின்னப் பையனாக மாறிய சிம்பு https://touringtalkies.co/simbu-lost-15-kg-and-became-a-little-boy/ Sat, 14 Aug 2021 06:30:26 +0000 https://touringtalkies.co/?p=17013 கஷ்டப்படாமல் நடிக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர் சிம்பு. அவருடைய கடைசியான படங்களில் அதிகமாக உடலை வருத்திக் கொள்ளாமல் இருக்கின்ற நிலைமையிலேயே தனது நடிப்பைக் காண்பித்து வருகிறார். ஆனால் இந்தக் கொரோனா காலத்திய லாக் டவுனில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்லி அதையெல்லாம் செய்து அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார். ‘ஈஸ்வரன்’ படத்தில் கொஞ்சம் மெலிந்த உடலுடன் நடித்திருந்தார். அதுவுமே அவரது ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. இப்போது கெளதம் மேனனின் படத்திற்காக கிட்டத்தட்ட […]

The post 15 கிலோ எடையைக் குறைத்து சின்னப் பையனாக மாறிய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
கஷ்டப்படாமல் நடிக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர் சிம்பு. அவருடைய கடைசியான படங்களில் அதிகமாக உடலை வருத்திக் கொள்ளாமல் இருக்கின்ற நிலைமையிலேயே தனது நடிப்பைக் காண்பித்து வருகிறார்.

ஆனால் இந்தக் கொரோனா காலத்திய லாக் டவுனில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்லி அதையெல்லாம் செய்து அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார். ‘ஈஸ்வரன்’ படத்தில் கொஞ்சம் மெலிந்த உடலுடன் நடித்திருந்தார். அதுவுமே அவரது ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

இப்போது கெளதம் மேனனின் படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோவரையிலும் எடையைக் குறைத்து ஆச்சரியத்தைத் தந்திருக்கிறார் சிம்பு. இதற்காகக் கடுமையான டயட்டில் இருந்தும், உடற்பயிற்சி எடுத்தும் சின்னப் பையனைப் போன்ற நிலைமைக்கு வந்திருக்கிறார் சிம்பு.

இது இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கான முன்னோட்டமாம். இதையும் போட்டோ எடுத்து வெளியிட அதுவும் இப்போது வைரலாகி வருகிறது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து முடிந்துள்ளது.

The post 15 கிலோ எடையைக் குறைத்து சின்னப் பையனாக மாறிய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு https://touringtalkies.co/simbu-47th-movie-title-vendhu-thaninthathu-kaadu-poster-released/ Fri, 06 Aug 2021 08:20:12 +0000 https://touringtalkies.co/?p=16795 நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் […]

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், இருவரும் இந்தப் படத்தில்தான் இணைந்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சிம்பு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

சிம்பு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார். மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகத் தெரிகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>