Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
காந்தாரா – Touring Talkies https://touringtalkies.co Tue, 01 Nov 2022 00:29:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png காந்தாரா – Touring Talkies https://touringtalkies.co 32 32 தனுஷ் கேட்ட அந்த கேள்வி! https://touringtalkies.co/that-question-asked-by-dhanush/ Mon, 31 Oct 2022 00:18:00 +0000 https://touringtalkies.co/?p=26342 ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படம், பான் இந்தியா படமாக சக்கை போடு போட்டு வருகிறது. மக்களிடையே வரவேற்பு பெற்றதோடு, ரஜினி உள்ளிடட பிரபலங்களும் படத்தை மனதார பாராட்டி வருகிறார்கள். இந்த வரிசையில் நடிகர் தனுஷும் சேர்ந்திருக்கிறார். இது குறித்து நேற்று முன்தினம் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் ஷெட்டி  “படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.  நான் அவரிடம், ‘என்  கல்லூரி காலத்தில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து ரசித்து […]

The post தனுஷ் கேட்ட அந்த கேள்வி! appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படம், பான் இந்தியா படமாக சக்கை போடு போட்டு வருகிறது. மக்களிடையே வரவேற்பு பெற்றதோடு, ரஜினி உள்ளிடட பிரபலங்களும் படத்தை மனதார பாராட்டி வருகிறார்கள்.

இந்த வரிசையில் நடிகர் தனுஷும் சேர்ந்திருக்கிறார். இது குறித்து நேற்று முன்தினம் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் ஷெட்டி  “படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.  நான் அவரிடம், ‘என்  கல்லூரி காலத்தில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து ரசித்து வருகிறேன்’ என்றேன்.

பிறகு அவர், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அபாரம். அதுபோல காட்சி வைக்க பெரும் தைரியம் வேண்டும். எப்படி அந்த காட்சியை வைக்கத் துணிந்தீர்கள்?’  என்றார்.

அதற்கு நான், ‘நாம் என்ன நினைக்கிறோமோ.. அதைச் செய்துவிட வேணடும் என நினைத்தேன்’ என்றேன்.

தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல.. இயக்குநரும் கூட. அதனாலோ என்னவோ மிகச் சரியாக, கிளைமாக்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார் ரிஷப் ஷெட்டி.

 .

 

The post தனுஷ் கேட்ட அந்த கேள்வி! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! https://touringtalkies.co/kandhara-director-wants-to-see-the-tamil-film/ Sat, 29 Oct 2022 16:18:58 +0000 https://touringtalkies.co/?p=26240 ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், காந்தாரா. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இப்படம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை புரிந்தததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர். இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பீர்களா.. எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பெரும்பாலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் பாப்பேன். சமீபத்தில் கமல் […]

The post காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், காந்தாரா. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இப்படம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை புரிந்தததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.

ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பீர்களா.. எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பெரும்பாலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் பாப்பேன். சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை ரசித்துப் பார்த்தேன். பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் காந்தாரா படத்தின் டப்பிங் பணிகளில் மூழ்கிவிட்டதால் தவரவிட்டு விட்டேன். விரைவில் அந்தப் படத்தை பார்த்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

The post காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! appeared first on Touring Talkies.

]]>
“குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி https://touringtalkies.co/this-film-is-the-story-of-clan-gods-gandhara-director-rishabh-shetty-interview/ Sat, 15 Oct 2022 14:49:05 +0000 https://touringtalkies.co/?p=25463 ‘கே.ஜி.எஃப்.’ பிரம்மாண்டமான வெற்றிப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

The post “குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி appeared first on Touring Talkies.

]]>
கே.ஜி.எஃப்.’ பிரம்மாண்டமான வெற்றிப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’.

இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார்

அப்போது அவர் பேசும்போது, “இந்தக் ‘காந்தாரா’ அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது.  மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்தப் படத்தை என்னுடைய சொந்த ஊரில்தான் படப்பிடிப்பு நடத்தினேன். நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ… அதனைத்தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன்.

அப்பொழுது இருந்த சமூகம்… மக்களின் நம்பிக்கை… நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள்’ என்றும், ‘குல தெய்வங்களும்’ உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள்தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

இந்தக் ‘காந்தாரா’ படத்தில் இடம் பெற்றிருப்பதுபோல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.  இது தற்போது எம்மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதைவிட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

The post “குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி appeared first on Touring Talkies.

]]>